எகானமிக் க்ளாஸ்லேந்து எக்சிக்யூடிவ் க்ளாஸ் கூட்டிண்டுபோனான். அங்க மொத்தமே 18- ஸீட்
தான் இருந்தது. விண்டோபக்கம் ரெண்டு, ரெண்டு, நடுவிலயும் ரெண்டு சீட் தான். ஒரு சீட்டுக்
கும் அடுத்தசீட்டுக்கும் நல்ல இடை வெளியும் இருந்தது. நடுவில் இருந்த சீட்களில் ரெண்டு
சீட் காலியா இருந்தது. என்னை அங்கே உக்காரச்சொன்னான். எனக்கு ஒன்னுமே புரியல்லே.
ஏன் என்னை இங்க உக்காரச்சொல்ரேன்னு கேட்டேன். எங்களுக்கு மேலிடத்திலேந்து ஆர்டர்
இப்பதான் வந்தது. உங்க பேரு, அடையாளம், உங்க சீட் நம்பர் எல்லாம் சொல்லி உங்களை
எக்சிக்யூடிவ் க்ளாசில் உக்காரவைத்து நல்லா கவனிக்க சொன்னாங்க. நீங்க பெரிய வி. ஐ. பி. யா
இருக்கணும்னு நினைக்கிரோம். நல்லா ரெண்டு சீட்டிலும் காலை நீட்டிண்டு சவுரியமா உக்காருங்க.
வேணும்னா படுத்துண்டே கூட வரலாம்னுல்லாம் சொன்னான். அப்பவும் எனக்கு நம்ப முடியல்லே.
வேர யாருக்கு பதிலோ நம்மை சொல்ரானோன்னு சந்தேகம் அவனிடம் திரும்பவும் கேட்டேன்.
இல்லே, மேடம் யு. எஸ் போறஃப்ளைட்டிலாவது நிறைய தமிழ் காரங்க ட்ராவல் பண்ணூவாங்க.
குறிப்பா கண்டு பிடிப்பது கஷ்ட்டமா இருக்கும். ஆனா ஆப்ப்ரிக்க போறவங்க இந்தஃப்ளைட்ல நீங்க\
மட்டுமே சௌத் இண்டியன் லேடி. அதனால நான் கரெக்டாதான் சொல்ரேன். ஒன்னும் கவலைப்
பட்டுக்காதீங்க ஹேப்பியா ட்ரிப் எஞ்சாய் பண்ணுங்க மேடம். ஏதானும் தேவைன்னா என்னைக்கூப்பிடுங்க.
நான் இதோ இங்கதான் உக்காந்திருப்பேன் என்ரெல்லாம் சொல்லிட்டு அவன் சீட்ல போய் உக்காந்தான்.
எனக்கு என்ன சொல்லரதுன்னே புரியல்லே. கொஞ்ச நேரம் முன்ன்னே பயம் கோவம் சந்தேகம்
எல்லாம் மனசு நிறையா இருந்தது. இப்ப இங்க வந்து உக்காந்ததும் மன்சே லேசாயிடுத்து.
கொஞ்சம் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் கூட இருந்தது. எனக்கு ஒதுக்கி தந்த ரெண்டு சீட்களுமே
நல்ல நீள அகலமாக விசாலமா இருந்தது. கால் நீட்டி கீழே வச்சுக்க குஷன் வசதி வேர. முன் சீட்
பின் சீட்டுக்கு இடையில் நல்ல இடைவெளியும் இருந்தது. ஏ, சி, குளிர் ரொமப அதிகமா இருந்தது.
பாக்கி சீட்ல எல்லாருமே ஆப்ரிக்கன்ஸ் தான் ஆஜானுபாகுவான சரீரம். கம்பளியால் இழுத்து போத்திண்டு
எல்லாருமே தூங்க ஆரம்பிச்சிருந்தா. நடு சீட் ரொம்ப வசதியாகவே இருந்தது , வெளில வேடிக்கை ஒன்னுமே
பாக்கமுடியாது என்பதுதான் கம்மி.9.30-க்கு ப்ரேக் ஃபாஸ்ட் கொண்டு ஏர்ஹோஸ்டஸ் வந்தா. எங்க சீட்டுக்கெல்லாம்
நடுவில் ஸ்க்ரீனும் போட்டிருந்தது. தனித்தனியா ஒவ்வொருவரையும் கவனித்து சர்வ் பண்ணினா. முதலில்
ஒரு மெனு கார்ட் கொடுக்கரா. அதில் என்ன ல்லாம் ப்ரேக் ஃபாஸ்டில் இருக்குன்னு லிஸ்ட் இருந்தது.
சீட்டின் கைப்பாக்கம் நிறையா ஸ்விட்ஸ் இருந்தத்து. அதில் ஒரு சுவிட்சை கிளிக் பண்ணினா ஏர் ஹோடஸ்.
நமக்கு முன்னால ஒரு டேபிள் வந்தது. அதில் டிஷ்யூ பேப்பர் போட்டு பீங்கான் தட்டு வைத்து சூடு சூடாக
இட்லி, வடை, சட்னி சாம்பார் என்று சர்வ் பண்ணினா. டேஸ்டும் நல்லாவே இருந்தது. மேடம் இன்னும் சாப்பிடுங்க
என்று மேலும் மேலும் உபசாரம் பண்ணிண்டே இருந்தா. எனக்கு காலையில் 4- மேரி பிஸ்கெட், அரை கப் காபிதான்
ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு பழக்கம். இது ரொம்பவே ஹெவி டிபன் போறும், போறும்னு சொன்னாலும் கம்பல்
பண்ணி சர்வ் பண்ணிண்டே இருக்கா. ஃப்ளைட்ல மட்டும் காபி, டீ குடிக்கவே பிடிக்காது எனக்கு. எப்பவும்
ஒரு ப்ளாஸ்க்லேந்து சூடாக டிக்காஷனை ஊத்திட்டு, குட்டியூண்டு பாக்கெட்டில் பால் பவுடர், ஜீனி பவுடர் தந்து
கலக்கி குடிக்க சொல்லுவா. பால் பவ்டரோட பச்சை வாசனையில் காபி, டீ குடிக்க வே முடியாது. ஆனா இங்க
ஏர் ஹோஸ்டஸ் மைக்ரோவேவில் காபி கலந்து கொண்டு தந்தா. அதுவும் பச்சை வாசனை இல்லாமல் ந்ல்லா
இருந்தது. ப்ளேட்டெல்லாம் எடுதுண்டு போயிட்டு ஒரு பெரிய பௌல் நிறையா பப்பயா, ,பைனாப்பில் இன்னும் பேர் தெரியாத பழங்கள்
வாட்டர் மிலன்னு நிறைய ஃப்ரூட்ஸ் அழகா கட்பண்ணி கொண்டு தந்தா.
ஐயோ வயிறு ஃபுல் எனக்கு ஒன்னுமே
வேண்டாம்மா என்று சொன்னேன். மேடம் எல்லாத்லயும் ஒரு பீஸ் டேஸ்ட் பண்ணுங்க எல்லாமே ப்ஃரெஷா
இருக்கு ஹெல்த்துக்கு ரொம்ப நல்லதுன்னு ஏக உபசாரம். இவாள்ளாம் என்னை உன்மையிலேயே ஏதோ பெரிய
வி. ஐ. பி. ந்னே நினைச்சுட்டிருக்காங்க, நானும் எல்லாரையும் போல ஒரு சாதாரண பாசஞ்சர்தான்னு புரிஞ்சுக்
க்கவே மாட்டேங்கராங்க. என்கிட்டயும் ஒரு கம்பளி தலகாணில்லாம் தந்து தூக்கம் வந்தா தூங்குங்க மேடம்ன்னு
சொன்னா.
நான் எப்பவுமே ஹேண்ட் பாக்கில் 4- தமிழ்புக்ஸ், பெரிய டைரி(பலவருஷங்களாக டைரி எழுதும் பழக்கமுண்டு.)
2,3, பேனா, எல்லாமே வச்சிப்பேன். அதுதவிர இப்போ பாஸ்போர்ட், ஐடி கார்ட்ஸ், எல்லோ ஃபீவர் இஞ்செகஷன்
கார்டெல்லாமே பத்திரமா வச்சிருந்தேன். ட்ராவல் பண்ணும்போது எனக்கு தூங்கவே பிடிக்காது. இங்க நடு சீட்ல
உக்காந்து அடுத்து என்ன செய்யலாம்னு யோசனை, ஹெட்போனை காதில் மாட்டிண்டு பழைய ஹிந்தி பாட்டு
கேட்டுண்டே டைரி எழுத உக்காந்தேன். ஏர்ஹோஸ்டஸ் வந்து என் கால் களுக்கு கம்பளி போத்தி விட்டா.தேங்க்ஸ்
சொல்லிட்டு காலேல வீட்லேந்து கிளம்பினது தொடங்கி ஒன்னொன்னா டைரியில் எழுதினே இருந்தேன். இடையில்
அந்தஸ்டூவர்ட் வந்து மேடம் நீங்க ஜர்னலிஸ்டா, ரைட்டரான்னெல்லாம் கேட்டான். இல்லேப்பா நானும் எல்லாரையும்
போல சாதாரணமானவதான்னு சொன்னேன் அவன் நம்பவே இல்லே. ஏதானும் வேணுமான்னு திரும்ப திரும்ப
கேட்டுண்டே இருந்தான். இதுவே எகானமிக் க்ளாசில் ஃப்ரெஷ் லெமன் ஜூஸ் வேணும்னு சொன்னப்போ யாருமே
திரும்பி கூட பாக்கலே. எல்லாம் பணம் படுத்தும்பாடு. என் பெண் ஏர் இண்டியா ஸ்டாஃப் இல்லியா ஏர்போர்ட்டில்
நிறைய ஃப்ரெண்ட்ஸை மீட்பண்ணினோமில்லையா அதில் ஒரு ஃப்ரெண்ட்தான் இந்த ஏற்பாடெல்லாம் பண்ணியிருக்கான்.
சின்ன வயதில் நிறையவேகஷ்ட்டப்பாட்டிருக்கேன். இப்ப வயதான நேரத்தில் குழந்தகள் அம்மா சவுரியமா இருக்கணும்னு
ரொம்பவே மெனெக்கெடரா. சந்தோஷமாகத்தான் இருக்கு. எழுத ஆரம்பித்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது
11.30- ஆனதும் திரும்பவும் ஏர்ஹோஸ்டஸ் வந்து மேடம் ஸூப் எடுத்துக்கோங்க டொமேடோ, வெஜிடபிள் ஸூப்
இருக்கு என்ன வேணும் சொல்லுங்க என்றாள் ஐயோ ஆளை விடும்மா. எனக்கு ஒன்னுமே வேண்டாம் என்ரேன்.
இல்லை மேடம் இந்தகுளிருக்கு சூடாக இந்த ஸூப் சுகமா இருக்கும். என்றெல்லாம் சொல்லி கையில் தந்தா.
இது ஏதுடா அன்புத்தொல்லை தாங்கல்லியேன்னு அலுப்பா இருந்தது. படிக்க அன்றைய நியூஸ் பேப்பர், படிக்க
இங்க்லீஷ் மேகசின்ஸ் எல்லாம் கொண்டு தந்தா. கொஞ்ச நேரம் பேப்பர் புக்ஸ் எல்லாம் படிச்சேன்.ப்ளேன் பறக்கரதா
நிக்கறதான்னே தெரியல்லே. பக்கத்துல எல்லாருமே இழுத்து போத்திண்டு சுகமா தூங்கிண்டுஇருந்த, ஜன்னல் கதவையும்
சாத்திட்டா. என் தலைக்கு மேல இருந்த குட்டி பல்ப் போட்டுண்டு அந்த வெளிச்சத்ல நான் எழுத்து படிப்புன்னு டைம்பாஸ்.
ஹாட் ட்ரிங்க்ஸ், ஸாஃப்ட் ட்ரிங்க்ஸ் எல்லாமே கொடுக்கறா.அந்தவாடை அங்கியே சுத்தி சுத்தி வந்துண்டே இருந்தது.
( நன்றி கூகுள் இமேஜ்) ( தொடரும்)

Tweet | |||||
49 comments:
அதிர்ஷ்டம் வந்தா அத அனுபவிக்க ஒரு அதிர்ஷ்டம் வேண்டும் போல.
Nice write up Laxmima!
குழந்தைங்க அம்மா நல்லா சுகமா பிரயாணம் பண்ணட்டும்னு அக்கறையோட பாத்துக்கறது படிக்கவே சந்தோஷமா இருந்தது. வாழ்க வளமுடன்! சுவாரஸ்யமான அனுபவங்கள் தொடரட்டும். காத்திருக்கேன்...
நல்ல வர்ணனையோடு நல்லா எழுதுறிங்க சகோ....முயற்சி தொடரட்டும்........
நேற்றுதான் விமானத்தில் பயணித்து வீடு வந்து
சேர்ந்தேன்..
திரும்பவும் ஒரு பயணத்தை உருவாக்கித் தந்தது போல
அழகிய அனுபவம் அம்மா...
சுவாரஸ்யம் தொடருங்கள் மேடம் நல்ல எழுத்து நடை
சந்தோஷமான பகிர்வு..
பாராட்டுக்கள் அம்மா..
உங்கள் தன்னடக்கம் பிரமிக்க வைக்கிறது!
மகிழ்ச்சியளிக்கும் பகிர்வு.
பாராட்டுக்கள்.
என்னம்மா இது? ஆச்சரியமாக இருக்கிறதே? ஏர் இண்டியாவிலா இப்படி?
அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். எதிர்பாராமல், அதுவும் மனம் நொந்திருக்கும் போது.
உங்களுடன் நாங்களும் என்ஜாய் பண்ணுகிறோம். இத்தனை நாள் கழித்து
விவரமாக எழுதுகிறீர்களே?எல்லாம்
ஒழுங்காக எழுதப்பட்ட டைரியின் மகிமை
பகிர்வுக்கு நன்றி அம்மா.
ராஜ உபசாரம்ன்னு சொல்லுங்க :-)
lakshmimaa very interesting.
பழனி. கந்தசாமி, வருகைக்கு நன்றி
தேங்க்யூ மஹி.
கணேஷ் வருகைக்கு நன்றி என் குழந்தைகள் எனக்கு பெரிய வரம்
திருவாளப்புதூர் முஸ்லீம் வருகைக்கு நன்றி
மகேந்திரன் வருகைக்கு நன்றி
இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி
கே.பி. ஜனா வருகைக்கு நன்றி. இதுல என்னங்க தன்னடக்கம் இருக்கு?
கோபால் சார் வருகைக்கு நன்றி. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.
ராதா கிருஷ்னன் வருகைக்கு நன்றி. நீங்க சொல்லி இருப்பதுபோல ஆன்னன்னிக்கு டைரி எழுதுவதால் தான் இவ்வளவு விவரமாக எழுத முடிகிரது.
சாந்தி, ஆமாமா, ராஜ உபசாரம்தான்.
ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி
ராஜ மரியாதை!
உங்களின் ஞாபகசக்தி வியக்க வைக்கிறது!!
சில சமயங்களில் இப்படி நல்ல உபசாரம் கிடைக்கும்போது திக்குமுக்காடித்தான் போய் விடுகிறோம்...
நல்ல அனுபவங்கள் அம்மா... தொடருங்கள் - நாங்களும் உங்களுடனே ஏர் இந்தியாவில் பயணிக்கும் உணர்வு....
சுவாரஸ்யமாக இருக்கிறது.
இப்போது புரிகிறது உங்கள் பின்னூட்டம். வயதானால் நினைவுகளில் வாழ்வதே பெரிய பொழுது போக்கு. எனக்கும் எகனாமி க்ளாஸிலெருந்து பிசினெஸ் க்ளாசில் பயணம் செய்த அனுபவம் உண்டு. ஜப்பானில் நான் என்னும் பதிவில் எழுதியிருந்தேன். நீங்கள் டைரி எழுதும் பழக்கம் உள்ளவராதலால் விட்டுப் போகாமல் நினைவுகளில் மூழ்கலாம். தொடருகிறேன் வாழ்த்துக்கள்.
அம்பர்நாத்தில் 1957 முதல் 1959 வரை இருந்திருக்கிறேன் . உங்கள் உறவுகள் அங்கிருக்கிறார்களா.?
செந்தில் வருகைக்கு நன்றி. பழசெல்லாம் நினைவில் வருது. நேத்து நடந்தது நினைவில் இல்லே.

வெங்கட் வருகைக்கு நன்றி. இந்த உபசாரம்லாம் ஏத்துக்கவே சங்கோசமா தான் இருந்தது. மிடில் க்ளாஸ் மெண்டாலிடிபோக மாட்டேங்குது.
ஸ்ரீராம், வருகைக்கு நன்றி
ஜி.எம். பாலசுப்ரமனியம் நீங்களும் எகானமிக் க்ளாசிலேந்து பிசினெஸ்க்ளாஸ் பயணம் செதிருக்கீங்களா. அப்போ நான் சொல்வதை எல்லாம் உங்களால் சரியா புரிஞ்சூக முடியும். நன்றி
நானே1990- முதல் இன்ருவரை அம்பர் நாத்தில்தான் இருக்கேன்.
லஷ்மி அம்மா...இப்போதான் 3 பாகங்களும் வாசித்தேன்.நல்ல பிள்ளைகள் நல்ல குடும்பம் நல்ல சிநேகிதம்ன்னு சந்தோஷமாயிருக்கு உங்கள் பதிவுகளைப் படிக்கும்போதெல்லாம்.தொடரட்டும் உங்கள் அன்பு எங்களுக்கும் எப்போதும் !
எகனாமிக் கிளாஸுக்கும் , ஃபர்ஸ்ட் கிளாஸுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு தடவை அனுபவிக்கும் போதுதான் தெரியும் :-)
இதை சசிதரூர் ஒரு தடவை (மாட்டு தொழுவம்) சொல்லி இந்தியா முழுக்க கெட்ட பேர் வாங்கினாரே நினைவிருக்கலாம் :-))) .
ஹேமா வருகைக்கு நன்றி
ஜெய்லானி வருகைக்கு நன்றி
அருமையான பகிர்வு அம்மா
ஃபூட் நெல்லை வருகைக்கு நன்றி
சினேகிதி வருகைக்கு நன்ரி
படங்களுடன் பதிவு அருமை
விளக்கிச் செல்லும் விதம் நாங்களும்
உடன் பயணிப்பதைப் போல இருக்கு
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
//இதுவே எகானமிக் க்ளாசில் ஃப்ரெஷ் லெமன் ஜூஸ் வேணும்னு சொன்னப்போ யாருமே
திரும்பி கூட பாக்கலே. எல்லாம் பணம் படுத்தும்பாடு. //
பணம் படுத்தும் பாடு என்பது உண்மைதான் அம்மா,அருமையாக எழுதியிருக்கீங்க உங்க அனுபவங்களை.
டயரி எல்லாம் எழுதற வழக்கமே இல்லை; எல்லாம் நினைவுகளில் இருந்து எழுதறது தான். நீங்க டயரி எழுதறதாலே ஒண்ணும் விட்டுப் போகாம எழுத முடியறது.
உங்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துகளும் ஆசிகளும். அம்மாவை நல்லாப் பார்த்துக்கணும்னு அவங்க நினைப்பது ரொம்பப் பெருமையாவும் இருக்கு.
கீதா சாம்பசிவம் டைரி எழுதும் பழக்கம் ரொம்ப வருஷமாகவே உண்டு. அது இதுபோல பயணக்கட்டுரை எழுதும்போது ரொம்ப உபயோகமா இருக்குதான்.
ராஜா போக கவனிப்பு தான் போங்க
படிக்க படிகக் அருமை
ஜலீலா வருகைக்கு நன்றி
//ஏன் என்னை இங்க உக்காரச்சொல்ரேன்னு கேட்டேன். எங்களுக்கு மேலிடத்திலேந்து ஆர்டர்//
ஏர் இந்தியாவும் மற்றும் பிற அரசு நிறுவனங்களூம் உருப்படாம போறதெ இந்த மாதிரியான அதிகார துஷ்பிரயோகங்களால்தான் என்பது என் தனிப்பட்ட கருத்து.உங்கள் பயணக்கட்டுரைகள் அருமை. நானும் உலகம் சுற்றுகிறவன் ஆனால் அதை எழுத நேரம் ..ம்ம்ம்ம். முக்கிய காரணம் சோம்பேரித்தனம்

தரன் முதல் முறையா வரீங்களா? அடிக்கடி வாங்க. நன்றி
Post a Comment