Pages

Monday, January 9, 2012

கில்பி 4 ( ஆப்ரிக்கா)

 எல்லாருக்கும் ஒரு பெரிய பௌச் கொடுத்தா. அதுக்குள்ள குட்டி குட்டி ப்ளாஸ்டிக் டப்பாக்களில் விதவிதமாக பெர்ஃப்யூம், வாஸ்லின் பேஸ்ட், பிரெஷ் சீப்பு கண்ணாடி, ட்ரெசில்தூசிதட்ட ஒரு பிரெஷ் என்று என்னல்லாமோ இருந்தது.  திரும்ப புக் படிச்சு பாட்டுக்கேட்டுண்டு டைம் பாஸ். 1.30-க்கு லஞ்ச். முதல்ல மெனு கார்ட் தந்தா, வெஜ், நான் வெஜ் எல்லாம் லிஸ்ட்ல இருந்தது.




                                                  

நான் வெரும் தயிர் சாதம் ஊறுகாய் மட்டும் போதும்னு க்ளிக் பண்ணி கொடுத்தேன். திரும்பவும் அதே ஏர்ஹோஸ்டஸ் வந்து டேபிள் அரேஞ்ச் பண்ணி ட்ரே வைத்து சூடு சூடாக பாஸ்மதி ரைஸ் சாதம், வெண்டைக்கா மோர்க்குழம்பு, பாலக் ஆலு பாஜி, க்ரீன் சலாட், ப்ளெயின்பரோட்டா, சுரக்க்காய் அல்வான்னு தட்டு நிறையா சர்வ் பண்ணினா. எனக்கு இதெல்லாம் வேனாம்மா. வெரும் கர்ட் ரைஸ் மட்டுமே போதும்ன்னேன். சும்மா உக்காந்தே இருந்தா எப்படி பசி இருக்கும்? இல்லைமேடம் எல்லாமே சூடா ரொம்ப டேஸ்டா இருக்கும் கொஞ்சமாவது எல்லாம் டேஸ்ட் பண்ணுங்கன்னு கம்பெல் பண்ணி சர்வ் பண்ணிண்டே இருந்தா.அவள்ளும் ஏர் இண்டியா யூனிபாம் புடவையில் தான் இருந்தா.





                                                   
 எக்சிக்யூடிவ் காராளுக்குமட்டுமே இந்த ஸ்பெஷல் உபசரிப்புகள். எகானமிக்சில் இருப்பவர்களுக்கு வழக்கம்போல ஃபாயில் பேப்பர் பாக்கெட்டில் எல்லாத்தையும் ஒன்னாப்போட்டு அடைச்சு தான் கொடுத்தா. என்ன பாரபட்சம். எல்லாவற்றிலும் ஒரு ஸ்பூன் டேஸ்ட் பண்ணினேன். எனக்கு எதுமே வேஸ்ட் பண்ண ப்பிடிக்காது. சாப்பாடு முடிந்து அரை மணி நேரம் கழிந்து பெரிய பௌல் களில் ஆப்பிள், ஆரஞ்ச் சப்போட்டா என்று பழங்கள்  கொண்டு
                                                    
 தந்தா. சாப்பாடு நல்லா டேஸ்டா தான் இருந்தது. ஆனா பக்கத்ல உள்ளவங்கல்லாம் நான் வெஜ் சாப்பிட்டா அந்த ஸ்மெல் அந்த இடம்பூராவும் சுத்திண்டே இருந்ததில் சாப்பாடு இறங்கவே இல்லே. ஏர் இண்டியா வில் இப்படி ஒரு டேஸ்டான சாப்பாடு இதுவரை பார்த்ததே இல்லே. நானும் எல்லாடைப் ஃப்ளைட்டிலும் ட்ராவல் பண்ணி ருக்கேன். கிங்க் ஃபிஷரில் இதுபோல ஒருதரம் காலை மசால் தோசை வடை சட்னி சாம்பார் என்று கொடுத்தா.அதுவும் நல்ல டேஸ்ட் தான். இங்கயும் நல்லா இருந்தது. 2-மணிக்கு ஒரு ஃபார்ம் கொடுத்து ஃபில் பண்ணச்சொன்னா. எங்கேந்து எங்க போறோம் எதுக்கு போரோம்னு என்னல்லாமோ விவரங்கள் கேட்டிருந்தது. ஸ்டூவர்ட் ஹெல்ப் பண்ணினான். அது முடிந்ததும். கொஞ்சம் எழுதிண்டு இருந்தேன். 3- மணி ஆனதும் ஸ்டூவர்ட் மைக் க்கில் அனவுன்ஸ் பண்ணினான். இப்ப நாம ஆப்ரிக்காவில் எண்டர் பண்ணிட்டோம். நாம இப்போ கென்யாவின் தலை நகர் நைரோபியில் இறங்கப்போறோம். இந்தபகுதிகள் ஈஸ்ட் ஆப்ரிக்காவை சேர்ந்ததுஅதுபோல தான் சானியாவின் தலை நகர் தாரெ சலாம், உகாண்டா தலை நகரம் கம்பாலா. என்று ஆப்ரிக்காபற்றிய விவரங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே   நாம இப்போ நைரோபி வந்துட்டோம் எல்லாரும் சீட்பெல்ட் போட்டுக்கலாம். என்று சொன்னதும் எல்லாரும்  ரெடி  ஆனோம். 3.30- கரெக்டாக நைரோபி ஏர்போர்ட் லேண்ட் ஆனோம்.என் பெண்ணும் மாப்பிளையும் தாரெசலாம் கம்பாலா எல்லாஇடத்திலும் 2, 3, வருஷங்கள் இருந்தா. இப்ப கென்யாவில் இருக்கும் கிலிபி என்னும் இடத்தில் இருக்கா. சுமார் 15- வருடமாக ஆப்ரிக்காவில் தான் இருக்கா.



                                      
 நாங்க முதலிலே வெளில போனோம். ப்ளேன்லேந்து நேராகவே ஏர்போர்ட்க்குள்ள போனோம். ஒரு ஏர்போர்ட் ஸ்டாஃப், அவ அடையாள அட்டை கழுத்தில் தொங்க விட்டிருந்தா. அவபேரு கேத்தரின்னு இருந்தது. நேரா என்னிடம் வந்து வெல்கம் நைரோபி, ஃபாலோமீ அப்படின்னா. என் பெண் மும்பையிலேயே சொல்லி யிருந்தா யாரு கூப்பிட்டாலும் என் ப்ரெண்ட் ராஜேஷ் வருவர்னு சொல்லிடு யாரு பின்னாலயும் போகாதேன்னு சொல்லி இருந்தா. நான் கேத்தரினிடம் என் ஃப்ரெண்ட் ராஜேஷ் வருவார் நான் அவர்கூட வரேன்னேன். இல்லே மேடம் ராஜேஷ் இன்னிக்கு லீவு. அவர்தான் என்னை அனுப்பி உங்களை கவனிச்சுக்கும்படி சொன்னார் என்று சொன்னா. ஆப்ரிக்கன் பொண்ணுதன். ஏர்போர்ட் யூனிபார்ம் போட்டிருந்தா. அவளே கறுப்புகலர் அவபோட்டிருந்த ட்ரெசும் கருப்பு ஷார்ட் மிடி, கருப்பு ஷர்ட், ஹேர்ஸ்டைல் ரொம்ப வேடிக்கை. ஒவ்வொரு 3, 3, முடியையும் தனித்தனியா பின்னலா போட்டமாதிரி தலை முடி பூராவும் குட்டி குட்டியா பின்னல்போட்டு அதை ஒரு ஹேர் பேண்டால் கட்டி இருந்தா, சுமாரா 400, 500,  குட்டி, குட்டி பின்னல்களாவது இருக்கும். கருப்பு ஹைஹீல் ஷூ போட்டிருந்தா.  நேரா இமிக்ரேஷன் கௌண்டர்போனா. வேகமா நடந்தா. ஊசி போல பாயின்டெட்டா



                                
 இருக்கற ஹை ஹீல் போட்டுண்டு எப்படித்தான் இப்படி வேகமா நடக்கமுடியுதுன்னு நினைச்சுண்டே அவபின்னாடி ஓட வேண்டி இருந்தது. அப்படி அவ பின்னாடியே ஓடினதால ஏர்போர்ட் எப்படி இருக்குன்னு அக்கம் பக்கம் ரசிக்க வே முடியல்லே. இமிக்ரேஷன் கௌண்டரில் விசாவுக்காக பெரிய ஃபார்ம் கொடுத்தா. அதை ஃபில் பண்ண அந்தப்பொண்ணே ரொம்ப ஹெல்ப் பண்ணினா. 50- யூ. எஸ் டாலர் தாங்க என்றா. எதுக்குன்னு கேட்டேன் விசாவுக்கு என்றாள். என் மகன் என்னிடம் 100- யூ. எஸ் டாலர் தந்திருந்தான். ஆப்ரிக்கவில்மட்டும்தான் இப்படி ஒரு ரூல் போல இருக்கு . நான் போனது விசிட்டிங்க் விசாவில் 50- டாலரையும் வாங்கிண்டு பாஸ்போர்ட்டில் ஒருமாசம் தங்க மட்டுமே விசா ஸ்டாம்ப் அடிச்சு கொடுத்தா. அதெல்லாம்






 முடிந்து எஸ்கலேட்டரில் என்கல்லாமோ கூட்டிண்டு போனா. அவ அதிசயமா எப்பவாவது சிரிச்சான்னா அப்போ அவபல்ல் மட்டும்  பளீர் வெள்ளையில் ஷைன் அடிச்சது. அங்கேந்து லக்கேஜ் எடுக்க போனோம். கன்வேயர்





                                               
 பெல்ட்டிலிருந்து லக்கேஜ் எடுத்துண்டு வெளியில் வரும்போது எல்லார் லக்கேஜும் திரும்பவும் செக் பன்ரா. அந்தப்பொண்ணு இருந்ததால என்பெட்டில்லாம் ஓபன் பண்ணாம வெளில விட்டுட்டா. அந்தப்பொண்ணு இருந்தது ரொம்ப சவுரியமா இருந்தது. ஏர்போர்ட் வெளில என் மாப்பிள்ளை காத்துண்டு இருந்தார். வெளியில் வந்ததும் கேத்தரினை அறிமுகம் செய்தேன் அவளுக்கு பெரிய தேங்க்ஸ் சொல்லிட்டு நாங்க கிளம்பினோம்.

இண்டியா ஆப்ரிக்கா  ரெண்டரை மணி நேரம் டைம் டிபரண்ட். அங்க இப்ப மதியம் 1- மணி.  நான் ஃப்ளைட்டில் ஏதும் சாப்பிட மாட்டேன் என்று என் பெண் மாப்பிள்ளையிடம் எனக்கும் அவருக்குமாக டேப்லா, ஜாம்  பாஜி எல்லாம் அனுப்பி இருந்தா. மாப்பிள்ளையும் காலை 7- மணிக்கே வீட்டை விட்டு கிளம்பி யிருந்தார். நான் ஃப்ளைட்ல மூக்கு பிடிக்க சாப்பிட்டேன் என்றேன்.



                                                      
                                                 

 ஏர்போர்ட்டில் இருந்த ரெஸ்டாரெண்ட் போய் மாப்பிள்ளை சப்பாத்தி பாஜி சாப்பிட்டார். ஒரு காபி ஆர்டர் பண்ணினார். காபிகொட்டை ஃப்ரெஷா அரைச்சு திக்கா காபி போட்டு கொடுக்கறா. வழக்கம்போல பெரிய பேப்பர் க்ளாஸில் ஒரு காபி வாங்கி இருவரும் பாதிப்பாதி எடுத்துண்டோம். நைரோபி இண்டெர் நேஷனல் ஏர்போர்ட்டிலிருந்து டொமஸ்டிக் ஏர்போர்ட் போனோம். அதுவும் எதிராப்ல தான் இருந்தது.இப்ப எங்க போரோம்னு கேட்டேன் இன்னும் ஒருமணி நேரம் ஃப்ளைட் ட்ராவல் பண்ணி வேர ஊர் போகனும்னு சொன்னார் மாப்பிள்ளை. ஐயோ இன்னும் ஒருமணி நேரமான்னு அலுப்பா இருந்தது.
( நன்றி கூள் இமேஜ்)                                                                     (தொடரும்)

55 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையாய் அனுபவப் பகிர்வு.. பாராட்டுக்கள்..

ஜெய்லானி said...

//எக்சிக்யூடிவ் காராளுக்குமட்டுமே இந்த ஸ்பெஷல் உபசரிப்புகள். எகானமிக்சில் இருப்பவர்களுக்கு வழக்கம்போல ஃபாயில் பேப்பர் பாக்கெட்டில் எல்லாத்தையும் ஒன்னாப்போட்டு அடைச்சு தான் கொடுத்தா. என்ன பாரபட்சம்//

டிக்கெட் விலை டபிளா இருக்குமே :-))


உங்க கூடவே வருவது மாதிரி ஒரு ஃபீலீங் :-)

உணவு உலகம் said...

திரட்டிகள்ல இணைக்கவில்லையே!

உணவு உலகம் said...

சின்ன சின்ன விஷயங்களையும் நினைவு படுத்தி அழகா பகிர்ந்திருக்கீங்க. நன்றி அம்மா.

பால கணேஷ் said...

நீண்ட நெடிய பயணங்கள் எப்போதுமே அலுப்பூட்டுபவைதான் இல்லை. தொடரும் ஆப்ரிக்க அனுபவங்களுக்கு காத்திருக்கிறேன்மா.

pudugaithendral said...

ஆஹா நைரோபி போனீங்களா!!

என் ஃப்ரெண்ட் தன் குடும்பத்தோட இப்பத்தான் மாற்றால் ஆகி சென்னை வந்திருக்காங்க. உங்க பயண அனுபவங்களை படிக்க ஆவலா இருக்கேன்

Admin said...

அனுபவம் புதுமை..

த.ம-3

கொக்கரக்கோ

மாதேவி said...

பிரயாணத்தை அழகாக சொல்லி வருகின்றீர்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.லக்ஷ்மி,
மிக அருமையான அனுபவம்.
//அவ அதிசயமா எப்பவாவது சிரிச்சான்னா அப்போ அவபல்ல் மட்டும் பளீர் வெள்ளையில் ஷைன் அடிச்சது.//---இதற்கு அடுத்து... smile. you're in kenya படம் அருமை..! கென்யா பற்றி உங்கள் மூலம் மேலும் அறிய ஆவல்.

radhakrishnan said...

அருமையான உபசரிப்பாக இருக்கிறதே
ஆனால் உங்களால் சாப்பிடத்தான்
முடியவில்லை.
பிரயாணம் இன்னும் முடியவில்லையா?
சரிதான்.
விவரங்கள் அருமையாக்கஃ கொடுத்திருக்கிறீர்கள்.உடன் பயணம்
செய்வதுபோல் இருக்கிறது.
நன்றி அம்மா

ஸாதிகா said...

நாண்கு பாகங்களையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன் லக்‌ஷ்மிம்மா.வெகு சுவாரஸ்யமாக சொல்லுகின்றீர்கள்

வெங்கட் நாகராஜ் said...

தொடர் அருமையா போயிட்டு இருக்கும்மா....

மகேந்திரன் said...

சிறு செய்திகளை கூட மயிலிறகு மென்மையாய்
நீங்கள் சொல்வது அவ்வளவு அழகு அம்மா....

மனோ சாமிநாதன் said...

அருமையான சுவாரஸ்யமான பகிர்வு!!

முற்றும் அறிந்த அதிரா said...

லக்ஸ்மி அக்கா.... அலுக்காமல் முழுப்பதிவையும் ரசிச்சுப் படிக்க முடிகிறது, இருப்பினும் உங்களுக்கு இவ்ளோ ஞாபகசக்தி அதிகம்தான்:))). டயரியில் எழுதி வச்சிருந்திருப்பீங்களோ?.

//அவ அதிசயமா எப்பவாவது சிரிச்சான்னா அப்போ அவபல்ல் மட்டும் பளீர் வெள்ளையில் ஷைன் அடிச்சது. //

உங்களுக்கு அங்க, 50 டொலரோட விசா அடிச்சுத் தந்ததுதான் தப்பூஊஊஊஊஊ:)))))).

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஜெய்லானி வருகைக்கு நனறி. டிக்கட் டபுள் மடங்கா??????????? அதைவிட அதிகம்.

குறையொன்றுமில்லை. said...

FOOD NELLAI. வருகைக்கு நன்றி. ரெண்டு நாள் வெளில போயிட்டேன் இப்ப திரட்டிகளில் இணைச்சுட்டேன்.

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

புதுகைத்தென்றல் வருகைக்கு நன்றி. உங்க ஃப்ரெண்டையும் இந்தப்பதிவு படிக்கச்சொல்லுங்க.

குறையொன்றுமில்லை. said...

மதுமதி வருகைக்கும் ,ஓட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

முஹம்மது ஆஷிக் வருகைக்கு நன்ரி தொடர்ந்து வந்து ரசிங்க.

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்ரி. என்ன சார் போர் ஆரதா? இன்னும் பயணம் முடியல்லியான்னு கேட்டுட்டீங்க?

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி. நீங்க எல்லாரும் ரசிக்கும்படி சொல்லி வருகிரேன்னு நினைக்கிரேன்.

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்றி. அவங்கவங்க ஊருல என்ன ரூலோ அதை அவங்க ஃபாலோ பன்ராங்க அவ்வளவுதான்.

radhakrishnan said...

அருமையான வர்ணிப்பு, விவரங்கள்,
எப்படி போரடிக்கும்? பயணம் நீண்டதாக,
உங்களுக்கு சிரமமாக இருந்திருக்குமோ என்று நினைத்துக் கூறினேன்.எவ்வளவு
தூரமானாலும் நாங்கள் வரத தயார்.
எதையும் குறைக்காமல் சொல்லுங்கள்
நன்றி அம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தொடர்ந்து நான்கு பகுதிகளையும் இன்று தான் படிக்க முடிந்தது. பயண அனுபவம் சுவையாகப் போகின்றது. நான் 2004 இல் முதன் முதலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றபோதும் இதுபோல பல அனுபவங்களை, குறித்து வைத்துள்ளேன். எழுத ஆரம்பித்தேன். அது அப்படியே பாதியில் நிற்கின்றது.

போட்டோக்களும் வீடியோக்களும் நிறைய கைவசம் உள்ளன.

இப்போது 7-8 வருடங்களுக்குள் அங்கு மேலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன என்று கேள்விப்பட்டேன்.

தொடருங்கள் உங்கள் பயணக்கட்டுரையை.
அன்பான வாழ்த்துகள்.

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் மறுபடி வருகைக்கு நன்றி, நான் அனுபவித்hத சந்தோஷங்களை உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளனும் என்கிர அதீத ஆர்வத்தில் சொல்லி வரேன் அது போரடிக்காம இருக்கனுமே. இல்ல்யா?

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் நீங்களும் உங்க அனுபவத்தை சொல்லுங்க சந்தோஷத்தைப்பகிர்ந்துகொள்ளும்போது அது ரெட்டிடிப்பாகும் இல்லியா? வருகைக்கு நன்றி

ஸ்ரீராம். said...

அங்கங்கே குறிப்புகள் உடனடியாக எடுத்துக் கொள்வீர்கள் போலும். கோர்வையாகச் சொல்லி வருகிறீர்கள். சுவாரஸ்யமாக இருக்கிறது.

கோமதி அரசு said...

அருமையான பயணப் பகிர்வு.
நான்கையும் படித்து விட்டேன்.

RAMA RAVI (RAMVI) said...

அருமையான அனுபவங்கள்.நீங்க அதை விவரிக்கும் விதம் அற்புதமாக இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம், வருகைக்கு நன்றி. அன்னன்னிக்கு டைரி எழுதும் வழக்கமுந்து. அதான்.

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்ரி

Vetirmagal said...

Hi,4 பதிவுகளையும் ஒரே மூச்சில் படிச்சாச்சு! சூப்பர் மேடம்!

குறையொன்றுமில்லை. said...

verri magal வருகைக்கு நன்றி

ரசிகன் said...

அசத்தறீங்கம்மா... அப்பவே பாஸ்கரை பாலோ பண்ண ஆரம்பிச்சிடீங்க போலருக்கு. (பசிக்காம சாப்பிடக் கூடாது)

இப்போ தான் நாலு பகுதியையும் படிச்சேன். நானே கில்பி போன மாதிரி இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

ரசிகன் ரொம்ப நாள் கழிச்சு வரீங்க. வருகைக்கு நன்றி

ஹேமா said...

அனுபவத்தை அடுக்காய் அடுக்கிச் சொல்லும் விதமே அருமையம்மா !

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்றி

vetha (kovaikkavi) said...

அன்புள்ள சகோதரி. உங்கள் வலைக்கு வந்து கருத்துகள் இட்டேன். மறுபடி ஆபிரிக்க hயணத்தால் கவரப்பட்டு வருகிறேன் மிக நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

குறையொன்றுமில்லை. said...

வேதா லங்கா திலகம் வருகைக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

பயணக்கட்டுரை மிக மிக அருமை
மணியன் இப்படித்தான் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும்
மிக மிக அழகாகச் சொல்லிப்போவார்
உங்கள் பதிவில் படங்கள் கூடுதல் சிறப்பு
தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

Geetha Sambasivam said...

ஏர் இந்தியாவிலே இது வரை பயணம் செய்ததில்லை. உள்நாட்டுப் பயணம் கூட ஏர் இந்தியாவிலேயோ இந்தியன் ஏர்லைன்சிலேயோ செய்ய வாய்ப்புக் கிடைக்கலை.

ம்ம்ம்ம்ம் நல்ல அருமையான வர்ணனை. நல்லா இருக்கு. இந்த விமானப் பயணங்களிலேயே இப்படி ட்ரான்சிட் செய்யறது கொஞ்சம் அலுப்பான விஷயம் தான். தலையும் புரியாது, வாலும் புரியாது. அதுவும் வேறே வேறே டெர்மினல்னா கேட்கவே வேண்டாம்.

குறையொன்றுமில்லை. said...

கீதா சாம்பசிவம் நீங்க சொல்வது கரெக்ட் தான் எனக்கும் விமானப்பயணம்னாலே அலுப்பாதான் இருக்கும். வெளி நாடு போக அதைவிட்டா வேர வழியும் இல்லியே?

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப விறுவிறுப்பா போகறதில ஒரே மூச்சில் மத்தா பாகங்களையும் படிச்சுடறேன்,. வெகு நேர்த்தி லக்ஷ்மி உங்கள் எழுத்து. எங்களுக்கும் இந்த பிசினஸ் ளாஸ் அனுபவம் கிடைச்சது. ஸ்விஸ்ல இருந்து அமெரிக்கா போகும்போது;) தூக்கம்தான் வரலை.
அருமையான விவரிப்பு. தொடர்கிறேன்.நன்றிமா.

குறையொன்றுமில்லை. said...

ஆமா வல்லி சிம்ஹன் அந்த அனுபவமே தனிதான் இல்லியா? நீங்கல்லாம் ரசிக்கும்படி எழுதி இருக்கேன்னு நினைக்கிரேன்.

Jaleela Kamal said...

ரொம்ப நாள் கழித்து இன்று தான் உங்கள் கிலிபு ஆப்ரிக்காவை எபப்டியாவது படித்து விடவேண்டும் என்று படித்து கொண்டு இருக்கேன் லஷ்மி அக்கா

ரொம்ப ஞாபக சக்தி உஙக்ளுக்கு இன்னும் டைரியில் நோட் பண்ணியதால் இன்ன்னும் விபரமாக எழுது றீங்க

நானும் ஏதோ என் நினைவில் உள்ளதை தான் எழுதிண்டு வரேன்.

மழலை உலகம் நீஙக் எழுத சொன்னது எழுதி கொண்டு இருக்கேன் முடிந்த போது வந்து பாருங்கள்

குறையொன்றுமில்லை. said...

ஜலீலாகமல் வாங்க லேட்டா வந்தாலும் வந்துருக்கீஇங்க இல்லே அதுவே சந்தோஷம் தான். நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .