Pages

Wednesday, January 11, 2012

கி ல்பி 5 (ஆப்ரிக்கா)

என் பெண் இருக்கும் இடம் ‘கிலிஃபி’ என்ற ஒரு மாவட்ட தலை  நகரம். அது கென்யாவில் கோஸ்டல் ஏரியாவில் இருக்கிறது. அங்கு போய்சேர ‘மொம்பாஸா’ என்ற இடத்துக்கு ‘லோக்கல் ஃப்ளைட்டில்’ போகணும். ‘மொம்பாஸா’விலுருந்து கிலிஃபி ரோடு வழியாக போக வேண்டும். 





                                        
 டொமஸ்டிக் ஏர்போர்ட்டிலும் வழக்கமான பார்மாலிட்டிகள் முடிந்து அங்குள்ள டைம் 4-மணிக்கு ஃப்ளைட் கிளம்பியது. கென்யா ஏர்வேஸ். டொமஸ்டிக்னால உள்ள தாராளமா இட வசதி இருந்தது. நான் வழக்கம்போல விண்டோ சீட் தான்.
  ஸ்டூவர்ட் அனவுன்ஸ் பண்ணீனார் விண்டோ வழியா கீழ பாருங்க. கிலிமஞ்சாரோன்னு ஒரு மலைச்சிகரம் தெரியும். என்றார். எல்லாரும் எட்டிப்பார்த்தோம்.

Kilimanjaro is in Africa.  It is exactly in Tanzania. அது ஒரு பனி மூடிய மலைசிகரம் தான். ஹில் ஸ்டேழன் இல்லை. அது டன்சானியாவில் ‘மோஷி’ என்ற இடத்தில் இருக்கு.

நம்ப எவெரெஸ்ட் சிகரம் மாதிரி (எவெரெஸ்ட் நேபாளில் இருக்கு). அங்கும் வெள்ளையர்கள் மலை ஏறுவார்கள். அதை முதலில் ஏறியவர் ஒரு ஜெர்மன், அவர் பெயர் Baron Carl Claus von der Decken வருஷம் 1861.

இது தான் Africa வில் மிக உயர்ந்த சிகரம். இதன் உயரம் 5895 மீட்டர்ஸ் (19341 ஃபீட்).

Nairobi ய்யிலிருந்து Mombasa விமானத்தில் வரும்போது வலது பக்கத்தில் தெரியும்.



  வெளில வேடிக்கை பாத்துண்டே இருந்தேன்.ரன்வேயில் ஓடும் ஸ்பீட் ரசித்து விட்டு அப்புரம் மேக மண்டலம்தான். வழக்கம்போல ஜூஸ் ரோஸ்டெட் கேஷுனட் எல்லாம் சர்வ் பண்ணினா.ஜன்னலுக்கு வெளியே மேக மண்டலமெல்லாம் என் கண்களுக்கு, யானைபோல சிங்கம், புலி, மான் நீரூற்று போலல்லாம் வேடிக்கை காட்டிடே இருந்தது. 4.30- மும்பாஸா ஏர்போர்ட் லேண்டிங்க். ஏர்போர்ட்டில் சுற்றி வர சார்ட்டர் ப்ளேன்ன்னு சொல்வா




                               
 அதுபோல சின்ன சின்ன ப்ளேன்கள் பாதி ப்ரைவேட்டாம்.  நின்னுண்டு இருந்தது. வெளில வந்து கன்வேயரில் லக்கேஜ் கலெக்ட் பண்ண வெயிட் பண்ணினோம். ஹஜ் யாத்ரீகர்கள்தான் நிறைய. அவா அங்கேந்து கொண்டுவரும் புனித நீர் நிறைந்த கேன்கள் தான் லக்கேஜில் பெரும்பாலும் இருந்தது. நாமல்லாம் காசி போனா கங்கைசொம்பில் தீர்த்தம் கொண்டு வருவோம் இல்லியா அதுதான் நினைவு வந்தது. நாம சின்னசைசில் கொண்டு வருவோம் இவர்கள் எல்லாம் 5-லிட்டர், 10- லிட்டர் கேன்களில் கொண்டுவரா. அவ்வளவுதான்.


                         

 வெளியில் மாப்பிள்ளையின் ட்ரைவர் வண்டி கொண்டு வந்திருந்தான். ரெண்டு ட்ரைவர் வந்திருந்தா. ஒன்னு ஆப்ரிக்கர் , இன்னொன்னு சர்தார்ஜி. இருவரும் எனக்கு வெல்கம் சொன்னா. வீட்டுக்குப்போக எவ்வளவு நேரம் ஆகும்னு கேட்டேன். அதிகமில்லே ஒரு 2,, 2.30, மணி நேரம் தான் ஆகும்னு சொல்ரா.அப்பாடி அவ்வளவு நேரம் திரும்பவும் ட்ராவலா? வண்டி நம்ம ஊரு செவர்லெட் வண்டிபோல பெரிசா இருந்தது. முன்னாடி ரெண்டு ட்ரைவரும் பின்னாடி நானும் மாப்பிள்ளையும் அதுக்குபின்னாடியும் 4- சீட்




                        
 இருந்தது.மொத்தம் 9, 10 பேர்வரை உக்காரமுடியும்.ஸ்லைடிங்க் டோர்.  மும்பாசாலேந்து கிளம்பி கொஞ்ச தூரம் ரோடு நல்லாவே இருந்தது. நான் வழக்கம்போல விண்டோ பக்கம் உக்காந்து  வெளியே வேடிக்கை பாக்க ஆரம்பிச்சேன். மாப்பிள்ளையும் சரி, நானும் சரி அதிகம் பேசும் டைப் கிடையாது. இருவருமே ரொம்ப அமைதியான டைப்தான். அவரும் காலையிலேயே வீட்டை விட்டு கிளம்பி விட்டதால் வண்டியில் ஏறினதுமே தூங்க ஆரம்பிச்சார். வெளில கொஞ்ச தூரம் போனதும் ரோடெல்லாம் மஹா மட்டம். தூசி பறக்கும் கப்பி ரோடுதான். கண்ணில் பட்ட





                                     

ஜனங்கள் எல்லாருமே  ஆப்ரிக்கர்கள்  தான். அவர்களைப்பார்க்கும் போதுதான் நாம ஆப்ரிக்கா வந்திருக்கோம்னே நினைவு வந்தது.அவர்களே கறுப்பு நிறம் இதில் அவர்கள் போடும் ட்ரெசும் நல்ல அடர்த்தியான கலரிலே இருக்கு. லேடீசெல்லாம் ஹேர் ஸ்டைல் குட்டி குட்டி பின்னல்கள் தான் ஆண்களுக்கு பிறக்கும்போதே முடி சுருட்டை முடியாகத்தான் இருக்கும்போல இருக்கு அதுபோல சுருண்டிருக்கும் குட்டி குட்டி சுருட்டை முடி.. அந்த நேரம் என் கண்களில் பட்டவர்கள் எல்லாமே ரொம்ப  அழுக்கான ஆடைகளுடன் இருந்தார்கள். பொதுவான க்ளைமேட் நல்லா சூடாகத்தான் இருக்கு.



                                      

 ஒரு வழியாக மாப்பிள்ளை இருக்கும் கிலிபி ஏரியா வந்தது. எண்ட்ரன்சில் செக்யூரிட்டி கூர்க்கா வண்டியைப்பார்த்த உடனே சலாம் போட்டு கேட்டை விரிய திறந்து விட்டான்.பெரிய முந்திரி பேக்டரியில் ஜி. எம். போஸ்ட்டில் மாப்பிள்ளை இருந்தார். அவர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதியில் அவர்கள் வீட்டு முன்பு வண்டி நின்றது. வாச்மேன் வந்து சலாம் சொல்லி எங்க லக்கேஜை எல்லாம் எடுத்து வீட்டுக்குள் கொண்டு வைத்தான். என் பெண் வாயெல்லாம் சிரிப்பாக வாசலில் வந்து வெல்கம் சொன்னா. எனக்கா  , காலை 5-மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி மாறி, மாறி, 12- மணி நேரம் ட்ராவல் பண்ணி வந்ததில் ஒரே அலுப்பு. ஜெட் லாக் வேர இருந்தது. எதுவுமே மனசில் பதியல்லே. அவ என்ன கேக்கரா நான் என்ன பதில் சொல்ரேன்னே புரியல்லே. அவளும் சரியா புரிஞ்சுண்டா. அவ்ர்களும்  ரெண்டு வருஷத்திக்கு ஒரு முறை இண்டியா வருவா. அப்போல்லாம் இப்படி அவதிப்பட்டுத்தானே வந்திருப்பா. நான் முதல்ல பாத்ரூம் போயி குளிச்சு மோர்சாதம் மட்டும் ஒரு கைப்பிடி சாப்பிட்டு போயி படுத்துட்டேன் அம்மா வரான்னு அவ வித விதமா என்னலாமோ பண்ணி வச்சுண்டு காத்திண்டு இருந்தா. அன்னிக்கு எனக்கு மூடே இல்லே. எப்படாப்பா போயி படுக்கலாம்னுதான் இருந்தது. வேறு எதுமே கவனத்தில் பதியவே இல்லே.


                                        

 எனக்குன்னு தனி ரூம் ரெடி பண்ணி வச்சிருந்தா. ரூம். நடுவில் ஃபோம் மெத்தையுடன் பெரிய கட்டில் பெரிய கப்போர்ட்  ட்ரெச்சிங்க் டேபிள் ரைட்டிங்க் டேபிள் பெடஸ்டல் ஃபேன் எல்லாம் இருந்தது  சீலிங்க்ஃபேன் இல்லே. ஒருபக்கமா காத்து வருது. ஏதோ  5-ஸ்டார் ஹோட்டல் ரூமில் இருப்பதுபோலத்தான் இருந்தது. வேரு எதையும் கவனிக்கும் மூடு இல்லே. படுத்ததும் இருந்த அலுப்பில் உடனே தூக்கமும் வந்தது.

   
( நன்றி  கூகுள் இமேஜ்)                                                                 (தொடரும்)                                                                 

36 comments:

K.s.s.Rajh said...

வணக்கம் மேடம் கடந்த சில நாட்களாக பதிவுலகப்பக்கம் வரவில்லை என்ற படியால் கடந்த பகுதிகளை(பகுதி-4,3) தவறவிட்டுவிட்டேன்.மீண்டும் படுத்துவிட்டு வருகின்றேன் தொடருங்கள்

pudugaithendral said...

பயணக்களைப்பு எல்லோருக்கும் புரியும். அதுவும் விமானப்பயணம், ஜெட்லாக் நிச்சயம் புரிஞ்சிருப்பாங்க. மகள் வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சு. நாங்களும் உங்க கூடவே வர்றா மாதிரி இருக்கு. (இந்த சாக்குல நானும் ஆஃப்ரிக்கா பாத்திடறேன்) :))

RAMA RAVI (RAMVI) said...

சிறப்பாக இருக்கும்மா உங்க பயணக்கட்டுரை, ஆப்ரிக்காவைப்பற்றி அரிய தகவல்களுடன்.தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.

radhakrishnan said...

என்னம்மா? உங்களுக்கு எவ்வளவு களை
ப்பு பார்த்தீர்களா?
கிளிமாஞ்சரோ-எங்கேயோ கேட்டமாதிரி
இருக்கிறதே,-சிவாஜி படத்தில் பாட்டில்
வரும். பார்க்க வேணிடிய இடம்
போலும் .வீடு, சூழல் நன்றாக உள்ளது நன்றி அம்மா

radhakrishnan said...

ஆப்பிரிக்க அழகிகள் ஒரு முறை தலை அலங்காரம் செயதால் நீண்ட நாடகள் கலைக்க மாட்டார்களாம். அப்படியே வைத்திருப்பார்களாமே.வேலை மெனக்கெட்டு செயது கொண்டதால்
கலைக்க மனசு வராது போலும்

ஸாதிகா said...

வெகு சுவாரஸ்யமாக சொல்லி இருக்கீங்க..தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்.

சாந்தி மாரியப்பன் said...

பத்திரமா போய் இறங்கிட்டீங்களா.. உங்க கூடவே வந்துட்டிருக்கேன். விட்டுப்போன பகுதிகளையும் இப்பத்தான் சேர்த்து படிச்சேன்.

வெங்கட் நாகராஜ் said...

12 மணி நேரப் பயணம் ஐந்து பதிவுகளாக வந்து எங்களையும் பயணிக்க வைத்தது.... அடுத்த என்ன என்பதை தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்....

Asiya Omar said...

அருமை,லஷ்மிமா.கில்பி பற்றி அறிய ஆர்வமாக உள்ளது.

சென்னை பித்தன் said...

அனைத்துப் பகுதிகளையும் இன்றுதான் படித்தேன்.சுவாரஸ்யம் குறையாமல் எழுதியிருக்கீங்க!

சென்னை பித்தன் said...

த.ம.4

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி அம்மா.

Mahi said...

வேகமா தினமும் அனுபவங்களைப் பகிர்ந்துடறீங்க,படிக்க நல்லா இருக்கு. :)

குறையொன்றுமில்லை. said...

ராஜ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

புதுகைத்தென்றல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்றி. கிலிமஞ்சாரோ பாட்டு எந்திரன் படத்தில் வருதுன்னு நினைக்கிரேன். ஆமா ஆப்ரிக்க பெண்களின் தலை அலங்காரம் ஒருமுறை பண்ணிண்டா ஒருமாசம் அப்படியேதான் வச்சுப்பாங்களாம்.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நaன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சென்னை பித்தன் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரத்னவேல் ஐயா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி

Geetha Sambasivam said...

நீங்க ஆப்ரிக்கா போனதைவிடவும் கஷ்டமா இருக்கு எனக்கு இங்கே வர. என்ன காரணம்னே புரியலை. ப்ளாகர் சில சமயம் அனுமதி கிடைக்குது. சில சமயம் திறக்கிறதே இல்லை. தொழில் நுப்டப் பிரச்னைனு நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

முற்றிலும் புதியதொரு அனுபவம். கிளிமஞ்சாரோ கேள்விப் பட்டதுதான். படங்கள் அருமையாக எடுத்திருக்கீங்க. தொடர்ந்த அனுபவங்களுக்குக்காத்திருக்கேன்.

குறையொன்றுமில்லை. said...

கீதா சாம்பசிவம், வருகைக்கு நன்றி. நிறைய பின்னூட்டம் கொடுத்து உற்சாகப்படுத்துரீங்க. நன்றி

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான பயணக் கட்டுரை. இந்த சாக்கில் நானும் ஆப்பிரிக்கா சுற்றிப் பார்க்கிறேன். நல்லா சுவாரஸ்யமாச் சொல்றீங்க....

கோமதி அரசு said...

உங்கள் ஆப்ரிக்கா அனுபவம் சுவையாக இருக்கிறது.
படங்கள் நல்லா இருக்கிறது.
தொடர்ந்து வருகிறேன் லக்ஷ்மி அக்கா.

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

மகேந்திரன் said...

பயண அனுபவம்
மனம் அள்ளிப் போகிறது அம்மா...

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்ரீ

மாதேவி said...

உங்களுடன் பயணிக்கின்றோம்.

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

நானும் உங்களோடு இது வரை சுற்றி பார்த்துட்டேன்

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

http://samaiyalattakaasam.blogspot.com/2012/01/eggplant-sambar.html

குறையொன்றுமில்லை. said...

சென்னை ப்ளாசா என்கூடவே சுத்தினதுக்கு நன்ரி

என்னை ஆதரிப்பவர்கள் . .