Pages

Friday, January 13, 2012

கிலிபி 6( ஆப்ரிக்கா)

 காலேல வெளிச்சம் முகத்துல விழுந்ததும் முழிப்பு வந்தது. டைம் பாத்தா 8- மணி. ஏ அப்பாடி இவ்வளவு நேரமா தூங்கி இருக்கேன் அவ்வளவு அலுப்பு இருந்திருக்கு. அப்பத்தான் என் ரூமையே வெளிச்சத்தில் நல்லா பார்த்தேன். நல்ல விசாலமான ரூம். சுத்தம்னா சுத்தம் படு சுத்தம். பெரிய ஜன்னல் அதில் அழிக்கம்பி வலைக்கம்பி எல்லாம் அடிது கண்ணாடிகதவும் இருந்தது. நல்ல பாதுகாப்பான ரூம். கண்ணாடி ஜன்னல் வழியேதான் வெளிச்சம் உள்ளே வந்தது. கனத்த ஸ்க்ரீன் துணியும் போட்டிருந்தா. வெளில வந்தேன் பெரிசு பெரிசா 4- பெட்ரூம் வரிசையா, வெளில நீள்மான காரிடார். காரிடாரில் பெரிய




                                                 


கப் போர்ட் அதில் சப்பல்கள் சோப்பு எண்ணை ஷாம்பு பேஸ்ட் ப்ரெஷ் எல்லாம் வச்சிருந்தா. அதுவழியா வரவேற்பு அறைக்கு வந்தேன் மாப்பிள்ளை குளித்து ப்ரேக் ஃபாஸ்ட் ஓட்ஸ் & பப்பயா சாப்பிட்டு ஆபீஸ்கிளம்ப ரெடியா இருந்தார். என்னிடம் சொல்லிண்டு போவதற்க்காக வெயிட்பண்ணிண்டு இருந்தார். இருவருக்கும் குட் மார்னிங்க் சொல்லிட்டு பல்தேய்க்கபாத்ரூம்போனேன்


                                       
 விசாலமான பாத்ரூம் டாய்லெட்டும் அட்டாச்டா இருந்தது. எல்லாமே க்ளினா இருந்தது. பெண்காப்பியுடன் ரெடியா இருந்தா. எண்டி இவ்வளவு நேரம் தூங்கிட்டேனே சீக்கிரம் எழுப்பக்கூடாதான்னேன். எழுந்து என்ன பண்ணனும். நிம்மதியா தூக்கம் வரும்போது தூங்கிக்கோ என்றா.
 வாசல் எண்ட்ரென்சில்  KARIBU-  அப்படின்னு ஒரு நேம் போர்ட் வச்சிருந்தா அதற்கு வெல்கம்னு அர்த்தமாம். அங்க்பேசும்  பாஷை  ஸ்வாஹிலின்னு சொல்ரா.
காபி குடிச்சு வீட்டைச்சுத்திப்பாத்தேன். 4-பெட்ரூம் மாப்பிள்ளை பெண்ணின் மாஸ்டர் பெட்ரூமில் அட்டாச்டு பாத்.  பாத் டப் வசதியுடன்இருக்கு பெட் ரூமில் ஒரு ஏசி. பொட்டி இருக்கு ஆமாம் பொட்டின்னுதான் சொல்லனும் நம்ம ட்ரங்க் பெட்டிசைசில் பெரிசா இருக்கு ஆன் பண்ணினாலே   ர்ர் ர்ரூம்னு ஒரு சத்தம்போடும் பாக்கனுமே. இங்க க்ளைமேட் சூடாதான் இருக்கு. அப்புரம் ஏன் திரும்பின பாகம்லாம் கீசர் வச்சிருக்காளோ? நீண்டகாரிடார் பூஜாரூம் தனியா தசாங்க ஊதுபத்தி வாசனையுடன் எல்லா சாமி படங்களுடன் தெய்வீகமா



                                
 இருந்தது..சமையல் ரூம் மைக்ரோவேவ், 4-பர்னர் கேஸ், மிக்சி என்று நவீன வசதி களுடன் நிறைய பீங்கான் பாத்திரங்கள் எவர் சில்வர் பாத்திரங்களுடன் இருந்தது.  அதுக்குபக்கம ஒரு பெரிய ரூம் பெரிய்ஃ ஃப்ரிட்ஜ்,  வாஷிங்க் மிஷின் வைத்திருந்தது. அதன் ஒருபுரம் சின்ன ஸ்டோர் ரூம் ஒன்னு. ப்ரொவிஷன் சாமான்கள் அங்கே அடுக்கி அழகான கண்டெயினர்களில் இருந்தது. அங்கேந்து


                                     
 சின்னக்கதவு வழியே வெளியே வந்தா 6- சேர்களுடன் கூடிய டைனிங்க் ஹால். கரு கருன்னு தேக்குமர டைனிங்க் டேபிள் இங்கயும் பெடஸ்டல் ஃபேந்தான். ஒரு ரூமில் கூட சீலிங்க்ஃபேன் இல்லே. டைனிங்க் ஹால் ஓரம் பிஸ்லேரி வாட்டர் டாங்க். வென்னீர் பச்சத்தண்ணி எல்லாம் அதில் வருது.ஒரு புறமாக கம்ப்யூட்டர், டேபிள், சேர் மற்றொரு புரம் புக் ஷெல்ப் இருந்தது.அதில் நிறைய இங்க்லீஷ் புக்ஸ்.  அது தாண்டி வரவேற்பு ரூம் பிரும்மாண்டமா சோபாசெட் டீபாய் குஷன் வைத்த 6 சேர்கள் சுவர் பக்கம் ஒரு ஷோகேஸ்


                          
 அதில் ஹோம் டி.வி. டெக்  கம்ப்யூட்டர் என்று எல்லா வசதிகளும் இருந்தது.இங்கு மட்டும் சீலிங்க் ஃபேன் மேலே சுத்திண்டு இருந்தது. நடுவில் பெரிய கண்ணாடி கதவு அதைத்திறந்து அந்தப்பக்கம் போனா ஒரே நேரம் 100- பேருக்கு இலைபோட்டு பந்தி பரிமாறலாம்போல பெரிய வராண்டா பால்கனி.



                                    

அங்க்யும் அழிக்கதவு  வலை கம்பி போட்டு பாதுகாப்பாக இருந்தது.அங்கேந்து வெளியே பாத்தா பரந்து விரிந்த பெரிய தோட்டம் தெரிந்தது தோட்டத்தை எல்லாம் அங்கபோயித்தான் பார்க்கணும். வீட்டுக்குள்ளேந்து ரசிக்க முடியாது என்று. உடனே வாசல் புறம் இருக்கும் கதவு திறந்து வெளில வந்தேன்.அப்பா, பெரிய மைதானம் அளவுக்கு பரந்து விரிந்த தோட்டம் தென்னை,வாழை, வேப்ப, புளிய, பலா என்று பெரியபெரிய மரங்கள் பேர் தெரியாத பூக்களுடன் சின்னச்சின்ன செடி கொடிகள் என்று அமர்க்கள்மாக இருந்தது ஒரு பண்ணை வீடு, ஒரு தோப்பு பங்களாவில் இருப்பது போல வே இருந்தது.


                                      









பெண் வந்து அம்மா 9- மணி ஆச்சு வீட்டை அப்ப்ரமா சுத்திபாக்கலாம் குளிச்சு ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடலாம் வான்னா. சரின்னு மனசில்லாமலே உள்ளே போயி குளியல். பாத்ரூமில் என் உயரத்துக்கு பெரிய கீசர் இருந்தது வென்னீருக்கு தனிக்குழாய், தண்ணீருக்கு தனிக்குழாய்னு அமர்க்களம். பாத்ரூம் ஷவரிலும் வென்னீர் தண்ணீர் ரெண்டுமே வந்தது. நல்லா குளியல். துணியெல்லாம் நீ, துவைக்காதே மிஷின் போட்லாம்னு சொல்லிட்டா.குளிச்சு வந்ததும் அவள் ஒட்ட்ஸ், பப்பயா நான் 4- மேரி பிஸ்கெட்,  காபி தான் ப்ரேக் ஃபாஸ்ட். ஒரு வேலைக்காரி வந்திருந்தா. ஆப்ரிக்கன்பொண்ணுதான் எலினான்னு பேரு நல்ல வாட்ட சாட்டமா இருந்தா. இவஹேர்ஸ்டைலும் குட்டி பின்னல்கள்தான் எல்லாருமே அப்படித்தான் போல இருக்கு. என்னை அந்தப்பொண்ணுக்கு அறிமுகம் செய்தா என் பொண்ணு. அவளும் வெல்கம்சொன்னா லேசா சிரிச்சா பல் பளிரடிச்சுது.வீட்டை ஒவ்வொரு ரூமா பாத்துப்பாத்து பெருக்கி,  பெரிய மாப் வச்சு துடைச்சு,  எவ்வளவு ரூமிருக்கு எல்லாம் க்ளீன் பண்ணவே மதியம் 1- மணி வரை ஆகுது. ஷோகேஸ் டி,வி ஷெல்ப் எல்லாம் துடைத்து பளிச்சுனு வைக்கரா. என் பெண் கிச்சனுக்குள் மட்டும் யாரையுமே விடமாட்டா, சமையலும் சரி பாத்திரம் க்ளீன்பண்ணுவதும் அவள் மட்டுமே செய்தாதான் அவளுக்குத்திருப்தியாகும். நான் காய் கட் பண்ணவான்னேன். ஒன்னும் வேண்டாம் நீ நல்லா ரெஸ்ட் எடு அதுபோறும் ஒரு வேலையும் பண்ணவேண்டாம்னு சொல்லிட்டா.டி.வி ஆன் பண்ணப்போனேன். அதுபக்கமா ஒரு பழையகால போன் கருப்பு கலரில் இருந்தது. பழைய படங்களில் போலீஸ்   ஸ்டேஷனில் எல்லாம் இருக்குமே நம்பர் ரவுண்டா சுத்தி சுத்தி டயல் பண்ணுவோமே அத்போல. அது பாத்தோடனே எனக்கு



                ரொம்பவே பிடிச்சுது. போக வர அதை விரல்களால் சுத்தி சுத்தி டயல் பண்ணி வேடிக்கை பார்ப்பேன் எனக்கே சிரிப்பாவரும் இன்னு என்மனசுல குழந்தைதனம் நிறையவே இருக்குன்னு நினைப்பேன்.டி, வி போட்டேன் அதில் ஆப்ரிக்க பாஷையுட ஆப்ரிக்க சீரியல்தான் வந்தது. ஹிந்தியோ, தமிழோ, இங்க்லீஷோ எதுமே வராதாம் .அப்போ டிவில என்னதான் பாக்க? சி. டி. யே துணை.

(  நன்றி-கூகுள் இமேஜ்)                                                   (தொடரும்)

56 comments:

RAMA RAVI (RAMVI) said...

ஆப்பிரிக்கா பற்றி நாங்களும் தெரிந்து கொள்ளும் விதமாக அழகான விவரங்கள்,வீடு பற்றிய வர்ணனை எல்லாம் அற்புதமாக இருக்கு அம்மா.
அடுத்த பகுதிக்காக ஆர்வத்தோட காத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

ரொம்பவே பிடிச்சுது. போக வர அதை விரல்களால் சுத்தி சுத்தி டயல் பண்ணி வேடிக்கை பார்ப்பேன் எனக்கே சிரிப்பாவரும் இன்னு என்மனசுல குழந்தைதனம் நிறையவே இருக்குன்னு நினைப்பேன்.//

குழந்தை மனது இருப்பது மிகவும் நல்ல விஷயம்.
உங்களோடு வந்து வீட்டில் எல்லா அறைகளையும் சுத்திப் பார்த்து விட்டேன்.
தோட்டம் மிகவும் அழகு.

சாந்தி மாரியப்பன் said...

வீட்டைப்பத்தி நீங்க விவரிக்கும் விதமே இந்தியாவில் அப்படியொரு வீட்டில் வசிக்கணும்ங்கற ஆவலைத் தூண்டுது :-))

K.s.s.Rajh said...

சுவாரஸ்யம் தொடருங்கள் மேடம்
ஆமா இது இன்னும் எத்தனை பகுதிகள் வரும் நிறைய இருக்கு போல

Mahi said...

பொண்ணு வீட்டை நல்லாவே சுத்திக்காட்டறீங்கமா! மா-பலா-தென்னை-வேம்பு மரமெல்லாம் கூட கிலிபில இருக்கா?? சூப்பர் போங்க!

மகேந்திரன் said...

அந்த இளநீரையும், மாம்பழத்தையும் பார்க்கும்போது
அப்படியே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது.
அருமையான அனுபவக் கதை அம்மா....

பால கணேஷ் said...

அடடெ... 5வது பகுதிய மிஸ் பண்ணிட்டேன் போலருக்கே... இப்ப அதையும் இதையும் சேத்து படிச்சுட்டேன். நான்லாம் சின்ன சின்ன குழந்தைத் தனங்களை உள்ள வெச்சுட்டு எப்படா லைப்ல சீரியஸாவேன்னு என்னையே திட்டிட்டு இருப்பேன். உங்க கிட்டயும் இதப் பாத்ததுல ரொம்ப குஷி எனக்கு. பொண்ணோட வீட்டை நீங்க வர்ணிச்சது ரொம்ப அருமை. தொடருங்கள். உங்களுடன் தென் ஆப்ரிக்கா (கிலிபி)வை சுற்றி வருகிறேன். நன்றி.

Jaleela Kamal said...

present apparam vareen

ரசிகன் said...

அதானே ஆப்ரிகாவுல எதுக்கு கெய்சர்!

மாசே மாரா போனீங்களா?

radhakrishnan said...

பாரதி கேடகும் காணிநிலம் மற்றும்
எல்லாமே இருக்கின்றதே.வீடு அமைப்பு
மிக நவீனமாகவும் இருக்கின்றது.வெளியில் க்ளைமேட்
எப்படி? அருமையான ஆப்பிர்க்கப்
பயணம் உங்கள் தயவில் எங்களுக்குக் கிடைக்கின்றது. வர்ணனை பிரமாதம்.
தொடருங்கள். மிக்க நன்றி.

ADHI VENKAT said...

ஆப்பிரிக்க பயணம் 1ம் பகுதிக்கு பிறகு இன்று தான் மீதிப் பகுதிகள் அனைத்தையும் பொறுமையாக படித்து ரசித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. அனைத்தையும் ஞாபகம் வைத்துக் கொண்டு ரொம்ப நல்லா தந்திருக்கீங்க அம்மா. சுவாரசியமாக இருந்தது. உங்கள் பெண்ணின் வீட்டை நீங்க சொல்லியுள்ளதை வைத்து கற்பனை செய்து பார்த்தால் ஆவலாக உள்ளதும்மா.

கே. பி. ஜனா... said...

// என் பெண் கிச்சனுக்குள் மட்டும் யாரையுமே விடமாட்டா, சமையலும் சரி பாத்திரம் க்ளீன்பண்ணுவதும் அவள் மட்டுமே செய்தாதான் அவளுக்குத்திருப்தியாகும். நான் காய் கட் பண்ணவான்னேன். ஒன்னும் வேண்டாம் நீ நல்லா ரெஸ்ட் எடு அதுபோறும் ஒரு வேலையும் பண்ணவேண்டாம்னு சொல்லிட்டா.//
என்ன ஒரு நல்ல பழக்கம்!

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

அடடா எனக்கு அனைத்திலும் அதிகம் பிடித்தது, அவர்களின் தோட்டம் பற்றி நீங்க சொன்னதே.... அவ்வ்வ்வ்வ்வ்.. நிஜமாகவேயா... நீங்களும் பழங்கள் புடுங்கினனீங்களோ?.

அந்த ஃபோன் வெளிநாடுகளில் பேமஸ்தான்... அந்த ஸ்டைலில் பல கலர்களில் கிடைக்குது, வடிவுக்காக பாவிக்கிறார்கள்... பழமை என்றும் இனிமை.

மனோ சாமிநாதன் said...

விவரிப்பு அருமையாக இருக்கிறது! மேலே தொடருங்கள்!!

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜ் இப்பவே போராகுதா? இப்பதானே ஆப்ரிக்காவுக்குள்ள எண்டர் பண்ணி இருக்கோம். இன்னும் சுத்திப்பாக்கவெனாமா?

குறையொன்றுமில்லை. said...

மஹி இன்னும் பேர் தெரியாத எத்தனையோ மரங்கள் எல்லாம் இருக்கு. vவருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் நம்ம எல்லார் மனதுக்குள்ளயும் குழந்தைத்தனம் இன்னும் மிச்சம் இருக்குதான். வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா மெதுவா வாங்க.

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் தொடர்வருகைக்கு நன்ரீ

குறையொன்றுமில்லை. said...

ரசிகன் மாசேமாரா, நக்ரு நேஷனல் பார்க் எல்லாம் பின்னாடியே வந்துட்டு இருக்கு. நீங்க ஆப்ரிக்கா போயிருக்கீங்களா? வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கே.பி. ஜனா வருகைக்கு நன்றி.குழந்தைகளுக்கு நிறைய நல்லபழக்கங்கள் கற்றுக்கொடுத்தது எவ்வளவு நல்லது இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்றி. இப்ப உள்ள போன் எல்லாம் நம்பர் ப்ரெஸ் பண்ணரோம் இல்லியா அந்த பழையமாடல் போன் சுத்தி டயல் பண்ண மஜாவா இருந்தது.

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் வருகைக்கு நன்றீ

Advocate P.R.Jayarajan said...

சாண்டில்யன் வரலாற்றுக் கதைகளில் வருவதைப் போன்ற நல்ல வருணனைகள்.
தொடர் நன்றாகச் செல்கிறது..

இராஜராஜேஸ்வரி said...

போக வர அதை விரல்களால் சுத்தி சுத்தி டயல் பண்ணி வேடிக்கை பார்ப்பேன் எனக்கே சிரிப்பாவரும் இன்னு என்மனசுல குழந்தைதனம் நிறையவே இருக்குன்னு நினைப்பேன்./

அது ஆசீர்வாதமல்லவா!!

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் லக்ஷ்மிம்மா.

குறையொன்றுமில்லை. said...

அட்வகேட் ஜெயராஜன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி ஆமா அது வரம்தான். சரியா சொன்னீங்க. வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வழ்த்துகள்.

Jaleela Kamal said...

இனிய பொங்க்ல் வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

வருகைக்கு நன்றி ஜலீலா

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் மகளின் வீடு, வீட்டைச் சுற்றி இருக்கும் மரங்கள் என நல்ல பல தகவல்கள் கொடுத்தது நல்லா இருக்கும்மா.... அடுத்த பகுதியும் இப்பவே படிக்கிறேன்....

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்ரி

ஹேமா said...

அட நம்ம ஊர்போலவே இருக்கே !

வல்லிசிம்ஹன் said...

வீடு அழகு. மாப்பிள்ளை மரியாதை. பெண்ணின் அன்பு. எல்லாமே வெகு அருமை. நீங்கள் பார்த்த சிடிப் படங்கள் பற்றியும் சொல்லுங்கள்:)
இந்த மாதிரிப் பண்ணைத் தோட்டங்களை அமெரிக்காவின் தென் பகுதியான அட்லாந்தா,லியுசியானா
மாவட்டங்களில் பார்க்கலாம்.
தொடர்கிறேன் லக்ஷ்மி.

குறையொன்றுமில்லை. said...

வல்லி சிம்ஹன் நீங்க தொடர்ந்துவந்து படிச்சு ரசிப்பதற்கு நன்றி. நீங்க எங்கே இருக்கீங்க இப்ப?

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

ரொம்ப அருமை . வீட்ட நானும் சுத்தி பார்த்துட்டேன்
லஷ்மி அக்கா


ஜலீலா

குறையொன்றுமில்லை. said...

சென்னை ப்ளாசா வீடு நல்லாஇருந்துச்சா? நன்றி வருகைக்கு

Geetha Sambasivam said...

மாங்காயைப் பார்த்தாலே ஆசையா இருக்கு ஊறுகாய் போடணும்போல.

ரொம்பச் சின்ன வயசிலே எழுத்தாளர் லக்ஷ்மி எழுதின இருண்ட கண்டத்தில் எட்டு ஆண்டுகள் படிச்ச நினைவும் இப்போ வருது. அவங்க இருந்த வீடும், ரொம்பப் பெரிய வீடுனு எழுதி இருந்தாங்க.

புளி நல்லா இருக்கும்போலிருக்கு!

இந்தப் புளியிலே ரசம் வைச்சு,இந்தத் தேங்காயிலே தேங்காய்த் துவையல் அரைச்சு, சுட்ட அப்பளத்திலே நெய் ஊத்தி, மாங்காய் ஊறுகாயோடு சாப்பிடலாம். :))))

Geetha Sambasivam said...

வல்லி இப்போ சென்னையிலே தான் இருக்காங்க. நாளைக்கு அதாவது இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை கண் ஆபரேஷன். நல்லபடியா ஆகப் பிரார்த்திப்போம்.

குறையொன்றுமில்லை. said...

கீதா சாம்பசிவம் வல்லி உங்களுக்கு நல்லபழக்கமா? ஆப்ரேஷன் நல்லபடியா நடக்க நானும் ப்ரேயர்பண்ணுரேன். ஆப்ரிக்கால புளிய மரம் வீட்டுக்கு பின்னாடியே இருக்கே அந்தப்புளி நல்ல டேஸ்ட் தான்.

Geetha Sambasivam said...

வல்லி உங்களுக்கு நல்லபழக்கமா? //

ஆமாம், ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் ஒரே சமயம் பதிவு எழுத ஆரம்பிச்சோம். அவங்க பதிவிலே நானும், என் பதிவிலே அவங்களும் மட்டுமே பின்னூட்டம் கொடுத்த காலம் உண்டு. :)))))) வீட்டுக்கும் வந்திருக்காங்க. நானும் போயிருக்கேன். சென்னையிலே இருக்கையில் தொலைபேசி மூலம் நலம் விசாரித்துக்கொள்வோம்.

குறையொன்றுமில்லை. said...

பதிவு எழுதரவங்க ஒருத்தரை ஒருத்தர் தெரிந்திருந்தால் நெருக்கம் நல்லா இருக்கும் இல்லியா? நான் மும்பைல இருக்கேன் . கீதா நீங்க எங்க?

Geetha Sambasivam said...

தற்சமயம் யு.எஸ்ஸில் பெண் வீட்டில் இருக்கேன் லக்ஷ்மி. அடுத்த மாசம் மறுபடியும் ஹூஸ்டனின் பையர் வீட்டுக்குப் போயிட்டு ஏப்ரலில் இந்தியா திரும்பணும். இந்தியா வந்ததும் என் நம்பர் உங்களுக்குத் தரேன். :)))) நேரம் கிடைக்கையில் பேசலாம். சென்னை வந்தால் எங்க வீட்டுக்கு வாங்க.

குறையொன்றுமில்லை. said...

கீதா நீங்க அடிக்கடி என்பக்கம் வருவது ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்டிப்பா உங்க நம்பர்கொடுங்க. மனோமேடம் ஷார்ஜாவில் இருக்காங்க இல்லியா அவங்ககூட அடிக்கடி பேசிருக்கேன். போன மாசம் தஞ்சாவூர்வந்தாங்க பேசினோம். அமைதிச்சாரல் மும்பையிலேதான் இருக்காங்க எங்காத்துக்கும் வந்தாங்க அவகூடவும் அடைக்கடி பேசுவேன் அதுபத்தி மினி சந்திப்புன்னு ஒரு பதிவு கூட போட்டிருந்தேன் பாத்தீங்களா 6-மாசம் முன்னே தமிழ் நாடு சுத்தப்போயிருந்தேன் அப்போ தமிழ் வாசி பிரகாஷ், வலைச்சரம் ஆசிரியர் சீனா ஐயா என்னை மதுரை ஸ்டேஷனில் இரவு 3-மனிக்குவந்துமீட் பன்னினாங்க அதையும் மெட்ராச் நல்ல மெட்ராஸ் என்கிர பதிவில் சொல்லி இருக்கேன். நாம்ரெண்டு பேரும்கூட ரொம்ப நெருங்கி வரோம் நல்லா இருக்கு இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

என் அத்தை என் வயதுதான் அவளும் எனப்பாவின் கடைசி தங்கை அவகூட யு. எஸ் லதான் இருக்கா. ஆஸ்டின்ல. நாங்க இருவரும் ரொம்ப க்ளோஸ் வாரம் ஒருமுரை போன் பேசிடுவா அவ பத்தி சினேகிதியே, சினேகிதியேன்னு ஒருபதிவில் சொல்லி இருக்கேன் பாருங்க கீதா.

Geetha Sambasivam said...

ரொம்ப நன்றி லக்ஷ்மி, நீங்க சொல்லும் பதிவுகளை நான் இன்னமும் படிக்கவில்லை. படிக்கிறேன். சீனாசாரைத் தெரியும். பார்த்ததில்லை. நான் வலைச்சரம் ஆசிரியரா இருந்தப்போ தொலைபேசியில் பேசினார். மனோ என்பவரையும் தெரியாது. அமைதியைத் தெரியும். :)))) நீங்க சென்னை வந்தா கட்டாயமா வாங்க. மும்பையிலே சொந்தக்காரங்க நிறைய இருந்தாலும் அடிக்கடி நான் வரதில்லை.

குறையொன்றுமில்லை. said...

மும்பையில் சொந்தக்காரங்க இருக்கான்னு சொல்ரீங்க அப்ப என்ன ஒரு நடை வரவேண்டியதுதானே? இப்ப புது ஃப்ரெண்டா நானும் இருக்கேனே. வாங்க ஒருமுறை சந்திக்கலாமே?

குறையொன்றுமில்லை. said...

கீதா நீங்க அதீதம் இதழில் சிறப்பு ஆசிரியரா இருக்கீங்களா? வாழ்த்துகள் இப்பதான் அப்பாவி தங்கமணி ப்ளாக்கில் இந்த விபரம் தெரிந்து கொண்டேன்.

Sivaranjani said...

//இன்னு என்மனசுல குழந்தைதனம் நிறையவே இருக்குன்னு நினைப்பேன்.
தப்பே இல்லை அம்மா, கட்டுரை மிகவும் எதார்த்தம்.. என் பதிவு, உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில்,
http://theblossomingsoul.blogspot.in/2012/01/blog-post.html
--

குறையொன்றுமில்லை. said...

சிவ ரஞ்சனி முதல் முறையா வரீங்களா? நன்றி. நானும் வரேன்மா.

Geetha Sambasivam said...

ஜனவரிப்புத்தாண்டு சிறப்பு மலருக்கு மட்டுமே அதீதம் இதழில் சிறப்பாசிரியராக இருந்தேன். அதோடு முடிஞ்சது. :)))) என்னோட பதிவில் உங்களைக்குறித்தும் எழுதி இருக்கேன். நேரம் இருந்தால் பாருங்க.

குறையொன்றுமில்லை. said...

கீதா வாங்க புது பதிவெல்லாம் படிக்கலியா?

என்னை ஆதரிப்பவர்கள் . .