Google+ Followers

Pages

Wednesday, February 29, 2012

கிலிபி 16 ஆப்ரிக்கா


மசைமாரா
அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்து குளித்து தயாராகி 7 மணிக்கெல்லாம் காலை உணவை சாப்பிட்டு விட்டு மசை மாரா விற்க்கான பயணத்தை தொடங்கினோம்.
இங்கு ஒன்று சொல்ல வேண்டும். இந்த மாதிரி இடங்களில் உள்ள 


                
ஹோட்டல்கள் எல்லாம் 5 நட்சத்திர வகையை சேர்ந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 85 சதவீதம் அமெரிக்கர்களும் ஈரோப்பியர்களும் தான். அவர்களின் நாடுகளில் கென்யா மாதிரி பரந்து விரிந்த இடம் மிருகங்களுக்காக இருப்பது இல்லை. இது மாதிரி வகைவகையான மிருகங்களும் அங்கெல்லாம் கிடையாது.  இது ஆஃப்ரிக்காவிற்கே கடவுள் கொடுத்தவரம் என்றும் சொல்லலாம்.  ஆஃப்ரிக்கா மாதிரி மிருகங்களுக்காக இத்தனை பரந்து விரிந்த இடம் வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது.  இது மாதிரி இடங்களை இங்கு உள்ள அரசாங்கங்கள் நன்றாக பேணி பராமரித்துக்கொண்டு வருகின்றன. இதனால் அரசாங்கத்திற்கு அண்ணிய செலாவணி (foreign exchange – in short forex)  நிறைய கிடைக்கிரது. அங்கு உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இது தவிர வரிகள் மூலமும் அரசாங்கத்திற்க்கு நிறைய கிடைக்கிரது. 
இந்த மாதிரியான சுற்றுலா பயணிகள் வருவதினால் ஹோட்டல் 

          
களுக்கும் நல்ல சொகரியங்களை கொடுக்கவேண்டியிருக்கிரது.  சாப்பாடு விஷயத்தில் என்னை ப்போல் வயதானவர்களுக்கு கொஞ்சம் பார்த்து பார்த்து தான் சாப்பிட வேண்டியிருக்கிரது.  அவர்கள் படைப்பதெல்லாம் நல்ல தரமான உணவுகள் தான்.  வயதில் சிறியவர்கள் தாராளமாக 
                  
விதவித மான படைப்புகளை சாப்பிடலாம்.  என்னை தவிர மற்றவர்கள் அனைவரும் நல்ல விரும்பி சாப்பிட்டார்கள்.  என்னுடைய உடல் உபாதைகள் பற்றி என் பெண்ணிற்க்கு தெரிந்ததால் அவள் என்னை வற்ப்புறுத்தவில்லை.  நானும் பார்த்து பார்த்து எது என் உடம்புக்கு சரிப்படுமோ அதை மட்டும் சாப்பிட்டு வந்தேன். 
                         
ஹோட்டல் கட்டுமானம் பற்றியும் சொல்ல வேண்டும்.  வெள்ளையர்களுக்கு எல்லாம் இயற்கயை ஒற்றிய பொருளாக இருக்க வேண்டும்.  மேலும் கட்டடங்களும் காடுகளின் கூட ஒன்றி யிருக்கவேண்டும்.  அதனால் கான்க்கீரீட் கட்டிடங்கள் மிகவும் குறைவு. எல்லாமே மூங்கில் கள், மரங்களால் ஆன பொருட்களால் கட்டபட்டிருக்கின்றன.  பார்க்கவும் இருக்கவும் நன்றாக இருக்கிரது.  இது மாதிரி இருப்பதால் சிலசமயம் தீ பிடித்தால் எல்லாமே நாசமாகி விடும். நான் திரும்பி வந்து 2 வருடங்கள் கழித்து எங்கள் மாப்பிள்ளையின் நண்பர் வேலை பார்த்துக்கொண்டிருந்த திவி பீச் ரிசார்ட் ஒரு நாள் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. அதை திரும்ப கட்டி வியாபாரம் தொடங்கு வதற்கு அவர்களுக்கு ஒரு வருஷம் ஆகி விட்டது.
பொதுவாக இங்கு வரும் வெள்ளையர்களும் பாக்கேஜ் சுற்றுலாவில் தான் வருகிரார்கள்.  மேற்கண்ட விஷயங்களெல்லாம் என் மாப்பிள்ளை சொன்னது. 
 நக்குருவிலிருந்து மசைமாரா 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  நாங்கள் வ்ந்த வ்ழியிலேயே திரும்பி ஒரு 100 கிலோ மீட்டர் போய் அங்கிருந்து ஒரு பாதையில் செல்லவேண்டும்.  கையில் எல்லாருக்கும் பாக்ட் லன்ச் எங்கள் ஹோட்டலில் இருந்து எடுத்துக்கொண்டோம். இதுவும் பாக்கேஜ் டூரில் அடங்கும்.
தொடரும்………………………….


 நன்றி- (கூகுல் இமேஜ்)                      (தொடரும்)

30 comments:

கோமதி அரசு said...

நல்ல விளக்கமான் பயனக் கட்டுரை.

ஆப்பிரிக்கவிற்கு கடவுள் கொடுத்த வரத்தைப் பற்றி எங்களுக்கு விரிவாய் நீங்கள் சொல்வது மகிழ்ச்சி.மசைமாராவை பார்க்க ஆவலாய் காத்து இருக்கிறேன்.

Mahi said...

Nice informations..waiting for the next post!

athira said...

லக்ஸ்மி அக்கா இம்முறை நாந்தான் 1ஸ்ட்டூஊஊஊ:))..

ஷோட்டாக முடிச்சிட்டீங்க இம்ம்முறை... தொடருங்க....

ஸாதிகா said...

கில்பி பயண அனுபவம் வித்தியாசமான சுவாரஸ்யமான அனுபவம்தான்.

கோவை2தில்லி said...

மசைமாராவைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்....

விளக்கங்கள் அருமை அம்மா....

RAMVI said...

ஆமாம் அம்மா,காடுகளும், மிருகங்களும்தான் ஆப்ரிக்காவிற்கு கடவுள் கொடுத்த வரம்.மிகவும் சிறப்பாக சுவாரசியமாக இருக்கிறது பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்கள் பயண அனுபவங்கள் படிக்க நல்லாவே இருக்கு. நாங்களும் கூடவே வருவதுபோல ஒரு பிரமை ஏற்படுகிறது.

ராமலக்ஷ்மி said...

//ஆஃப்ரிக்கா மாதிரி மிருகங்களுக்காக இத்தனை பரந்து விரிந்த இடம் வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது. இது மாதிரி இடங்களை இங்கு உள்ள அரசாங்கங்கள் நன்றாக பேணி பராமரித்துக்கொண்டு வருகின்றன. //

பாராட்ட வேண்டும். நல்ல பகிர்வு.

Asiya Omar said...

அருமையாக ப்கிர்ந்துகிட்டு வறீங்க.தொடருங்க.

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான அனுபவங்கள்.... :)

தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்....

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Lakshmi said...

அதிரா தொடர் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராமல்ஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆசியா ஓமர் வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

அரசாங்கத்திற்கு அண்ணிய செலாவணி (foreign exchange – in short forex) நிறைய கிடைக்கிரது. அங்கு உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இது தவிர வரிகள் மூலமும் அரசாங்கத்திற்க்கு நிறைய கிடைக்கிரது.

மிகச்சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Lakshmi said...

இராஜராஜெஸ்வரி வருகைக்கு நன்றி

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

ஓ 16 தொடர் போட்டுட்டீங்களா?

பிற்கு படிக்கிறேன் லஷ்மி அக்கா

ஜலீலா

Lakshmi said...

ஜ்லீலா வாங்க மெதுவா படிங்க நன்றி

கணேஷ் said...

எப்படியோ மிருகங்களை நீங்க பாத்த போன பதிவை மிஸ் பண்ணிருக்கேன். இப்போ சேத்துப் படிச்சிட்டேன். தொடரும் உங்கள் பயண்த்துக்கு ஆவலுடன் காத்திருக்கேன். நன்றி.

Lakshmi said...

கணேஷ் வருகைக்கு நன்றி

மாதேவி said...

மசைமாராவை காண வருகின்றோம்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

Geetha Sambasivam said...

பரந்து விரிந்த இடம் மட்டும் கிடைத்தால் போதுமா? பரந்து விரிந்த மனம் இருந்தால் தானே மிருகங்களுக்குச் சரியான பராமரிப்புக் கொடுக்க முடியும். நல்ல ஏற்பாடுகள். வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையில் ஏற்பாடுகள் செய்வதோடு அதன் தரத்தையும் காப்பாற்றி வருகின்றார்களே அதைச் சொல்லணும்.

Lakshmi said...

ஆமா கீதா நீங்க சொல்வது சரிதன். வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .