இரவு சாப்பாடு முடித்துவிட்டு யாவரிடமும் பேசிவிட்டு நாங்கள் எங்களின் டெண்டுக்கு தூங்குவதற்க்காக போனோம். படுத்து உறங்கியாச்சு. ஒரு அரைமணி நேரம் தான் ஆயிருக்கும். திடீரென்று சிங்கத்தின் கர்ஜனை எங்களை எங்களின் நித்திரையிலிருந்து எழுப்பிவிட்டது. அப்பப்பா, என்ன சத்தம். திரும்ப திரும்ப கர்ஜித்துக்கொண்டு இருந்தது. எங்களுக்கு என்னவோ அது எங்களின் டெண்டுக்கு வெளியே நின்று கொண்டு
கர்ஜிப்பது போல் தோணியது. டெண்டோ கான்வாஸினால் செய்யப்பட்டது. சிங்கத்தின் நகங்களால் ஈசியாக பிய்த்து எடுத்து எங்களின் டெண்டுக்குள் நுழைந்து எங்களை அடித்து சாப்பிட முடியும். அந்த பயத்தில் அது வெளியிலிருந்து சுரண்டுவது போலிருந்தது. எங்களுக்கு ஒரே வழி பாத்ரூமில் நுழைந்து கதவை தாள்பாழ் போட்டுக்கொள்ளவேண்டியதுதான். அது ஒன்றுதான் சிங்கத்திலிருந்து தப்பிக்க வழி. ரூமில் லைட் கூட போட்டுக்கவில்லை. நாங்கள் இருட்டிலேயே இது மாதிரி
பேசிக்கொண்டிருந்தொம். மேல்கொண்டு எங்கள் குலதெய்வம் ஸ்ரீகுருவாயூரப்பனை வேண்டிக்கொண்டிருந்தோம்.
கர்ஜிப்பது போல் தோணியது. டெண்டோ கான்வாஸினால் செய்யப்பட்டது. சிங்கத்தின் நகங்களால் ஈசியாக பிய்த்து எடுத்து எங்களின் டெண்டுக்குள் நுழைந்து எங்களை அடித்து சாப்பிட முடியும். அந்த பயத்தில் அது வெளியிலிருந்து சுரண்டுவது போலிருந்தது. எங்களுக்கு ஒரே வழி பாத்ரூமில் நுழைந்து கதவை தாள்பாழ் போட்டுக்கொள்ளவேண்டியதுதான். அது ஒன்றுதான் சிங்கத்திலிருந்து தப்பிக்க வழி. ரூமில் லைட் கூட போட்டுக்கவில்லை. நாங்கள் இருட்டிலேயே இது மாதிரி
பேசிக்கொண்டிருந்தொம். மேல்கொண்டு எங்கள் குலதெய்வம் ஸ்ரீகுருவாயூரப்பனை வேண்டிக்கொண்டிருந்தோம்.
கிட்டதட்ட ஒரு மணி நெரம் அது விடாமல் கர்ஜித்துக்கொண்டிருந்தது. பிறகு கர்ஜனை நின்றது. அப்படியும் வெளியிலிருந்து சுரண்டிக்கொண்டிருந்தது போல் எங்களுக்கு ஒரு பிரமை. எங்க தூங்குவது. எப்படியோ விடிந்துவிட்டது. சிங்கம் உள்ளே வரவில்லை. எங்களுக்கு ஒரே ஆச்சரியம். சிங்கம் தனக்கு பசித்தால் தான் மற்றவர்களை தாக்கி சாப்பிடும். அதனுடைய கர்ஜனையை கேட்கும்பொழுது அது பசியில் கத்துவது போலே எங்களுக்கு தோணியது.
குளித்துவிட்டு ரெஸ்டாரெண்டுக்கு போனோம். அங்கு எல்லாரும் கூடி சிங்கம் பற்றிய பேச்சுதான். ஒருவரும் தூங்கவில்லை. நம் தமிழர்களும் சரி, வெளினாட்டவர்களும் சரி எல்லாரும் அதை பற்றி தான் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் அவர் அவர்களின் டெண்டுக்கு வெளியே இருந்து சிங்கம் கர்ஜித்து கொண்டிருந்தமாதிரியே தோணியதாம்.
Fig Tree Camp டாலெக் நதிகரையில் தான் அமைந்திருந்தது. நதியிலோ தண்ணீர் அதிகம் இல்லை அந்த சமயத்தில். சிங்கம் வேண்டுமென்றால் சுலபமாக கரையைகடந்து வர முடியும். நாங்களே மதியம் சமயத்தில் சின்ன மான்கள் நதியை கடந்து எங்களின் டெண்டுக்கு வெளியே மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிரோம்.
என் மாப்பிள்ளை அந்த காம்ப் மேனேஜரை கூப்பிட்டு விபரம் கேட்டார். அவரும் சிரித்துக்கொண்டே. சிங்கம் ஒரு 3 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கர்ஜித்துக்கொண்டிருந்ததாகவும் அது ஒரு இரையை அடித்து போட்டுவிட்டு தன் கூட்டத்தை கூப்பிட்டுக்கொண்டிருந்ததாகவும் சொன்னார். அது அங்கு சகஜம் என்றும், அவர்களுக்கு அது பழகி போய்விட்டதாகவும் சொன்னார். அந்த காம்ப் தொடங்கி ஒரு 10 வருஷம் இருக்கும், ஆனால் இது வரை ஒரு தடவை கூட காம்பிர்க்குள் மிருகங்கள் ஒன்றும் வந்ததில்லை என்ரார். என் மாப்பிள்ளை இந்த விபரத்தை மைக் மூலம் எல்லாருக்கும் அறிவிக்கசொன்னார். இல்லையென்றால் நம்முடைய காம்ப் பெயர் கெட்டுவிடும், அப்புரம் ஆட்கள் வருவது குறைந்துவிடும் என்று அவனிடம் சொன்னார். அவனும் மைக்கில் அறிவித்தபிறகு எல்லாரும் நிம்மதி அடைந்தார்கள்.
காம்ப் மேனேஜரிடம் சொல்லி காம்பின் வண்டியில் எங்களை அன்று மிருகங்களை காண்பிர்பதற்க்காக மாப்பிள்ளை ஏற்பாடு செய்தார். காம்பில் உள்ள டிரைவர்கள் தினமும் சுற்றுலா பயணிகளை கூட்டிக்கொண்டு போகிரார்கள், அவர்களுக்கு எந்த மிருகம் எங்கு இருக்கும் என்று துல்லியமாக தெரியும். ஒரு 10 மணிவாக்கில் நாங்கள் 6 பேரும் காம்பின் வண்டியில் கிளம்பினோம். போனதடவை நான் போட்ட வீடியோவில் நீங்கள் எல்லோரும் அந்த வண்டியை பார்த்திருப்பீர்கள். பாட்டில்கீரீன் கலரில் பெயிண்ட் அடித்திருந்த வண்டிகள் தான் அது. எல்லாமே டொயோட்டா லாண்ட் கூரூஸர்கள் தான். காடுகளில் சுத்த அதுதான் லாயக்கு.
ஒரு மணிவரை நல்ல சுற்றி காண்பித்தார். நிறைய மிருகங்களை பார்த்தோம். யானை கூட்டம், மான்கள், காட்டுருமைகள், குரங்குகள், ஹயினாக்கள், வரிக்குதிரைகள், சிறுத்தைகள், இப்படி நிறைய மனம் குளிற பார்த்தொம். ஆனால் சிங்கத்தை மட்டும் பார்க்கலை. மாப்பிள்ளை டிரைவரிடம், நீ எங்களுக்கு சிங்கத்தை காண்பிக்காதவரை நாங்கள் காம்பை விட்டு போக போவதில்லை என்று சொல்லி விட்டார். அவனும், கவலை படாதீர்கள் இன்று மதியமே நான் எப்படியும் உங்களுக்கு ஒரு சிங்கபட்டாளத்தை காண்பித்து விடுவேன். சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு 3 மணிக்கு திரும்ப கிளம்பலாம் என்று சொன்னான்.
நாங்களும் அதே மாதிரி 3 மணிக்கு தயாராகி விட்டோம். ஒரு 4 மணிவரை திரும்ப திரும்ப அதே மிருகங்கள் தான் தென் பட்டன. டிரைவரும் வொயர்லெஸ் கருவிமூலம் நிறைய காம்பின் மற்ற டிரைவர்களிடம் தொடர்புகொண்டு சிங்கத்தின் இடம் பற்றி விசாரித்துக்கொண்டு இருந்தான். காம்பில் 6 வண்டிகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் ஆட்களை எடுத்துக்கொண்டு கிளம்புவார்கள். ஒருவருக்கொருவர் எந்த இடத்தில் என்ன மிருகம் தென் படுகிரது என்று சொல்லுவார்கள். அதன் படி அந்த அந்த இடங்களுக்கு அவர்கள் வண்டியை எடுத்து செல்வார்கள். இதனால் அனேகமாக எல்லா இடங்களையும் அவர்களுக்கு கவர் செய்ய முடிகிரது. சுற்றுலா பயணிகளும் அதனால் மகிழ்ச்சி அடைவார்கள். 4.45 க்கு அவனுக்கு தகவல் கிடைத்தது, பலான இடத்தில் ஒரு சிங்ககூட்டம் இருப்பதாக. உடனே அவன் அங்கு விரைந்தான். 5 மணிவாக்கில் நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். 12 சிங்கங்கள் சேர்ந்து இருந்தது, எல்லாம் அப்பொழுதுதான் ஒரு இரையை அடித்து சாப்பிட்டு விட்டு இளைப்பாரிக்கொண்டிருப்பதாக டிரைவர் சொன்னான். அவனுக்கு இந்த விபரத்தை வேரொரு டிரைவர் சொல்லியிருப்பான். எங்களை மாதிரியே ஒரு 10 வேறு வேறு காம்ப் களிலிருந்து வண்டிகள் அங்கு வந்திருந்தன.
சிங்கம்களின் வெகு பக்கத்தில் கொண்டு எங்கள் வண்டியை நிருத்தினான். என் ஜினை அணைத்துவிட்டான். எல்லா வண்டிகளும் அப்படியே செய்திருந்தார்கள். 15 நிமிஷம் கண்குளிற அந்த சிங்க கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த சிங்கங்கள் எங்கள் ஒருவரையும் கண்டு கொள்ளவில்லை. ஒவ்வொரு வண்டியாக கிளம்ப ஆரம்பித்தார்கள். எங்கள் வண்டியையும் கிளப்பினான். வண்டி கிளம்ப மறுத்து விட்டது. பாட்டரி பெயில்? வண்டியை விட்டு கீழே இறங்கவும் முடியாது, அதை தள்ளவேண்டுமென்றால். டிரைவரோ கவலை படவில்லை. நாங்களோ எங்களுக்குள் பேசிக்கொண்டோம், 2 சிங்கம்களுக்கு ஒரு ஆள் வீதம் நாம் 6 பேர் இருக்கிரோம். என்ன ஆகப்போகிரதொ என்று பயந்து கொண்டிருந்தோம். டிரைவர் அங்கு நின்ற மற்றொறு வண்டியி டிரைவரிடம் சைகை பாஷயில் ஏதொ சொன்னான். மற்ற டிரைவரும் சைகையால் ஓகே சொல்லி விட்டு எங்கள் வண்டியின் பின்னால் அவன் வண்டியை கொண்டு வந்து ஜெண்டிலாக ஒரு புஷ் கொடுத்தான். சிறிது நேரத்தில் எங்கள் வண்டி உறும ஆரம்பித்து விட்டது. நாங்கள் யாவரும் மற்ற வண்டியின் டிரைவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கையை ஆட்டினோம். பிறகு கிளம்பி எங்கள் காம்ப் வந்து சேர்ந்து விட்டோம்.
அந்த விஷயத்தை பற்றி காம்ப் மேனேஜரிடம் மாப்பிள்ளை விசாரித்தார். இது மாதிரி நடப்பது சகஜம் தான். எப்போதுமே 2 3 வண்டிகள் சேர்ந்தே சுற்றும் என்றும், ஒருவொருக்கொருவர் இது மாதிரி ஹெல்ப் செய்து கொள்வார்கள். அப்படியே வேறு வண்டி இல்லை யென்றால், வயர்லெஸ் மூலம் காம்பிற்க்கு தொடர்பு கொண்டால் அங்கிருந்து வேறு வண்டி அனுப்பி உதவி செய்வார்கள் என்று சொன்னான். கேட்டது நிம்மதி யாக இருந்தது. மாப்பிள்ளை அந்த டிரைவருக்கு நல்ல டிப்ஸ் கொடுத்தார்.
ஹிந்தி தெரிந்தவர்கள் அமிதாப்பச்சனின் ரேடியோ விளம்பரம் கேட்டிருப்பீர்கள். அவர் குஜராத்தில் இருக்கும் ’கிர்’ காடு பற்றி அறிவிப்பார். ஒரு தரமாவது கிர் வந்து சிங்கங்களை பாருங்கள் என்று சொல்லுவார். அது உண்மைதான். நம் வாழ்னாளில் ஒரு தரமாவது சிங்கத்தை நேரில் பார்க்கவேண்டும். அதனுடைய அருமை பார்த்தவர்களுக்குதான் தெரியும். நீங்கள் ஆஃப்ரிக்கா போய் சிங்கம்களை பார்க்க முடியவில்லை யென்றால் ‘கிர்’ போய் கட்டாயம் பார்த்துவிட்டு வாருங்கள். அதனுடைய அனுபவமே தனி.
அடுத்த நாள் காலை காலை உணவு சாப்பிட்டபிரகு கையில் மதிய உணவு
பாக்செய்து எடுத்துக்கொண்டு நாங்கள் வந்த வண்டியில் கிளம்பி நைரோபி வந்து நண்பர்களை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு, டிரைவருக்கு நல்ல டிப்ஸ் கொடுத்து விட்டு பிரகு கென்யா ஏர்வேஸ் மூலம் மொம்பாசா வ்ந்து, அங்கிருந்து எங்கள் வண்டியில் திரும்ப கிலிஃபி வந்து சேர்ந்தொம்.
இந்த பயணம் ஒரு மறக்கமுடியாத பயணமாக அமைந்தது. எல்லோரும் நல்ல ரசித்திருப்பீர்கள் என்ரு நினைக்கிரேன். யாருக்காவது மேல்கொண்டு ஏதாவது விபரம் வேண்டுமென்றால் எழுதவும், என் மாப்பிள்ளையிடம் கேட்டு பதில் அளிக்கிரேன்.
Tweet | |||||
23 comments:
பயணம் பிரமாதமாக இருந்ததும்மா...அந்த சமயத்தில் வண்டி நின்றது பயமாக இருந்திருக்குமல்லவா...
ஆ.. திரும்பவும் சிங்கிள் சிங்கமோ?...:))..
என்ன லக்ஸ்மி அக்கா.. இப்பூடி எல்லாம் அவஸ்தை தேவையோ?. நாங்களும் இங்கு ஒருதடவை உப்பூடித்தான் ஒரு சஃபாரி ஒன்றுக்குப் போய்.. காருக்குள் இருந்தோம்.. சிங்கம் கிட்ட வந்து எங்கட கார் டயரில தன் உடம்பைத் தேய்த்துக்கொண்டிருந்தது.. எங்ஜினை ஓவ் பண்ணி விட்டு நின்றோம்.. பின்னர் போய் விட்டது... அன்றோடு எடுத்திட்டேன் முடிவு இனி இதுக்கெல்லாம் போவதில்லை என..
ஏனெனில் கார்ட் அட்டாக் வந்திடும்:))).
ஆ.... லக்ஸ்மி அக்கா.. இத்தோடு தொடர் முடிந்துவிட்டதோ? அவ்வ்வ்வ்:))..
// யாருக்காவது மேல்கொண்டு ஏதாவது விபரம் வேண்டுமென்றால் எழுதவும், என் மாப்பிள்ளையிடம் கேட்டு பதில் அளிக்கிரேன். ///
ஒரே ஒரு டவுட்டு லக்ஸ்மி அக்கா... அந்த சிங்கிளா வந்த சிங்கம்... ஆண் சிங்கமா? பெண் சிங்கமோ எனும், என் டவுட்டை எப்பூடியாவது கிளியர் பண்ணிடுங்கோ லக்ஸ்மி அக்கா:)).
பயந்தபடியே கழிந்திருக்கிறது அன்றைய இரவு.
அருமையான தொடர். சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தீர்கள்.
நள்ளிரவில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம்.... அப்பப்பா நிச்சயம் தூக்கம் வந்திருக்காது தான்....
அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
அருமையான தொடர்,சிறப்பாக முடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
கோவை2 தில்லி வருகைக்கு நன்றி
அதீஸ் நீயும் நைட் சபாரில்லாம் போயிருக்கியா?குட். ஆண் சிங்கத்துக்கு பயப்படுவியா பெண் சிங்கத்துக்கு பயப்படுவியா அதைச்சொல்லு முதல்ல.
ராம லஷ்மி வருகைக்கு நன்றி
ஸாதிகா வருகைக்கு நன்றி
செம த்ரில்லிங்கா போயிருக்குது அந்த இரவு..
மறக்கமுடியாத பயணமாக அமைந்த பகிர்வுகள்,, பாராட்டுக்கள்..
பயணம் பிரமாதம்.. நடுக்காட்ல வண்டி நின்னுட்டா சிங்கத்தையே தள்ளி விடச்சொல்லியிருக்கலாமே.. ;-)
ஆமா சாந்தி திரில்லிங்காதான் இருந்துச்சு
இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி
அட ஆமாஇல்லே சிங்கம்லாம் நல்லாவே தள்ளி விட்டிருக்கும்
அதிரா
அது பெண் சிங்கம் தான். தகவல் கொடுத்தது காம்ப் மானேஜர். பொதுவாக பெண் சிங்கங்கள் தான் சிரையை அடித்து தன் கூட்டத்திற்க்கு கொடுக்கும். ஆண் சிங்கங்கள் அந்த கூட்டத்துக்கு பாதுகாவலானாக இருக்கும். தான் அடித்தாலும், பெண் சிங்கம் அடித்தாலும் முதலில் அதுதான் சாப்பிடும், பிறகு தான் மற்றவைகளை சாப்பிட விடும்.
அடிக்கடி உந்தச் சிங்கத்தார் புலியார் எல்லாம் காட்டிப் பயமுறுத்துறீங்களே.முடிஞ்சுப்போச்சா.அப்ப இனிப் பயமில்லை !
நல்ல அனுபவம் .இனிய பகிர்வு. நன்றி
அம்மா
உங்கள் அருமையான அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ஆப்ரிக்கா கண்டத்தை பற்றி தெரிந்து கொள்வது சுகமான அனுபவம்.
வெற்றிமகள் ஜெயலக்ஷ்மி புது வரவா. வாங்க வாங்க அடிக்கடி வாங்க. நன்றி
Post a Comment