Google+ Followers

Pages

Wednesday, September 12, 2012

டிக்கி பாவ்

வடா பாவ் போல டிக்கி பாவ்.பேரனின் பர்த்டேக்கு டிஃபரண்டா ஸ்னாக்ஸ் வேனும்னு சொன்னான். அதான் இப்படி பண்ணிக்கொடுத்தேன்.
தேவையான பொருட்கள் அதிகம் போல தோனும்.செய்யும் விதமும் கொஞ்சம் மெனக்கிடனும். அந்தக்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதை பார்க்கும்போது சிரமம் எல்லாம் போன இடம் தெரியாது. ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
 ஆலு-----------------  அரைக்கிலோ
ப்ரௌன் ப்ரெட் ஸ்லைஸ் -----------   4
அவல்----------------- ஒரு கப்
கார்ன் ஃப்ளவர் மாவு--------  ஒருகப்
ரவை---------------------   ஒரு கப்
பாவ் பன்------------------ 12
கொத்துமல்லித்தழை------------ ஒரு சிறிய கட்டு
 பச்ச மிளகா----------------------  3
பூண்டு பல்லு------------------ 10
இஞ்சி----------------- சிரியதுண்டு
உப்பு தேவையான அளவு
எண்ணை------------- ஒரு கப்
வெண்ணை--------   ஒரு கப்
செய்யும் முறை
                           
 உருளைக்கிழங்கை நன்கு வேக வத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும். அவலை அலம்பி மிக்சியில் ஒரு சுற்று சுற்றி கிழங்குடன் சேர்க்கவும் ப்ரெட் துண்டங்களையும் மிக்சியில் தூளாக்கி சேர்க்கவும். மல்லித்தழை பச்சைமிளகாய் உப்பு சேர்த்து நன்கு மிருதுவாகப்பிசைந்து கொள்ளவும். ஒரு
                         
                                 
சிரிய ப்ளேட்டில் ரவா கார்ன்ஃப்ளவர் மாவு சேர்த்துகலந்து வைக்கவும்
                                   
கிழங்குகலவையை ஆமவடை சைசில் கைகளில் தட்டி ரவா கார்ன் மாவு
                             
கலவையில் டிப் செய்து சூடான தோசைக்கல்லில் போட்டு சுர்றிலும் 2 ஸ்பூன்
                                       
எண்ணை விட்டு அடிப்பாகம் சிவந்து மொறு மொறுப்பானதும் திருப்பி போட்டு
                           
மறுபடியும் 2 ச்பூன் எண்ணை ஊற்றி நன்கு மொரு மொறுப்பானதும் எடுக்கவும்
                           
பாவ்களை பாதியாக நடுவில் வெட்டி வெண்ணை தடவி தோசைக்கல்லில் போட்டு மொறு மொறுப்பாக வறுக்கவும்..
                             
சூடுபடுத்திய பாவ்களின் நடுவில்  இருபுறம் ஸாஸ் தடவி நடுவில்  ஆலு.
                                     
                         
                                     
டிக்கிவைத்து பரிமாறவும். குழந்தைகளுடன் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அன்னக்கி 3 கிலோ ஆலு வில் பண்ணினேன். 10- லேந்து 13 வயசுக்குள் இருக்கும் 25 குழந்தைகள் வந்திருந்தாங்க. சூடு சூடாக பண்ணிப்போட்டுட்டே இருக்கேன்  வெளிபக்கம் பன்னின் மெத்தென்ரும் உள்ளே டிக்கியின் மொறு மொறுப்புமாக அமர்க்கள்மான டேஸ்டுடன் இருந்தது. குழந்தைகள் எல்லாருமே ஈசியா 3  4 க்குமேல சாப்பிட்டுட்டே இருந்தாங்க.  கடசில வீட்ல உள்ளவங்களுக்கு எதுமே மிச்சமில்லே

29 comments:

Sasi Kala said...

புதுசா இருக்கே சரிம்மா செய்து பார்த்துடலாம்.

அம்பாளடியாள் said...

மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

sasi said...

lakshmi amma.... yummy recipe.!! thanks..

sasi said...

lakshmi amma.. yummy recipe.. thanks ma..

sasi said...

lakshmi amma.... yummy recipe.. thanks.. :)

எனது கவிதைகள்... said...

எங்கள் குழந்தைகள் அப்பா நீங்க ஏதாவது ஒரு டிஷ் உங்க கையால செய்து கொடுங்கனு சொல்லிக்கிட்டு இருக்காங்க,இதை படித்தவுடன் கண்டிப்பாக அவர்களுக்கு இந்த டிஷ்ஷை செய்துகொடுக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டேன் !நன்றி அம்மா


உண்மைவிரும்பி
மும்பை.

அமுதா கிருஷ்ணா said...

புது டிஷ்.செய்து பார்க்கணும்.

Ramani said...

இதுவரை கேள்விப்படாதது
இந்த வாரம் முயற்சி செய்யுமாறு
மனைவியிடம் சொல்லியுள்ளேன்
படங்களுடன் விளக்கிச் சொன்னவிதம்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

அமைதிச்சாரல் said...

குறிப்பு ரொம்ப நல்லாருக்கே..

புதுகைத் தென்றல் said...

ஆஹா ஜூப்பர்.

கோவை2தில்லி said...

நல்ல ரெசிபி செய்து பார்க்கலாம். பகிர்வுக்கு நன்றிம்மா.

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்ம். கமெண்ட் எழுத ஆரம்பிக்கும்போது கீழே டிக்கிக்காரர் பெரிய தோசைக்கல்லை கரண்டியால் தட்டும் சத்தம்....

பாய்சாப்... தோடா ருக்கியே.. ஏக் ப்ளேட் ஆலு டிக்கி தீஜியே....

athira said...

ஆஹா நல்ல குறிப்பாக இருக்கே... குழந்தைகட்கு அதிகம் பிடித்த குறிப்பு.

Lakshmi said...

ஸசி கலா செய்துபாரு

Lakshmi said...

அம்பாளடியாள் நன்றி

Lakshmi said...

ஸ்வேதா நன்றி

Lakshmi said...

எனது கவிதைகள் வருகைக்கு நன்றி. குழந்தைகளுக்கு செய்து கொடுதிங்களா?

Lakshmi said...

அமுதா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

புதுகைத்தென்றல் வருகைக்கு நன்ரி

Lakshmi said...

கோவை2 தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் ஆமா டில்லில இந்த ஆலு டிக்கி ரொம்ப ஃபேமஸ்தான் இல்லியா

Lakshmi said...

அதிரா குழந்தைகளுக்கு மட்டுமில்லே பெரியவங்களுக்கும் பிடிக்கும்

Kamatchi said...

லக்ஷ்மி அவர்களே உங்களை அறிமுகம் செய்துகொள்ள வந்தேன்.
டிக்கிபாவையும் சாப்பிட்டு ரஸித்துக்கொண்டே என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.நான் சொல்லுகிறேன் என்ற பதிவை எழுதும்
காமாட்சி.தற்சமயம் இங்கே மும்பையில்
பிள்ளை அவன் குடும்பத்துடன் இருக்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.

வரலாற்று சுவடுகள் said...

புகைப்படங்களே பாவ்-வின் சுவை உணர்த்துகின்றன அம்மா!

இவ்வாறு சுவையாக செய்துகொடுத்தால் நான் மட்டுமே 10 சாப்பிடுவேன்! :)

Lakshmi said...

காமாட்சி மும்பையில் எங்க இருக்கேள்? அறிமுகப்படுத்திக்கொண்டதற்கு நன்றி

Lakshmi said...

வரலாற்று சுவடுகள் 10 பாவ் சாப்பிடுவீங்களா நிஜம்மவா. ஹ ஹ ஹ ஹ

Lakshmi said...

காமாட்சி உங்க பக்கம் வந்தேன் பேஜ் ஓபன் ஆக மாட்டெங்குதே.என்னாச்சு

என்னை ஆதரிப்பவர்கள் . .