Google+ Followers

Pages

Friday, September 14, 2012

மட்டர் உசல்

பச்சை பட்டாணீயைத்தான் இந்த பக்கம் மட்டர்னு சொல்வா.
 தேவையான பொருட்கள்.
உரித்த பச்சை பட்டாணி-------------- ஒரு கப்
தக்காளிப்பழம்-----------------------   ஒன்று
உருளைக்கிழங்கு------------------ ஒன்று
அரைக்க.
துருவிய தேங்காய்--------------------  ஒரு கப்
பச்சை மிளகாய் ------------------------  4
 உரித்த பூண்டு பற்கள்----------------   10
கொத்துமல்லி தழை------------------ ஒரு சிறிய கட்டு
                                 
மஞ்ச பொடி----------------------------- ஒரு ஸ்பூன்
கரம் மசாலா பொடி----------------- ஒரு ஸ்பூன்
 உப்பு------------------  தேவையான அளவு
செய் முறை
  பட்டாணி, உருளைக்கிழங்கு( சின்ன துண்டங்களாக நறுக்கியது)
                                 
தக்காளிப்பழத்தை ஒரு கப் த்ண்ணீரில் வேக விடவும். பாதி வெந்ததும் மஞ்ச பொடி,கரம் மசாலா பொடி உப்பு சேர்க்கவும்.
அரைக்க கொடுத்தவைகளை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
                               
காய்கள் நன்கு வெந்ததும் அரைத்த விழுதைச்சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறக்கவும். இதற்கு தாளிப்பு தேவை இல்லை. எண்ணையே சேர்க்காத குருமா வகை இது. தேங்காதுருவலுக்கு பதிலாக கொப்பரைத்துருவல் சேர்த்தா இன்னும் நல்லா இருக்கும்
                                                   

34 comments:

பால கணேஷ் said...

தலைப்பை சரியாப் படிக்காம லக்ஷ்மியம்மாவா... மட்டனா...ன்னு மிரண்டு போயிட்டேன். அப்றம்தான் மட்டர்னா என்னன்னு புரிஞ்சுது. வழக்கம் போல எளிமையான சுவையான ஒரு சமையல் குறிப்பை சொல்லியிருக்கீங்க. அருமை.

Akila said...

Wow yummy

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி அம்மா... குறித்துக் கொண்டார்கள்...

கோவை2தில்லி said...

மட்டர்ல உசல் வித்யாசமா இருக்கும்மா.
பகிர்வுக்கு நன்றி.

angelin said...

எண்ணெய் தாளிதம் இல்லாமல் ரொம்ப ஹெல்தியா இருக்கே ...
செய்திடறேன் ..என் பொண்ணுக்கு தினமும் சப்பாத்தி வேணும் .அதுக்கு இந்த சைட் டிஷ் நல்ல இருக்கும் .

லக்ஷ்மி அம்மா நான் உங்க ரெசிப்பி அரைச்சு கலக்கி செய்து என் ப்ளாகிலும் போட்டேன் .அந்நேரம் நீங்க பதிவர் சந்திப்பில் இருந்ததால் லிங்க் தர முடில .நேரம் கிடைச்ச வந்து பாருங்க .

இராஜராஜேஸ்வரி said...

அருமையான சமையல் குறிப்புக்குப் பாராட்டுக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

மட்டர் உசல்.. புதுசா இருக்கும்மா. ட்ரை பண்ணிட வேண்டியதுதான்.

ராஜி said...

பால கணேஷ் said...

தலைப்பை சரியாப் படிக்காம லக்ஷ்மியம்மாவா... மட்டனா...ன்னு மிரண்டு போயிட்டேன்.
>>
ஹா ஹா அவசரக்குடுக்கை அண்ணா. உங்களைப்போல நானும் அவசர அவசமா பிழையோட படிப்பேன்.

athira said...

லக்ஸ்மி அக்கா... வித்தியாசமான குறிப்பு. முயற்சி செய்யோணும் நான்.

இடவசதிக்காகவோ படங்களைச் சரித்துப் போடுறீங்க? இனிமேல் நிமித்தியே போடுங்கோ லக்ஸ்மி அக்கா...

வரலாற்று சுவடுகள் said...

இந்த மட்டர் விஷயம் நேத்துதான் எனக்கு தெரியவந்தது!

நேத்து ஒரு நார்த் இந்தியன் ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தப்போ சப்பாத்திக்கு சைடிஸ்ஸா "பன்னீர் மசாலா" ஆர்டர் பண்ணுறதுக்கு பதிலா.. ஏதோ ஞாபகத்துல நான் "பன்னீர் பட்டர்" மசாலான்னுட்டேன்! சர்வர் நான் ஏதோ தப்பா சொல்லுறேன்னு நினைச்சுட்டு "பன்னீர் மட்டர்" மசாலா கொண்டுவந்துட்டார்! எனக்கு இந்த பச்சை பட்டாணி கொஞ்சம் பிடிக்காது! வந்ததே கோபம்.... ...

சத்தமில்லாம சாப்பிட்டுட்டு வந்திட்டேன்! :) :)

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் அம்மா .

Lakshmi said...

கணேஷ் நல்ல காமெடிதான் போங்க நா தலைப்பில் பட்டாணி உசல்னே சொல்லி இருக்கலாம் இன்னும் எததன பேரு தப்பா புரிஞ்சுக்க போராங்களோ

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் நன்றி

Lakshmi said...

கோவை2 தில்லி நன்றி

Lakshmi said...

ஏஞ்சலின் உன்பக்கமும் வந்து பாத்துகமெண்டும் போட்டுட்டென் நல்ல சொல்லி இருந்தே கூடவே மாவடு போடும் முறையும் சொல்லி இருந்தது கூடுதல் சிறப்பு

Lakshmi said...

இராஜராஜேச்வரி நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜி நீங்களும்மா?????????

Lakshmi said...

அதிரா படங்கள் எனக்கு இப்படிதான் வறுது வாட் டு டூஊ

Lakshmi said...

வரலாற்று சுவடுகள் ஏங்க பட்டாணி பிடிக்காது இப்படி செய்து பாருங்க பிடிச்சுடும்

♔ம.தி.சுதா♔ said...

இங்கு சாதாரணமாக இவ்வுணவு வகை பாவனையில் இல்லையம்மா...

ஏதாவது இந்திய உணவு வகை உள்ள கடைகளில் தான் வாங்கிச் சாப்பிடுவதுண்டு

Lakshmi said...

ம.தி. சுதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அப்பாதுரை said...

நானும் கணேஷ் போல - என்னதிது அசைவமா இருக்கேனு பார்த்தேன்.

உசல்னா குருமாவா?

Lakshmi said...

அப்பாதுரை சார் சாரி தலைப்பை சரியா வச்சிருக்கனும்.உசல்னா குருமா தான்

மஞ்சுபாஷிணி said...

மட்டர் உசல் செய்முறை வித்தியாசமாகவும் இருக்கு. படங்களும் ரொம்ப அழகா இருக்கு லக்‌ஷ்மிம்மா...

கண்டிப்பா செய்து பார்க்கிறேன். என் கணவருக்கு எப்பவும் சப்பாத்தி வேணும்.. இது ஒரு புதுவிதமா இருக்கு... செய்து பார்க்கிறேன்.

அன்பு நன்றிகள் அம்மா பகிர்வுக்கு.

Lakshmi said...

மஞ்சு செய்து பாரும்மா சப்பாதிகோட ரொம்ப நல்லா இருக்கும்

ஸாதிகா said...

லக்‌ஷ்மிம்மா தலைப்பே சற்று தடுமாற வைத்து விட்டது.அப்புறம் நான் ஃபாலோவரா இருந்தும் சிலரது பலசமயம் பதிவுகள் என் டாஷ் போர்டுக்கு வருவதில்லை.அதுதான் உடன் வர இயலவில்லை.

Lakshmi said...

ஸாதிகா எனக்கும் கூட பலபேரோட பதிவு டாஷ் போர்ட்ல வரமாட்டெங்குது

கோமதி அரசு said...

மட்டர் உசல் புதுமையான சமையல் குறிப்பு. செய்து விடுகிறேன்.

Lakshmi said...

கோமதி அரசு நன்றி

சந்திர வம்சம் said...

எனது தாமரை மதுரைக்குவந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
உங்களுக்கு பூங்கொத்து காத்திருக்கிறது அங்கே!!!

Lakshmi said...

சந்திரவம்சம் வருகைக்கு நன்ரீ

ChitraKrishna said...

Simple and different recipe for me...

Lakshmi said...

சித்ரா கிருஷ்னா வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .