Pages

Tuesday, October 2, 2012

அஞ்சலி


ஒரு நல்ல மனிதரின் நினைவுகள். இன்று அக்டோபர் 2...  13-வருடம் முன்பு அவர் இந்த தேதியில் தான் காலமானார். பார்க்கும் அனைவரிடமும் அன்புமட்டுமே காட்டத்தெரிந்தவர். வீட்டுக்கு ஒரே பிள்ளயாக பிறந்ததால் அனைவருடனும் சகோதரபாச்த்துடனே பழகுவார்.யாருக்கு எந்த உதவி தேவைன்னாலும் முதல் ஆளாக போய் உதவுவார். சரியான வயதில் திருமணம் குழந்தைகள் என்று நடந்தது. கடவுள் பக்தியில் கன்மூடித்தனமானபக்தி உள்ளவர்.கோவிலில் ஸ்வாமி ஊர்வலம் இருந்தால்  ஸ்வாமிக்கு அல்ங்காரம் எல்லாம் சிறப்பாகப்பண்ணுவார். வீட்டிலும் ஒரு பண்டிகையும் பண்ணாமல் இருந்ததில்லை பூஜை புனஸ்காரம் எல்லாம் முறையாகப்பண்ணிவருவார்.தாராளமாககுழந்தைச்செல்வங்களும்பிறந்தார்கள்.
குழந்தைகளைச்சிறந்தமுறையில் வளர்த்து நன்கு படிப்பு வேலை திருமணம் என்று தன்கடமைகளைமிகச்சிறப்பாகவே செய்து முடித்தார்.செண்ட்ரல் கவர் மெண்ட் உத்யோகத்தில் இருந்ததால் ஊர் ஊராக மாறி, மாறிபோகவேண்டி இருந்தது.எல்லா இடங்களிலுமே அவருக்கு மிக நல்ல பெயர் கிடைத்தது.



அவரின்55-வது வயதில் எதிர்பாராவிதமாக பாரலடிக்ஸ் அட்டாக் ஆனது. ஷுகர் இருப்பதே தெரியாம போச்சு. ரொம்ப ஹை ஆகி ப்ரைய்னில் ப்ளட் க்ளாட் ஆகி பாரலடிக்கில் கொண்டு விட்டது.கழுத்துக்கு கீழ எந்தபாகமுமே செயல்படாம ப்போனது. இடது கை மட்டு ஓரளவு மூவ்மெண்ட் மிக லேசாக இருந்தது. பேச முடியாது. எல்லாமே படுத்தபடுக்கையில் ஆனது.ஆஸ்பிடல் வாசம்லாம் பத்தி சொன்னா அது ஒரு பனிஷ்மெண்ட் காலங்கள் தான். அதனால சொல்லலே. பசங்கல்லாம் வேர வேர ஊர்களில் செட்டிலாகி இருந்தார்கள். ஆஸ்பிடலில் அவர் இருந்தப்போ எல்லாருமே வந்து சேர்ந்துட்டா. பிறகு ஆபீசு, வேலை குடும்பத்தையும் கவனிக்கனுமேஇல்லியா?
 வீட்டில் அவரும் மனைவியும் மட்டுமே.மனசில் நினைவுகள் எல்லாம் இருந்தது. முகம் கண் லேசாக அசைக்க முடியும்.. அவர்மனது வேதனைப்படுவது அவர்கண்களில் நன்கு தெரியும்.சமயத்ல குலுங்கி அழுதுடுவார். கண்ணீரைக்கூட அவரால் துடைச்சுக்க முடியாது .மனைவிதான் ஒன்னொன்னும் பாத்து பாத்து பண்ணீ யாகனும்.

 இன்சுலின் இஞ்செக்‌ஷன்போட்டு, மருந்துமாத்திரை கொடுத்து, லாப்சி கஞ்சி ஸ்பூனால ஊட்டிவிட்டு  வீல் சேரில் அவரைத்தூக்கி உக்காரவச்சு படுக்கையெல்லாம் அசிங்கம் பண்ணீயிருப்பதை க்ளீன்பண்ணி அவரைக்குளிப்பாட்டி எல்லாம் மனைவிதான் செய்யனும்.காய்கறிகளை நன்கு வேக வைத்து மிக்சியில் அடித்து சூப் மாதிரி செய்து ஸ்பூனால் ஊட்டி விடனும் ஷுகர் ஹையா இருந்ததால அரிசி சேர்க்க முடியாது.டயட்கண்ட்ரோல் பாலோ பண்ணனும்.போதும் போதாதுன்னு அவரால சொல்ல்முடியாது. மனைவிதான் ஒருகுழந்தையை கவனிப்பதுபோல ஒன்னொன்னும் பார்த்துப்பார்த்து பண்ணனும். நல்ல செயலா சுறுசுறுப்பா இருந்தவரை இப்படி ஒருவெஜிடபிலா பார்க்க அந்தமனைவி மனதுபடும் பாடு சொல்லில் அடங்காதது. இப்படி ஒருவருடம் ரெண்டு வருடம் இல்லே முழுசா 12- வருடங்கள் இந்தபனிஷ்மெண்ட் காலங்கள்.அவரின் எதிரில் அவள் கலக்கத்தைக்காட்டிக்கொள்ள முடியாது.தனியே போய்த்தான் அவளால அழமுடிந்தது.. அவரிடம் பக்கத்திலேயே உக்காந்துண்டு அவருக்கு தைரியம் சொல்லிக்கொண்டே இருப்பாள் அவருக்கு மனைவி எப்பவும் அவர்தலைமாட்டில் எப்பவுமே பக்கத்திலேயே அவள் உக்காந்திருக்கணும்.
இவ்வளவு நல்ல மனுஷர் ஏன் இப்படில்லாம் கஷ்ட்டப்படணும். ஆண்டவன்மேல எவ்வளவு பக்தி அன்பு வச்சிருந்தார். பின்ன இந்தக்கஷ்ட்டம் ஏன் கொடுத்தான் அந்த ஆண்டவன்?

 நல்ல வேளை அவருக்கு காது சரியாகேட்டுண்டு இருந்தது. ஏதானும்கேட்டால் கண்ண அசைத்து பதில் சொல்வார்.  அவளுக்கு வெளியே போக வேண்டிய வேலைகள் இருந்தால் அவரவளைப்போகவே விடமாட்டார் புடவைத்தலைப்பை பிடிச்சுண்டு போகாதே என்னை விட்டுட்டு ஒங்கும் போகாதேன்னு கண்களாலேயே கெஞ்சுவார். இரவு அவ்ள் முதல் ரூமில்தான் வந்து படுப்பாள் அரைமணிக்கு ஒருதடவைஅலாரம் வச்சுண்டு எழுந்து, எழுந்து அவருக்கு ஏதானும் வேனுமா, தூங்கராரான்னு போய்ப்போய் பாத்துனே இருப்பாள்.தன்னால அவரால திரும்பி படுக்கவும் முடியாது இவள்தான் அவரை திருப்பி படுக்க வக்கனும். குளிப்பாட்டி உடம்பு பூரா பவுடர் தடவி படுக்கையில் படுக்க வக்கனும் ரெண்டு பக்கமும் தலகாணீகளை அண்டைக்கொடுத்து படுக்க வைப்பாள் படுத்தவாரேதான் சாப்பாடு ஊட்டி விடனும்.படுக்கைப்புண்வந்துடக்கூடாதேன்னு பார்த்துப்பார்த்து நல்லாவே கவனித்துக்கொண்டாள். நான் உனக்கு ரொம்ப கஷ்ட்டம் கொடுக்கரேனேன்னு கண்களாலேயே அவளிடம் சொல்வார். அவரின் கண் என்ன பேசும் என்று அவளால் புரிந்து கொள்ளமுடியும்.ஆபீசில் வாலண்டியரி ரிடையர்மெண்ட் கம்பல்சரியா எடுக்க வேண்டிவந்தது. ரிட்டையர் ஆயிட்டா   ஆபீஸ் க்வாட்டர்சில் இருக்க முடியாது. பசங்க இருக்கும் ஊருக்கே இருவரும். வந்து ஊரின் ஒதுக்குப்புறமாக வீடுவாங்கினார்கள் குழந்தைகள் அங்குஇருவரும் தங்கினார்கள். மாதம் ஒருமுறை குழந்தைகள் வந்துபாத்துட்டுப்போவா. தினமும் போன் பண்ணி விசாரிப்பா.

 அப்படித்தான் ஒரு நாள் காலை படுக்கையெல்லாம் க்ளீன்பண்ணீ வீல் சேரில்  உக்காரவைக்கும் போது அவரின் இடதுகால் கட்டை விரலில் கடி எறும்பு கூட்டமா மொச்சுண்டு இருந்தது. ஐயோ பாத்து பாத்து கவனிக்கும் போதே எறும்பு எங்கேந்துவந்ததுன்னு அவ்ள் படுக்கையெல்லாம் உதறி செக்பண்ணி பார்த்தா. வேறு ஒரு இடத்திலும் எறும்பே இல்லை . இவரின் கால் கட்டை விரலில் மட்டுமிருந்தது. ஐயோ இவருக்கு கடிச்சிருக்குமே வலிக்குமேன்னு நினைத்து வேகவேகமாக க்ளீன்பண்ணி அவரைக்குளிப்பாட்டிபடுக்கையில் கொண்டு போய் உக்காத்தி மடியில் அவரின் தலையைசாய்ச்சு பிடிச்சுண்டு முதுகுப்பக்கம் பவுடர்போட்டு சமமா தடவி விடும்போது அவரிடமிருந்து விக்கல்மாதிரி ஒரு மெல்லிசா சத்தம் கேட்டுது. உடம்பும் லேசாக ஒரு குலுக்கல போட்டுது. அவளுக்கு ஒன்னும் புரியல்லே. என்னாச்சுன்னு அவரைப்படுக்கையில் மெதுவாகபடுக்கவைத்து கொஞ்சம் காபி தரவான்னா. அவர் எந்தகணசைவு ம் காட்டாம கண் நிலைகுத்தி இருந்தது. அவளுக்கு திக்குனு ஆச்சு. கையில் பல்ஸ் பார்த்தா. எந்த அசைவுமே இல்லே. மூக்கின் பக்கம் விரல் வச்சுப்பார்த்தா. சுவாசமே இல்லே. ஏதோ விபரீதம்னு புரிஞ்சுண்டா. உடனே டாக்டருக்கு போன் பண்ணி இப்பவே வந்து பாருங்க்ன்னு  கேட்டா.டாக்டர் உடனே அவரின் அசிஸ்டெண்டை அனுப்பினார். அவர்வந்து செக் பண்ணிப்பார்த்துட்டு ஆண்டி உயிர் போயி 15- நிமிஷம் ஆரது என்றார். என்னை விட்டு எங்கும் போகாதேன்னு என்னிடம் சொன்னவர் இப்போ என்னை தனியே விட்டுட்டு அவர்மட்டும் போயிட்டார்.
கண்முன்னே ஒருசாவுபாக்க மனது ரொம்பவே திடமாக இருக்கணும்.அதுவும் சொந்தப்புருஷனின் சாவு பார்க்க ரொம்ப தைரியமான மனது இருக்கனும். கணவன் மனைவி இருவரில் ஒருவர்போய் ஒருவர் இருந்தால் மிச்சமிருக்கும் அவர்களின் வாழ்க்கை ஒரு பனிஷ்மெண்ட் வாழ்க்கையாகவே இருக்கும்.


இவளுக்கும் ஒரு செகண்ட் மூச்சே நின்னுடுத்து.என்மடிலேயே கடைசி மூச்சை விட்டார்ன்னு பொங்கி பொங்கி அழுகை வந்தது. கண்ட்ரோல் பண்ணிண்டு பசங்களுக்கெல்லாம் போன் பண்ணி விவரம் சொல்லிட்டுகுடும்ப வாத்யாருக்கும் போன்பண்ணிசொல்லிட்டு அமைதியா அவர்பக்க்ம போயி உக்காந்தா. ஒருமணி நேரம் கழிந்து ஒவ்வொருவராக வந்தார்கள் . அப்புறம் அந்தமனைவி விக்கு அங்க வேலை இல்லை. மூலேல உக்கார வச்சுட்டா. எத்தனை வயசாகிப்போனாலும் , வியாதி வந்து அவஸ்தைப்பட்டு ப்போனாலும் கணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு புனிதமானது. அந்தப்பிரிவை எந்தப்பெண்ணால்  தாங்கிக்கமுடியும்? அந்த நல்ல மனிதர் என் கணவர். அந்தமனைவி. நானேதான் 43- வருஷ உறவு இல்லைன்னு ஆச்சு. ஒவ்வொரு அக்டோபர் 2-ம்தேதியும் உண்ணா விரதமும், மௌனவிரதமுமிருந்து என் அஞ்சலிகளை அவருக்கு சம்ர்ப்பித்துவருகிரேன் கடந்த13-வருடங்களாக. என்னால் வேர என்ன தான் செய்யமுடியும்?/?
அக்கம்பக்கம் உள்ளவர்கள் துக்கம் விசாரிக்க வந்து போகும் போதுஒருவயதான மராட்டிக்கார அம்மாவும் வந்து பேசிண்டு இருக்கும் போது கடி எறும்பு அவர்கால்களில் மொய்த்தவிபரம் சொன்னாள். மாஜி, இந்தகட்டெறும்பு எமனோட தூதுவர்களாக்கும். யாருவீட்ல இப்படி உடம்பு முடியாம படுக்கையில் ரொம்ப நாளா இருக்காங்களோ அவங்களிடம் எமன் வரும்முன் தன் தூதர்களாக எறும்பை அனுப்பி அந்த வீட்டினருக்கு எச்சரிக்கை அனுப்புவதாக அர்த்தம்.என்று சொன்னா. அது உண்மையோ பொய்யோ கண் எதிரே பார்க்கும் போது நம்க்கு நம்பிக்கை இல்லைனாகூட நம்பித்தான் ஆக வேண்டி இருக்கு.

என்கவலை, வருத்தம் சந்தோஷம் சிரிப்பு எல்லா உணர்வுகளையும் உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொள்வதில் என் மனது லேசாவதுபோல உணர
 முடிகிறது. முதல்லல்லாம் அதாவது பதிவு எழுத வரும் முன்பு எல்லாவற்றையும் மனதுக்குள்ளயே அடக்கி வைத்ததால் தான் ரெண்டு ஹார்ட் அட்டாக்கை  ஒரே நாளில்சந்திக்க வேண்டிவந்ததோன்னு தோனுது. ப்ளாக் எழுதுதி என்மனசை லேசாக்கி படிப்பவர்மனதை பாரமாக்குரேனோன்னும் தோனுது.

59 comments:

ராமலக்ஷ்மி said...

நினைவுகளால் தங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு எங்கள் அஞ்சலிகளும் வணக்கங்களும் லஷ்மிம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் உணர்வுகளை படிக்கும் போது வருத்தமாக உள்ளது அம்மா...

/// ப்ளாக் எழுதுதி என்மனசை லேசாக்கி படிப்பவர்மனதை பாரமாக்குரேனோன்னும் தோனுது. ///

இந்த வரிகள் தாம்மா எங்களுக்கு பாரமாக உள்ளது... மனதில் உள்ள பாரத்தை, மறக்கவே முடியாத சில நினைவுகளை பகிர்ந்து கொண்டால் குறைந்து விடும்...

அவர் எங்கும் செல்லவில்லை... உங்களிடமே உள்ளார்...

Unknown said...



//கண்முன்னே ஒருசாவுபாக்க மனது ரொம்பவே திடமாக இருக்கணும்.அதுவும் சொந்தப்புருஷனின் சாவு பார்க்க ரொம்ப தைரியமான மனது இருக்கனும். கணவன் மனைவி இருவரில் ஒருவர்போய் ஒருவர் இருந்தால் மிச்சமிருக்கும் அவர்களின் வாழ்க்கை ஒரு பனிஷ்மெண்ட் வாழ்க்கையாகவே இருக்கும்.//



சத்தியமான வார்த்தைகள்!அனைதும்
உண்மை! இதே நிலைதான் எனக்கும் ஏற்பட்டது! என் துணைவி என் கண்முன்னே உயிர் விட்ட காட்சி என் வாழ்நாள் முடியும்வரை மறக்க இயலா
ஒன்று!தாங்கள் செய்த பணிவிடை மகத்தானது தங்கள்மனம் அமைதிகாண வேண்டுகிறேன்

கோமதி அரசு said...

என்கவலை, வருத்தம் சந்தோஷம் சிரிப்பு எல்லா உணர்வுகளையும் உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொள்வதில் என் மனது லேசாவதுபோல உணர
முடிகிறது. முதல்லல்லாம் அதாவது பதிவு எழுத வரும் முன்பு எல்லாவற்றையும் மனதுக்குள்ளயே அடக்கி வைத்ததால் தான் ரெண்டு ஹார்ட் அட்டாக்கை ஒரே நாளில்சந்திக்க வேண்டிவந்ததோன்னு தோனுது. ப்ளாக் எழுதுதி என்மனசை லேசாக்கி படிப்பவர்மனதை பாரமாக்குரேனோன்னும் தோனுது.//

வேதனைகளை அடக்கி வைக்காதீர்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வதற்கு தான் நண்பர்கள்.
உங்கள் நினைவுகளில் அவர் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.

அவருக்கு அஞ்சலிகளும், வணக்கங்களும்.




Unknown said...

/// ப்ளாக் எழுதுதி என்மனசை லேசாக்கி படிப்பவர்மனதை பாரமாக்குரேனோன்னும் தோனுது. ///
பாரம் எல்லாம் இல்லை அம்மா. எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது உங்கள் மன பாரம் குறைகிறது அல்லவா? அது எங்களுக்கு மகிழ்ச்சியே.
அவருக்கு எங்கள் அஞ்சலியும், வணக்கங்களும்

pudugaithendral said...

பகிர்ந்துகிடறதால எங்க மனசு பாரமாகாதும்மா. எங்களுடைய அஞ்சலிகள்.

pudugaithendral said...

பகிர்ந்துகிடறதால எங்க மனசு பாரமாகாதும்மா. எங்களுடைய அஞ்சலிகள்.

pudugaithendral said...

பகிர்ந்துகிடறதால எங்க மனசு பாரமாகாதும்மா. எங்களுடைய அஞ்சலிகள்.

Ranjani Narayanan said...

இத்தனை துயரங்களை மனதில் வைத்துக்கொண்டு 'குறை ஒன்றுமில்லை' என்று எழுதி வருகிறீர்களே, மிகவும் பாராட்டுக்குரிய விஷயம், லட்சுமி அம்மா!

ரொம்ப ரொம்பப் பெரியவர் நீங்கள் - உங்கள் மனத்தால், உங்களின் இந்த அருமையான, கிடைத்தற்கரிய பாசிடிவ்
மனப்பாங்கினால் ரொம்பவும் உயர்ந்து விட்டீர்கள்!

உங்களது துணைவரின் ஆத்மா சாந்தி அடையவும், உங்களுக்கு மன அமைதி கிடைக்கவும், கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

கே. பி. ஜனா... said...

உருக வைத்து விட்டது பதிவு. உங்களின் உயர்ந்த உள்ளத்தை வியந்து நிற்கிறேன்.நினைவில் உங்களுடன் வாழும் அவருக்கு அஞ்சலி!

வல்லிசிம்ஹன் said...

அவரும் அமைதியாக இருக்கட்டும் . உங்கள் மனதும் அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன். 13 வருட்ங்களாக அவரைக் காத்த மங்கையர்திலகம் நீங்கள். பெண்மை வாழ்க.

Unknown said...

இவ்வளவு சோதனைகளை கடந்து வந்துள்ளீர்கள்.சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் சோர்ந்துவிடுபவர்களுக்கு உங்கள் வாழ்க்கை அனுபவம்மூலம் குறைவொன்றும் இல்லை என்று எழுதும் உங்களுக்கு என் நமஸ்காரம் அம்மா.உயர்ந்து நிற்கின்றீர்கள் எங்கள் மனதில்.நெகிழ வைத்துவிட்டீகள் நீங்களும் கோமதி அம்மாவும்.

ADHI VENKAT said...

உயிர் பிரியும் நேரத்தில் அருகில் இருப்பது பெரிய விஷயம் தான். மனதில் தைரியம் வேண்டும்.நான் என் அம்மா, அப்பா இருவரின் அருகிலும் இருந்திருக்கிறேன்.....

உங்க கணவரின் ஆத்ம சாந்திக்கு பிராத்தனைகள்....அவருக்கு நீங்கள் செய்த பணிவிடை மிகவும் சிறப்பானதும்மா....

எதுவானாலும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் அம்மா.

முற்றும் அறிந்த அதிரா said...

லக்ஸ்மி அக்கா நீங்க இதை முன்பும் சொல்லியிருக்கிறீங்க, என்ன செய்வது மனம் கனக்கிறதுதான், ஆனாலும் நீங்கள் சொல்வதுதான் நல்லது, சொன்னால்தான் உங்கள் பாரம் குறையும்... அதில் தப்பேயில்லை.

எல் கே said...

பகிர்ந்துகிடறதால எங்க மனசு பாரமாகாதும்மா. எங்களுடைய அஞ்சலிகள்.

சித்ரா சுந்தரமூர்த்தி said...

லஷ்மி அம்மா,

பதிவைப் படித்ததும் மனதில் ஒரு பார உணர்வு.என்ன ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. நினைத்தே பார்க்க முடியாத, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த‌ ஒன்றுதானே வாழ்க்கை.

"என்கவலை,வருத்தம் சந்தோஷம் சிரிப்பு எல்லா உணர்வுகளையும் உங்க எல்லார் கூடவும் பகிர்ந்து கொள்வதில் என் மனது லேசாவதுபோல உணரமுடிகிறது"_ அதுதான் நல்லதும்கூட.முழுவதுமாக இல்லாவிட்டாலும் துளியளவாவது லேசாவதுபோல் உணர்ந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

அந்த நல்ல மனிதருக்கு எங்களின் அஞ்சலியும்.உங்களுக்கும் குறையொன்றும் இல்லாதிருக்க இறைவனை வேண்டுகிறேன்.

ஸாதிகா said...

லக்‌ஷ்மிம்மா.நம் சந்திப்பின் பொழுது இதனை மிகவும் விபரமாக சொன்னதுமே கலங்கிப்போய் விட்டேன்.12 வருடங்கள் படுக்கையில் இருந்தவரை கவனிப்பது என்றால் லேசான காரியமா?அதிலும் தனி மனுஷியாக.நீங்கள் சாதனை மனிஷிதான்மா.

/// ப்ளாக் எழுதுதி என்மனசை லேசாக்கி படிப்பவர்மனதை பாரமாக்குரேனோன்னும் தோனுது. ///
பாரம் எல்லாம் இல்லை அம்மா. எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது உங்கள் மன பாரம் குறைகிறது அல்லவா? அது எங்களுக்கு மனநிறைவு தரக்கூடியதே..

சாந்தி மாரியப்பன் said...

இந்தப் பூவுலகில் இல்லாவிடினும் உங்கள் நினைவுலகில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகள்.

உங்களையும் நினைத்தால் வியப்பாக இருக்கிறது லக்ஷ்மிம்மா.

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் உங்க வருகைக்கும் ஆறுதலான பின்னூட்டத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

புலவர் ராமானுஜம் ஐயா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கும் ஆறுதலான பின்னூட்டத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஜெயந்தி ரமணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

புதுகைத்தென்றல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Venkatesh Balasubramanian said...

மனது கரைந்து விட்டது ஆன்டி. இதோடு மூன்று முறை படித்து விட்டேன். என் அம்மா அப்பா விற்கு போன் செய்து சிறிது நேரம் பேசி பிறகு இப்போ கொஞ்சம் பரவா இல்லை.

குறையொன்றுமில்லை. said...

ரஞ்சனி நாராயனன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கே.பி. ஜனா வருகைக்கும் ம்கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

வல்லி சிம்ஹன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

இந்திரா சந்தானம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

அதிரா நீ அப்பவும் வந்து பின்னூட்டம் போட்டிருக்கே இப்பவும் வந்தே நன்றி

குறையொன்றுமில்லை. said...

கார்த்திக் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சித்ரா சுந்தர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

இளமதி said...

லக்ஷ்மி அம்மா! அஞ்சலி என்று இருந்ததும் ஓடி வந்து படித்தேன். மனசு அப்படியே உறைந்து போயிட்டுதம்மா. வலிகள் வேதனைகளை இலகுவில் மாற்றவோ மறக்கவோ முடியாதுதான். இருந்தாலும் அந்த உணர்வுகளுக்குள் மட்டும் அமிழ்ந்துவிடாமல் வலிந்து வாழ்வது சாதனைதான்.

குறை ஒண்றுமில்லை என்று நிச்சயம் உங்கள் கணவர் சாந்தியடைந்திருப்பார். அத்தகைய பணிவிடைகள் செய்து அவரை தாங்கி இருக்கின்றீர்கள். போற்றுதலுக்கும் வணங்குவதற்கும் உரியவர் நீங்கள்.

உங்கள் கணவரின் ஆன்ம சந்திக்காகவும், உங்களுக்கும் மன ஆறுதலையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் தந்திட எல்லாம் வல்ல இறைஅருளை வேண்டுகிறேன்.

இளமதி said...

அம்மா! நான் எனுயிர்த்தோழி அதிரா மூலம் அறிந்து உங்கள் வலைப்பூவுக்கு நேற்று முதன்முதலாக வந்தேன். பார்த்ததும் வாயடைத்து, விக்கித்து, மனம் கனத்து ஒன்றும் கூறமுடியாமல் திரும்பிவிட்டேன்.
உங்கள் வாழ்வு ஒரு தவம். உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. மீண்டும் வருகிறேன்.

குறையொன்றுமில்லை. said...

இளமதி முதல் வரவா இனி அடிக்கடி வருவீங்கதானே அதிரா எனக்கும் நெருங்கிய தோழிதான்

துபாய் ராஜா said...

அஞ்சலிகளும் வணக்கங்களும் லஷ்மிம்மா....

krish said...

மனதை உருக்கும் பதிவு,தங்கள் தைரியத்தையும் தெளிவும் கண்டு வியந்தேன்.நன்றி அம்மா.

குறையொன்றுமில்லை. said...

துபாய் ராஜா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கிரிஷ் வருகைக்கு நன்றி

Angel said...
This comment has been removed by the author.
ராஜி said...

உங்க பதிவை படிக்கும்போதே மனசு தாங்கலைம்மா. நீங எப்படி தாங்குனீங்க என்பது ஆச்சர்யம்தான். அதான் இந்த மண்ணின் மகிமை. என்ன வார்த்தை சொன்னாலும் அது உங்களை தேற்றாது.

அம்பாளடியாள் said...

அந்தமனைவி. நானேதான் 43- வருஷ உறவு இல்லைன்னு ஆச்சு. ஒவ்வொரு அக்டோபர் 2-ம்தேதியும் உண்ணா விரதமும், மௌனவிரதமுமிருந்து என் அஞ்சலிகளை அவருக்கு சம்ர்ப்பித்துவருகிரேன் கடந்த13-வருடங்களாக. என்னால் வேர என்ன தான் செய்யமுடியும்?/?

கதையை படித்துக்கொண்டு வந்த கண்கள் நிஜத்தைத் தெரிந்துகொண்டதும் குளமாகி விட்டது
தாயே :(((( இத்தனை சோகங்களை நெஞ்சுக்குள் புதைத்து வைத்துவிட்டு எப்படி குறை ஒன்றும்
இல்லாதவர்போல் வலைத்தளத்தை சுற்றி வலம் வருகின்றீர்கள் !!!!...இதுதான் பெண்மை என்பதா !!!!....
உங்கள் ஆசீர்வாதம் அது ஒன்றே போதும் எங்களைப் போன்றவர்கள் வளம் பெற .கடவுள் உங்களுக்கு
என்றுமே பக்க துணையாக நிற்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் .இன்றைய வலைச்சரத்தில்
தங்களை அறிமுகம் செய்துள்ளனர் .இந்த சாதனை புரியும் தங்களுக்கு என் வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் அம்மா .

மாதேவி said...

பகிர்ந்து கொள்வதில் மனப் பாரங்கள் குறையும்.

உங்கள் கடமையை முற்று முழுதாக அற்பணிப்புடன் செய்துள்ளீர்கள்.

உங்கள் நினைவில் வாழும் உங்களவருக்கு அஞ்சலிகள்.

குறையொன்றுமில்லை. said...

ராஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

அம்பாளடியாள் வருகைக்கும் அனபான கருத்துக்கும் நன்றிம்மா இந்த பதிவு போட்டு பலர் மனதிலும் சுமை ஏத்திட்ட்னோன்னு தோனுதும்மா

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பால கணேஷ் said...

அன்னை தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது ஒருநாளும் பிள்ளைகளுக்குப் பாராமாக இராதும்மா. மாறாக இதனர்ல் உங்கள் மனம் அமைதியடைகிறதென்றால் அதுவன்றோ எங்கள் பாக்கியம். உங்களின் சேவைக்கும், அவருக்காய் ஒருதினம் முழுவதும் மௌனவிரதம் மற்றும் உண்ணாவிரதம் இருக்கும அன்புக்கும தலைவணங்கி நமஸ்காரம் செய்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Naazar - Madukkur said...

மனது கனத்து போய் விட்டது தாயே
12 வருடங்கள் தனி மனுஷியாய் இப்படி கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொள்ள தாய்மையால் தான் முடியும்

குறையொன்றுமில்லை. said...

nazar madukkur முதல் முறையா வரீங்களா நன்றி அடிக்கடிவாங்க.

Sangeetha said...

மனது கனத்து போய் விட்டது தாயே Hats off to you.உங்களுடைய பொறுமையை பார்க்கும் பொழது கண்களில் ஜலம் வருகிறது. உங்கள் பொறுமை எங்களுக்கும் வர வேண்டும் எண்டு வேண்டிகொள்ளுங்கள் எதற்கு என்று இந்த லிங்க் படித்தல் புரியும்.
http://sangeethasanyal.blogspot.com/2012/09/blog-post_19.html

குறையொன்றுமில்லை. said...

sangeetha sanyal வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

radhakrishnan said...

மனதைத் தொடும்அஞ்சலி. நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களோடு
போராடியிருக்கிறீர்கள் என்பது உங்கள்
தற்போதைய பதிவுகளைப் படிக்கும்போது
சிறிதளவும் அறியமுடியாது.வருடந்தோரும் இந்த அஞ்சலிக் கட்டுரையைப் பார்க்கும்போதுதான் அவை நினைவுக்கு வரும். உங்கள் மன திடத்திற்கு தலைவணங்குகிறேன்.இந்தப் பகிர்வினால்
எங்களுக்கும் பயன் கிடைக்கிறதுநன்றி
அம்மா
தற்சமயம் பெங்களூரில் இருக்கிறேன்.
மூன்றாவரு பையனுக்கு சீமந்தம்
வருகின்றது. இனி அடிக்கடி சந்திக்க
முயற்சி செய்கிறேன்(பின்னூட்ட வழிதான்)

Geetha Sambasivam said...

இப்படி ஒருவருடம் ரெண்டு வருடம் இல்லே முழுசா 12- வருடங்கள் இந்தபனிஷ்மெண்ட் காலங்கள்.அவரின் எதிரில் அவள் கலக்கத்தைக்காட்டிக்கொள்ள முடியாது.தனியே போய்த்தான் அவளால அழமுடிந்தது.. அவரிடம் பக்கத்திலேயே உக்காந்துண்டு அவருக்கு தைரியம் சொல்லிக்கொண்டே இருப்பாள் அவருக்கு மனைவி எப்பவும் அவர்தலைமாட்டில் எப்பவுமே பக்கத்திலேயே அவள் உக்காந்திருக்கணும்.
இவ்வளவு நல்ல மனுஷர் ஏன் இப்படில்லாம் கஷ்ட்டப்படணும். ஆண்டவன்மேல எவ்வளவு பக்தி அன்பு வச்சிருந்தார். பின்ன இந்தக்கஷ்ட்டம் ஏன் கொடுத்தான் அந்த ஆண்டவன்?//

படிக்கும்போதே அழுகையா வருது. உங்களோட மனோதைரியத்தைப் பாராட்டுகிறேன். கடவுள் உங்களுக்கு ரொம்பவே சோதனை கொடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் கணவருக்கு எங்கள் அஞ்சலிகள். :(((((((

குறையொன்றுமில்லை. said...

இதுவும் கடந்து போகும். என்று ஒவ்வொன்றாக கடந்து வந்திருக்கேன்

தளிகா said...

லக்ஷ்மி அம்மா..நான் உங்களுடைய ரசிகை..நீங்கள் எழுதுவதெல்லாம் அன்று முழுக்க கற்பனை பண்ணி சந்தோஷப்பட்டுக்குவேன்..எப்பவுமே நம்மை சுற்றி ரசிக்கத் தக்க விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கு என்று நீங்க புரிய வச்சுட்டீங்க..வாழ்க்கையை எவ்வளவு அழகாக பார்க்கலாம் என்பதும் நீங்க சொல்லி தந்த பாடம் தான்..இங்கு எதிர்பாராமல் வந்தேன் பொறுமையா படித்தேன் "43 வருட வாழ்க்கை இல்லையென்று ஆகிவிட்டது "என்ற வரிக்கு மட்டும் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை..எல்லா உறவுகளிலும் இப்படி ஒரு நாள் பிரிவு வருமே என்று யோசித்துப் பார்த்தேன் ஒரு பந்து இறங்கவே மாட்டேன் என்று தொண்டையில் கெட்டியாக அடைத்து நின்றுவிட்டது..வல்ல இறைவன் எல்லாவற்றையும் தாங்கும் ஷக்தி தர வேண்டும்..நானும் உங்கள் ரசிகை உங்கள் ப்ரொஃபைல் படத்தில் என் பாட்டி நினைவு வந்துவிட்டு ரொம்பவே ஏங்கிப் போய்விட்டேன்..உங்களுடைய சாந்தமான கண்கள் அழகோ அழகு

என்னை ஆதரிப்பவர்கள் . .