Pages

Monday, October 22, 2012

எலுமிச்சம்பழ ரசம்

தேவையான பொருட்கள்
                                         
எலுமிச்சம்பழம் -----------------------  2
தக்காளிப்பழங்கள்--------------------   2
பச்சை மிளகாய்-----------------------   4
இஞ்சி-------------------------------------  ஒரு சிறியதுண்டு
துவரம்பருப்பு-------------------------- ஒரு கப்
மஞ்சபொடி------------------------   அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி----------------  ஒரு ஸ்பூன்
உப்பு ----------------------------------   தேவையான அளவு
கொத்துமல்லி தழை------------   ஒரு கைப்பிடி
கடுகு---------------------------------  ஒரு ஸ்பூன்
ஜீரகம் -----------------------------  ஒரு ஸ்பூன்
 நெய்------------------------------  2 ஸ்பூன்
                                     
செய்முறை
துவரம்பருப்ப  குக்கரில் குழைய வேகவிடவும்
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ஜீரகம் போட்டு பொரிந்ததும் கீறி வைத்திருக்கும் மிளகா இஞ்சி சேர்க்கவும் சிவந்ததும் கட் செய்து வைத்திருக்கும் தக்காளி களச்சேர்க்கவும்.மேலாக மஞ்சபொடி பெருங்காயப்பொடி உப்பு சேர்த்து சுருள கிளறி வெந்ததும் வெந்து வைத்திருக்கும் துவரம் பருப்பைச்சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு
                                             
நுரைத்து வந்ததும் கீழே இறக்கி கொத்துமல்லித்தழை தூவி எலுமிச்சம் பழங்களை மேலாக பிழியவும்.
                                         
                                     

46 comments:

இளமதி said...

வித்தியாசமான குறிப்பா இருக்கே:)
அவசியம் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றிம்மா!

ப.கந்தசாமி said...

பார்த்தாலே சுவை தெரிகிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்ப்போம்...

மிக்க நன்றி அம்மா...
tm1

இராஜராஜேஸ்வரி said...

ரசமான பகிர்வு.. பாராட்டுக்கள்..

மாதேவி said...

எலுமிச்சம்பழ ரசம் நன்றாக இருக்கின்றது.

நாங்கள் சிறிது வித்தியாசமாக செய்வோம்.

வெங்கட் நாகராஜ் said...

அம்மா செய்வார்கள்...

செய்து பார்த்துடுவோம்! :)

காரஞ்சன் சிந்தனைகள் said...

சாப்பிட்டிருக்கிறேன்! நன்றாக இருக்கும்! நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாருக்கு லக்ஷ்மிம்மா.

குறையொன்றுமில்லை. said...

இளமதி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

பழனி கந்தசாமி ஐயா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல்தனபாலன் வருகைகு நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாதேவி நீங்க எப்படி செய்வீங்க?

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சேஷாத்ரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

கே. பி. ஜனா... said...

நல்ல சமையல் குறிப்பு...

Asiya Omar said...

சூப்பர் ரசம்.

Participate in my first event
http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா வருகைக்கு நன்றி

RAMA RAVI (RAMVI) said...

எனக்கு எலுமிச்சைபழ ரசம் ரொம்ப பிடிக்கும் அம்மா. படங்களைப்பார்த்ததும் உடன் செய்து சாப்பிட தோன்றுகிறது. நன்றி பகிர்வுக்கு.

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

vimalanperali said...

நல்ல குறிப்பு.

குறையொன்றுமில்லை. said...

விமலன் வருகைக்கு நன்றி

கதம்ப உணர்வுகள் said...

முன்பு என் பாட்டி செய்வார் எம்லிச்சம்பழம் ரசம்.. நானும் அதேப்போல் தான் செய்து பழகினேன். ஆனால் நீங்கள் செய்வது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது சாத்தமுது....

அன்பு நன்றிகள் லக்‌ஷ்மிம்மா பகிர்வுக்கு....

ADHI VENKAT said...

தக்காளி சேர்க்காமல் மாமியார் செய்வார்கள்..... இது போலவும் செய்து பார்க்கிறேன்.பகிர்வுக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

மஞ்சு ஒவ்வஒருவர் ஒவ்வொருமாதிரிதான் செய்வார்கள்

மனோ சாமிநாதன் said...

எலுமிச்சை ரசம் குறிப்பு நன்றாக இருக்கிறது லக்ஷ்மிம்மா!

Yaathoramani.blogspot.com said...

இன்று வீட்டில் தனியாக உள்ளதால்
என்னுடைய சமையல்
தங்கள் ரெசிபியை முயற்சித்துப் பார்த்தேன்
அடுத்தமுறை சரியாக வந்துவிடும் என
நம்பிக்கை வந்தது
பகிர்வுக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமணிசார் முதல் முறை சரியா வரலியா. வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

பிலஹரி:) ) அதிரா said...

புதுவிதமா இருக்கே... செய்ய ஈசிபோல தெரியுது. செய்துபார்க்கிறேன்.

Geetha Sambasivam said...

நான் செய்யறதும் இந்த முறைதான். ஆனால் என் மாமியார் வீட்டில் புளியும் விட்டு எலுமிச்சம்பழமும் பிழிவார்கள். அது ருசி எனக்குப் பிடிக்காது. :))))இஞ்சிக்குப் பதிலாக நான் மிளகு பொடி சேர்ப்பேன். அடை வார்த்தால் அதிலே நெய் ஊற்றிக்கொண்டு எலுமிச்சம்பழ ரசத்தை ஊற்றிக்கொண்டு சாப்பிட்டால் சொர்க்கம் பக்கத்தில். :)))))))

ராஜி said...

எங்க வீட்டுல புளிதண்ணி கரைச்சுவெச்சு ரசம்ன்னு சொன்னாக்கூட பறந்துடும். எல்லாருக்கும் ரசம் ஃபேவரிட். ரசத்துல இன்னொரு வகையை சொல்லி என் குடுமபத்தார் மனசுல இடம் பிடிக்க வைத்தற்கு உங்களுக்கு நன்றி அம்மா

குறையொன்றுமில்லை. said...

அதிரா செய்து பாரு ரொம்ப நல்லா இருக்கும்

குறையொன்றுமில்லை. said...

கீதா எலுமிச்சம்பழமே புளிப்புதானே அதில் எதுக்கு புளி சேர்ரக்கராஙக. உங்க வீட்டு காம்பினேஷனே புதுசா இருக்கே.

குறையொன்றுமில்லை. said...

ராஜி ரசம் பிடிக்காதவங்களும் ஆண்களில் நிறையபேரு இருக்காங்க. குடிக்கமட்டும் பிடித்தவங்களும் இருக்காங்க,

ராமலக்ஷ்மி said...

வித்தியாசமாக உள்ளது இந்த செய்முறை. நன்றி. ரசம் சாதத்தில் சேர்த்து சாப்பிடுவதை விடவும் பருக மிகப் பிடிக்கும் எனக்கும்:)!

குறையொன்றுமில்லை. said...

ஆமா ராமலஷ்மி சாததில் பிசைந்து சாப்பிடுவதை விட அப்படியே குடிக்க நன்றாக இருக்கு,

ஸ்ரீராம். said...

ஆண்டாள் ரசம் என்று என் பாஸ் அடிக்கடி எங்கள் வீட்டிலும் வைப்பார். ரொம்பப் பிடித்தது.

Geetha Sambasivam said...

@ஸ்ரீராம், உங்க பாஸ் வைக்கிறதாலே பிடிக்குமா? :))))

ஈயச் செம்பில் வைத்தால் சூப்பரா இருக்கும்.

Thozhirkalam Channel said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

Thozhirkalam Channel said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

Ranjani Narayanan said...

அன்புள்ள லக்ஷ்மி அம்மா,

நலமா?
எனது வேர்ட்ப்ரேஸ் தளத்தில் கருத்துரை போடுவதில் சிரமம் இருக்கிறது என்று சொல்லியிருந்தீர்கள்.

இப்போது ப்ளாக்ஸ்பாட்டில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
இணைப்பு இதோ:
http://thiruvarangaththilirunthu.blogspot.in/


வருகை தந்தால் சந்தோஷப் படுவேன்.

நன்றியுடன்,
ரஞ்ஜனி

குறையொன்றுமில்லை. said...

ரஞ்சனிம்மா வருகைக்கு நன்றிம்மா நானும் உங்க பக்கம் வரேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களும் ரஸமும் ஏ.கிளாஸ். ;)))))

மிகவும் ரஸமான ரஸனையான பகிர்வு.

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .