தேவையான பொருட்கள்.
பயத்தம் பருப்பு------------ 100 கிராம்
வாழைக்காய்--------------- 2
முருங்கைக்காய்---------- 2
புடலங்காய்---------------- சிறிய துண்டு
சேனைக்கிழங்கு-------- சிறிய துண்டு
கேரட்---------------------- 1
கத்தரிக்காய்------------- 2
பூசனிக்காய்------------ ஒரு பெரிய துண்டு
சாம்பக்காய்----------- ஒரு பெரிய துண்டு
பீன்ஸ் ---------------- 15
அரைக்க
துருவிய தேங்காய்--------- ஒரு மூடி
மிளகு-------------------------- ஒரு ஸ்பூன்
ஜீரகம் ---------------------- ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகா வத்தல்------- 2
தாளிக்க
கடுகு----------- ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு---- ஒரு ஸ்பூன்
காய்ந்த மிள்காவத்தல் ------ ஒன்று
கருவேப்பிலை-------- ஒரு ஆர்க்
தேங்கா எண்ணை------- ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சப்பொடி------ ஒருஸ்பூன்
செய் முறை
காய்களை நன்கு கழுவி கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கி கொள்ளவும் பிரஷர் பேனில் காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மஞ்ச்ப்பொடிபயத்தம்பருப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும். முருங்கைக்காயை தனியாக வேக வைத்து சேர்க்கவும் காய்களுடன் சேர்த்து வேக விட வேண்டாம். அரைக்க
கொடுதிருக்கும் பொருட்களை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். காய்கள்
வெந்ததும் உப்பும் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து 5 நிமிடங்களுக்கு
கொதிக்க விட்டு இறக்கவும். தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை தேங்கா எண்ணையில் மெலாக தாளித்து சேர்க்கவும்
பயத்தம் பருப்பு------------ 100 கிராம்
வாழைக்காய்--------------- 2
முருங்கைக்காய்---------- 2
புடலங்காய்---------------- சிறிய துண்டு
சேனைக்கிழங்கு-------- சிறிய துண்டு
கேரட்---------------------- 1
கத்தரிக்காய்------------- 2
பூசனிக்காய்------------ ஒரு பெரிய துண்டு
சாம்பக்காய்----------- ஒரு பெரிய துண்டு
பீன்ஸ் ---------------- 15
அரைக்க
துருவிய தேங்காய்--------- ஒரு மூடி
மிளகு-------------------------- ஒரு ஸ்பூன்
ஜீரகம் ---------------------- ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகா வத்தல்------- 2
தாளிக்க
கடுகு----------- ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு---- ஒரு ஸ்பூன்
காய்ந்த மிள்காவத்தல் ------ ஒன்று
கருவேப்பிலை-------- ஒரு ஆர்க்
தேங்கா எண்ணை------- ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சப்பொடி------ ஒருஸ்பூன்
செய் முறை
காய்களை நன்கு கழுவி கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கி கொள்ளவும் பிரஷர் பேனில் காய் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மஞ்ச்ப்பொடிபயத்தம்பருப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும். முருங்கைக்காயை தனியாக வேக வைத்து சேர்க்கவும் காய்களுடன் சேர்த்து வேக விட வேண்டாம். அரைக்க
கொடுதிருக்கும் பொருட்களை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். காய்கள்
வெந்ததும் உப்பும் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து 5 நிமிடங்களுக்கு
கொதிக்க விட்டு இறக்கவும். தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை தேங்கா எண்ணையில் மெலாக தாளித்து சேர்க்கவும்
Tweet | |||||
38 comments:
வாவ்..இதுதான் பொரிச்ச குழம்பா?அவசியம் ஒரு முறை செய்து பார்க்கிறேன்ம்மா.//சாம்பக்காய்--// அப்படி என்றால் என்ன காய்?
குழம்பு நல்லாருக்கும்மா..
எல்லா காயும் போட்டு பொரிச்ச குழம்பு நன்னா இருக்கும்மா.
நான் முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு அவ்வப்போது செய்வதுண்டு. வறுத்து அரைக்கும் பொருளோடு உளுத்தம்பருப்பும் சேர்ப்பேன்.
ரெஸிபியப் படிச்சதும் செஞ்சு பாத்தா நல்லா இருக்குமனு தான் தோணுது. சாம்பக்காய்ன்னா என்னம்மா...? அதான் எனக்குப் புரியலை.
நல்லா இருக்கு அம்மா... செய்து பார்ப்போம்... நன்றி...
Arumai...
Reva
எல்லா காய்களும் போட்டு சமைத்த குழம்பு .அருமை ..அம்மா சாம்பல் காய் என்பது பரங்கி காயா
பொரித்த குழம்பை மிக அருமையாக செய்து காண்பித்து இருக்கீங்க லஷ்மி அக்கா
படங்கள் ஏன் சரியாவரல சில படங்கள் தலை கீழா இருக்கு அப்படியே தான் போஸ்ட் செய்து இருக்கீங்களா?
லக்ஷ்மி அம்மா நேற்றைய தினம் உங்களையும் மனங்கவர் பதிவாளராக வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததை இன்றுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள் அம்மா!!!
பொரிச்ச குழம்பு பார்க்கவே அருமையா இருக்கு. செய்து பார்க்கணும்.
ஆமா இதற்கு புளி எதுவுமே தேவை இல்லையோ?
படங்களுடன் குறிப்பு அருமை.
பொரிச்ச குழம்பு எங்க அம்மா பண்ணிப்போட்டதும் ஞாபகம் இருக்கு.
இப்ப என் தங்கை ஆத்துக்குப்போனாலும் பொரிச்ச குழம்பு தான்.
ஆனா, பெயர் தான் வித்தியாசம். அரைச்சு விட்ட குழம்பு அப்படின்னு சொல்லுவா.
இன்னொரு விஷயம்.
தேங்காய் சேர்த்தா, கொலஸ்ட்ரால்,
பச்ச மிளகாய் அதிகமாச்சுன்னா, காஸ்டிரிக் அல்ஸர் வந்துடும்
அதனாலெ இதெல்லாம் வேண்டாம் அப்படின்னு
எங்க வீட்டுக் கிழவி என்னை பயமுறுத்திண்டே இருக்கு.
சுப்பு ரத்தினம்.
எல்லாவிதமான காய்களும் போட்டு பொரிச்ச குழம்பு....
பார்க்கவே நல்லா இருக்கு!
பொரிச்சக்குழம்பு எல்லா காயும் போட்டு வித்தியாசமாய் இருக்கிறது.
செய்து பார்த்து விடுகிறேன்.
நன்றி அக்கா.
ஸாதிகா கேரளா பக்கம் இதை இளவன்னு சொல்லுவாங்க. நாங்க சாம்பல் பூசனிக்கான்னு சொல்லுவோம். மேல்புற தோல் இலம் பச்சை நிறதிலும் உள்ளே வெள்ளை பகுதியுமாக இருக்கு. மஞ்ச பூசனி போல இது சாம்ப பூசனின்னு சொல்லுவோம்.
சாந்தி வருகைக்கு நன்றி
கோவை2தில்லி வருகைக்கு நன்றி
கணேஷ் மேலே ஸாதிகாவுக்கு சொல்லி இருக்கும் பதில் பாருங்க. வருகைக்கு நன்றி
திண்டுக்கல் தனபாலன் செய்து பாத்தாச்சா குட்
ஏஞ்சலின் எங்கபக்கம் இதை சாம்ப பூசனிக்காய்னுதான் சொல்லுவோம் கேரளாபக்கம் இளவன்னு சொல்லுவாங்க.மஞ்சபூசனி போல இத சாம்ப பூசன்னின்னுவோம்
ரேவாவருகைக்கு நன்றிம்மா
ஆமா ஜலீலா இந்தபடங்கள் என்ன ரொம்பதான் படுத்துது
இளமதி புளிசேர்க்கதேவை இல்லே புளி சேர்க்காத வகைகளைத்தான் பொரிச்சகுழம்புன்னு பொரிச்ச கூட்டுனுசொல்லுவோம்
ராமலஷ்மி வருகைக்கு நன்றி
சூரிசிவா அதுக்காகத்தான் பயத்தம் பருப்பு சேர்க்கிரோமே எல்லா சுவைகளும் அளவாக சேர்க்கும்போது எந்த பிராப்லமும் வராது
வெங்கட் வருகைக்கு நன்றி
கோமதி அரசு செய்து பாருங்க நல்லா இருக்கும்
லக்ஷ்மிம்மா,.. கேரளாவிலும் நாஞ்சில் பகுதியிலும் வெள்ளைப்பூசணியை தடியங்காய்ன்னு சொல்லுவோம். அதுவே திர்னேலி பக்கம் இளவங்காய்ன்னு சொல்லுவாங்க.
தேங்காயில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம். பச்சை மிளகாய் antioxidant source ஆக்கும். சாப்பிடுவதில் தப்பே இல்லை sure சார். (அளவோடு:)
முருங்கை காயை தனியாக ஏன் வேக வைக்கனும்றீங்க?
இந்த மஞ்ச பூசனியும் வெள்ளைப்பூசனியும் எப்படி சொல்லுரதுன்னே குழம்பிடும்
அப்பாதுரை சார் முருங்கையை எல்லா காய்களுடனும் சேர்த்து வேக வைக்கும்போது அதிகமா வெந்து குச்சி குச்சி யாகி வாயில் மாட்டிக்கும் வேர ஒன்னுமில்லே. தேங்காயிலும் நல்ல கொலஸ்ட்ரல்தான் இருக்கு எதையும் அளவுடன் சேர்த்துகொண்டால் ப்ராப்லம் இல்லே எல்லா சுவைகளும் உடம்புல சேரனும் இல்லியா
ரொம்ப சிம்பிள்!
ஆயுத பூஜையன்று தெருவில் உடைக்கும் பூசணி வெள்ளைப் பூசணி; also known as சாம்பக்காய்! சரி தானே
நம்பள்கி ரொம்ப சரியா சொன்னீங்க. நன்றி
செய்முறை விளக்கம் படங்களுடன் அருமை! பகிர்விற்கு நன்றி! என்னுடைய வலைப்பூவில் மேலும் புதிய இடுகைகள்! முடியும் போது வருகை தர விழைகிறேன்! நன்றி!
-காரஞ்சன்(சேஷ்)
சேஷாத்ரி வருகைக்கு நன்றி
ஆயுர்வேதப் படி தேங்காயோ, தேங்காய் எண்ணெயோ சேர்க்கக் கூடாது என்பதில்லை. சமீபத்திய சில கண்டுபிடிப்புக்களும் தேங்காயிலோ, தே.எண்ணையிலோ கொலஸ்ட்ரால் வருவதில்லை எனத் தெரிவிக்கிறது. நெய்க்கும் இதே தான். நெய்யை மட்டும் உருக்கி ஊற்றிக்கொள்ளவேண்டும். பழைய நெய் மருந்து ஆகிவிடும்.
பொரிச்ச குழம்பு நீங்க எல்லாக் காய்களையும் போட்டுச் செய்திருப்பது என் மாமியார் செய்வது போல் இருக்கு. அவங்க கொஞ்சம் சாம்பார் பொடியும் போடுவாங்க. நான் மிளகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, மி.வத்தல் ஒன்றிரண்டு வறுத்துக்கொண்டு தனியாகப் புடலை, கத்திரி, அவரை, கொத்தவரை போன்றவற்றில் செய்வதுண்டு. எல்லாம் கலந்தது எனில் நீங்க சொல்லி இருக்கிறாப்போல். ஆனால் பொரிச்ச குழம்பில் சீரக வாசனை எனக்கு என்னமோ பிடிக்கிறதில்லை. :))))
வெறும் பயத்தம்பருப்புப் போட்டு முருங்கைக்காய் மட்டும் போட்டு மிளகு பொரிச்ச குழம்பு சூப்பர் ஆக இருக்கும். மிளகு, உ.பருப்பு, பெருங்காயம், தேங்காய் வறுத்து அரைத்து விட வேண்டும். தே. எண்ணையில் தாளிக்க வேண்டும். வாசனை ஊரைத் தூக்கும்.
நானும் சாம்பார் பொடி கொஞ்சமாக சேர்ப்பேன் பெருங்காயம் சேர்ப்பதில்லே.
அசத்தலான படங்களுடன் பொரிச்சக்கூட்டு அமர்க்களம்! ;)))))
கோபால் சார் நன்றி
Post a Comment