Pages

Sunday, December 26, 2010

சைக்கோ

சைக்கோ

என்கல்யாணம் ஆகி பூனா வரும்போது என் அத்தைபையனையும்
கூட்டி வந்தேன். S. S. C.முடிச்சுட்டு வீட்ல சும்மதான் இருந்தான்.
அப்ப அவனுக்கு 15 வயசு இருக்கும். அத்தை அவனுக்கு பூனாவில்
ஏதாச்சும் வேலை வாங்கி கொடுக்கச்சொன்னா. அப்பலாம்11- தான்
S. S. C. படிச்சிருக்கானே தவிர இங்க்லீஷ்ல பேச,எழுத படிக்க
ரொம்பவே யோசிப்பான்.கிராமத்தில்படித்தால் இப்படித்தான் ஆகும்.
அதிலயும் அவன் ரொம்பவே கூச்ச சுபாவி, வெகுளி.



பூனா வந்து முத10 நாள் அவனுக்கு செமை போர். தமிழ் பாட்டு கேக்க
தமிழ் படம், தமிழ்காரான்னு தமிழ் சம்மந்தபட்ட எதுவுமே இல்லாம ரொம்ப
அவஸ்தைப் பட்டான். என் வீட்டுக்காரரும் பல இடங்கள் கூட்டிப்போயி
வேலைக்கு முயற்சி செய்தார்.கொஞ்சமாவது பழகட்டும் என்று.வீட்டுக்காரரின்ஃப்ரெண்ட் ஒரு நா எங்க வீடு வந்தார்.அத்தை பையனைக்கூட்டிண்டு ஒருசினிமா போனார். ஆல்ப்ரட் ஹிட்ச் காக்கின்சைக்கோன்னு ஒரு ஸஸ்பென்ஸ்மர்டர் படம். 3 டு 6 ஷோ கூட்டிண்டு போயி 7 மணிக்கு வீட்டில் கொண்டுவிட்டுப்போனார்.


படம் பாத்துட்டு வந்தது முதல் அவன் ரொம்ப டிஸ்டர்பாவே இருந்தான்.
என்னாச்சு ன்னா இல்லை இதுபோல பய்ங்கர மூவின்னு தெரிஞ்சா
போயிருக்கவே மாட்டேன். ராத்ரிலாம் சொப்பனமா வருமேன்னு இருக்கு.
அழாத குறையா சொல்ரான். படம் பாத்துட்டு வந்தது முதல் வயத்தை
கலக்கிண்டு வரது. நான் டாய்லட் போர்ரென்னு வாளில தண்ணி எடுத்துனு
பின்னாடிபோனான். இங்க ஒரு விஷயம். நாங்க பூனால ராஸ்தாபேட் என்னுமிடத்லமூனு மாடி குடி இருப்பில் கீழே வசித்துவந்தோம்.மொத்தமா 10 குடித்தனக்காராஇருப்போம் அவ்வளவ்பேருக்கும்சேர்த்து வீட்டின் பின்னாடி காமன் டாய்லட்3காமன் பாத்ரூம்2. வீட்டுக்கார மராட்டிக்காரி 2- வதுமாடில இருந்தா. அவளுக்குதாராளமா 8 குழந்தைகள். பின்னாடி டாய்லெட் போர வழி ரொம்ப குறுகலாஇருக்கும் லைட்டும் இல்லாம எப்பவுமே இருட்டாதான் இருக்கும். அதுவும் இப்பநல்ல குளிர்காலம் வேரயா, சீக்கிரமே இருட்டாயிடும்.



இவன் பின்னாடிபோன வேகத்லயேதிரும்பிவந்து ஒரு கத்தியை கையில எடுதுண்டுபோனான். ஏய் எதுக்குடா கத்தி என்ரென். அவன் பட்டாபட்டி அண்டர்வேர்தான் போடுவான்அதில் நாடா ரெட்டை முடுச்சுபோட்டு சிக்கிண்டு அவுக்க முடியலியாம்.அதனால கத்தியாலகட்பண்ணிடரேன் என்று கத்தியை கயில் கொண்டு போனான்.இவன் போயி ரொம்ப நேரம்
ஆகியும் வரலை. வெளிலெந்து காச்சு, மூச்சுன்னு என்னமோ, யாரோ சண்டை போட்டுக்கராமாதிரி சத்தம் மட்டும் தொடர்ந்து கெட்டுண்டே இருந்தது. நானும் ரோட்ல யாரோசண்டைபோட்டுக்க்ரா போல இருக்குன்னு கதவை சாத்தி நல்லா தாளும் போட்டுட்டேன்.


திடீர்னு வெளிலேந்து அக்கா, அக்கான்னு கத்தர சப்தம் வரவே நானும் என்னைக்கூப்பிடரமாதிரி இருக்கேன்னு வெளில போயி பாத்தேன். டாய்லட் போர வழில பில்டிங்க் காராஎல்லாரும் கூட்டமா நிக்கரா, மத்தில அத்தைபையன் திரு, திருன்னு முழிச்சுண்டு நிக்கரான்
ஏய் என்னாச்சுடா என்ரேன். அவனுக்கு பேச்சே வல்லை. வீட்டுக்காரி க்யா ல்ஷிமி இதுஉன் ரிஷ்ததார் லட்காவா? என்றா. நானும் ஆமா என்றேன். இவன் இங்க வந்து பத்துநாள் ஆகியும் கூட யாரும் இவனைப்பார்த்ததில்லை.

இவன் கத்தியோடு பின் பக்கம் போகும்போது வீட்டுக்காரியோட 7 வயசு பையனும்ஸ்வெட்டர் ,கோட்டு,க்ளௌவுஸ் தொப்பி சகிதமா பின்னாடி வந்துருக்கான். பெரிய கருப்புகம்பிளியால உடம்பு பூரா போத்திண்டு வேர இருக்கான்.அவனைப்பாத்தது அத்தைபையனுக்கு
படத்தில் பாத்தவில்லன் ஞாபகம் வந்துடுத்து.ஒளறிகொட்டிருக்கான். இவன்கையில் கத்தியைபார்த்த வீட்டுக்காரியின் பையன் ச்சோர், ச்சோர் பக்டோ, பக்டோன்னு பெரிசா கத்திட்டான்.சத்தம்கேட்ட வீட்டுக்காரிகீழ ஓடி வந்தா. பின்னாடியே மத்த குடித்தனக்காராளும் வந்துட்டா.
எல்லாருமே ஹின்தி, ம்ராட்டி காராதான். இவனோட பட்டாபட்டி அண்டர்வேர், கைல கத்திஎல்லாம் பாத்து இவனை திருடன்னு நினைச்சுட்டா. யாரும் அவனை 10 நாளா பாத்ததேஇல்லை. அவன்கிட்ட கேட்டிருக்கா. அவன் எப்படி பதில் சொல்லுவன். தமிழைத்தவிர வேரஎதுவுமே தெரியாதே. ஆக்‌ஷன்லயே சொல்லி யிருக்கான்.அவசரமா டாய்லெட் போனும்னு.


அதுக்கு கையில எதுக்கு கத்தின்னு கேட்டுருக்கா. 2 விரலைக்காட்டி அர்ஜண்ட் நிருக்கான்அதை வீட்டூக்காரி எல்லாரிடமும் இவன் எங்க ரெண்டு பேரையும் கொன்னிடுவேன்னுமிரட்டரான்ன்னுசொல்லிட்டா. டபுள்முடிச்சு ஆச்சு, அதுக்குதான் கத்தின்னு நான் விளக்கிசொல்லவும் எல்லாரும் அசட்டுச்சிரிப்போடு கிளம்பி போனா.

24 comments:

வெங்கட் நாகராஜ் said...

இப்போது படிக்கும்போது நகைச்சுவையாக இருந்தாலும், பாவம் உங்க அத்தைப் பையன், அரண்டு போய் இருப்பார். நிஜமாகவே ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பார் இல்லையா. நல்ல பகிர்வும்மா.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி.னீங்க சொன்னதுபோல அன்று ரொம்பவே அவஸ்தைதான் பட்டான்.

ஆமினா said...

நகைச்சுவையா இருந்துச்சு மா!!!

குறையொன்றுமில்லை. said...

ஆமி, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

ஸ்வீட் said...

உங்கள் அத்தைப்பையனை இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது.இந்த பதிவை இப்ப உங்கள் அத்தைப்பையன் பார்த்திருப்பாரா மேம்?

குறையொன்றுமில்லை. said...

உங்கபெயரே ரொம்பஸ்வீட்டா இருக்கே. இப்ப அதே
அத்தைபையன் சென்னையில் இருக்கான். நெட் கனெக்‌ஷன் எடுக்கலை. அதனால இந்த மேட்டர் படிக்கலையாம்.

Prabu Krishna said...

பாவம்மா அவரு. நல்ல பகிர்வு!!

கமெண்ட் பாக்ஸ் ஐ தனியாக ஓபன் ஆகும்படி வைக்கவும். கமெண்ட் போடும் போது error வருகிறது.

Mahi said...

இப்ப படிக்கும்போது காமெடியாதான் இருக்கு! :) அந்நேரம் உங்க கஸின் நிலைமைய நினைத்தா ரொம்ப பாவம்!! எல்லா சம்பவங்களும் அப்படித்தானே,இந்த நிமிஷம் இருப்பது,5 வருஷம் கழித்தாலே வெகு சாதாரண நிகழ்வாகிடுதே.

Mahi said...

லஷ்மி அம்மா,நீங்களும் கோமு-வும் ரிலேட்டிவ்ஸா? ரெண்டு பேருமே மஹாராஷ்ட்ரா-விலே இருக்கீங்க,அதனாலே கேக்கிறேன். :)

தூயவனின் அடிமை said...

இந்த மொழி பிரச்சினை எப்பவும் பெரிய பிரச்சினை, படித்தவுடன் ரொம்ப சிரித்து விட்டேன்.

Meena said...

எல்லாம் ஒரு வேளை, நல்ல வேளை அவன் அடி வாங்கவில்லை திருடன் என்று

எல் கே said...

சூப்பர் காமெடி

குறையொன்றுமில்லை. said...

பலே பாண்டியன், வருகைக்கு நன்றி. கமெண்ட் பாக்ஸ் தனியா ஓபன் ஆகும்படி எப்படி ப்ண்ணனும். தெரியலியே. கொஞ்சம் சொல்லித்தரீங்களா?

குறையொன்றுமில்லை. said...

மஹி மஹாராஷ்ட்ராவில் இருவரும் இருந்தா ரிலேடிவா தான் இருக்கணுமா? அதுக்கும் மேல...... நாங்க இருவரும் 20 வருஷமா குட் & திக் ஃப்ரெண்ட்ஸ். வருகைக்கு மிகவும் நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

இளம் தூயவன், நாலு பாழை தெரிஞ்சு வச்சுக்கரது எவ்வளவு நல்லது இல்லியா? ஹிந்தி வேண்டாம்,
ஆங்கிலம் வேண்டாம்னு சொல்வதெல்லாம் எவ்வளவு பைத்தியக்காரத்தனம் இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

கார்த்திக் இப்ப படிக்கும்போது காமெயா இருக்கு. அந்த நேரம் என்ன ஒரு டென்ஷன் தெரியுமோ?

குறையொன்றுமில்லை. said...

மீனா முதல் முறையா என்பக்கம் வரீங்களா? இனிமேல அடிக்கடிவாங்க

குறையொன்றுமில்லை. said...

தொப்பி, தொப்பி உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

pichaikaaran said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

பார்வையாளன் உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

நல்ல அத்தை பையன் - பாவம் ப்யந்து சொந்த ஊர்ருக்கு ஓடறேன்ணு ஓடி இருக்கணுமே ! ம்ம்ம் வாழ்க வளமுடன்

குறையொன்றுமில்லை. said...

சீனாசார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

radhakrishnan said...

திருமணமாகும்போது உங்களுக்கே 12வயது.இணைப்பாக ஒரு15 வயதுப்பையன் வேறு.ஸைக்கோ அனுபவம் மிகவும் வேடிக்கை--வேதனையான அனுபவம்தான்

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .