Google+ Followers

Pages

Sunday, January 2, 2011

லோட் ஷெட்டிங்க் ஜிந்தாபாத்:)

பவர்கட் ஜிந்தாபாத்




இங்கு நாங்க வசிக்கும் பகுதிகளில் சம்மரில் காலை 3 மணி நேரம்

சாயந்தரம் 3 மணி நேரம் கரண்ட் கட் ஆகும். காலை, மாலை இரு

நேரமும் 6 டு 9 கரண்ட் கிடையாது.இப்ப விண்டரில் காலை, மாலை

ஒரு, ஒருமணி நேரம் கரண்ட்கட். எல்லா இடங்களிலும் உள்ளதுதான்.

நாங்க இருப்பது ஸிட்டியை விட்டு 60 கிலோ மீட்டர் உள்ளே தள்ளி

இருக்கும் புற நகர்ப்பகுதியாகும். நல்ல கிராமப்புரப்பகுதி தான். எல்லா

விஷயங்களுக்கும் 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஸ்டேஷன் வரை

போகனும். காய்கறி, பால், ப்ரொவிஷன்,டாக்டர், மருந்துக்கடை என்று

எதுவுமே பக்கத்தில் கிடையாது.




இந்த பவர்கட்டும் தொடர்ந்து 5 வருடங்களாக இருந்து கொண்டுதான் இருக்கு.

முதலில் எல்லாம் காலங்காத்தால, ஆபீஸ்,ஸ்கூல், காலேஜ் போறவங்க எல்லாம்ரொம்ப கோவமும், டென்ஷனும் தான் பட்டோம். சரி கொவப்படுவதால ஹெல்த்பாதிக்கரதுதான் மிச்சம். நாங்க இருப்பது மூன்று விங்க்ஸ்(A, B, C.) இருக்கும4 மாடி குடி இருப்பு பகுதி. மொத்தமா 50 குடித்தனங்கள் இருப்போம். எல்லா பாஷைக்காராளும் அடக்கம். எந்த டோரில் யாரு இருக்கா என்கிர விபரங்கள்கூட தெரிஞ்சுக்காம அவா, வா வெலை உண்டுன்னு தான் எல்லாருமே இருந்தோம்.



இதுபோல ஒரு கரண்ட் கட் நாளில் வீட்டில் இருக்க முடியாம எல்லாரும் கீழே

இருக்கும் கார்டனில் உக்காந்து பேசிண்டு இருந்தோம். என்ன கொடுமை பாருங்கரொம்பவே கஷ்டமா இருக்குன்னு கரண்ட்கட் பத்திதான் பேச்சு பூரா. லேடீஸ் ஒவ்வொருவரும் எப்படி சமாளிக்கரோம் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

எங்க பில்டிங்க்ல நாந்தான் கொஞ்சம் வயசானவ. அந்த மறியாதைக்கு என்னிடமும்ஆண்டி ஏதானும் ஐடியா கொடுங்கன்னு கேட்டுட்டே இருந்தாங்க. எனக்கு தெரிந்ததைசில யோசனைகளாக அவர்களிடம் சொன்னேன்.




மறு நாள் தொடங்கி என் யோசனைப்படி லேடீஸ் எல்லாம் காலை சமையலில் இருந்துஆரம்பித்தார்கள். மிக்சி, ஃப்ரிட்ஜ், கீசர், வாஷிங்க் மிஷின் என்று எதுவுமே காலை நேரம்ஒர்க் பண்ணாது. கூடியமான வரை அரைக்கத் தேவை இல்லாத சமையலே ப்ளான் பண்ணிநார்கள். எல்லார் வீட்டிலுமே சின்ன அம்மி, சின்ன குழவி வைத்திருந்தார்கள். லஞ்சுக்குமோஸ்ட்லி சப்பாத்தி பாஜிதான் கையில் கொண்டு போவார்கள். அதற்கு சரியானபடி

தொட்டுக்கொள்ள வேனுமே. இஞ்சி, பூண்டு வெங்காயம் அம்மியில் அரைத்து மசாலாரெடி பண்ண தொடங்கினார்கள். குழந்தைகள், பெரியவர்கள் எல்லாருமே அவரவர் துணிகளை துவைத்து, பச்சைத்தண்ணீரில் குளித்தார்கள். இந்தபக்கம்லாம் ஒரு பழக்கம்.



தண்ணீரினால்தான் எல்லா வியாதிகளும் பரவுது என்று,குளிக்க, குடிக்க எல்லாமே வென்னீர்தான். முதலில் துணி துவைக்கமாட்டேன்னு எல்லாரும் அடம் பிடிதார்கள்தான். சரி வேணாம்.நாளை அதே அழுக்குதுணிதான் போட்டுக்கணும்னு சொல்லி அவர்களை துவைக்கப்பழக்கவேண்டி இருந்தது.




காலை ப்ரேக்பாஸ்ட்டும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட உட்கார்ந்தார்கள்.10 மணி ஆபீசுக்குஇங்கேந்து 8 மணி லோக்கல் வண்டி பிடிச்சாகனும். ஆனாதான் 10 மணிக்குள்ள ஆபீஸ்போய்ச்சேர முடியும்.8 மணிக்குள்ள எல்லா வேலைகளும் முடிந்து வெளியில் வந்தால்லிஃப்ட்டும் ஒர்க் பண்ணாது. படிக்கட்டு வழியா ஏறி, இறங்கித்தான் ஆகணும்.அதனாலஎன்ன நல்ல எக்சர்சைசா நினைச்சுக்க வேண்டியதுதான். அப்படி படிக்கட்டுவழி இறங்கும் போது எல்லார் வீட்டுக்கதவுகளும் கூட திறந்திருக்கும். எல்லாரிடமும் ஃப்ரெண்ட்லியா

ஒரு குட்மார்னிங்க், ஒரு ஹாய் சொல்ல முடிந்தது.எந்த வீட்டில் யாரு இருக்கான்னும் தெரிந்து கொள்ள முடிந்தது.அவர் களுக்கு சிட்டிலேந்து ஏதானும் சாமான் வேண்டி இருந்தாசொல்வார்கள். நாங்களும் வாங்கி வருவோம். அதே போல வேலைக்குப்போகும் பெண்கள்வீட்டிற்கு வரும் கூரியரோ, சிலிண்டரோ,லெட்டரோ அவர்கள் வாங்கி வைப்பார்கள்.பில்டிங்கில் இருக்கும் ஒவ்வொருவருடனும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.




இரவு திரும்பி வரும்போதும் மாடிப்படி ஏறித்தான் வரணும்.வாசலில் உகாந்திருப்பவர்களுடன்சினேகிதமாக ஒரு சிரிப்பு, அன்பாக ஒரு விசாரிப்பு என்று ஆனது. குழந்தைகள், பெரியவர்கள்ஏன் வீட்டிலுள்ள எல்லாரும் இரவு உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட முடிந்தது. இதேகரண்ட் இருந்தால் எல்லாரும் டி வி. முன் அமர்ந்து தட்டுல என்ன போடரா, என்ன சாப்பிடரோம்

என்றகவனமே இல்லாமல்மிஷின் மாதிரி அரைத்துக்கொண்டிருப்ப்பார்கள். இப்ப எல்லாரும்சேந்துஉக்காந்து, நாங்க ஆபீசில் நடந்த விஷயங்கள், குழந்தைகள் ஸ்கூலில் நடந்த விஷயங்களென்றுபேசிக்கொண்டே சந்தோஷமாக திருப்த்தியாக சாப்பிட முடிந்தது.




லீவு நாட்களில் சாயங்காலம் 6 டு 9 குழந்தைகள் எல்லாரும் கீழே போய் பில்டிங்க்ல உள்ளகுழந்தைகளுடன் ஓடி ஆடி விளையாடுவார்கள். பெரியவர்களும் கீழே கார்டனில் உக்காந்துசொந்தக்கதைகள்,மற்றகதைகள் பேசி சிரித்துக்கொண்டிருப்போம்.அப்போது கரண்ட்கட் நம்மளுக்கு

எவ்வளவு நல்லது பண்ரது இல்லியா ஆண்டி, அம்மில அரைப்பதால இவ்வளவு நாளா எனக்குஇருந்த தோள்பட்டை, கழுத்துவலி எல்லாம் போயே போச்.என்று ஒருத்திசொல்ல, அதைத்தொடர்ந்துஇன்னொருத்தி ஆண்டி டெய்லி மாடி ஏறி இறங்குவதால 5 கிலோ வெயிட் குறைஞ்சிட்டேன்.


என்று தொடரவும் அடுத்தவளும் இப்ப பண்ணற சாப்பாட்டை அடிக்கடி சூடு படுத்தவே தேவைஇல்லை ஆண்டி எல்லாரும் ஒண்ணாவே உக்காந்து சப்பிட்டுடரோம். குழந்தைகளும் தங்கதுணிகளைத்தாங்களே துவைக்கர பழக்கம் பண்ணிகிட்டாங்கன்னு. இப்ப ஆருங்களேன் இப்படிவெளில ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளுக்கு எவ்வளவு நல்லது இல்லியா?




என்று ஆளாளுக்கு பேசினா. நானும் ஆம்மாமா. பழையகால வீடுகள்ள ஏது மிக்சியும் க்ரைண்டரும். எக்ஸர்ஸைஸுன்னு தெரியாமலேயே அவங்கல்லாம் எவ்வ்ளவோ வேலைகள் பண்ணிஇருக்காங்க. வாக்கிங்க்னு தெரியாமயே ஒருமைல் தூரம் நடந்துபோயி ஆத்துல துணி துவைத்து

குளிப்பதிலேந்து எல்லாத்திலயுமே சிஸ்ட மேடிக்கா இருந்திருக்காங்க. இப்பமாதிரி கண்ட வியாதி’களுக்கும் இடம் கொடுத்ததே இல்லை. நம்மால எல்லாம் அப்படி இருக்க முடியாதுதான்.ஆனகூடசில நம்மால செய்யக்கூடிய விஷயங்களைப்பற்றி நாம கொஞ்சம் யோசிக்கலாம் இல்லியா?

மெயினா கரண்ட் பில்லும் கம்மி யாகுமே. சிக்கனுத்துக்கு சிக்கனம், ஹெல்த்துக்கு ஹெல்த்கூடவே எல்லாருக்கும் நல்ல பழக்கங்களைக்கத்துக்க ஒருவாய்ப்பு என்றுதான் நாம இந்த கரண்ட்கட் ப்ராப்ளத்தை எடுத்துக்கணும்,எல்லாத்தையுமே ஒரு பாசிடிவ் திங்கிங்கோட அணுகலாமே?

24 comments:

ஸாதிகா said...

பவர் கட்டினால் இத்தனை அட்வாண்ட்டேஜா?

கணேஷ் said...

நல்ல விசயங்கள..எவ்வளவு பேரை மாறச்செய்து இருக்கிங்க...

எல் கே said...

அட ஒரு தொல்லையை கூட இப்படி நல்ல விதத்தில் மாற்றிக் கொண்டீர்களே.. மிக அருமையான யோசனைகள்

Lakshmi said...

எதையுமே நாம எடுத்துக்கொள்ளும் விதத்தில் தானே இருக்கு. இல்லியா ஸாதிகா.

Lakshmi said...

அய்யோ, நாம ஐடியா கொடுத்தாலும் கேக்கரவங்க கேட்டாதானே நல்லது இல்லியா? கணேஷ்.

Lakshmi said...

எதிலுமே பாசிடிவ் திங்கிங்க் நல்லதுதானே கார்த்திக்.

Madhavan Srinivasagopalan said...

பதிவும்.. சூப்பர்..
பின்னூட்ட மறுமொழியும் சூப்பர்..

Lakshmi said...

தேங்க்யூ மாதவன். வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

எல்லா விஷயங்களிலும் உள்ள நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்வே ஆனந்தம் என்று அழகாய் உணர்த்தி இருக்கீங்கம்மா. பகிர்வுக்கு நன்றி.

Lakshmi said...

ஆமா, வெங்கட் ஆனா யாரு நல்லவற்றைமட்டும் எடுத்துக்கராங்க இல்லியா?

பார்வையாளன் said...

பதிவில் ஒரு மெசேஜ் சொன்னதற்கு நன்றி

Lakshmi said...

பார்வையாளன் வருகைகு நன்றிகள்.

பாரத்... பாரதி... said...

மதிப்பிற்குரிய LAKSHMI அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் நல்வாழ்த்துக்கள்.

ஆமினா said...

ஒரு பவர் கட் உங்க குடியிருப்பையே மாத்திடுச்சே!!!!

எங்களுக்கெல்லாம் எப்ப விடிவு காலமோ

பலே பிரபு said...

அங்கும் கரண்ட் cut ah !!!

பலே பிரபு said...

dashboard-->settings--> comments--> comment form placement ஐ popup window என கிளிக் செய்யவும். இப்போ save.thats all☺☺

Lakshmi said...

பாரத் பாரதி வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றிகள்.

Lakshmi said...

ஆமி மாத்தினது யாரு?:)) சீனியர் சிட்டிசன் ஆலோசனை என்றால் சும்மாவா?:)

Lakshmi said...

பலே பிரபு உங்களுக்கும் கரண்ட் ப்ராப்ளமா. இந்தபதிவை காப்பி பண்ண வேண்டியத்துதானே.:)

Lakshmi said...

பலே பிரபு தேங்க்யூ வெரிமச். இப்ப ஓ. கே. வா?:)

goma said...

பவர்கட்டினால் நமக்கு எவ்வளவு பவர் கூடியிருக்கிறது என்று எல்லோரும் உணரும் வகையில் அழகாக அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.அருமை.
இதுபோல் எத்தனை நல்ல விஷயங்கள் நாம் இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கிறோமோ...அலசலாம்

Lakshmi said...

ஆமாம்மா, நாம் தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் நிறையவே இருக்கும்மா.

radhakrishnan said...

சகோதரி,
எதையுமே லைட்டாக எடுத்துக்கொண்டு
போனால்தான் நல்லது.யோசித்தால்
எதுவுமே நல்லதற்குத்தான்.பாசிட்டிவ்
திங்கிங் மேலும் நல்லது.
எங்குஇருந்தாலும் உங்களுக்கென்று தனி
மதிப்பு நிச்சயமாக கிடைத்து விடும்,
உங்கள்அனுபவச்செறிவுடன் கூடிய யோசனைகளால்.நாங்களும் பயன் பெறுகிறோம்.நன்றி,அம்மா.

Lakshmi said...

ராதாகிருஷ்னன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .