Google+ Followers

Pages

Tuesday, January 4, 2011

தொடர்பதிவு

தொடர் பதிவு.
என்னையும் மதித்து தொடர்பதிவு எழ்த நண்பர் கணேஷ் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கார்.நன்றி கணேஷ். என்னஎழுத எதைப்பற்றி எழுதன்னு சிறு குழப்பம். அவர்சொன்னதுபோலஎனக்கும் குறிப்பிடும்படி ஃப்லோவர்ஸோ, பின்னூட்டமிடுபவர்களோ சேரவே இல்லை.நானும் மற்றவர்களின் ப்ளாக் எல்லாம் போயி படித்து ஃபாலோவராகவும் பதிவு செய்தேன்.

நான்ப்ளாக் தொடங்கியே 4 மாசம் கூட முழுசா ஆகலை. ஒவ்வொருவரின் ப்ளாக் படிக்கும்
போதும் நிறைய அனுபவங்கள் கிடைத்தது என்னமோ உணமை. நம்மால் அந்த அளவுக்கெல்லாம் எழுதவே முடியாது என்பது லேட்டாகத்தான் புரிய வந்தது.என் எழுத்து எப்படின்னா நேரில் யாரோ உக்காந்திருப்பதுபோலவும் அவர்களுடன் பேசுவதுபோலவும் தான் இருக்கும். நான் ஸ்கூல் படிப்பெல்லாம் படித்தது கிடையாது.அதனால இலக்கணசுத்தமா தப்பு, தவறு இல்லாம எழுதவே தெரியாது. நம்மிடம் உள்ள குறைகளையும் ஒத்துக்கொள்ள

வேண்டும் இல்லியா.12 வயசுல கல்யாணம். அந்தவயசுக்குள் எவ்வளவு படிச்சிருக்க முடியும்.அப்பலேந்தே எல்லா வாராந்திர, மாதாந்திர தமிழ் புக்ஸ் படிக்கும் பழக்கம் இருந்தது. அப்பல்லாம்முழு இன்வால்வ் மெண்டோட படிக்க முடிந்தது. கல்யாணத்திற்குப்பிறகு புக்ஸ் கிடைத்தது. ஆனால்முழு இன்வால்வ்மெண்டோடு படிக்கமுடியலை. குடும்ப சுமைகள் அழுத்தம்.


குழந்தைகள் ஸ்கூல்போக தொடங்கிய போதுதான் A, B, C, D, அ,ஆ,இ ஈ எல்லாமே தெரிஞ்சுண்டேன்.இது என்னது தொடர் பதிவு எழுத கூப்பீட்டா சொந்தக்கதை சொல்ராங்களேன்னு நினைப்பீங்க.63- வயசுலதான் கம்ப்யூட்டரே அறிமுகம். அதைபற்றி எதுமே தெரியாது. முதல் ஒருமாசம்

சாலிடர்,ஸ்பைடர்சாலிடர் ஃப்ரீஸெல் கேம்ஸ்மட்டுமே தெரியும். பிறகு நெட் கனெக்‌ஷன் பற்றிதெரியவந்தது, B. S. N, L. ஆபீசில் போயி நெட்கனெக்‌ஷனுக்கு கேட்டேன். லேண்ட் லைன் போன்இருக்கான்னு கெட்டா இருக்குன்னேன். பெரிய பேப்பர் கொடுத்து ஃபில் பண்ணி கொடுங்க என்றார்கள்.

எல்லாமே ஹிந்தில இருந்தது. தமிழே தாளம். இதுல எப்படி ஹிந்தில ஃபார்ம் ஃபில் பண்ணறது?பக்க்த்ல யாரிடம் கேட்டாலும் சொல்லித்தரவும் மாட்டேன்னுட்டா. வீட்ல போயி கேட்டிட்டு வாங்கன்னுசொல்லிட்டா. வீட்டில் நான் மட்டும் தனியாதான் இருக்கேன்.யாருகிட்ட கேக்க? போன்ல பெண்ணிடம் கேட்டுக்கேட்டு ஒருவழியா ஃபார்ம் ஃபில் பண்ணிகொடுத்தேன்.நெட் கனெக்‌ஷன் கிடைத்ததும் முதல்ல என்ன பண்ணனும்னே தெரியலை. குழந்தைகள்(5) எல்லாரும்வேறு, வேறு இடங்களில் இருந்தார்கள். முதலில் மெயில் அனுப்ப கத்துண்டேன். மெயில் ஐ. டி கூடக்ரியேட் பண்ணத்தெரியலை.முட்டி மோதி ஒன்னொன்னா தெரிஞ்சுண்டேன். அறுசுவைனு ஒரு தமிழ்சைட் கண்ணில் பட்டது. கொஞ்ச நாள் அதில் சமியல் குறிப்பு, சில ஆர்ட்டிக்கிள் எழுதினதில் அங்கு

நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைத்தார்கள். கொஞ்சம் உற்சாகமா இருந்தது. ஆக்ச்சுவலா அக்கம் பக்கத்துலோவேறு எந்த விதத்திலோ எனக்கு ஃப்ரெண்ட்ஸே கிடையாது. நான் ரொம்பவே கொயட் டைப். அதிகம்

பேசவாதெரியாது. அதனால ஃப்ரெண்டுன்னு சொல்லணும்னா அருசுவை ஃப்ரெண்ட்ஸ்தான். அப்பரம்கொஞ்ச நாள்ல அதில் எழ்துவதை நிறுத்திட்டேன். காரணம்னு ஏதும் இல்லை. தமிழ் குடும்பம்னு ஒருதமிழ் சைட் கண்ல பட்டது. அதிலும் கொஞ்ச நாள் எழுதிண்டு இருந்தேன். பிறகு அதையும் படிப்படியா

குறைத்துக்கொண்டேன். ஒரே நேரத்ல நிறைய சைட்ல எழுத தெரியலை அதுதான் உண்மை.ஃபேஸ்புக், ஆர்குட் எல்லாத்திலும் கூட சேந்தேன். அங்கதான் ஒரு ஃப்ரெண்ட் ப்ளாக் எழுதலாமேன்னுஐடியா கொடுத்தா. மொதல்ல ப்ளாக்னா என்னான்னே தெரியலை. அப்பரம் ஒவ்வொருவர் ப்ளக்கா போயிஸைலண்ட் ரீடரா எல்லாம் படிச்சு பாத்தேன். ஒவ்வொருத்தரும் எவ்வளவு சூப்பரா பதிவு எழுதராங்கன்னுஒரே மலைப்பா இருந்தது. நாமும் எழுதி பாக்கலாமேன்னு தொடங்கி4 மாசம் கூட ஆகலை.
பன்னிக்குட்டி ராமசாமின்னு ஒருபதிவர் வலைச்சரத்தில் என் ப்ளாக்கை அறிமுகம் செய்திருந்தார்.அதிலிருந்து என் பதிவுக்கு வாசகர்கள் வர ஆரம்பித்திருக்கிரார்கள். தேங்க்ஸ் ராமசாமி அவர்களே.

ஆனால்கூட இப்பவும் ரொம்பவே குறைவான வாசகர்கள் தான் வருகிரார்கள். ஆனா வரும் எல்லாபதிவுலக நண்பர்களும் என் எழுத்துக்கு நல்ல பாராட்டுக்களும் உற்சாகமும் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தி வருகிரார்கள். இதோ இப்பவே என்னையும் தொடர் பதிவு எழுத அழைக்கும் அளவுக்கு என்ன

அழைத்திருக்கிரார் நண்பர் கணேஷ். நன்றி கணேஷ். இதுக்கும் மேல எப்படி தொடர்வதுன்னு தெரியலை.

43 comments:

ஸாதிகா said...

எளிமாயாக உங்களை[ப்பற்றிய அறிமுகம் படிக்க சந்தோஷமாக இருந்தது.லக்‌ஷ்மி மேம்,நாண்கே மாதத்தில் 40 பாலோவர்ஸ்.இதுவும் சாதனைதான்.விரைவில் நிறைய பேர் வருவர்கள்6.63 வயசிலே கம்பியூட்டர் அறிமுகமாகி பிளாக்கும் ஆரம்பித்ததும் இன்னொரு சாதனை தான்.மேலும் பல பல சாதனைகள் புரிந்து பூரண ஆரோக்கியத்துடன் உற்சாகமாக பிளாக் உலகில் சிறக்க எனது வாழ்த்துக்கள்!

Lakshmi said...

ஸாதிகா முதல் வாழ்த்துக்கு நன்றிம்மா. உங்கள் அனைவரின் உற்சாகமான ஊக்கிவிப்பால்தான் என்னாலும் ஓரளவு எழுதமுடிகிரது.

Madhavan Srinivasagopalan said...

உங்களோட வயசையும்.. உங்களுக்கு எழுதுவதற்கு இருக்கும் ஆர்வமும்.. எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

எழுதுங்கள்.. எழுதுங்கள்.. உங்கள் மனதில் தோன்றும் எல்லா நல்லா விஷயங்களையும் எழுதுங்கள். தனிப்பட்ட வாழ்க்கையை எழுத வேண்டாம்.. ஆனால் உங்கள் அனுபவங்கள் மற்றவருக்கு உதவும் வகையில் கதையாகக் கூட எழுதலாம். எங்களுக்குப் பயன் கிடைக்கும்.

நீங்கள் இத்தனை வயதிலும், கணணி, ஈமெயில் பற்றி கற்றுக் கொண்டு பயன் படுத்தவது கேட்க நன்றாக இருக்கிறது. உங்கள் ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் தலை வணங்குகிறேன்.

மிக்க நன்றி.

Madhavan Srinivasagopalan said...

ஒவ்வொரு பதிவிற்கும் தனிப் பட்ட தலைப்பை தருவது இன்னும் சிறப்பாக இருக்கும்.
நீங்கள் இன்னும் பல 'தொடர்பதிவு' எழுத நேரிடலாம்.. அதற்காவே இப்படி சொல்கிறேன்.

கணேஷ் said...

நீங்கள் சொல்லும் விதம பிடிக்கும்..பார்த்திங்களா இந்த பதிவுன் மூலம் உங்களின் முயற்சி எனக்கு தெரியவந்தது..

இன்னும் நிறைய எழுதுங்கள்..எல்லாம் அனுபவமிக்க விசயங்கள் கண்டிப்பாக உதவியாக இருக்கும்..

நான் அழைத்து எழுத வந்ததுக்கு உங்களுக்கு மிக்க நன்றிம்மா..

Lakshmi said...

மாதவன் உங்கள் எல்லாரோட உற்சாகமான பின்னூட்டங்கள்தான் எனக்கு டானிக். நான் கம்ப்யூட்டரில் எழுதும்போது அக்கம்பக்கம் யாரும் வந்தா ஏம்மா இந்த வயசுக்கு கோவில் குளம்னு போயி புண்ணியம் தேடாம எதுக்கு வெட்டியா கம்ப்யூட்டர்முன்னாடி உக்காந்து டைம் வேஸ்ட் பண்ரீங்கன்னுதான் கேப்பாங்க. ஏன் வயசானா கம்ப்யூட்டரில் எழுதக்கூடாதா என்னா?
எனக்கு நாலு விஷயங்களைத்தெரிந்து கொள்ள எப்பவுமே ஆர்வம் உண்டு. பதிவுலகில் நிறைய நண் பர்கள் எனக்கு ஹெல்ப் பண்ணவும் தயாரா இருக்கா. அப்பரம் என்ன கத்துக்க வேண்டியதுதானே. கத்துக்க வயசெல்லாம் ஒரு தடையே கிடையாது. சரிதானே மாதவன்.

Lakshmi said...

ஆமா கணேஷ் இதுபோல தூண்டுதல் வேண்டிதான் இருக்கு. பதிவு எழுத ஆரம்பித்த்துமுதல் நிறைய முகம் தெரியா நட்புகள்.எல்லாருமே என்னை மிகவும் உற்சாகப்படுத்தி வருகிரார்கள்.
எல்லா நண்பர்களுக்கும் ரொம்பவே நன்றி சொல்லனும்.

வெங்கட் நாகராஜ் said...

கணினி கற்றுக்கொள்ள வயது ஒரு தடையே இல்லை அம்மா. உங்கள் அனுபவங்கள் எங்களுக்கெல்லாம் ஒரு படிப்பினை. நிறைய நல்ல விஷயங்கள் மற்றவர்களுக்குச் சொல்லித் தரும்போது உங்களுக்கே ஒரு மகிழ்ச்சி கிடைக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள்...

எல் கே said...

நெறய எழுதுங்க. எதை வேண்டுமானாலும் எழுதலாம். அடுத்தவர்கள் மனம் புண்படாமல் எழுத வேண்டும். அவ்வளவுதான். உங்கள் வயதில் நாங்கள் எப்படி இருப்பமோ தெரியாது . ஆனால் இந்த வயதிலும் கற்றுக் கொண்டு எழுதுகிறீர்களே உங்களுக்கு ஒரு சல்யுட்

Chitra said...

Simple and Sweet!!!!

உங்கள் எழுத்து நடை - தனித்துவம் மிக்கது.... விரும்பி வாசிக்கிறேன்.
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

Lakshmi said...

வெங்கட் உண்மைதான் புதிதாக எதையாவது கற்றுக்கொள்வதற்கு வயதைக்காரணம் சொல்லவேகூடாது.
கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் இருக்கும்வரை கற்றுக்கொண்டே இருக்க
லாம். உங்களைப்போன்றவர்களின் உற்சாகமான பின்னூட்டங்கள் எனக்கு இன்னும் திறமையாக எழுதனும்னு ஆர்வத்தை தூண்டுகிரது.

Lakshmi said...

கார்த்தி, இதுபோல ஒரு என்கரேஜ் மெண்ட் தேவையாதான் இருக்கு. என் ஒவ்வொருபதிவிலும் நீங்கல்லாம் கொடுக்கும் பின்னூடங்களால் தான் நான்
இன்னமும் நல்லா எழுத முடியும்னே நம்பிக்கை வரது.சல்யூட்டுக்கு ஒரு ராயல் சல்யூட் கார்த்தி.:)

Lakshmi said...

சித்ரா பாராட்டுக்கு நன்றிம்மா.

Jaleela Kamal said...

ரொம்ப ரசித்து படித்தேன் உங்கள் பதிவை.
அருமை
ஜலீலா

Lakshmi said...

அருமை ஜலீலாவுக்கு நன்றி.

பலே பிரபு said...

உண்மையிலேயே ரொம்ப நல்ல பதிவு!!

என் வயதை விட மூன்று மடங்கு அதிகம் நீங்கள் (என்னுடையது 21). ஆனால் உங்கள் எழுத்துக்கள் உங்கள் வயதை குறைக்கின்றன!!
கற்றுக்கொள்ளும் ஆர்வத்துக்கு வயது ஒரு தடையே இல்லை. நீங்கள் தான் நான் கண்ட நேரடியான முதல் உதாரணம்.!!

பதிவுலகில் இருப்பதை நினைத்து இப்போது நான் பெருமை அடைகிறேன் அம்மா ♥♥♥.

உங்கள் ஈமெயில் முகவரி அனுப்பவும்: krishnaprabu2710@gmail.com

பலே பிரபு said...

//பதிவுலகில் நிறைய நண்பர்கள் எனக்கு ஹெல்ப் பண்ணவும் தயாரா இருக்கா.//

நிச்சயமாக நானும் அம்மா!!

Lakshmi said...

பலே ப்ரபு அளவுக்கு அதிகமாபுகழுரீங்களோ கூச்சமா இருக்கே. அதேசமயம் சந்தோஷமாவும் இருக்கே.

Mahi said...

உங்கள் விடாமுயற்சிக்கு ஒரு சல்யூட் அம்மா! உங்கள் எழுத்துக்களை ரசித்துப் படிக்கிறேன்,தொடருங்கள்! :)

ஆமினா said...

உங்கள பத்தி நெறைய தெரிஞ்சுட்டேன் மா!!!!

இந்த வயதில் உங்கள் ஆர்வம் பார்த்து ரொம்பவே ஆச்சர்யப்படுறேன்....

தங்கராசு நாகேந்திரன் said...

படிக்க ரொம்பவும் மகிழ்சியாக இருந்தது. சாதனை செய்வதற்கு வயது தடையில்லை என்பதை நிருபித்து விட்டீர்கள், உங்களைப் பார்த்து எனக்கு மெலிதான பொறாமையும் வருகிறது. பாராட்டுக்கள்.

Lakshmi said...

மஹி நீங்கல்லாம் அடிக்கடி வந்து என் பதிவுகளைப்படித்து பாராட்டுவது உண்மைலயே உற்சாகமா இருக்கும்மா.

Lakshmi said...

ஆமி பர்சனலா என்னைப்பற்றி எதுவும் எழுதவேண்டாம்னு இருந்தேன் அதனால யாருக்கும் எந்த பிரயோசனமும் கிடையாது. என் அனுபவங்களைப்பற்றி மட்டுமே பகிர்ந்துகொள்ள நினைத்தேன். இடையில் என் பயோடேட்டாவும் வந்துடுது. (வாட் டு டூ?)

Lakshmi said...

ஐயோ, இந்தபாட்டியைப்பாத்து பொறாமையா?ஹா, ஹா, ஹா,

டிலீப் said...

அழகான மொழி நடையில் சிறப்பான அறிமுகம்
வாழ்த்துக்கள்

Lakshmi said...

நன்றி திலீப்.

asiya omar said...

அருமையாக எழுதறீங்க,பதிவு போடப்போட இவ்வளவு தானான்னு ஆகிடும்.தொடர்ந்து எழுதுங்க.உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

asiya omar said...

அருமையாக எழுதறீங்க,பதிவு போடப்போட இவ்வளவு தானான்னு ஆகிடும்.தொடர்ந்து எழுதுங்க.உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

NADESAN said...

அருமையான தொடர் பதிவு
வாழ்க வளமுடன்
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

Lakshmi said...

அன்பு ஆசியா வருகைக்கு நன்றிம்மா. அடிக்கடி வந்து கருத்துக்களைச்சொல்லுங்க.

Lakshmi said...

நெல்லை நடேசன் அவர்களுக்கு. முதல் முறை வந்திருக்கீங்க இல்லியா? நானும் நெல்லைக்காரிதான்.

vasan said...

உண்மைக்கு அல‌ங்கார‌ம் தேவ‌யில்லை, அதுவே அழுகுதான் எனக் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.
அதை உங்க‌ளின் ம‌னம் திற‌ந்த‌ ப‌திவு மெய்பித்திருக்கிற‌து. முக‌மூடிக‌ளுக்கிடையே ஒரு அச‌ம் முக‌த் த‌ரிச‌னம் க‌ண்ட‌ க‌ளிப்பு. நன்றி மேட‌ம். மூத‌றிஞர் இராஜாஜி எழுதி எம்எஸ் அம்மா ஐநாவில் பாடிய 'குறையென்றுமில்லை' என்றும் ம‌ன நிறைவானது.

Lakshmi said...

வாசன் வருகைக்கு நன்றி. முதல் முறை வருகிரீர்கள் தானே. இனி அடிக்கடி வாங்க.

அம்பிகா said...

இப்போது தான் உங்கள் ப்ளாக் பக்கம் வ்ந்தேன். உங்களை பற்றி அறிந்ததில் மிகவும் சந்தோஷம். கற்றுக்கொள்ள வயது தடையே இல்லை அம்மா! நிறைய எழுதுங்கள். தொடர்கிறேன்.

ஆயிஷா said...

அம்மா உங்களைபற்றி நிறைய
தெரிந்து கொண்டேன்.ரெம்ப சந்தோஷம்.

மனப்பூர்வமான வாழ்த்துக்கள்மா !

Lakshmi said...

அம்பிகா முதல்முறை வந்ததுக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா.அடிக்கடி வாங்க.

Lakshmi said...

ஆயிஷா நீங்களும் முதல்முறையா வரிங்க இல்லியா? இனி அடிக்கடி வாங்க.

Geetha6 said...

வாழ்த்துக்கள்! Madam.

Lakshmi said...

நன்றி கீதா.

பாரத்... பாரதி... said...

உங்களுடைய பதிவுகள் எங்களுக்கு பாடங்கள், உங்களுடைய ஆர்வம் எங்களை பிரம்மிக்க வைக்கிறது. முதன் முதலாக நீங்கள் எங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டபோது எங்களுக்கு விருது கிடைத்தது போன்று இருந்தது. உங்கள் வலைப்பூவும் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருப்பதாகவே தெரிகிறது. எங்களுடைய தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். தாயன்பாக ஏற்றுக்கொள்வோம்.

ஆனந்தி.. said...

ஆன்ட்டி...இப்போ தான் இந்த பதிவை படிக்க முடிஞ்சது...பட்டய கிளப்புங்க ஆன்ட்டி ...எங்கள் உதவி எப்பவும் இருக்கும்...

radhakrishnan said...

என்னம்மா,நெட் கனெக்ஷன் முதல்
நீங்களேமுயற்சி செய்து வாங்கிநிருக்கிறீர்களே.வாவ். ஆரம்பத்தில்
உங்கள் குழந்தைகள் ஏதேனும் சொன்னார்களா?என்கரேஜ் செய்தார்களா?
உங்கள் அனுபவம் எனக்கு பெரிதும்
மாரல் உதவியாக இருக்கிறது.67வயதிற்துமேல் கணினி
வாங்கி தட்டுத்தடுமாரி கற்றுக்கொண்டு வருகிறேன்.நீங்கள்தான் எனக்கு ரோல்
மாடல்.நன்றி அம்மா.

Lakshmi said...

ராதா கிருஷ்னன் என் எல்லாபதிவையும் படிச்சுட்டீங்கன்னு நினைக்கிரேன் இப்ப என்னைப்பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்குமே. நான் பதிவு எழுதுரேன் என்பதே எங்க வீட்ல எல்லாருக்கும் இன்னமும் நம்ப முடியாத விஷயமாவே இருக்கு என்பசங்கயாருமே என்பதிவு இதுவரை படிச்சதே இல்லே. என்ன வேடிக்கை இல்லியா உனக்கு என்னம்மா தெரியும்னுதான் இப்பவும் கேக்குராங்க.
நீங்கல்லாம் படிக்குரீங்களே அதான் எனக்கு டானிக். நீங்களும் முயற்சி செய்யுங்க உங்களாலயும் கண்டிப்பாஇதுக்கும் மேல சுவாரசியமா எழுதமுடியும்.

என்னை ஆதரிப்பவர்கள் . .