Google+ Followers

Pages

Friday, January 7, 2011

2010 டைரி

2010- டைரி(தொடர் பதிவு)

ரோஜா பூந்தோட்டம் பாரத் பாரதியின் அன்பு அழைப்பி பேரில் நானும்
களம் இறங்கி இருக்கேன். டைரின்னு சொல்லும் போது பெர்சனல் மேட்டர்
சொல்லவேண்டி வருமேன்னு சின்ன தயக்கம். தெரிஞ்சதுனால ஒன்னும்
தப்பில்லை. அதனால படிக்கிரவங்களுக்கு எந்த உபயோகமும் கிடையாதே.
சுவாரஸ்யமான அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளலாம்(அப்படி ஏதானும்
நடந்திருந்தால்). எனக்கு கடந்த 15 வருடங்களாகவே டைரி எழுதும் பழக்கம்
உண்டு. நானும் ஒருவருட மலரும் நினைவுகளில் மூழ்க ஒரு சந்தர்ப்பம்.ஜனவரி.

இந்தமாதம் ஆபிரிக்கா விலிருந்து திரும்பினேன். மகள், மருமகன் அங்கு
இருக்கிரார்கள். அவர்களுடன் 2 மாதங்கள் தங்கி விட்டு ஜனவரி 20-ம் தேதி
இந்தியா. நெய்ரோபி ஏர்போர்ட்டில் நீக்ரோக்கள் தான் வேலை செய்கிரார்கள்.
அவர்கள் சிரிப்பது ரொம்பவே அபூர்வம். அப்படி சிரிக்கும் போது பற்கள் மட்டுமேவெள்ளை, வெளேர்னு டாலடிக்கும்.எல்லாருடைய தலை முடி களும் பிரிண்ட்எடுத்ததுபோல சுருட்டைமுடியாகவே இருக்கு. அதிலும் லேடீசின் ஹேர் ஸ்டைல்ரொம்பவே அழகு. பொறுமையா ஒவ்வொரு மூன்று முடியும் தனியா பிரித்துகுட்டி, குட்டியாக பின்னல் போட்டிருப்பார்கள்.

குறைந்தது 500, 600 குட்டி பின்னல்களாவது இருக்கும். அதன்மேல் கருப்பு சல்லாதுணீயால் மூடிக்கொண்டும் இருப்பார்கள். ஏன்னா, ஒருமாதமா அந்தபின்னலைஅவுக்கவேமாட்டாங்களாம்.!!!!!!!!!!!!!!!!. ஏர்போர்ட்டுக்குள் யாரும் வரமுடியாதே. நான்தான் சமாளிச்சாகணும். எனக்கு இங்கிலீஷ் பேச வராது. நான்பேசுவது அவர்களுக்குபுரியாம, அவர்கள் பேசுவது எனக்குப்புரியாம கொடுமைடா சாமி. இமிக்ரேஷன் செக் இன்
பார்மாலிட்டியை முடிச்சுண்டு தண்ணி குடிக்கலாம்னு பாத்தா ஒரு இடத்திலும் குடிக்கதண்ணீயே இல்லை. அங்குள்ள ஒரு டூட்டி ஃப்ரீ ஷாப்பில் போயி ஒரு பிஸ்லேரி வாட்டர்பாட்டில் வாங்கிண்டேன். 100 ரூபா கொடுத்தேன். கடைக்காரன் என்னை மேலும் கீழும்பாத்துட்டு, மேடம் இண்டியன் கரென்சி இங்க செல்லாது, டாலர் நோட்டு கொடு என்ரான்.
மருமகன் என்னிடம் 50 அமெரிக்கன் டாலர் தந்துவைத்திருந்தார். அதிலிருந்து 2 டாலரைக்கொடுத்தேன். ஓ, கே,ன்னு வாங்கி கல்லாவில் போட்டுண்டு வேர வேலையை கவனிக்கப்போயிட்டான்நானும் பாக்கி தருவன்னு அரை மணிபோல வெயிட் பண்ணி பாத்தேன். பொறுக்க முடியாமசார் பேலன்ஸ் என்ரே.ன். மேடம் ஒருபாட்டில் தண்ணி 2 டாலர்தான்(90 ரூபா) என்ரான்.
என்ன இது பகல் கொள்ளையா இருக்கே. வெளியிலும் குடிக்க தண்ணிவைக்காம இப்படிபகல் கொள்ளை அடிக்கராங்களேனு கோபமா வந்தது. என்னபண்ரது. அப்பரம் நான் ஒருவாய்தண்ணிகுடிச்சுட்டு யாருக்கும் கண்ணில் படாம கேண்ட்பேக்கிற்குள் ஒளிச்சு வக்க வெண்டிவந்தது. யாரும் கேட்டாஎன்னபண்ண?90ரூவாகொடுத்துதண்ணீவாங்கினதுஜீரணிக்கவேமுடியலை.

பிப்ரவரி

ஜனவரி 20- ம்தேதிக்கு எடுத்த டிக்கட் பல காரணங்களால் பிப்ரவரி க்குத்தான் கிடைத்தது.ஜெட் ஏர்வேஸ். மும்பை ஏர்போர்ட். இமிக்ரேஷனைல் நீங்க ஆப்ரிக்கால்லேந்துதனேவரீங்கபெட்டிதங்கமோ,!!!!!!!!!!!!!!வைரமோ!!!!!!!!!!!!!!!!
கொண்டுவந்திருக்கீங்களான்னு பெட்டியெல்லாம்கொட்டி  தலைகீழா ஓவரா குடைச்சல் கொடுத்துட்டாங்க. எல்லா கிளியரென்சும் முடிந்து வெளிலவரவே 3- மணீ நேரம் ஆச்சுன்னா பாத்துக்கோங்க. வெளில மகனும், பேரப்பிள்ளையும்காத்துகீடிருந்தாங்க. என்னம்மா இவ்வளவு லேட்டுன்னு கேட்டு நான் ராமாயணம் சொன்தெல்லாம் இங்க வேண்டாமே. வீட்டுக்கு போயி ஜெட்லாக் சரி ஆகவே 4 நாள் ஆச்சு.

மார்ச்

மகன் வீட்ல 15 நாள் இருந்துட்டு அம்பர்னாத் வந்தேன். இங்கயும் எல்லா வேலைகளும் எனக்காகவெயிட்டிங்க். பேங்க்ல போயி பென்ஷன்பணம் எடுக்கப்போனேன். மேடம் மூனு மாசமா எண்ட்ரியேஇல்லை , பென்ஷன் காரங்க எல்லாமாசமும் எண்ட்ரி போடனுமே, தெரியாதா.ஒரு அப்ளிகேஷன்எழுதிக்கொடுத்துட்டு போங்க. ஒருவாரம் கழிச்சு வாங்கன்னு. தயவு, தாட்சன்யம் பாக்காம சொல்ராங்கபென்ஷ்னர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மறியாதையைப்பாத்தீங்களா. என்னபண்ண எல்லாத்தையும்
சமாளிச்சுதான்ஆகனும்.சொசைட்டிபில்லைட்பில்,போன்பில்எல்லாம்கட்டப்போகனுமே.

ஏப்ரல்

இந்தமாதம்தான் என் அவதார். எல்லாரும் போனில் விஷ் பண்ணீனா. ஏப்ரல் மேயில் நல்வெய்யில் இருக்கும். மொட்டைமாடியில் வடாம் போட்டு குழந்தைகளுக்கு கொடுத்தேன்இப்ப மாங்கா சீசனாச்சே. வடுமாங்கா, ஆவக்கா மாங்கா கடுகு மாங்கா ஊறுகாய்களும்போட்டு எல்லாருக்கும் டிஸ்ட்ரிப்யூஷன். அதனால இந்தமாசம் பூராவும் நல்லா பிசி.கரெண்டதண்ணி ப்ராப்ளமும் சமாளிக்கனும்சித்திரைவருஷப்பிறப்பெல்லாம் வரும். என் கணவர்போனபிறகு நான் பண்டிகைகள் எதுவுமே கொண்டாடுவதில்லை. அதனால எல்லா நாட்களைபபோல அந்த பண்டிகை நாட்களும் வந்துபோகும்.

மே

அக்கம்பக்கம் அரட்டை அடிக்கவோ, வேர எந்த ஹெல்ப் கேட்டோ போகவேமாட்டேன்.கரண்ட் கட் ப்ராப்ளத்தால எல்லாரும் நல்ல ஃப்ரெண்டா ஆயிட்டா. ஆண்டி, ஆண்டின்னுஎல்லாரும் பிரியமா ஏதானும் ஆலோசனை கேட்பவர்களுக்கு எனக்குத்தெரிந்ததை சொல்லிக்கொடுப்பேன். குழந்தைகளுக்கு பரீட்சை முடிந்து லீவு விட்டா தாதி(பாட்டி) ஏதானும் நியூகேம்சொல்லிக்கொடுங்கோன்னு வாண்டுகள் பட்டாளம் வந்துடுவா. எல்லாருக்கும் அன்பான பாட்டியாகவும்அன்பான ஆண்டியாகவும் இருப்பது சந்தோஷமாகவே இருக்கு. எப்படியும் பூரா நாளும் பிசியாவேஇருக்க முயற்சி செய்வேன். ஞாயிறு லீவு நாட்களில், மகனோ, மகளொ காலை வந்து இரவு போவா.

ஜூன்

ஜூன் 10 வரை வெய்யில்தான். பிறகு ஆரம்பமாகும் பாம்பே மழை. அப்பா 3 மாசம் பிறட்டிப்போட்டுடும். மழைலயும் கரண்ட் படுத்தும். டி.வி. பார்ப்பதில் அவ்வளவா ஆர்வம் இல்லை. என்னபார்ப்பது. நிறையா புக்ஸ் படிப்பேன். கம்ப்யூட்டரிலும் நிறைய ஆர்வம் இருக்கு. நிறையா, நிறையாதெரிஞ்சுக்கனும்னு இருக்கு. ப்ளாக் மூலமா நிறையா நல்ல நட்பு உலகமே கிடைச்சிருக்கு. அதனாலதெரிஞ்சுக்கமுடியும்னு நினைக்கிரேன். இப்பவே கொஞ்ச நாளிலேயே கம்ப்யூட்டரில் ப்ளாக் எழுதும்அளவுக்கு தெரிஞ்சிண்டு இருக்கேனே. அதுவும் தொடர் பதிவு எழுத என்னையும் அழைக்கும் நல்லநண்பரக்ளையும் பெற்றிருக்கேனே. இதுவே எவ்வளவு சந்தோஷமாவும் மன நிறைவாகவும் இருக்கு.

ஜூலை

ஜூலை நல்லமழை லதான் குழந்தைகளுக்கு திரும்ப ஸ்கூல் திறப்பா. ஆண்டி குழந்தைக்குபிடிச்சமாதிரி ஒரு லஞ்ச் ஐட்டம் சொல்லுங்க. குழந்தைக்கு ஜலதோஷம் கை மருந்து சொல்லுங்கன்னு பக்கத்தில் உள்ளவர்களுடன் கொஞ்ச நேரம் கலந்துப்பேன்.ஏன் ஆண்டி உங்களுக்குத்தான்நிறைய பசங்க இருக்காங்களே ஏன் நீங்க இங்க தனியே இருக்கீங்கன்னு யாரானும் வம்பு பேச்சுஆரம்பிச்சா, அது என் பர்சனல், வேர ஏதானும் பேசுங்கன்னு ஆரம்பத்திலேயே கட் பண்ணிடுவேன்.

ஆகஸ்ட்

பேரன் ஸ்கூலில் க்ரேண்ட் பேரண்ட்ஸ் டே பங்க்‌ஷன் இருந்ததுன்னு கூப்பீட்டான். முதனா கிளம்பிபோனேன். நாதான் ஸீனியர்மோஸ்ட் க்ரேன்னி. அதனாலஎன்னைதலைமைஏற்றுப்ரைஸ்எல்லாம்என்னையே,குழந்தைகளுக்கு
கொடுக்கச்சொன்னார்கள். ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாவும்உணர முடிந்தது.

செப்டம்பர்

மகள் வீட்டில் பகவதி சேவை என்று ஏதோ பூஜை வைத்திருந்தார்கள். என்னையும் கூப்பிட்டா.எனக்கு இந்த பூஜை, சாமி எல்லாம் ரொம்பவே அலர்ஜியான விஷயங்கள். மறுத்தேன்.சம்மந்தி மாமியே அதெப்படி நீங்க வராம இருக்கலாம்/. வந்துதான் ஆகனும்னு சொல்லிட்டா.அவஙக பேச்சுககு மதிப்பு கொடுகனுமேநமக்குப்பிடிக்கலைன்னா கூட சிலசமயங்களில் காம்ப்ரமைஸ் பண்ணிக்கத்தான் வேண்டியிருக்கு.அம்பர்னாத்திலிருந்து அவர்கள் வீடுபோக லோக்கல் ட்ரெயினில் ஒன்னரை மணி நேரம் ஆகும்.ஸ்லோ வண்டிதான் அங்கே நிக்கும். அதில்தான் ஏறினேன். அந்தவண்டி அந்தஸ்டேஷனில் நிக்காமவேகமா ஓடரது. எனக்கு என்னபண்ணன்னே புரியலை. செல்லேந்து பெண்ணிற்கு போன் பண்ணீ
சொன்னேன். ஓ, அம்மா, அது செமி ஃபாஸ்ட். கல்யாண் அப்பரம் எல்லாஸ்டேஷனிலும் நிக்காதுனுசொல்ரா வண்டில கூடவா செமி எல்லாம் உண்டு? 4ஸ்டேஷன் தள்ளிபோயித்தான் வண்டி நின்னுது.என்கிட்ட அந்தஸ்டேஷன். வரை டிக்கெட் இல்லை. டி, டி,ஆர் பிடிச்சா என்னபண்ணனு மனசிலகொஞ்சம் படபடப்பு. வேக வேகமா வெளில வந்து ஆட்டோ பிடிச்சு 300 ரூபா கொடுத்து பொண்ணுவீடு போயி பூஜைலெ கலந்துண்டு வந்தேன்.

அக்டோபர்

என் வீட்டுக்காரர் அக்டோபர்2-ம் தேதிதான் இந்த உலகத்தை விட்டு மறைந்த நாள். அன்றுபூராவும்உண்ணா விரதமும், மௌன விரதமும் இருப்பேன். 10 வருஷமாச்சு. மேக்சிமம் டைம் கம்ப்யூட்டரில்தான். அக்கம் பக்கம் கூட ஏன் ஆண்டி வயசானவ்ங்க கோவில் பூஜைன்னுதானே இருப்பாங்க. நீங்கஅதெல்லாம் பண்ணாம கம்ப்யூட்டர்லயே இருக்கீங்களேன்னு வம்பு பேச வருவாங்க. கண்டுக்கவேமாட்டேன் பதிலும்சொல்ல மாட்டேன்.னான் உண்டு, என் வேலை உண்டுன்னு யாருக்கும் எந்ததொந்திரவும் கொடுக்காம இருக்கேனே, அதுவே பெரிய விஷயமில்லையா.அனாவசிய கேள்விக்கெல்லாம்யாருக்கும் என்னிடம் பதில் கிடையாது.

நவம்பர்

தீபாவளி மாசமாச்சே. ஸௌத்தி லிருக்கும் மகன் மருமகள், பேரன் எல்லாரும் வந்தார்கள். அவர்கள்வரும் முன்பே 4 வித ஸ்வீட், 4 வித காரம் எல்லாம் தயார் பண்ணி வச்சிருந்தேன். 15 நாள் இருந்தாஅவர்களுடன் ஷீரடி,சனி சிங்கனாபூர் எல்லாம்சுற்றிட்டு வந்தேன். மும்பையிலேயே இருக்கும் மகன்மகள் வீடு போய் வந்தோம். குழந்தைகள் கூட இருந்ததால டைம் போனதே தெரியலை வேகமா போச்சு.விண்டரும் லேசாக தொடங்கி விட்டது.

டிசம்பர்

வீட்ல கொஞ்சம் ரிப்பேர் வேலைக்கு ஆட்களை வர சொல்லி இருந்தேன். 10 நாட்கள்வேலைஇருந்தது. அப்படி பொழுது பிசிதான். அப்படியா டைரி தொடரை கம்ப்ளீட் பண்ணிட்டேன்.ஆனா நிறைய பர்சனல் தான். அதை தவிற்கவே முடியலியே. கிறிஸ்மஸூக்கு மறுமகளுக்குகோவா வுக்கு விஷ் பண்ணினேன். பெரிய பதிவா ஆயிடுத்து. (சாரி)

32 comments:

Madhavan Srinivasagopalan said...

மாதவாரியா.. சூப்பர சொல்லி இருக்கீங்க..
நல்ல பதிவு

Lakshmi said...

மாதவா முதல் பின்னூட்டம். நன்றி.

எல் கே said...

ஹ்ம்ம் அருமைய சொல்லி இருக்கீன்கமா

Lakshmi said...

நன்றி கார்த்திக்.

அமுதா கிருஷ்ணா said...

ம்ம்.உங்களை நினைச்சா சந்தோஷமா இருக்கு மேடம்.பதிவும் நல்லா இருக்கு.

மகாதேவன்-V.K said...

அருமையம்மா

மகாதேவன்-V.K said...

உங்களது அனைத்து பதிவுகளையும் மேலோட்டமாக இன்றுதான் பார்த்தேன் கொஞ்சம் நேரம் எடுத்து படிக்க வேண்டியுள்ளது வருகிறேன் விரைவில்.
தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் ஆக்கங்களை உங்கள் பாதையில்

Lakshmi said...

அமுதா வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

மகாதேவன் வாங்க வருகைக்கு நன்றி. எல்லா பதிவையும் படிச்சு கருத்து சொல்லுங்க.

அந்நியன் 2 said...

//இமிக்ரேஷனைல் நீங்க ஆப்ரிக்கால்லேந்துதனேவரீங்க...பெட்டிதங்கமோ,!!!!!!!!!!!!!!வைரமோ!!!!!!!!!!!!!!!!
கொண்டுவந்திருக்கீங்களான்னு பெட்டியெல்லாம்கொட்டி தலைகீழா ஓவரா குடைச்சல் கொடுத்துட்டாங்க. எல்லா கிளியரென்சும் முடிந்து //

கொஞ்ச நப்பாசைதான் அப்படி கொட்டி குழுக்கும்போது ஒரு அஞ்சு பத்தோ தரையில் விழுகாதா என்று...வைரம் தங்கம் கடத்துபவன்லாம் பச்சை சிக்னலில் போயிக் கொண்டு இருப்பான் கம்பூண்டி வர்றவர் கண் தெரியாமல் நடப்பவர்,கால் இல்லாமல் வண்டியில் வருபவரிடம் ரொம்பத்தான் கொடைவார்கள் நம்ம அதிகாரிகள் இருந்த போதிலும் மூன்று மணி நேர சோதனைக்கு பிறகாவது உங்களை விட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்மா..டைரி என்னமோ ஒரு நாவலைப் படித்த மாதுரி இருக்கு முடிஞ்சால் உங்கள் பழைய காலத்து அதாவது உங்களின் பள்ளி படிப்பு நேரத்தில் நடந்த சம்பவங்களை எழுதினால் நாங்களும் தெரிஞ்சுக்குவோம்.

வாழ்த்துக்கள்.

அரசன் said...

அருமையா சொல்லி இருக்கீங்க அம்மா ....

Lakshmi said...

அ ந் நியன் உங்க பாராட்டு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நான் என் பள்ளிப்பருவத்தைபற்றியும் எழுத தயார்தான் ஆனா பள்ளிக்கே போலியே:))))

Lakshmi said...

ஆஹா என்ப்ளாக்குக்கு அரசன் எல்லாம் வந்துருக்காங்க. வருக, வருக.

ஸாதிகா said...

lakshmiமேம் உங்கள் டைரியைப்படிக்கறச்சே சந்தோஷமாக இருந்தது.பெரிய பதிவுன்னாலும் எழுத்து நடையும்,சொன்ன விதமும் வெகு சுவாரஸ்யம்.

Lakshmi said...

ஸாதிகா நன்றிம்மா. என் எல்லா பதிவுகளும் படிச்சு பின்னூட்டமும் கொடுக்கிரீர்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

மாணவன் said...

நடந்த நிகழ்வுகளை மிக யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் பதிவு செஞ்சீருக்கீங்கம்மா அருமை
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா
நன்றி

ஆமினா said...

எழுத்துல நகைச்சுவை கூடிட்டே போகுது

கலக்குங்க

Lakshmi said...

நன்றி மாணவன். அடிக்கடி வாங்க.

Lakshmi said...

ஆமி வருகைக்கு நன்றிம்மா.

தக்குடு said...

//னான் உண்டு, என் வேலை உண்டுன்னு யாருக்கும் எந்ததொந்திரவும் கொடுக்காம இருக்கேனே, //

தக்குடு மாதிரி இல்லையா??..:))

Lakshmi said...

ஹா, ஹா, ஹா, என்ன கிண்டலா?

பலே பிரபு said...

அருமை அம்மா!!

//ஆனா பள்ளிக்கே போலியே//

பள்ளிக்கு போன எல்லோரும் இப்படி நல்ல எழுத்துக்களை தரமுடியுமா என்று தெரியவில்லை.

அந்த காலத்தில் பெண்ணுக்கு அடக்கு முறை அதிகம் என்று நான் கேள்விப் பட்டுள்ளேன். எப்படி நீங்கள் இத்தனையும் கற்றுக் கொண்டீர்கள்?? கூறினால் நிறைய பேருக்கு (பெண்களுக்கு ) தன்னம்பிக்கை தரும் ஒரு விசயமாக இருக்கும்.

வெங்கட் நாகராஜ் said...

டைரிக் குறிப்பு - அருமை. வருடம் முழுவதும் உங்களுடன் வந்தது போல இருந்தது. நன்றி.

Lakshmi said...

ஆமா பிரபு என் அனுபவங்கள் பலருக்கும் பயன் படும் என்றால் எழ்தலாம்தான். முயற்சி செய்கிரேன். ஐடியா கொடுத்தற்கு நன்றிப்பா.

Lakshmi said...

ஆஹா, வெங்கட் பாராட்டுக்கு மிகவும் நன்றி.

பாரத்... பாரதி... said...

கடந்த சில நாட்களாக தங்களின் வலைப்பூவிற்கு வரமுடிய வில்லை. மன்னிக்க வேண்டுகிறோம்..இப்போது எல்லாவற்றையும் படிச்சாச்சு..

பாரத்... பாரதி... said...

உங்களுடைய இந்த ஒரு வருட டைரிக்குறிப்பு ஒரு உலக சுற்றுலா போன மாதிரி இருந்தது. இன்றைய மனிதர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருக்கிறீர்கள். உங்களை தொடர் பதிவெழுத அழைத்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்...
நன்றிகள் ஆயிரம்.

Lakshmi said...

நீங்க தொடர்பதிவுக்கு அழைத்ததாலதானே என்னைப்பற்றி இவ்வளவு தெரிஞ்சுக்க முடிந்தது இல்லியா. அதனால உங்களுக்குத்தான்
நன்றி சொல்லனும்.

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா
அருமையான பக்கம்
உங்களை பற்றி அறிந்ததில் மகிஷ்சி

அந்த சூடானி பெண்கள் தலை முடி இங்கும் நான் அடிக்கடி பார்ப்பேன்.

எப்படி தான் நேரம் எடுத்து போடுகீறார்கலாஓ
ஒரு எப்படி போடுவீங்கன்னு கேட்டதுக்கு நேர என் தலைய வா பிண்ணி விடுரேன் வந்துட்டாங்க

எம்மா வேண்டாம்பா, இருக்கிற சில்கி ஹேரில் அந்த பின்னல போட்ட அவ்வள்வு தான்

மாதம் ஒரு முறை தான் வாஷ் பண்ணுவாங்கலாம்

Lakshmi said...

ஜலீலா வெல்கம். இப்பதான் இங்க வரீங்களா? பாராட்டுக்கு நன்றிம்மா.

goma said...

டைரின்னா இது டைரி

Lakshmi said...

ஓ, ஓ, பாராட்டுக்கு நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .