Google+ Followers

Pages

Friday, February 4, 2011

நொறுக்ஸ்நொறுக்ஸ்


இந்தப்பதிவில் ஹிந்தி தெர்யாம வாங்கின அசட்டுப்பட்டம் பற்றி.
கல்யாணம் ஆகி பூனா வந்து ஒருமாசம் ஆகியிருக்கும். ஹிந்தி,
மராட்டின்னுல்லாம் ஒரு பாஷை இருக்குன்னே தெரியாது.ஒரு மாலை
நேரம் அவர்களுக்கெல்லாம் காபி குடுத்துட்டு பேசிண்டு இருந்தோம்.
வாசலில் பழ வண்டிக்காரன் போனான். இங்கு பெரியவர்கள் இரவு
சாப்பாட்டுக்குப்பின் தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.
என் வீட்டுக்காரர், லஷ்மி வாசல்ல பழக்காரன் போரான் பாரு ஒரு
டசன் பழம் வாங்கிண்டு வான்னு சொல்லி மூன்று ரூபாய்கள் தந்தார்.பழத்துக்கு என்ன சொல்லனும்? என்ரேன். கேலா க்யாபாவ் அப்படின்னு
கேளுன்னார். சரின்னு போனேன். ரோட்டிலிருந்து எங்க வீடுகொஞ்சம்
உள்ளே தள்ளி இருந்தது. ரெண்டு பழ வண்டிக்காரன் இருந்தார்கள். அக்கம்
பக்கம் உள்ள வீடு களில் இருந்த பெண்கள் 4, 5 பேர்கள் ப்ழம் வாங்க வந்தி
ருந்தார்கள். சரி அவங்க எப்படி பேசி வாங்கராங்கன்னு கொஞ்ச நேரம் ஓரமா
ஒதுங்கி நின்னு பாத்தேன. பழக்காரன் ஒரு விலை சொல்ல மற்றபெண்கள் அவனிடம் கையைக்கையை ஆட்டி வேகமா என்னமோ பேசினார்கள். சரி பேரம் பேசராங்க போலிருக்குன்னு அவங்க பேசுவதை உன்னிப்பாககவனித்தேன். சரி நாமும்அவன் சொன்ன விலை கொடுக்காம பேரம் பேசனும்னு நினைச்சேன். அவன் என்னிடம்மேம்சாப் என்ன என்ரான். நான் கேலா க்யா பாவ் என்ரேன். டேட் ரூப்யா என்ரான். நானோ

அரே பாப்ரே, டேட் ரூப்யாவா, பகுத் ஜாதா போல்தெஹோ( மற்றவர்கள் பேசும்போது கவனித்தஹிந்தி) நை, நை, மை,தீன் ரூயா தூங்கி, என்ரேன். அவன் என்னை மேலும் கீழும் பாத்துட்டுநை, நை, ஜாவ் அப்படின்னுட்டான். எனக்கு ஷேமா ஆச்சு. இன்னொரு வண்டிக்காரனிடம் போனேன்,
அவனிடம் மூணு ரூபாவைக்கொடுத்து ஏக் டசன் தோ என்ரேன். அவன் பழமும் தந்து பாக்கி சில்லரையாக ஒன்னரை ரூபாயும் தந்தான். எனக்கு அவனைப்பர்த்து சிரிப்பா வந்தது. சரியான அசடா இருக்கானே
பழத்தையும் தந்து சில்லரையும் தரானேன்னு நினைச்சுண்டே வீட்டுக்குள் போனேன்.எல்லாரிடமும்பழ வண்டிக்காரனிடம் எப்படி பேரம் பேசினேன், அவன் ஏன் என்னை ஜாவ், ஜாவ்னு விரட்டினான்என்று கணவரிடம் கேட்டேன்.அவர் கொஞ்ச சிரிச்சுட்டு அச்டே அவன் ஒரு டசன் கேலா ஒன்னரை
ரூபா”(டேட்)” என்று சொல்லி யிருக்கான். ஆனா நீயோ அதெல்லாம் நா ஒன்னரை ரூபால்லாம் தரமாட்டேன் தீன்”(3)” ரூபாதான் தருவேன்னு சமத்தா சொல்லியிருக்கே. அவன் முறைக்காம வேறஎன்ன
செய்வான். இன்னொருவன் ஒன்னும் அசடு கிடையாது பழத்தோடு விலை போக பாக்கி தந்திருக்கான்அவ்வளவுதான்.என்று சொல்லவும் எனக்கே ரொம்ப வெக்கமா போச்சு.

66 comments:

வசந்தா நடேசன் said...

படித்துவிட்டு வாய்வலிக்க சிரித்தேன், எனக்கும் ஹிந்தி தெரியும்.. அதனால், என்ன செய்ய நம் கழகங்களின் ஆட்சியால் நாம் இந்த கஷ்ட்டங்களை அனுபவித்தோம் அல்லது சிலர் இன்றும்
அனுபவிக்கிறார்கள் என்று சொல்லலாம்..
பகிர்ந்தமைக்கு நன்றி, அருமை. எல்லோரும் ஹிந்தி படிக்கவேண்டும் என்பதே என் ஆசை.

கோவை2தில்லி said...

அடடா! இப்படி ஆகி போனதா!
எனக்கும் இது போல் இந்தி பேசி திணறிய அனுபவங்கள் இருக்கும்மா.

எல் கே said...

ஹஹஹாஹ் செம காமெடிதான்...

பலே பிரபு said...

நல்ல சிரிப்பான அனுபவம். அருமை அம்மா. தொடர்ந்து எழுதுங்கள்!!!

கணேஷ் said...

பேரம் பேசும் பழக்கம் இல்லை..ஆனால் தொடக்கத்தில் பிரச்சினை இருந்தது..10,20 ,30 இந்த மாதிரி முழு எண்களுக்கு ஹிந்தி தெரியும்,ஆனால் இடையில் ஏதாவது சொன்னால் தெரியாது..

கணிப்பில் நூறு ரூபாய்க்குள் இருந்தால் 100 கொடுத்து விட்டு மீதி சில்லறையை எண்ணி அதன் சரியான விலையை தெரிந்துகொள்வேன்))))

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர்ம்மா..இன்னும் அசடானதை எதிர்ப்பார்க்கிறோம்.

Madhavan Srinivasagopalan said...

'டெட்' (ஒன்னரை) என்பதை -- நீங்க 'தீட்' னு சொன்னதால மொதல்ல கண்டுபிடிக்க முடியலை.. இல்லீனா புரிஞ்சிருக்கும் ஆரம்பத்திலேயே..

எழுதும் முறை நன்றாக இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்க.. .

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

துளசி கோபால் said...

ஹாஹா......


இது நம்ம ஸாடே தோ ருப்யா மாதிரி இருக்கே:-)))))

raji said...

மொழி தெரியாத இடங்களுக்கு செல்லும் பொழுது
இது போன்ற வேடிக்கைகள் நடப்பதுண்டு.
நானும் இது போல் அனுபவித்திருக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி

asiya omar said...

லஷ்மிமா நல்லாயிருக்கு வாழைப்பழ அனுபவம்,செந்தில் கவுண்டமணி வாழைப்பழ காமெடி தான் நினைவு வருது.

அந்நியன் 2 said...

ஹ..ஹா..உங்களின் பழம் கதை பழங்கதையாக இருந்தாலும் படிப்பதற்கு அருமையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கு மாம்..

வாழ்த்துக்கள் !

Mahi said...

ஹிந்தி நம்பர்ஸ் எப்பவுமே எனக்கு தடுமாற்றம்தான்! :)

பழைய நினைவுகளை அழகா சொல்லறீங்க!

Lakshmi said...

வசந்தா நடேசன் வருகைக்கு நன்றி. ஹிந்தி மட்டுமில்லை தமிழ் கூடவே நாலு பாஷைகளும் தெரிந்திருப்பது நல்லது.

Lakshmi said...

கோவை2தில்லி, நான் மட்டும் தான் பாஷை தெரியாம அசட்டுப்பட்டம் வாங்கிண்டேன் என்ரால் எனக்குத்துணையாக நிறயா பேரும் இருக்கீங்களே.

Lakshmi said...

ஆமா, கார்த்தி செமை காமெடிதன்.பாஷை படுத்தும் பாடு.

Lakshmi said...

பிரபு, வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

Lakshmi said...

ஓ, இந்த அவஸ்தைகள் எல்லாருமே அனுபவித்திருக்கீங்களா? அப்போ நா எழுதியதை நன்னாவே புரிஞ்சுக்க முடியும் தான்,கணேஷ்.

Lakshmi said...

அமுதா, நான் அசடாவ்து அவ்வளவு சந்தோஷமா இருக்கா? நீங்க இப்படி அசடானதுல்லாம் இல்லியா?

Lakshmi said...

மாதவா. சாடே தோ மட்டுமில்லை அதில் சாடே ஏக்கும் சேர்த்துக்கோங்க,
ஹிந்தி தெரியாத நேரம் டேட் சொல்ல தெரியல அதான் தீட் சொன்னேன்.
அதுவே ஆடீச். டை ரூப்யா அதுவும் குழப்பம்தான்

Lakshmi said...

பாரத் பாரதி, வணக்கங்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் பின்னே வாக்குக்கும் மிகவும் நன்றிகள்.அடிக்கடி வாங்க.

Lakshmi said...

துளசி கோபால், சாடே தோ ருப்யா, சாடே ஏக் ரூப்யா ஆடே ரூப்யா, டை ரூப்யா இப்பவும் காமெடிதான்.

Lakshmi said...

ராஜி, அசடாவதில் என்பின்னாடி இவ்வளவு பேரு இருக்கீங்களா? சந்தோஷம்.

Lakshmi said...

ஆஸியா, வர்கைக்கு நறிம்மா.

Lakshmi said...

அ ந் நியன்2 வருகைக்கும் ரசித்ததற்கும் பாராட்டுக்கும் நன்றி

Lakshmi said...

மஹி, வருகைக்கு நன்றிம்மா.

வெங்கட் நாகராஜ் said...

டேட், டை, சவா [ஒண்ணே கால்] எல்லாமே பிரச்சனைதான்!! நல்ல நகைச்சுவையோட சொல்லி இருக்கீங்க அம்மா. இரண்டே கால், மூணே கால் ஆகியவற்றை ”சவா தோ, சவா தீன்” என்று சொன்னாலும், ஒண்ணேகாலை வெறுமே “சவா” என்றே சொல்லுவாங்க!!!

Lakshmi said...

வெங்கட் அதானே பிரச்சனையே.அதுவும் மராட்டியும் கலக்கும் போது இன்னும் காமெடி ஆகும். பச்சாஸ் ஹிந்தில 50, மராட்டில பன்னாஸ், ஸௌ, ஹிந்தில 100, மராட்டில சம்பர்.

Lakshmi said...
This comment has been removed by the author.
Lakshmi said...
This comment has been removed by the author.
அன்புடன் மலிக்கா said...

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

அன்புடன் மலிக்கா said...

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

raji said...

அன்பு லக்ஷ்மி அம்மாவிற்கு,
தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்
வாழ்த்துக்கள்(வாழ்த்த வயதில்லை,அன்பினால் கூறுகிறேன்)

asiya omar said...

உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.html

ஸாதிகா said...

தமாஷான அனுபவம்தான்.

Lakshmi said...

அன்புடன் மலிக்கா, என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு
மிகவும் நன்றிம்மா. எனக்கு இன்னும் நிறையா ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பார்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு

Lakshmi said...

ராஜி, தகவ்லுக்கு நன்றிம்மா.

Lakshmi said...

ஸாதிகா, வருகைக்கு நன்றிம்மா.

ஹேமா said...

வாழ்வின் சுவாரசஸ்யமான நேரங்களை மீட்டி எடுத்து எங்களையும் சிரிக்க வைக்கிறீங்க அம்மா.சந்தோஷம் !

Lakshmi said...

ஹேமா, வருகைக்கு நன்றிம்மா.

எல் கே said...

நீங்களாவது வியாபாரியிடம்... நான் வாடிக்கையாளர்களிடம்தான் தப்பு தப்பா பேசி கத்துகிட்டேன்

Lakshmi said...

கார்த்தி தப்பா பேசினாத்தானே எது சரின்னு தெரிய வருது.

ஆயிஷா said...

அருமையாக இருக்குமா.வாழ்த்துக்கள் !

Jaleela Kamal said...

ஒரேஎ சிரிப்பு நான் ஹிந்தி கத்துண்டது நினைவுக்கு வந்து விட்டது.

கோமதி அரசு said...

இந்தி கற்றுக் கொண்ட அனுபவங்கள் அருமை.

RVS said...

ரசித்து படித்தேன். நன்றாக இருந்தது.
அரைகுறை தமிழ், ஆங்கிலம் தவிர எனக்கு வேற எந்த லாங்குவேஜும் நஹி மாலும் ஹை.... ;-) ;-)

Lakshmi said...

ஆயிஷா, வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

ஜலீலா, வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

ஆர் வி எஸ், வருகைக்கு நன்றி.சீக்கிரமே நாலு பாஷை கத்துக்கோங்க. உபயோகப்படும்.

Lakshminarayanan said...

பாஷை படுத்தும் பாடு - ஆஹாஹ்..இதைப் போல் எனக்கும் ஓர் அனுபவம் உண்டு...விரைவில் எழுதுகிறேன்...

Lakshmi said...

வாங்க, லஷ்மி நாராயன். சீக்கிரமே உங்க பதிவையும் எழ்துங்க.

sakthistudycentre-கருன் said...

Lakshmi சொன்னது…

இவ்வளவுதூரம் கனவுக்கவிதை எழுத எவ்வளவு நேரம் தூங்கனும்?
////

என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

Lakshmi said...

என்னங்க பெரிய வார்த்தைலாம் சொல்லிகிட்டு நானும் உங்க எல்லார் பக்கமும் அடிக்கடி வந்து ஏதானும் கருத்துக்களை சொல்லிகிட்டேதான் இருப்பேன். இதுல மறக்கவோ, நினைக்கவோ என்ன இருக்கு?

அன்னு said...

nanum padiththavudan yosithen, en ivanga athiga vilaiya solranggannu. naanthan thappa padichittenonnu santhgam vanthathu. parththaa neenga pichu uthariyirukkaringa amma.

aana antha motha vandikaaran enna ninachiruppaan... moziye theriyalai, peram pesa mattum ponnunga redinnu...ha..ha...ha... sari comedy.

Lakshmi said...

அன்னு வருகைக்கு நன்றிம்மா. ரொம்ப வருஷம் பாஷை தெரியாம இதுபோல சின்னச்சின்ன அவஸ்தைகள் நிறையாவே உண்டு.

யாழ். நிதர்சனன் said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி
முதல் முதலில் கருத்து சொல்லியிருக்கிறீர்கள்
தொடர்ந்து பாருங்கள் தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
http://tamilaaran.blogspot.com/

யாழ். நிதர்சனன் said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி
முதல் முதலில் கருத்து சொல்லியிருக்கிறீர்கள்
தொடர்ந்து பாருங்கள் தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
http://tamilaaran.blogspot.com/

யாழ். நிதர்சனன் said...

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி
முதல் முதலில் கருத்து சொல்லியிருக்கிறீர்கள்
தொடர்ந்து பாருங்கள் தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
http://tamilaaran.blogspot.com/

Lakshmi said...

யாழ். நிதர்சனன். வருகைக்கு நன்றி.
நானும் உங்க பக்கம் அடிக்கடி வரேன்.

ம.தி.சுதா said...

அம்மா நம்மளுக்கு கிரிக்கேட் சம்பந்தப்பட்ட ஒரு சில சொல்லோட மட்டும் சரி..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

Lakshmi said...

ம.தி. சுதா வாங்க, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க வருகைக்கு நன்றி

Gopi Ramamoorthy said...

:-)

அமைதிச்சாரல் said...

எங்கூட்டு ரங்க்ஸுக்கும் இப்படித்தான் சாடே ஏக், சாடே தோ.. தான். ஒரு நாள் ஆபீசிலிருந்து போன் பண்ணார்.

'ரெண்டரைக்கு என்னன்னு சொல்லணும்'

'டாய்..'

'என்னாது!!..'

'ஐயையோ.. நான் திட்டலை. ரெண்டரையை அப்படித்தான் சொல்லணும்'

அப்றம் வீட்டுக்கு வந்தப்புறம், சவா ஏக், டாய், பாவ்னா தீன்,ச்சார்,பாஞ்ச்... எல்லாம் சொல்லிக்கொடுத்தேன். ஆனாலும் சிலசமயம் மெனக்கெட்டு எனக்கு போன்செஞ்சு உறுதிப்படுத்திக்குவார் :-)))))))

Lakshmi said...

அமைதிச்சாரல் பின்னூடத்திலும்
இவ்வளவு காமெடியா சொல்லமுடியுமா?
சூப்பர். இப்ப நிலமை எப்படி?

Lakshmi said...

கோபி வாங்க அடிக்கடி.

இராஜராஜேஸ்வரி said...

அருமை பகிர்ந்தமைக்கு நன்றி,

என்னை ஆதரிப்பவர்கள் . .