Google+ Followers

Pages

Saturday, February 12, 2011

நொறுக்ஸ்(5)
நொறுக்ஸ்(5)


நான் மத்தபாஷைங்க தெரியாம அசட்டுப்பட்டம் கட்டிண்டேன்னா
என் பசங்க தமிழ் தெரியாம படுதின காமெடி இன்னும் அதிகம்.
என் தங்கயின் கல்யாணம் எங்க கிராமத்தில் இருந்தது. நானும் அவரும்
எங்க 5 குழந்தைகளுடன் ஒருவாரம் முன்பே போனோம். வீடு நிறையா
சொந்தக்காரங்க நிறம்பி, வீடு ஒரே கல, கலப்பா இருந்தது. கிராமத்து வீடு
விஸ்தாரத்துக்கு கேக்கனுமா?அதுவும் எங்க வீடு ஏழு மாடிகளைக்கொண்டது.
அடுத்தடுத்து நான்கு வீடுகளும் எங்களோடதுதான்.குழந்தைகள் கும்மாளம்
அடிக்க கேக்கனுமா? என் அம்மா 32-வயடிலேயே என்குழந்தைகளால் பாட்டி
ஆகிட்டாங்க அதனால என்பசங்ககிட்ட என்னை பாட்டின்னு கூப்பிடக்கூடாது
அம்மம்மானு சொல்லுங்க இல்லைனா மாப்பிள்ளை( என்னவர்) கூப்பிடுவது
போல மாமின்னுதான் கூப்பிடனும்னு.சொல்லி வச்சிருந்தா.குழந்தைகளும்
சில சமயம் அம்மம்மான்னும், சில சமயம் மாமின்னும் கூப்பிடுவாங்க. பின்னால

பெரிய நிலா முற்றம் ஒன்று இருக்கும் .இரவுகளில் பெரிய மாக்கல் சட்டியில்
சாதம் பிசைந்து எல்லாரையும் வட்டமாக உக்காரவச்சு கையில் போடுவாங்க.
எனக்கும் குழந்தைகளுக்கும், ஏன், என்வீட்டூக்காரருக்குமே கையை நீட்டிண்டு
வட்டமா உக்காந்து சாப்பிட ரொம்பவே பிடிக்கும்.அப்படித்தான் ஒரு இரவில்
அம்மா சாதம் பிசைய சாதம் தயிர் சாம்பார் பொரியல் எல்லாம் எடுத்துவந்து
உக்காந்தா. மாக்கல் சட்டி கொண்டு வர மறந்துட்டா. என் பசங்களிடம்ஏய்குழன்தைகளா பட்டாசாலையில் ”மாக்கசட்டி” இருக்கு. கொண்டு வாங்கோன்னா.அவர்கள்நேரா பட்டாசாலைக்கு போகாம துணிகாயப்போடும் களத்துக்கு போயி தேடிக்கொண்டிருந்தார்கள். அம்மா என்னிடம் என்ண்டி இது மாக்கசட்டி கொண்டுவர இத்தரை நேரமாநீ போயிப்பாருன்னா. நான் பட்டா சாலைக்குப்போயிப்பாத்தா யாருமே அங்க கானோம்பின்னாடி களத்திலேந்து சத்தம் வந்தது. இங்க என்னபண்ரதுகள், என்று போய்ப்பார்த்தேன்.
5-பேரும் வாயைப்பொத்தினு சிரிச்சுண்டே துணிகாயும் கொடியிலிருந்து ஒவ்வொரு ஜட்டியாஎடுத்துப்பாத்து இதுவா, இதுவான்னு சிரிச்சுண்டு இருந்தா. ஏய், இங்க என்னாடி பன்ரீங்க. அங்கஅம்மம்மா, காத்துகிட்டு இருக்காங்க வாங்கன்னு அவங்களக்கூட்டிண்டு பட்டாசாலையில் இருந்த
மாக்கல் ச்ட்டியுமெடுத்துண்டு போனேன்.சாப்பிட ஆரம்பித்ததும் மத்த உறவுக்காரக்குழந்தை,பெரியவா எல்லாரும் கையை நீட்டிண்டு உக்காந்துட்டா. என் அம்மா என் பசங்களிடம் என்னடா பண்ணினீங்கமாக்கசட்டி கொண்டுவர ஏன் நேரமாச்சுன்னா. அம்மம்மா, கொடி பூரா தேடிப்பாத்துட்டோம் கிடைக்கவே
இல்லியே என்று அப்பாவிகளாகச்சொன்னார்கள். கொடில தேடினீங்களா.என்னடா சொல்ரீங்கன்னா.மாக்கா ஜட்டி சொன்னீங்க. அம்மம்மா கூட ஜட்டில்லாம் போடுவாங்களான்னு நினைச்சுண்டேதேடினோம் என்றார்கள். எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சாதம் புரையேற சிரிப்பே வந்துடுத்து,எப்படி அம்மாகிட்ட சொல்ரதுன்னு யோசனை. அம்மாவோ விடாம என்னாச்சுடீன்னு கேக்கரா.அதுவந்தும்மா நீ சொன்னதை குழந்தைக ஹிந்தில புரிஞ்சுண்டாங்க.அதாவது,,,,,,,,,,,,,,மாக்காசட்டிஹிந்தில அம்மாவோட ஜட்டினு அர்த்தம் வரும்மா.அதான் அப்படி புரிஞ்சுண்டு கொடிகள்ல தேடினா.
எனம்மாவுடன் சேர்ந்து மத்த உறவினர்களும் பெரிதாக சிரித்துவிட்டார்கள்.
        (take   is    easy&     just  for  fun)

41 comments:

sakthistudycentre-கருன் said...

சொல்ல வந்த விசயத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லியிருக்கீங்க....

sakthistudycentre-கருன் said...

தமிழ்மணத்தில் உங்க ஓட்டு போட்டு போணி பன்னுங்க..

sakthistudycentre-கருன் said...

நறுக்குனு 3 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு.. Ulavu????

வசந்தா நடேசன் said...

குழந்தைகள் தமிழ் படிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் பதிவு, வாழ்த்துக்கள்.

எல் கே said...

நல்ல வேடிக்கைதான். என் பெரியபாட்டி வீட்டில் மாமா பசங்க, சித்தி பொண்ணுங்க கூட இருந்தது நினைவுக்கு வருது

கோவை2தில்லி said...

ரொம்ப நன்னாருக்கு அம்மா. சிரிப்பை அடக்க முடியலை. என் மகளும் ”பன்னி”, ”காக்கா”, “பாட்டி” இதெல்லாத்துக்கும் ஹிந்தியிலயா தமிழ்லயான்னு கேட்டு குழம்பிப்பா.

ஹிந்தி தெரியாதவங்களுக்காக – பன்னி – பிளாஸ்டிக் கவர்
காக்கா – சின்ன குழந்தை
பாட்டி – TWO TOILET

raji said...

சரியா போச்சு போங்க.
படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்

Madhavan Srinivasagopalan said...

சப் மா கி ஆசீர்வாத்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நகைச்சுவை. ஒரு பாஷையில் நல்ல அர்த்தம் வரும் வார்த்தை, வேறு மொழியில் கேட்கும்போது அனர்த்தமாகி விடுகிறது. தமிழில் இருக்கும் பல வார்த்தைகளுக்கு ஹிந்தியில் அர்த்தமே வேறு என்பதுபோல! பகிர்வுக்கு மிக்க நன்றிம்மா.

யாதவன் said...

நிலா சோறு குடும்பத்துடன் சாப்பிடற அனுபவம் அஹா வாய் ஊறு

Sathish Kumar said...

பயங்கர காமெடி போங்க...! அசத்திட்டீங்க லஷ்மிம்மா...! அந்த நிலா முற்றத்துல வட்டமா உட்கார்ந்து சாப்படற விஷயம்... என்ன ஒரு அற்புதமான, வாழ்க்கை இல்ல அது. இப்பவும் அது போல உண்டா?

ஆமா... மாக்கல் சட்டி,பட்டாசாலை இதெல்லாம் என்னமா..?

ஸாதிகா said...

படித்துவிட்டு எங்களுக்கும் சிரிப்பு வந்தது.

அன்னு said...

aahaa... unga veetula ellaarum arivaali9ngala iruppaanga polirukke. hmm naamathaan paarththu irukkanum. aanaalum paavam avanga, antha sulnilaila. he he

GEETHA ACHAL said...

அருமையாக அழகாக எழுதி இருந்திங்க...

நானும் சிரிச்சேன்..நன்றி...

Jaleela Kamal said...

சிரிப்பு ந்னா சிரிப்பு அப்படி ஒரு சிரிப்பு

யாழ். நிதர்சனன் said...

நல்ல நகைச்சுவை
நன்றிம்மா

Ramesh said...

amma romba nanna irunkku neenga chonna vishayam. inda kalathile intha mathiri serthu ukkarrd chappitarthellam romaba rare. ithellam namba manathilirindu neengatha vishayum.

Lakshmi said...

சக்தி ஸ்டடி ஸெண்டர் கருன், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

வசந்தா நடேசன், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

கோவை2தில்லி உங்க ஜோக்கும் நல்லா இருக்கே.

Lakshmi said...

ராஜி நன்றிம்மா.

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

யாதவன் நிலாச்சோறு இப்ப எழுத்தில மட்டுமே இருக்கு.

Lakshmi said...

சதீஷ், வருகைக்கு நன்றி.இப்பல்லாம்
யாரும் சேர்ந்து கிராமத்துக்கு போவதே இல்லை. அப்புரம் எப்படி நிலா சாப்பாடு இருக்கும்?

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

அன்னு வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

கீதா ஆச்சல் வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

ஜலீலா கமல், வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

யாழ். நிதர்சனன்.வருகைக்கு நன்றி.

Lakshmi said...

சதீஷ் மாக்கல் சட்டின்னா, (உங்களுக்குப் புரியும்படி எப்படி சொல்ல?) நார்த்தங்கா, எலுமிச்சங்கா, நெல்லிக்கா, வடுமாங்கா ஊறுகாய்கள்
அந்த சட்டியில் வருஷாந்திரத்துக்கு போட்டு வைப்பாங்க கெட்டே போகாது.
ஒரு விதமான மாக்கல்லினால் ஆன வாய் அகலமான சட்டி.உள்பக்கம் வெள்ளை நிறத்திலும் வெளிப்பக்கம் கருப்பு நிறத்திலும் இருக்கும்.தயிர் சாதம் அதில் பிசைந்து கையில் போடும்போது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். பட்டாசாலை பத்தி எழுதினா ஒரு பெரிய பதிவு நீளத்துக்கு வரும். பின்னாடி எப்பவாவது சொல்ரேனே? ஓ, கே, வா?

எல் கே said...

சிறு வயதில் என் பெரிய பாட்டி (அம்மாவின் பெரியம்மா வீட்டில் ) மாமா/சித்தி பசங்களுடன் இருந்தது நினைவுக்கு வருது. அவங்களை நாங்க பெரிமானுதன்கூபிடுவோம் (பாட்டியா இருந்தாலும் அம்மா கூப்பிடறத பார்த்து )

எல் கே said...

nan sunday comment potten athu enga?

இராஜராஜேஸ்வரி said...

படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்
very interesting.

Lakshmi said...

ராஜ ராஜேஸ்வரி வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றிம்மா.

ஆயிஷா said...

நல்ல நகைச்சுவை. நன்றிம்மா.

Lakshmi said...

ஆயிஷா வருகைக்கு நன்றிம்மா.

சிவகுமாரன் said...

கட்டுப் ப்படுத்த முடியாமல் சிரித்தேன்.
நல்லா எழுதுறீங்க அம்மா

Lakshmi said...

வருகைக்கும், சிரிப்புக்கும் நன்றி சிவகுமாரன்

ரஹீம் கஸாலி said...

நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வருகை தரவும் .
http://blogintamil.blogspot.com/2011/02/5-saturday-in-valaichcharam-rahim.html

Lakshmi said...

ரஹீம் கஸாலி என்னை வலைச்சரத்தில்
அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.

என்னை ஆதரிப்பவர்கள் . .