Google+ Followers

Pages

Thursday, February 24, 2011

குழந்தை மனசு.

குழந்தை மனது.


என் பெரிய மகனின் மகன் என்பேரன் பிறக்கும்போதே சிறிய
குறைபாட்டுடன் பிறந்தான்.இப்போது அவனுக்கு 15 வயது ஆகிரது.
அவன்பேசுவது வீட்டில் உள்ளவர்களுக்குமட்டுமே புரிந்து கொள்ள
முடியும்படி இருக்கும். நான் ஒரு சமயம் அவர்கள் வீடுபோனேன்.
பேரன் என்னிடம் ஒரு நாள் பாட்டி எனக்கு இப்பவே முறுக்கு வேனும்
பண்ணிக்கொடுங்க என்ரான். வீட்ல அரிசி மாவு இல்லைடா, அப்பரமா
பண்ணித்தரேனே என்ரேன். அவன் கேட்பதற்கு ரெடி இல்லை. இப்பவே
வேனும், என்கிட்ட காசு கொடுங்க நா கடைக்குப்போயி அரிசி மாவு
வாங்கிண்டு வரேன்னான்.


மகனும் மருமகளும் வெளியே போயிருந்தார்கள். இந்தக்குழந்தை இப்பவெ
முறுக்கு வேனும்னு அடம் பிடிக்கரானே என்னபண்ணன்னு எனக்கு யோசனை
யா இருந்தது. இந்தக்குழந்தையை எப்படி கடைக்கு அனுப்ப என்று நினைத்தேன்.
அவனோ பிடிவாதமாக காசு கொடு நான் கடைக்குப்போரேன்னு அலட்டினான்.
சரின்னு காசு கொடுத்தேன். வீட்டுக்கு எதிரில் கொஞ்சம் தள்ளி ஒருகடை இருன்
தது. ரோடை க்ராஸ்பண்ணிபோகனும். அவன் போனதும் நானும் வெளியில் வந்துஅவன் கடைக்கு சரியாபோரானான்னு. பாத்துண்டே இருந்தேன். சரியாக போனான்.கடைக்காரரிடம் காசு கொடுத்து, என்னமோ கேட்டான். கடைக்காரரும் ஒரு பாக்கெட்கொடுத்து, மீதி சில்லரையும் கொடுத்தார்.


பேரன் பைக்குள்பார்த்துட்டு கையைக், கையை ஆட்டிக் கடைக்காரரிடம் என்னமோகேட்டான். இங்கேந்து அவங்க என்ன பேசிக்கராங்கன்னு புரியலை. 10 நிமிஷமா கடைக்காரரிடம் சண்டை போடுவதுபோல ப்பேசி கடைக்காரரைக் கையைப்பிடித்து வீட்டுக்கேகூட்டி வந்தான். என்னாச்சுப்பா, என்ரேன். பாட்டி இந்தகடைக்கார அண்ணாச்சி ரொம்ப மோசம்அவரைக்கோச்சிக்கோ. நான் சின்னப்பையன்னு என்னை ஏமாத்தராங்க ந்னு கோவமா சொன்னான்.
என்னாச்சு கடைக்காரரேன்னேன். ஏம்மா இந்த தம்பியை எல்லாம் கடைக்கு அனுப்பரீங்க?தம்பி ஒருகிலோ அரிசி மாவு கேட்டாங்க, நானும் கொடுத்து மீதி சில்லரையும் கொடுத்தேன்.உடனே தம்பி கோவமா என்கிட்ட அண்ணாச்சி நா உங்க கிட்ட அரிசி மாவு கேட்டேன். நீங்கமாவுமட்டும்தான் தந்தீங்க, அரிசி தராம என்னைய ஏமாத்திட்டீங்கன்னு அடம் பிடிக்கராரு.இப்படி கடைக்காரர் சொல்லவும் எனக்கும் அடக்க முடியாம சிரிப்பு வந்தது, நானும் கடைக்காரரும் சேர்ந்து சிரித்ததைப்பார்த்த பேரன் பாட்டி கடைக்காரரை கோச்சுக்கோன்னு சொன்னாநீயும் அவர்கூட சேந்து சிரிச்சு என்னைக்கேலி ப்ன்ரே. எனக்கு முறுக்கும் வேனாம் ஒன்னும் வேனாம்
என்று சொல்லி கோவமாபெட்ரூம்லபோயி கதவைச்சாத்திண்டுட்டான்.


ஐயோ இந்தக்குழந்தையை எப்படித்தான் சமாளிக்கராளோ பெத்தவங்க?

33 comments:

அந்நியன் 2 said...

எனக்கு இது ஒன்னும் சிரிப்பா தெரிய வில்லைமா அவனின் புத்தி கூர்மைதான் எனக்கு தெரிகின்றது.

கதையை எழுதறதுக்கு முன்னாடியே பேரனுக்கு ஒரு "குறை"என்றுவேறே சொல்லி விட்டிர்கள்.இருந்த போதிலும் அவர் கடைக்குப் போயி கடை காரரேயே வீட்டிற்கு கூட்டி வந்து விட்டார் பாராட்டுக்கள்.

அரிசி மாவு வாங்கிட்டு வரச்சொன்ன நீங்கள் கொஞ்சம் யோசிச்சு இருந்தால் முறுக்கே நீங்கள் சுடாமலும் தம்பியும் கோவிக்காமலும் இருந்திருப்பார்.

அரிசி இல்லாத காரணத்தினாலேதான் கடைக்காரர் வாக்குவாதம் பண்ணி இருக்கார்,அதே வேளையில் நீங்கள் முறுக்கு மாவு வாங்கி வரச் சொல்லி இருந்திர்கள் என்றால் தம்பிக்கு கிடைக்க வேண்டிய முறுக்கும் கிடைச்சுருக்கும்,மாவும் கிடைச்சுருக்கும்.

பரவா இல்லைமா படிக்க நல்லாத்தான் இருக்கின்றது வாழ்த்துக்கள்.

Lakshmi said...

அந்நியன்2 முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

Madhavan Srinivasagopalan said...

நல்ல (தமாஷான) அனுபவம்..

raji said...

தெளிவாய் இருக்கும் அந்த குழந்தையிடம்
குறை இருப்பதாக நான் நினைக்கவில்லை அம்மா.
இது எனது கருத்துதான்.தாங்கள் தயவு கூர்ந்து
தவறாக எண்ண வேண்டாம்

ஓட்ட வட நாராயணன் said...

ஹா....... ஹா....... நல்ல அனுபவம்தான்! சிறியவர்கள் அப்படித்தான்! அவர்களது கேள்விகளுக்கு பதில் சொல்ல தனியாகப் படிக்க வேண்டும்!!

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ராஜி, நீங்க சொல்வது சரிதான். அந்தக்குழந்தை சிறிது வித்யாசமாக
யோசிக்கிரான்.

Lakshmi said...

ஓட்ட வட நாராயன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

குறை இல்லாத குழந்தைக்கூட இப்படி யோசிக்கலாம் லக்‌ஷ்மிம்மா

வேடந்தாங்கல் - கருன் said...

ஐயோ இந்தக்குழந்தையை எப்படித்தான் சமாளிக்கராளோ பெத்தவங்க?///அதிலேயும் ஒரு சுகம் இருக்கும்மா...
என் குழந்தையின் சேட்டைகளை இரசிப்பவன் நான்..

அன்னு said...

படிக்க ஆரம்பிக்கும்போதிருந்த மௌனம், படித்து முடித்த பின் என்னையுமறியாமல் சிரிப்பாய் வெடித்தது. சில சமயங்களில் சில பிள்ளைகள் நம்மைவிட சூதானம்!!

கோவை2தில்லி said...

விவரமா தான் பேசறார். அப்புறம் முறுக்கு பண்ணித் தந்தீங்களா? இல்லையா?

Lakshmi said...

ஸாதிகா, வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றி.
குழந்தைகளின் சேட்டையை ரசிக்காதவர்களும் உண்டோ?

Lakshmi said...

அன்னு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

கோவை2தில்லி வீட்ல மாவு அரைக்கும்போது அவனிடம் அரிசிதான் மாவு ஆகிரது. அதனால அரிசி தனியா, மாவு தனியா இல்லைனு விளக்கினதுக்கு அப்பரம் தான் அவனுக்கு புரிந்தது.முறுக்குபண்ணிகொடுத்தேனே.

வெங்கட் நாகராஜ் said...

இப்படிப்பட்ட குழந்தைகள் நிறைய நேரங்களில் நம்மை விட புத்திசாலியாகத் தான் இருப்பார்கள். சில சமயங்களில்தான் குறைபாடு வெளியே தெரியும்.

Lakshmi said...

வெங்கட், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

♔ம.தி.சுதா♔ said...

அந்த முறுக்கால் தான் இந்த அக்கப்போரா ? சுட்டிப்பையனுங்க..

Lakshmi said...

ம.தி.சுதா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தவறு said...

நல்லாயிருக்கு லெஷ்மிஅம்மா..

இராஜராஜேஸ்வரி said...

குழந்தையின் பாஷையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

Nagasubramanian said...

உங்கள் வலை தளத்தின் பெயரைப் போல "குறை ஒன்றும் இல்லை" ங்க.

Lakshmi said...

தவறு, வருகைக்கு நன்றி.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

நாகசுப்ரமனியம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

asiya omar said...

நல்ல நகைச்சுவை.குழந்தைங்க தான் ஏமாந்துவிடக்கூடாது என்று எவ்வளவு உஷாராக இருக்காங்க.பாராட்டுக்கள்.

எல் கே said...

ஹஹஹா செம காமெடிதான்

Lakshmi said...

ஆசியா ஓமர், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

கார்த்தி, இப்பதான் வரீங்களா?ம்ம்ம்ம்.

Jaleela Kamal said...

அவனுக்கு அங்கு யோசிக்க தோனுச்சு பாருங்க.

Jaleela Kamal said...

அவனுக்கு அங்கு யோசிக்க தோனுச்சு பாருங்க.

Lakshmi said...

ஆமாங்க ஜலீலா.வருகைக்கு நன்றிங்க.

என்னை ஆதரிப்பவர்கள் . .