Google+ Followers

Pages

Saturday, February 19, 2011

நொருக்ஸ்(6)

நொறுக்ஸ்(6)


இந்த சம்பவமும் கிராமத்தில் தங்கை கல்யாணதுக்கு போனப்போ நடந்தது.
கிராம்த்ல லாம் கல்யாணமண்டபம் என்று தனியாக எல்லாம் கிடையாது.
வீட்டு வாசலில் தெருமுழுவதுமாக பந்தல் போட்டு வீட்டு வாசலில்தான்
கல்யாணம் நடத்துவார்கள். நாங்க போன அடுத்த நாள் குழந்தைகளுக்கு
டாய்லெட் போக வேண்டி இருந்தது.வீட்டின் பின் ஒரு ஒதுக்குப்புறம
இருந்தது. வாளியில் தண்ணி கொண்டு பின்னாடி பக்கமா போகச்சொன்னேன்.
அவர்களும் போன வேகத்திலேயே திரும்பி வந்தார்கள். என்னாச்சு? என்ரேன்
போ மம்மி, பெரிசு, பெரிசா 4 டாய்லெட் இருக்கு, நாங்கல்லாம் உக்காந்தா
உள்ளயே விழுந்துடுவோம். அவ்வளவு பெரிசா இருக்கு. அதுமட்டுமில்லை.
அதுமேல அழகா ரங்கோலில்லாம் போட்டு வச்சிருக்கா. எல்லாம் ஓபன் ப்ளேசுலஇருக்கு கதவே இல்லியே என்றார்கள்.


அவங்க என்ன சொல்ராங்கன்னே புரியலை. நானும்கூடப்போயி பாத்தேன். எனக்குசிரிப்பு தாங்கலை. கல்யாண சமையலுக்காக கோட்டை அடுப்பு தோண்டி, அதுக்குசிமிண்ட் பூச்செல்லாம் செய்து மேலாக கோலமும் போட்டு வச்சிருந்தாங்க. அந்தகளத்துமேடு தாண்டி இன்னும் பின்னாடி தான் டாய்லெட் இருந்தது. அவங்களுக்குஅதைக்காட்டிக்கொடுதுட்டு வந்தேன். ஏன் மம்மி இவ்வளவு பெரிய டாய்லெட்ல எப்படிபோவாங்க்ன்னு, கேள்வி, மேல கேள்வி கேட்டு தொளைச்சு எடுத்தாங்க. அப்ப்ரமாஅவங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டி இருந்தது. இது லக்டி கா ஸ்டவ்.அதாவதுவிறகு அடுப்பு இதில் தான் கல்யாணத்துக்கு சமையல் எல்லாம் செய்வாங்கன்னு
விளக்கமா சொன்னதும் அவங்களும் ரொம்ப  ரசித்து சிரிச்சாங்க
இதுவும் ஒரு காமெடிதான்.


என்பெரியபையன்கிராமத்லபோயித்தான்சைக்கிள்ஒட்டக்கத்துகிட்டான்.ஒருவாரத்தில்குரங்குபெடலிலிருந்து சீட்ல உக்காந்து ஓட்ட கத்துண்டான். எங்க போனாலும் சைக்கிள்தான்என் அம்மா அவனிடம் கடையில்போயி உப்பு வாங்கி வரச்சொன்னா. சைக்கிளில் வேகமாககிளம்பி போனான்.அரைமணி நேரம் கழித்து காலி கையுடன் வந்தான்.உப்பு எங்க? என்ரேன்
போம்மா, எல்லா கடை பேரும் தமிழ்ல எழுதியிருக்கு நான்பாட்டுக்கு மெடிசின் கடைல போயிஉப்பு கேட்டா என்னைக்கேலி செய்வாங்களே என்கிரான். தமிழ் படும் பாடு,.என் பையனிடம்

39 comments:

sakthistudycentre-கருன் said...

தங்களின் அனுபவம் நகைச்சுவையாக உள்ளது.. அருமை..அருமை..
நம்ம பக்கம் வந்து ரோம்ப நாளாச்சேம்மா?

Lakshmi said...

சக்தி வருகைக்கு நன்றி. இதோ உங்க பாக்கம் வரேன்.

Nagasubramanian said...

ஹா ஹா.

Madhavan Srinivasagopalan said...

அஹா. ரெண்டுமே சூப்பர்..

உங்ககிட்ட இன்னும் நெறைய காமெடியான மேட்டர்லாம் இருக்கும்போல.. ஒண்ணொண்ண எடுத்து விடுங்க.. நாங்க வெயிட்டிங்..

இராஜராஜேஸ்வரி said...

Adduppai parthankalaa??

தவறு said...

நிறைய கைவசம் வச்சிருக்கீங்க போலிருக்கு...நல்லா இருக்குங்க..

அமுதா கிருஷ்ணா said...

லக்டி கா ஸ்டவ் டாய்லெட் ஆக பாத்துச்சா..சரிதான்

கே. பி. ஜனா... said...

நல்ல தமாஷ்!

raji said...

வலைசரத்தில் தங்கள் அறிமுகம் கண்டேன்
வாழ்த்துக்கள்

Lakshmi said...

நாகசுப்ர மணியன், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

மாதவன் ஆமா இன்னமும் இதுபோல மேட்டர் நிறையவே இருக்கு,போரடிக்குதா?

Lakshmi said...

ராஜராஜேச்வரி அடுப்பைப்பாத்துதாங்க இவ்வளவு காமெடியும் பண்ணினாங்க.

Lakshmi said...

தவறு, வருகைக்கு நன்றிங்க.

ஆயிஷா said...

நல்லா இருக்குமா.
நம்ம பக்கம் வந்து ரோம்ப நாளாச்சேம்மா?

Lakshmi said...

அமுதா கிருஷ்ணா, ஆமாங்க இப்படித்தான் நிறைய காமெடிங்க பண்ணினாங்க.

Lakshmi said...

கே.பி. ஜனா.வருகைக்கு நன்றிங்க.

Lakshmi said...

ராஜி வலைச்சரத்தில் என்னை இதுவரை நாலு பேரு அறிமுகப்படுத்தி இருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு

Lakshmi said...

patti super pranav

Lakshmi said...

ஆயிஷா வருகைக்கு நன்றிம்மா. வரேன் இப்பவே

GEETHA ACHAL said...

இரன்டு அனுபவங்களுமே அருமை...இரண்டாவது சூப்பர்...

Lakshmi said...

தேங்க்யூ கீதா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நகைச்சுவையான பகிர்வு. மிக்க நன்றிம்மா!

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி.

மதுரை சரவணன் said...

சிரிப்பு அடக்க முடியல்ல.. பக்ரிவுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

ஜிஜி said...

உங்க அனுபவங்களை நல்லா நகைச்சுவையா சொல்லி இருக்கீங்க அம்மா.நல்லா இருக்கு

கோவை2தில்லி said...

சிரிப்பை அடக்க முடியலைம்மா. :)

Lakshmi said...

மதுரை சரவணன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ஜி, ஜி நல்லா வாய்விட்டு சிரிச்சீங்களா. நன்றிங்க.

Lakshmi said...

கோவை2 தில்லி வாங்க நல்லா சிரியுங்க நோய் விட்டுப்போகுமுங்க,

அந்நியன் 2 said...

உங்கள் நொறுக்ஸ் வித்தியாசமாக இருக்கின்றதம்மா எப்படி முடிகிறது ?

வாழ்த்துக்கள்.

Lakshmi said...

அந்நியன் 2 வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Jaleela Kamal said...

இரண்டு நொறுக்ஸ் ம் செமம் காமடி லஷ்மி அக்கா

Lakshmi said...

ஜலீலா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

ஸாதிகா said...

அருமை.சுவாரஸ்யம்.தொடர்ந்து எழுதுங்கள்

Lakshmi said...

ஸாதிகா, வருகைக்கு நன்றிம்மா.

NIZAMUDEEN said...

Semai Comedykal.

Lakshmi said...

நிஜாமுதீன் வருகைக்கு நன்றி.

vasan said...

சிறு சிறு ம‌ல‌ர்க‌ளிலும் தேனெடுத்து சேர்க்கும் சுறுசுறு தேனீயாய் தாங்க‌ள், தேன‌டையாய் த‌ங்க‌ள் வ‌லை. அந்த‌ நகைச்சுவை தேட‌ல் தான், உங்க‌ளின்(மற்ற‌வ‌ர்க‌ள் ந‌கைச்சுமைக்காய்)தனித்துவ‌ம்.

Lakshmi said...

வாசன், அழகான பின்னூட்டம். நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .