Google+ Followers

Pages

Tuesday, March 8, 2011

மலரும் நினைவுகள்.(1)நான் திருமணம் முடிந்து பூனா வந்தது1960-ல். கிராமத்தில் எங்கவீடுரொம்பவும்
பெரிது. 7-மாடிகளுடன் விஸ்தாரமான வீடு. ஒரே தெருவில் சேர்ந்தாப்போல 4-வீடுகள் எங்களுக்கு உண்டு.அது தவிர கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம்.
குழந்தைகள் ஒரு டஜனுக்கு குறையாமல் இருப்பார்கள். பெரியவர்களும் அ ந்த
அளவுக்கு இருந்தார்கள்.அத்தை,சித்தப்பா, பெரியப்பா எல்லார் குழந்தைகளும்
ஒருதாய் வயிற்று பிள்ளைகளாகவே பழகுவோம்.வித்யாசமே கிடையாது.
அதற்குமேல சமையலுக்கு ரெண்டு வயதான மாமிகள்,வீட்டு வேலைகளுக்கு 3
வேலைக்காரிகள், குழந்தைகளை கவனிக்க ரெண்டு வேலைக்காரிகள் என்று 
வீடுநிறைய கல்யாண கல, கலப்புதான் எப்பவுமே.


இது தவிர கொல்லைப்புரம் ரெண்டு பசு, ரெண்டு எருமை, ரெண்டு காளை 
மாடுகளுடன் கூடிய மாட்டுக்கொட்டிலும் உண்டு.அதை கவனிக்க பால் கறக்க 
தனி வேலை ஆட்கள் என்று எப்பவுமே வீடு நிரைந்து இருக்கும். பூனாவில்
போய்இறங்கினதும்எட்டடிக்கு,பத்தடிஉள்ளரெண்டுரூம்இருந்தஇடத்துக்குகூட்டிப்போனார்.என்னங்கஇங்ககூட்டிவந்திருக்கீங்க.வீடுஎங்கன்னுகேட்டேன்.உடனே

நான் என்னமோஜோக்சொன்னமாதிரிவீட்டுக்காரரும்அவங்கஅப்பா,அம்மாவும்
பெரிதாகச்சிரித்தார்கள். எதுக்கு சிரிக்கரீங்கன்னு அப்பாவியா கேட்டேன்.இதுதான்மா வீடு.என்ரார். ஐயோ இதுவா வீடு. இங்க எப்படி இருக்கன்னேன். 
நாங்க இத்தனை வருஷமா இந்த வீட்ல தாம்மா இருக்கோம். இனிமேல நீயும்
இங்கதானே இருக்கப்போறாய்.என்று கூலாக சொன்னார். முதரூம் படுக்கைரூம், வரவேற்புரூம் என்று ஆல் பர்பஸ் ரூமாம்.பக்கத்து ரூம் சமையல்ரூமாம்.பாத்ரூம்டாய்லெட்எங்கன்னேன்.அதுஎல்லாருக்கும்பொது.பின்னாடி இருக்கு.15 குடுத்தனக்காராளுக்கு ”வீட்டின்” பின்புறம் 3 டாய்லெட்டும் 3பாத்ரூம் இருக்குஎன்றார். எனக்கு அழுகையே வந்தது. காட்டிக்கமுடியுமா?

60 comments:

தமிழ் 007 said...

வடை....

Lakshmi said...

வடை மட்டும் போதுமா?

தமிழ் 007 said...

உங்கள் அனுபவத்தை படித்தவுடன் இறுதியில் உங்கள் நிலைமையை நினைத்தால் சிரிப்பு தானாக வருகிறது.

நீங்கள் சொல்லிய விதத்தில் அனைத்து காட்சிகளும் கண் முன் நிற்கிறது.

ஸாதிகா said...

என்னங்க லக்‌ஷ்மி அம்மா,சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டிருந்தவர் டக் என்று முடித்து விட்டீர்கள்?

டக்கால்டி said...

இந்த தடவை சீக்கிரமே வந்துட்டேன். இருங்க படிச்சுட்டு வரேன்...

டக்கால்டி said...

அப்போ அவங்க எல்லாம் உங்க சொந்தக்காரங்க இல்லையா? அவர்கள் அனைவரும் அண்டை வீட்டினர்...நீங்க சொல்லும் இடத்தை கொல்கத்தாவில் சால் என்று அழைப்பார்கள். நடுத்தரக் குடும்பங்கள் வாழ்க்கை நடத்த இதை விட்டால் வேறு இடமில்லை. ஆனால் காலப் போக்கில் நீங்கள் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கை வாழ்வது போல உணர்ந்து இருப்பீர்களே? அந்த சூழ்நிலையும் உங்களுக்கு பிடித்து இருக்குமே? அதைப் பத்தியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் அம்மா...

raji said...

நீங்க ரொம்ப பாவம்னா உங்க வீட்டுக்காரர் அதை விட ரொம்ப பாவங்க

அப்பாவி தங்கமணி said...

//வீடுநிறைய கல்யாண கல, கலப்புதான் எப்பவுமே.//

படிக்கறப்பவே அந்த காட்சி கண் முன் வந்தது போல் அழகா இருக்குங்க... இப்படி எல்லாம் இனி ஜென்மத்துல பாக்க முடியுமா என்ன?

பார்வையாளன் said...

நான் திருமணம் முடிந்து பூனா வந்தது1960-ல்

அடேங்கப்பா... இவ்வளவு ஆழ்ந்த அனுபவம் கொண்ட நீங்கள், இன்றைய இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் எழுதுவது பாராட்டுக்கு உரியது

வெங்கட் நாகராஜ் said...

சுறுசுறுப்பாய் ஆரம்பித்து இருக்கிறது மலரும் நினைவுகள். கிராமத்து வீடுகளில் இருந்துவிட்டு நகரத்திற்கு வந்து சிறிய வீடுகளில் இருக்கும்போது சற்று கஷ்டமாகத் தான் இருக்கும்.!

எல் கே said...

கிராமத்து வீடுகளில் இருந்து விட்டு பட்டினம் வருபவர்களின் மனநிலை :)

GEETHA ACHAL said...

//வீடுஎங்கன்னுகேட்டேன்.உடனே

நான் என்னமோ ஜோக் சொன்னமாதிரி வீட்டுக்காரரும்அவங்கஅப்பா,அம்மாவும்

பெரிதாகச்சிரித்தார்கள். எதுக்கு சிரிக்கரீங்கன்னு அப்பாவியா கேட்டேன்.

இதுதான்மா வீடு.என்ரார். ஐயோ இதுவா வீடு//எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது...

வேடந்தாங்கல் - கருன் said...

அச்த நாள் ஞாபகம் வந்ததே..வந்ததே..

asiya omar said...

தொடர்ந்து எழுதுங்க,அனுபவம் பலருக்கு உதவும்.

Madhavan Srinivasagopalan said...

வருசம்-16 படமும், அந்த பெரிய நீளமான கேரளா வீடும் ஞாபகம் வருகிறது..
உங்கள் நெலைமை -- ம்ம் பாவம்தான்..

Nagasubramanian said...

சரி அப்புறம்????

Lakshmi said...

தமிழ்007, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

சாதிகா, இப்ப தான்மா தொடங்கியே இருக்கேன். இனி தொடரும் நினைவுகளின் ஊர்வலம்தான்.

Lakshmi said...

டக்கால்டி மும்பையிலும் இதைப்போல வீடுகளை ச்சால் என்றுதான் சொல்வார்கள். நீங்க சொன்னதுபோல நாளாக, நாளாக எல்லாருமே நல்லா பழக ஆரம்பிச்சுட்டாங்கதான். அதெல்லாம் பின்னாடியே வருதுங்க.படிக்க பொறுமை இருக்கா?

Lakshmi said...

ராஜி அவர் என்ன பாவங்க?

Lakshmi said...

அப்பாவி தங்க மணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. இனிமேல இதுபோல எழுத்துக்களில் தான் அந்தக்காலங்களை ரசிக்க முடியும்தான்.

Lakshmi said...

பார்வையாளன் வருகைக்கு நன்றிங்க. அப்போ என்வயதுகூட மிகவும் குறைச்சல்தாங்க.(12) இத்தனை வருடங்களுக்குப்பிறகு இதையெல்லாம் உங்க எல்லாருடனும் பகிர்ந்துகொள்ளமுடியும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.சின்னவய்திக்காரங்க முதல் பெரியவங்க வரை என் எழுத்தை ரசிக்கிரீங்க. சந்தோஷமா இருக்கு.

Lakshmi said...

வெஙகட், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கொஞ்சம் கஷ்டமில்லை, நிறையாவே.

Lakshmi said...

கார்த்தி ரொம்ப கரெக்ட்.

Lakshmi said...

கீதா ஆச்சல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே நண்பனே, நண்பனே.!!!!!
வேடந்தாங்கல்-கருன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ஆஸியா தொடரும் நினைவுகள். படிக்க நீங்கள்ளாம் இருக்கும்போது நான் எழுதரெடிதான்.

Lakshmi said...

மாதவன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

நாக சுப்ர மணியன், வருகைக்கு நன்றி.
அப்புரமும் வந்துண்டே இருக்குங்க.

கோவை2தில்லி said...

மலரும் நினைவுகள் அழகா ஆரம்பிச்சிருக்கீங்கம்மா. அப்புறம் எப்படி சமாளித்தீர்கள். தெரிந்து கொள்ள ஆவல்.

சிறு வயதில் இராமநாதபுரத்தில் என் அத்தை வீட்டில் கூட்டு குடும்பத்தில் விடுமுறையில் தங்கி விட்டு வந்தது ஞாபகம் வருகிறது.

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி.
இதுபோல எல்லாரிடமும் மலரும்
நினைவுகள் இருக்கத்தான்செய்யும்.

டக்கால்டி said...

டக்கால்டி மும்பையிலும் இதைப்போல வீடுகளை ச்சால் என்றுதான் சொல்வார்கள். நீங்க சொன்னதுபோல நாளாக, நாளாக எல்லாருமே நல்லா பழக ஆரம்பிச்சுட்டாங்கதான். அதெல்லாம் பின்னாடியே வருதுங்க.படிக்க பொறுமை இருக்கா?//

பொறுமை கடலினும் பெரிது...எனக்கு ஓரளவுக்கு பொறுமை இருக்குன்னு நம்புறேன் மா..

டக்கால்டி said...

பொறுமை கடலினும் பெரிது...எனக்கு ஓரளவுக்கு பொறுமை இருக்குன்னு நம்புறேன் மா..

தமிழ் ஈட்டி! said...

மீண்டும் பிழைகள்:

//கொல்லைப்புரம் //
கொல்லைப்புறம்

//வீடு நிரைந்து இருக்கும்//
வீடு நிறைந்து இருக்கும்


அடுத்த முறை பிழை இல்லாமல் எழுதுகிறேன் என்று சொல்ல வேண்டாம் தாயே. செய்து காட்டுங்கள்.

- தமிழ் ஈட்டி
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

விக்கி உலகம் said...

உங்க பகிர்வுக்கு நன்றி மேடம்

Sriakila said...

இப்போது தான் உங்கள் பதிவு பக்கம் வருகிறேன். ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பிக்கிறேன்.

Lakshmi said...

டக்கால்டி உங்க பொறுமையான காத்திருத்தலுக்கு நன்றி.

Lakshmi said...

தமிழ் ஈட்டி, போனமுறை நீங்க சுட்டிக்காட்டிய பிறகு கவனமாகவே எழுதி வருகிறேன். இந்ததடவை ரெண்டே தவறுதானே. அடுத்த முறை அதுவும் இருக்காது. சரிதானே?

Lakshmi said...

விக்கி உலகம் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ஸ்ரீ அகிலா வருகைக்கு நன்றிம்மா.
அடிக்கடி வாங்க.

அமைதிச்சாரல் said...

உங்க நிலைமை பாவம்தான் லஷ்மிம்மா.. நம்மூர்லேர்ந்து இங்க வர்றவங்களுக்கு இந்த ஊர் ஒத்துப்போவதற்கு கொஞ்ச நாளாகத்தான் செய்யும் :-))))

ச்சால்களிலேயே ஒற்றையறை வீடுகளும் உண்டு. அதிலேயே மாமனார்,மாமியாருடன் வசிக்கும் குடும்பங்களும் உண்டு. அவங்க நிலைமை இன்னும் பரிதாபம்..

ஹேமா said...

சமாளிச்சுப் பழகிக்க எவ்ளோ கஸ்டமாயிருந்திருக்கும்.ஆனாலும் நிறைய சுவாரஸ்யமாவும் இருந்திருக்குமே அம்மா !

Lakshmi said...

அமைதிச்சாரல் நீங்க சொல்வது சரிதான்
எங்களுக்காவது ரெண்டு ரூம் இருந்தது
ஒரு ரூமில் இருந்தவர்களும் பக்கத்லேயே
இருந்தாங்க.

Lakshmi said...

ஹேமா இப்ப உங்ககூட பகிர்ந்துகொள்ளும்போதுதான் காமெடியா இருக்கு ஆனா அந்த சமயத்ல ரொம்பவே
டென்ஷந்தான்.

Ramani said...

தஙக்ள் பதிவின் தலைப்பைபோல
அனைவரின் அன்பினில் கட்டுண்ட பின்பு
அதெல்லாம் குறையொன்றும் இல்லைதானே?
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Lakshmi said...

ரமணீ சார் வருகைக்கு நன்றிங்க.

Sathish Kumar said...

//எனக்கு அழுகையே வந்தது.//

சாதாரணமாக இடம் மாற்றம் என்பதே வலிகளுக்குட்பட்டது...! அதிலும் தாய் தந்தையை பிரிந்து புகுந்த இடம் முற்றிலும் விசித்திரமான, அதிர்ச்சியான அனுபவத்தை தந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.

Lakshmi said...

சதீஷ் குமார் வருகைக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

அனுபவப் பகிர்விற்கு நன்றி அம்மா.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி, நன்றிம்மா.

goma said...

ஆரம்பமே கலக்கல்
கண் கலங்கல்...எப்படி சமாளித்தீர்கள்...
நிஜமாகவே நிறைய நல்ல அனுபவங்கள் பாடங்கள் கற்றிருப்பீர்கள்..இன்னும்.சொல்லுங்களேன் ..

Lakshmi said...

goma நன்றிம்மா.

Vijisveg Kitchen said...

நிறய்ய நல்ல அனுபவங்கள் சொல்லியிருக்கிங்க. எல்லாருக்கும் பயனுள்ளது.

Lakshmi said...

விஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

பிரவின்குமார் said...

எழுத்துகளில் தங்களது அனுபவம் பேசுகிறது...!! நிறைய எழுதுங்க மேடம்...!!

கீதா சாம்பசிவம் said...

5 குடுத்தனக்காராளுக்கு ”வீட்டின்” பின்புறம் 3 டாய்லெட்டும் 3பாத்ரூம் இருக்குஎன்றார். எனக்கு அழுகையே வந்தது. காட்டிக்கமுடியுமா?//

நிச்சயமாய்க் காட்டிக்க முடியாது தான். அறுபதிலேயே புனாவில் இந்த நிலைமையா?? நான் அப்போப் பள்ளி மாணவி! :D என்றாலும் எங்க கல்யாணம் ஆகையிலும் புனாவில் இதே நிலைமைதான் இருந்திருக்கிறது. இதனாலேயே என் கணவர் என்னைப் புனாவுக்கு முதலிலேயே அழைத்துப் போகவில்லை. கடக்வாசலா மாற்றல் வாங்க முயன்று கொண்டிருந்தார். ஆனால் விதி வேறுவிதமாய் இருந்தது. நான் என் கணவரின் பணிக்காலம் முடியும் வரையிலும் புனாவே போகவில்லை. புனா பார்க்கவேண்டும் என்பதற்காக மூன்று வருடங்கள் முன்னர் அழைத்துச் சென்றார். அப்போவும் இந்த நிலைமைதான் சில வீடுகளில். ஆனால் இவங்க அலுவலகத்திற்கெனத் தனிக் குடியிருப்புகள் வந்திருக்கின்றன.

Lakshmi said...

கீதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எங்களுக்கும் கடக்வாசலா க்வார்ட்டரில்
தங்கதான் ஆசை ஆனா முடியல்லே

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பிதழ்:

உங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்தில் “ஞாழல் பூ - அனுபவச்சரம்” என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_08.html

நேரம் இருக்கும் போது வந்து பார்வையிட அழைக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

Lakshmi said...

வெங்கட் வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .