Google+ Followers

Pages

Saturday, March 26, 2011

மலரும் நினைவுகள்(5)

விழிப்பும் உறக்குமுமான ஒரு சொப்பன நிலையில் எப்படி கல்யாணம் நடந்தது
 என்று  நினைவுகள்வந்து போனது.எங்கதாத்தா பெரிய அப்பளா டிப்போ நடத்தி வந்தார்.அதில் வேலைபார்ப்பவர்களும்  ஆணும் பெண்ணுமாக சுமார் 50 பேர்வரையிலும்இருந்தார்கள். விருது நகரிலிருந்து மூட்டை மூட்டையாக உளுத்தம்பருப்பு லாரிகளில் வந்து இறங்கிய வண்ணமே இருக்கும். கல் இயந்திரத்தில் பருப்பு திரிப்பதில் ஆரம்பித்து அப்பளா பாக்கெட்டுகளாக ரெடி ஆகி வெளி மானிலங்கள், வெளி நாடுகள் எல்லாம் எல்லாம் அனுப்புவார்கள்.
அந்தசமயம் மாமனார் குடும்பத்தினர்ஸிலோனில்(ஸ்ரீலங்கா) இருந்தார்கள்.
எங்கள் அப்பளாத்திற்கு அவர்கள்தான் அங்கு ஏஜண்டாக இருந்தார்கள். அப்படி
பழக்கமானவர்தான் அவர். என் வீட்டுக்காரருக்கு 5 வயதாகும் வரை சிலோனில் தான் இருந்திருக்காங்க. அப்பரமா பிரிட்டிஷ்காரன் குண்டு போடரான்னு கிளம்பி இந்தியா வந்துபூனாவில் செட்டிலாயிட்டாங்க. பூர்வீகம் அவங்களுக்கும் எங்க கிராமம்தான்.சிலோனில் சம்பாதித்ததை வைத்து கிராமத்தில் வீடும் நெல் வயலும் வாங்கி போட் டாங்க. பூனாவில் கவர்மெண்ட் உத்யோகம் கிடைக்கவே அங்கே செட்டிலானாங்க.அப்படி ஆரம்பத்திலேந்தே அவங்கல்லாம் நல்ல பழக்கமானவங்கதான்.வீட்டுக்காரர் வளர்ந்தது, படித்தது எல்லாமே பூனாவில்
தான். பூனாவிலும் அவ ங்க எங்க அப்பளாம் வாங்கி வித்துட்டு இருந்தாங்க.
எங்க வீடுகளில் பெண்கள் வயசுக்கு வந்ததுமே ஜாதகம் பாக்கத்தொடங்கிடுவாங்க. அப்படி பாக்கும்போது இவங்களைப்பத்தி யோசிச்சிரு
பாங்க. பெரியவங்க பேசி ஜாதகமும் பொருத்தமாக இருக்கவே மேல்கொண்டு
 பேசி , அதாவது பெத்தவங்களுக்கு ஒரே பிள்ளை, வேர பிக்கல், பிடுங்கல் இல்லை, சொந்த வீடு 15 கோட்டை வெதைப்பாடு ரெண்டுபோகம்விளையும் நிலமும் இருக்கு(இது என்னன்னு யாருக்கும் புரியப்போரதில்லை)
போதாததுக்கு கால்காசு உத்யோகம்னாலும் கவர்மெண்ட் உத்யோகம் வேர இருக்கு என்பேத்தி ஆயுசு பூரா சவுரியமா இருப்பானு தாத்தா(தப்பு)கணக்கு போட்டுட்டாங்க.

அப்பல்லாம் பெண்ணு, பிள்ளைக்கு இடையில குறைந்தது 10 வயசாவது வித்யாசம் இருக்கும் படி பொருத்தம்பாப்பாங்க.அதுக்கும் காரணம் சொல்லப்போனா அர்த்தமில்லாம இந்தபதிவு நீண்டுண்டே போகும். அதுவும்
 எங்க இருவருக்கும் வயசு வித்யாசம் 15. பெரியவங்க எப்படி யோசிக்கராங்க.
ஒன்னுமே புரிய மாட்டேங்குது.அவங்க என்னபண்ணினாலும் கேள்வி கேக்கவே
கூடாத்துன்னு மட்டும் சொல்லி சொல்லி வளத்துடுவாங்க.என்கல்யாண நினைவுகள் இப்பயோசிச்சாகூட யாருக்கோ என்னமோ விசேஷம் நடக்குதுன்னு
ஒரு மூணாவதுமனுஷிபோலதான் பாத்துட்டுபிருந்திருக்கேன். தெரு அடைச்சு
 பந்தல் போட்டு ஊரில் உள்ள அனைத்துபேர்களுக்கும் ஒருவாரம் விருந்து சாப்பாடு போட்டு தெருவில் உள்ள  அத்தனை வீடுகளிலும்சாப்பாடு பந்திவைத்து மூணு நேரமும்வந்தவா அத்தனை பேரும்வயறு நிரம்ப சாப்பிட ஏற்பாடு செய்தாங்கதாத்தா. அதுமட்டுமில்லை.
 பிச்சைக்காரங்க எப்பவுமே எச்சிலைச்சோறுதானே சாப்பிடராங்க அவங்களும்
 நல்ல சாப்பாடு சாப்பிட்டு என் பேத்தியை மனசு குளிர்ந்து வாழ்த்திட்டு போகட்டுமென்று தெருஅடைச்சு போட்டிருந்த பந்தலில் அவர்களுக்கு தனியாக
இலைபோட்டு பந்தி பரிமாறினார்கள்.ஒருவாரம் அந்தஊரில் யார் வீட்டிலுமே
அடுப்பு பத்தவைக்கவே இல்லை. எல்லாருமே கல்யாணசாப்பாடுதான்.

43 comments:

Nagasubramanian said...

// தாத்தா(தப்பு)கணக்கு போட்டுட்டாங்க.//
ஏன்???????

தமிழ்வாசி - Prakash said...

மலரும் நினைவுகள் அருமையா போய்க்கிட்டு இருக்கு.

Lakshmi said...

நாக சுப்ரமணியன், ம்ம்ம்ம்
பின்னாடி வருதே, விவரம்

Lakshmi said...

தமிழ்வாசி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

thirumathi bs sridhar said...

//என்கல்யாண நினைவுகள் இப்பயோசிச்சாகூட யாருக்கோ என்னமோ விசேஷம் நடக்குதுன்னு
ஒரு மூணாவதுமனுஷிபோலதான் பாத்துட்டுருந்திருக்கேன்//

படித்தவுடன் பக்னு இருந்தது,இந்த காலத்ல இப்படி வாய்ப்பே இல்லைம்மா.நல்ல பகிர்வு.

எல் கே said...

ஹ்ம்ம் தொடருங்கள் காத்திருக்கிறேன்

HVL said...

//அப்பல்லாம் பெண்ணு, பிள்ளைக்கு இடையில குறைந்தது 10 வயசாவது வித்யாசம் இருக்கும் படி பொருத்தம்பாப்பாங்க.அதுக்கும் காரணம் சொல்லப்போனா அர்த்தமில்லாம இந்தபதிவு நீண்டுண்டே போகும்.//

அப்ப தனி பதிவா போட்டுடுங்க! காரணத்த தெரிஞ்சுக்க
ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறேன்.

HVL said...

மலரும் நினைவுகள்(6) க்காகவும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

Madhavan Srinivasagopalan said...

பத்துப் பதினைந்து வயது வித்தியாசம்.. ஏதோ காரணங்களால், அப்போது வேண்டுமாளால் சரியாக இருந்திருக்கலாம்..

தற்போது, மூன்று முதல் அதிக பட்சமாக ஏழு வரை ஒக்கே என்பது எனது கருத்து..

asiya omar said...

பத்திரிக்கையில் எழுதும் அளவு அருமையாக இருக்கு. லஷ்மிமா.
//15கோட்டை வெதைப்பாடு ரெண்டுபோகம்விளையும் நிலமும் இருக்கு(இது என்னன்னு யாருக்கும் புரியப்போரதில்லை)//
எங்க ஊரில் இப்படி தான் வயலை கணக்கிட்டு சொல்லுவாங்க,எனக்கு தெரியுமே!
ஏழு நாள் கல்யாணம் இன்னும் வழக்கத்தில் இருக்கு நம்ம பக்கம்.
சூப்பர்,எழுதுங்க,ஒரு கதை எப்படி விறு விறுப்பாக இருக்குமோ அப்படி இருக்கு.

பலே பிரபு said...

//கால்காசு உத்யோகம்னாலும் கவர்மெண்ட் உத்யோகம்//

இன்னமும் எங்கள் பக்க கிராமங்களில் இப்படிதான்.

raji said...

தாத்தாவின் கணக்கு தப்பாகி விட்டதா?அடடா

அந்நியன் 2 said...

உங்கள் வாழ்க்கை புத்தகத்தை திறந்து வைத்திருக்கின்றிகள் அம்மா.

அதில் பல விசயங்கள் த்ரில்லா இருக்கு.

//அப்பல்லாம் பெண்ணு, பிள்ளைக்கு இடையில குறைந்தது 10 வயசாவது வித்யாசம் இருக்கும் படி பொருத்தம்பாப்பாங்க.அதுக்கும் காரணம் சொல்லப்போனா அர்த்தமில்லாம இந்தபதிவு நீண்டுண்டே போகும்.//

கன்னித்தீவு மாதுரியமா?

நிரூபன் said...

அப்பல்லாம் பெண்ணு, பிள்ளைக்கு இடையில குறைந்தது 10 வயசாவது வித்யாசம் இருக்கும் படி பொருத்தம்பாப்பாங்க.அதுக்கும் காரணம் சொல்லப்போனா அர்த்தமில்லாம இந்தபதிவு நீண்டுண்டே போகும்.//

உங்கள் மலரும் நினைவுகளை அழகாகச் செதுக்கிக் கொண்டு வருகிறீர்கள். அந்தக் கால திருமண முறையில் மனைவி கணவனை நன்றாக பார்த்து, பராமரித்து வாழ வேண்டும் என்றெல்லாம் பெரியோர்கள் முடிவு செய்து திருமணம் செய்து வைத்தார்கள்.
இக் காலத்தில் இளையவர்களே தங்களது வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

டக்கால்டி said...

தொடருங்கள்...

இராஜராஜேஸ்வரி said...

மலரும் நினைவுகள் அருமை

Lakshmi said...

திருமதிஸ்ரீதர், முதல் வருகையா, அடிக்கடி வாங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

கார்த்தி வருகைக்கு நன்றி.

Lakshmi said...

HVL வருகைக்கு நன்றிங்க. எல்லாருக்கும் போரடிக்குமேன்னுதான்
அதைப்பற்றி விளக்கமா எழுதலை ஆச்ச்ர்யம் நீங்க தெரிஞ்சுக்க ஆசைப்படரீங்க.

Lakshmi said...

HVL நினைவுகள் 6-மட்டுமில்லை அதுக்கு அப்புரமாவும் வந்துண்டே தான் இருக்கும் பரவால்லையா?

Lakshmi said...

மாதவன், ஏழு வயசு வியாசமெல்லாம் கூட அதிகப்படிதான் ஒன்னு, ரெண்டு வயசுதான் வித்யாசம் இருக்கு, இதில் வேடிக்கை லவ் மேரேஜ் என்றால் பையனை விடபெண்ணுக்கு 4, 5 வயசு அதிகமாகூட இருக்கு. (என் வீட்டிலேயே
உண்டு.)

Lakshmi said...

ஆஸியா ஓமர், ஓ, அந்தவயல்காடுஅளவெல்லாம் உங்களுக்குத்தெரியுமா? சூப்பர் யாரானும் ஒருவருக்காவது புரியும் படி சொல்லி இருக்கேனே. என்கல்யாணாமும் 4- நாள்
கல்யாணம்தான்.

Lakshmi said...

பிரபு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ராஜி, ஆமாம்மா, நம்மபக்கம் ஒன்னு சொல்வாங்க முப்பது வருஷம் நல்லா வாழ்ந்தவங்களும் கிடையாது, முப்பது வருஷம் தாழ்ந்தவங்களும் கிடையாது. சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும்தானே?

Lakshmi said...

அந்நியன்2 ஏன் இவ்வளவு நாளா உங்களைக்காணோம். பிசியா இருந்தீங்களா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

நிரூபன் முதல் முறையா வரீங்களா? வாங்க, வாங்க.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

இராஜராஜேச்வரி, வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

ட்க்கால்டி, நன்றி.

ஸாதிகா said...

மலரும் நினைவுகள் படிக்கறச்சே சுவாரஸ்யமாக உள்ளது.

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றிம்மா.

மாதேவி said...

மலரும் நினைவுகள் பல கதைகள் பேசுகின்றன.

Lakshmi said...

மாதேவி, நன்றிம்மா.

TamilRockzs said...

அம்மா ...
தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் .
பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )

நன்றி ,
அன்புடன் ,
Admin

நிரூபன் said...

உங்களின் அடுத்த மலரும் நினைவுகள் பற்றிய பாகத்திற்காக வெயிட்டிங்.

Lakshmi said...

tamil rockzs,வருகைக்கு நன்றி. எனக்காக காத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

Lakshmi said...

நிருபன், வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி.

athira said...

லக்ஸ்மி அக்கா.... அப்படியே புட்டு புட்டு வைப்பதுபோல சூப்பராக சொல்லிக்கொண்டு போறீங்க... ஆனா நாடகம் மாதிரி... தொடரும் என முடிப்பதுதான் பொறுமை இழக்க வைக்குது.

விரைவில் தொடருங்க. உங்கள் புதுத் தலைப்பு வரும்போது கண்டுபிடித்து இங்குவர நேரமாகிவிடுது.

நீங்க எங்கள் அம்மாவைவிட மூத்தவர் என்று தெரியுது... அக்கா என அழைக்கத்தொடங்கிட்டேன் ... அப்படியே இருக்கட்டும்.

Lakshmi said...

அதிரா லேட்டா வந்தாலும் தேடிப்பிடித்து வந்துடரீங்களே.அது சந்தோஷம். என்னை எப்படி கூப்பிட தோனுதோ அப்படியே கூப்பிடுங்க. பதிவு ரொம்ப பெரிசாபோனா படிக்கிரவங்களுக்கு போராகும் அதான் தொடரும்

tamilbirdszz said...

லக்ஸ்மி அம்மா கலக்குறிங்க நல்லா இருக்கு

Lakshmi said...

thamilbirdszz, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கீதா சாம்பசிவம் said...

15 கோட்டை வெதைப்பாடு ரெண்டுபோகம்விளையும் நிலமும் இருக்கு(இது என்னன்னு யாருக்கும் புரியப்போரதில்லை)//

எனக்குப் புரியுது அம்மா.

அப்புறமா அந்த வயது வித்தியாசம், அது ஓரளவுக்குத் தேவைன்னே நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் என் பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் எட்டு வயது வித்தியாசம், அவள் முழுச் சம்மதத்தோடு வயது வித்தியாசம் குறைந்தது ஐந்தாவது இருக்கணும்னு கண்டிஷன் போட்டுத் தான் கல்யாணம் பண்ணிக்கொண்டாள். எனக்கும் என் கணவருக்கும் ஏழரை வயது வித்தியாசம். பலவிஷயங்களுக்கும் வயது வித்தியாசம் இருப்பது ஓரளவுக்கு நன்மையே பயக்கும் என்பது என் கருத்து.

கீதா சாம்பசிவம் said...

என் நாத்தனார்கள், என் அம்மா இவங்களுக்கெல்லாம் உங்களை மாதிரித் தான் பதினைந்து, பனிரண்டு வயது வித்தியாசம். அவங்களுக்கும் இதில் வருத்தம் தான். :(((

கீதா சாம்பசிவம் said...

மற்றவைகளுக்கு நாளை வரேன்.:D

என்னை ஆதரிப்பவர்கள் . .