Google+ Followers

Pages

Monday, March 14, 2011

மலரும் நினைவுகள்.(3)எங்க வீட்ல என் குழந்தைப்பருவம் குட்டி இளவரசி போல. என் அம்மா, அப்பாவுக்கு திருமணம் முடிந்து 5-வருடங்களுக்குப்பிறகு தான் நான் பிறந்தேனாம். அதனால பாட்டி தாத்தாவுக்கு நான் ரொம்பவே செல்லம்.அதிலும் பாட்டி பேரை எனக்கு வைத்திருப்பதால் இன்னும் அதிக செல்லம்.நான் பிறந்ததுமே, என்னை கவனிச்சுக்க ஒரு வேலைக்காரி ஏற்பாடு செய்துஅவளுக்கும் வீட்டி பின்புறமே ஒரு ரூமும்கட்டிக்கொடுத்து வீட்டோடு தங்கவைத்தார்கள். நிறைய நேரம் வேலைக்காரி இடுப்பில் தான் வாசம். அதனாலஎங்க பாஷையை விடஅவபாஷைதான் ஈசியாவந்தது,அவளைத்தான் ஆத்தாஎன்று அழைப்பேன்.
ஆத்தங்கரைக்கு குளிக்கப்போகும்போது நடந்துபோனாபேத்திக்கு கால் வலிக்குமாம். மாட்டுவண்டிகட்டித்தான் ஆத்தாவையும் துணைக்கு அனுப்புவார்கள். வீட்டில் ரெட்டைமாட்டு,ஒற்றை மாட்டு வண்டி எல்லாம் உண்டு. ஆத்தங்கரை போயி ஆத்தாதான்சோப்பு போட்டு குளிப்பாட்டி, என் துணிகளையும் துவைத்து தருவாங்க. அதுமட்டுமில்ல, குளிச்சோடன பசிக்குமாம், சின்ன தூக்கு சட்டியில் இட்லி பொடிஎண்ணை தடவி, ஃப்ளாஸ்க் நிறைய சுண்டக்காய்ச்சிய பாலும் கொண்டு வ ந்திருப்பாங்க. வெள்ளிக்கிழமைனா எண்ணைக்குளியல்.
எனக்கப்பரம் என்கூடப்பிறந்தவங்க 7 பேரு. அவங்களெல்லாம் சாதாரண மாவளர்த்தாங்க. அவங்களை பள்ளிக்கூடமும் அனுப்பினாங்க. என்னை ஏன்அனுப்பலேன்னு கேட்டா அவங்க சொல்ர காரணம் கேட்டா சிரிப்பீங்க.ஐயோ, என்பேத்தி, பள்ளிக்குடம்போயி நாள் பூரா அந்த மரபெஞ்சுல வேர்வைலகஷ்டப்பட்டு உக்காரணும். அந்த சார்வாள் போர்ட்ல எழ்துவதை எல்லாம் என்பேத்தி கை வலிக்க எழுதி கஷ்டப்படணும். வீட்டுப்பாடம் லாம் கொடுத்து என்பேத்தியை கஷ்டப்படுத்துவாங்க. என்பேத்தி கஷ்டப்பட பிறந்த பொண்ணுஇல்லைஅவஎப்பவுமேசௌரியமாஇருக்கணும்.ஸ்கூல்லாம்வேணாம்னு சொல்லி என்னை படிக்கவே அனுமதிக்கலை.
எனக்குமட்டும் தினமும் வெள்ளி தட்லதான் சாப்பாடு தருவாங்க. இரவு வெள்ளிகும்பாவில் சோறு. வெள்ளி டம்ளரில்தான் பால், தண்ணி எல்லாமே குடிக்கனும்.பட்டு பாவாடை சட்டைதான். ரெண்டுகைகளிலும் 6,6 தங்கவளையல்கள்     கழுத்தில் நாய்ச்சங்கிலி மாதிரி கனத்தசெயின்கள்,.                                                                                                                                                 
4, 4, விரல்களிலும்(மேளகாரன்போல) வித,விதமான மோதிரங்கள் என்று தான் இருந்தேன். அந்தவயசுல அதோட அருமை எல்லாம் புரிஞ்சுக்கத்தெரியலை.இப்ப மலரும் நினைவுகளில்தான் புரியுது. எங்க ஊரு சின்ன ஊருன்னாலஎக்ஸ்ப்ரெஸ் வண்டிலாம் வராது. செங்கோட்டைபாசஞ்சர் மட்டும் காலைஒருமுறை, மாலை ஒருமுறை வரும்.அதில் ஏறி திரு நெல் வேலி வந்துதான்எக்ஸ்ப்ரெஸ் வண்டி பிடித்து வேறு ஊர்கள் போகணும்.
என்கல்யாணமாகி நாங்க 5 பேர் ஊருக்குப்போக வழி அனுப்ப 25பேர் எங்க வீட்டுஆளுங்க திருன வேலி வந்தாங்க சாயங்காலம் 6 மணிக்குத்தான் மெட்ராஸ்போகும் வண்டி இருந்தது. நாங்க எல்லாரும் காலேலயே வந்துட்டதால எல்லாருக்கும் சாப்பாடுகட்டிண்டு வந்து வெயிட்டிங்க் ரூமில் இருந்தோம்.5மணிக்குஎல்லாரும்பரபரப்பாகரெடிஆனார்கள்.என்னைப்பாத்துப்பாத்துஎல்லாரும் விசித்து, விசித்துஅழ ஆரம்பிச்சுட்டா.எனக்கு, எதுக்கு எல்லாரும்இப்படி அழரான்னு இருந்தது. எனக்கென்னமோ அழுகையே வல்லை. தாத்தாகோந்தே(இப்படித்தான் கூப்பிடுவாங்க) எங்களையெல்லாம் விட்டு பிரிஞ்சுபோறியே உனக்கு வருத்தமா இல்லியா? அழுகையே வல்லியான்னுகேக்கரார்.
கல்யாணம் கட்டி, சந்தோஷமாதானே வழி அனுப்பணும் அதை விட்டு ஏன்அழராங்க? நான் இதுவரை ரயிலில் நீண்ட தூரம் பயணம் எல்லாம் செய்ததேஇல்லை. மிஞ்சி போனா வருஷம் ஒருமுறை குத்தாலம் போவோம் எல்லாரும்.இப்ப பூனா போக 3- நாட்கள் ஆகுமாம்.புது ஊரு,ரயிலில் நீண்ட தூரம் பயணம்என்று சந்தோஷமாகத்தான் இருந்தது. அதற்கு அந்த வய்சும் ஒரு
காரணம். குழந்தைத்தனம் மாறாத வய்சு. கல்யாணத்தின் முழு அர்த்தமும்
புரிந்து கொள்ள முடியாத வயசு.

46 comments:

எல் கே said...

ராஜகுமாரின்னு சொல்லுங்க. இப்படி இருந்துட்டு பூனா போய் சின்ன வீட்ல இருக்கறது கஷ்டம்தான்

Lakshmi said...

கார்த்தி உங்க பின்னூட்டம் நானும் எதிர் பார்த்தேன். வல்லியே.

வெங்கட் நாகராஜ் said...

கல்யாணம் ஆன புதிதில் இத்தனை தூரம் பயணித்து செல்வது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்! தொடருங்கள்!

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி.

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம், வீட்டோடு மாப்பிள்ளை பார்க்காமல் எப்படி அவ்வளவு தூரம் அனுப்பினார்கள்.

asiya omar said...

எனக்கு இது மாதிரி அந்தக்கால கதை கேட்க ரொம்ப பிடிக்கும்,தொடர்ந்து எழுதுங்க.ஸ்கூல் போய் படிக்காத நீங்களா இவ்வளவு அருமையாக எழுதறீங்க,பாராட்டுக்கள்..

தோழி பிரஷா said...

அனபவத்தை அழகாக கூறுகின்றீர்கள்.

வேடந்தாங்கல் - கருன் said...

நினைவுகள் தொடரட்டு்ம்...

Madhavan Srinivasagopalan said...

கதை மாதிரி வருது..
சூப்பர் படிக்க சுவாரஸ்யமா இருக்கு..

இருந்தாலும்.. உங்களுக்கு ஓவரா பில்ட் அப் தந்துட்டாங்க உங்க பட்டி தாத்தா.. (அவ்ளோ பாசம் போல !).

Sathish Kumar said...

//எங்க வீட்ல என் குழந்தைப்பருவம் குட்டி இளவரசி போல.//

இளவரசியே தான்னு சொல்லுங்க...!

ஸாதிகா said...

சுவாரஸ்யம் லக்‌ஷ்மிம்மா.வாயில் தங்கஸ்பூனோடு பிறந்தவள் என்று சொலுவார்களே.அது நினைவுக்கு வருகின்றது.

goma said...

மலரும் நினைவுகள் தொடருங்கள்...கோந்தே!


குழந்தைத்தனம் மாறாத வய்சு. கல்யாணத்தின் முழு அர்த்தமும்
புரிந்து கொள்ள முடியாத வயசு.

இப்போ கூட நிறைய பேருக்குக் கல்யாணத்தின் முழு அர்த்தம் தெரியாமல்தான் இருக்கிறார்கள்

Lakshmi said...

அமுதா, வீட்டோட மாப்பிள்ளையா
பழையகால மனுஷா ரொம்ப
கவுரவம் பாக்காரவங்க. அப்படி யோசிக்கவே இல்லை.

Lakshmi said...

அமுதா, வீட்டோட மாப்பிள்ளையா
பழையகால மனுஷா ரொம்ப
கவுரவம் பாக்காரவங்க. அப்படி யோசிக்கவே இல்லை.

Lakshmi said...

ஆசியாஓமர், என் குழந்தைகள் ஸ்கூல்
போக ஆரம்பிதப்போதான் நானும் ஏ, பி,
சி, டி யே தொடங்கினேன்.

Lakshmi said...

தோழி பிரஷா, வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

சீனிவாச கோபாலன் நீங்க சொல்வது
ரொம்பவே உண்மைதாங்க. என்ன செய்வது? அன்புத்தொல்லைதான்.

Lakshmi said...

சதீஷ், அதில சந்தேகமே இல்லை
இளவரசியேதான்.அந்தசமயம் அதோட
அருமைலாம் புரிஞ்சிக்க முடியலியே?

Lakshmi said...

ஸாதிகா, தங்கஸ்பூனோட பிறந்தவங்க வாழ் நாள்பூரா சவுரியமா
இருப்பாங்களே எனக்கு அப்படி அமையலியே.

Lakshmi said...

கோமா, வருகைக்கு, கருத்துக்கு நன்றிம்மா.

raji said...

இளவரசி மாதிரி வளர்த்ததெல்லாமே சரிதான்.ஆனா
படிப்பை கொடுக்காம விட்டாங்களே.இதை மட்டும் கொஞ்சம்
அனுமதிச்சிருக்கலாம்.

******************************

நம்ம பக்கம் நாலு நாளா ஒரு தொடர் ஒண்ணு ஓடிக்கிட்டிருந்துச்சு.
நீங்க ஆளையே காணமே?

Lakshmi said...

ராஜி அந்தக்குறை இப்பவும் எனக்கு உண்டு.

Lakshmi said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...

மலரும் நினைவுகளுக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றிம்மா.

கோவை2தில்லி said...

இளவரசி மாதிரி இருந்திருக்கீங்க. பூனா வாழ்க்கை எப்படி இருந்தது!

மாதேவி said...

மலரும் நினைவுகள் அருமை. தொடருங்கள்.

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி.பூனா வாழ்க்கை நேர் ஆபோசிட்டா இருந்தது.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி.

பலே பிரபு said...

மகிழ்ச்சியா எழுதி இருக்கீங்க. திருமணம் எந்த ஆண்டு அம்மா நடந்தது?

பலே பிரபு said...

மகிழ்ச்சியா எழுதி இருக்கீங்க. திருமணம் எந்த ஆண்டு அம்மா நடந்தது?

டக்கால்டி said...

வழக்கம் போல லேட்டு...ஹி ஹி..படித்தேன்...ராணி வாழ்க்கை வாழ்ந்து இருக்கீங்க..ஹ்ம்ம்

Lakshmi said...

பிரபு இப்பதான் வரீங்களா? 1960-ல் கல்யாணமாச்சுப்பா. ஃபேஸ்புல அந்த போட்டோ போட்டிருக்கேனே. பாத்தியா?

Lakshmi said...

டக்கால்டி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

நலாலாயிருக்கு.. வாழ்த்துக்கள்!

Lakshmi said...

பிரணவம் ரவிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பாரத்... பாரதி... said...

இனிமையான இளமைக்காலம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதலால் நீங்க கொடுத்து வச்சவங்க..

பாரத்... பாரதி... said...

//ஸ்கூல்லாம்வேணாம்னு சொல்லி என்னை படிக்கவே அனுமதிக்கலை.//


ஆனா நீங்க உலகத்தை நல்லாவே படிச்சிருக்கீங்க...
உங்கள் அனுபங்கள் தெரிந்துக்கொள்வது எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆத்தங்கரைக்கு குளிக்கப்போகும்போது நடந்துபோனாபேத்திக்கு கால் வலிக்குமாம். மாட்டுவண்டிகட்டித்தான் ஆத்தாவையும் துணைக்கு அனுப்புவார்கள். வீட்டில் ரெட்டைமாட்டு,ஒற்றை மாட்டு வண்டி எல்லாம் உண்டு. //
அடேயப்பா..ம்...ராணிதான்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பதிவு ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்குங்க

Lakshmi said...

பாரத் பாரதி ஒரு வேளை படிக்க அனுப்பி இருந்தால் என் பார்வையும் வேறுவிதமாக இருந்திருக்குமோ என்னமோ.படிப்பு அறிவு இல்லாத தாழ்மை உணர்வில் பாக்கி எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனிக்க தோணிச்சோ என்னமோ. இப்ப அதனால எந்தக்குறையும் இல்லியே. எல்லாம் நன்மைக்கேன்னுதான் நினைச்சுக்கனும் இல்லியா.

Lakshmi said...

சதீஷ் ராணீ வாழ்க்கைதான் ஆனா அப்போ அதோட அருமை தெரியலை இப்ப மலரும் நினைவுகளி தான் புரியுது.

அமைதி அப்பா said...

//ஒரு வேளை படிக்க அனுப்பி இருந்தால் என் பார்வையும் வேறுவிதமாக இருந்திருக்குமோ என்னமோ.படிப்பு அறிவு இல்லாத தாழ்மை உணர்வில் பாக்கி எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனிக்க தோணிச்சோ என்னமோ//

அழகா சொல்லியிருக்கீங்க... அம்மா. அமைதி அம்மாவும் அதிகம் படிக்காதவர்கள்தான். ஆனால், அவர்களின் அறிவாற்றல், சிந்திக்கும் திறன் நம்மை பிரமிக்க வைக்கும்.

நல்ல பகிர்வு அம்மா.

கீதா சாம்பசிவம் said...

படிக்கலைனா என்னம்மா?? இந்த அளவுக்கு சுயமா முன்னேறி இருக்கீங்களே? அதுக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நல்லவேளையா எங்க வீட்டிலே மேடு, பள்ளம் இரண்டுமே இருந்ததால் எனக்குப் புக்கக வாழ்க்கை உங்களுக்கு இருந்தாப்போல் கஷ்டமாத் தெரியலைனே சொல்லணும். அதோடு சமையலும் தெரிஞ்சதாலே சமாளிக்க முடிந்தது. இல்லைனா கஷ்டம் தான். :))))))))))

Lakshmi said...

கீதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .