Google+ Followers

Pages

Saturday, March 19, 2011

மலரும் நினைவுகள்(4)              
மேலே இருப்பது 1960-ல் நடந்த எங்க கல்யாணப்போட்டோ. கீழே வீட்டுக்காரரின் 60-வது வயசு சஷ்டி அப்த பூர்த்திபோட்டோ. ஏற்கனவே இந்தபடங்கள் ஃபேஸ்புக்ல போட்டிருக்கேன். ஆனா ப்ளாக் படிக்கிரவங்க எல்லாருமே ஃபேஸ்புக்ல வரமாட்டாங்களே. என்பதிவு படிக்கரவங்களுக்காக
இங்கயும் இன்னொரு முறை இந்தப்படங்கள் போட்டிருக்கேன்.
ஃப்ளாஷ்பெக் சொல்லிட்டு இருக்கும்போதே இன்னொரு ஃப்ளாஷ் பேக்குள்ள
போயிட்டேன்.திடீர்னு ஊர் நினைவு வந்திடுத்து. இப்ப திரும்ப பூனா வரேன்..
அந்த சமயம் எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும்னே புரியலை. இரவு 9 டு10
வரையிலும், காலை 9 டு 10 வரையிலும் தான் தண்ணி வருமாம். தண்ணீர்
பிடித்துவைக்கும் அண்டா, குண்டா,எல்லாமே பித்தளையில் தான் இருந்தது.
மாமியார் என்னிடம் லஷ்மி பாய்லரில் தண்ணி பிடிச்சு வை.காலேல வென்னீர்
போட சவுரியமா இருக்கும் என்றார்கள். 50 வருடம் முன்பு பூனாவில் 6
மாதங்கள் நல்ல பனியாக குளிராக இருக்கும். ஊர் பூரா ஏ, ஸி போட்டதுபோல 
அப்படி ஒரு ஜில்லிப்பா இருக்கும்.
பச்சைத்தண்ணீரில் குளிக்கவே முடியாது. எல்லாருமே வென்னீர்க்குளியல்
குடிக்கவும் வார்ம் வாட்டர்தான். எனக்கோ ஆத்தங்கரையில் முங்கி குளித்து
பழக்கம். யாரானும் வென்னீர்ல குளிச்சா அவங்களை ஏதோ வியாதிக்கரங்க
ளாகப்பார்ப்போம்.சரி அவங்க சொன்னாங்க, தண்ணீர் பிடிச்சுவை, நான் கீழ
கரி, தேங்கா நார் எல்லாம் போட்டு ரெடியா வச்சிருக்கேன் என்றாங்க.
நானும் தண்ணி வந்ததும் பக்கெட்ல பிடிச்சு பாய்லரின் நடுவில் பெரிய
ஹோல் இருந்த் இடத்தில் தண்ணியை ஊத்தினேன். உடனே எல்லா 
தண்ணியும் கீழ விழுந்து கரி, தேங்கா நாருடன் ஓட ஆரம்பித்தது. எனக்கு
எதுவுமே புறியலை. முன்ன பின்ன பாய்லர் பற்றி தெரிஞ்சிருந்தா தானே??வீட்டுக்காரரை கூப்பிட்டேன். ஏங்க தண்ணி யெல்லாம் இப்படி கீழ வழியுதே
ஏன் அப்படி என்றேன். அவரும் வந்து பாத்துட்டு அசடு, அசடு,தண்ணீயை
அங்கயா ஊத்துவாங்க? அங்கதான் நெருப்பு பத்தவைக்கணும்.என்று சொல்லி
பாய்லரின் மூடியைத்திறந்து எப்படி தண்ணீர் நிறப்பணும் என்று காட்டிக்கொ
டுத்தார். அதற்குள் மாமியாரும் அங்கே வந்தார்கள். என்னாச்சுடா சீனு?
இல்லைமா ல்ஷ்மிக்கு பாய்லர்ல தண்ணி எங்கேந்து ஊத்தணும்னு 
தெரியலை. அதான் சொல்லிண்டு இருக்கேன் என்றார். நல்லபொண்ணு போ
பாய்லர்ல தண்ணி ரொப்பகூட தெரியாம உங்காத்ல வளத்து 
விட்டிருக்காங்களே. என்று ஆரம்பித்து விட்டார்கள். இங்க ஆரம்பித்து என்
வீட்டு மனிதர்கள் மாமியாரின் வாயில் மாட்டிண்டு ரொம்பவே அவஸ்தை
பட்டார்கள்.அப்பரம் கரி தண்ணியெல்லாம் அலம்பி விட்டு துடைத்து சுத்தம் 
பண்ணினேன்.வீட்டில் வேலை செய்தே பழக்கம் இல்லியா ரொம்பவே அழுகை
யா வந்தது.வேர கரி, தேங்கா நார் எல்லாம்போட்டுகிழேவைத்தார்.வீட்டூக்காரர்
கல்யாண்ணமாகி போற பெண்ணிற்கு எந்தவித புத்திமதியோ, எப்படி வேலை
செய்யணும் என்றோ யாருமே அட்வைஸ் பண்ணி அனுப்பலை. பெரியவங்க்
கிட்ட மறியாதையா நடந்துக்கணும். அவங்க என்ன சொன்னாலும் கேக்கணும்
இவ்வளவுதான் சொன்னாங்க. நானும் அனாவசியமா யாரையும் எதுத்து பேசும்
ரகம் இல்லை. இரவு சாப்பாடு பக்கத்து வீட்டிலிருந்து கொண்டு தந்தார்கள்.
ஐயோ இன்னும் என்ன்ல்லாம் வார்த்தை வாங்கணுமோ என்று ஒரே பயம்.முதல் ரூமில் நாங்க இருவர்,மாமியார் மாமனார் படுக்கை. சமையல் ரூமில்
தாத்தா படுக்கை.அந்த சமயத்தில் எல்லாம் எனக்கு படுத்த உடனே ஜம்முனு
தூக்கம் வந்துடும். அன்னிக்கு வெல்வெட் புது மெத்தை,புது இடம், புது அனுப
வம் எல்லாமா சேந்து தூங்க விடலை. ஊர் நினைவு வேறு அடிக்கடி வந்து
கஷ்டப்படுத்தியது.பெரியவங்க முன்னாடி வீட்டுக்காரருடன் பேசக்கூட
பயம். இதுல எப்படி படுக்கை தூக்கம்லாம் முடியும்? எங்க ஆத்தா ரூம் கூட 
இன்னமும் நல்லா பெரிசா காத்தோட்டமா இருக்கும். இங்க வீட்ல ஃபேன் கூட
கிடையாது.பனி காலம் அதிகம் என்பதால் ஃபேனே தேவையில்லையாம்.
பலதும் நினைத்து திரும்பி ,திரும்பி புரண்டு கொண்டே இரவு போனது.

53 comments:

இராஜராஜேஸ்வரி said...

வீட்டு மனிதர்கள் மாமியாரின் வாயில் மாட்டிண்டு ரொம்பவே அவஸ்தை

பட்டார்கள்.
paavammthaan.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான நினைவுகளை தொகுத்து வழங்கி கொண்டிருப்பதற்கு நன்றிம்மா..

Mahi said...

போட்டோஸை இங்கே போட்டதுக்கு நன்றி லஷ்மிமா! :)

கூகுள் ரீடர்ல உங்க மலரும் நினைவுகளை படிச்சிட்டே இருக்கேன்.நல்லா இருக்குது.அந்தக்காலத்தில எப்படி இருந்திருக்கும்னு கற்பனை செய்ய சுகமா இருக்கு. :)

DrPKandaswamyPhD said...

ஐயோ, பாவம், கொழந்தே, அப்பறம் எப்படி சமாளிச்சேள்?

Sathish Kumar said...

//யாரானும் வென்னீர்ல குளிச்சா அவங்களை ஏதோ வியாதிக்கரங்களாகப்பார்ப்போம்.//

ஹா...ஹா...!! எனக்கு ப்ரெட் சாப்பிடறவங்க தான் நோயாளிகள். அப்புறம்...

பெண்களுடைய வாழ்க்கையின் மிக கஷ்டமான காலகட்டம் புகுந்த வீட்டிற்குள் நுழையும் நேரம் தானோ? அதிலும், யாரைப்பற்றியும் தெரியாத ஒரு புது இடத்தில் தன்னையும் இணைத்து, அனைவருக்கும் இணைந்து, அனுசரித்து, புரிந்து கொண்டு, சில நேரம் புரியவைத்து...அடேங்கப்பா..யோசிக்கும் போதே டையர்டா இருக்கே...! மை ஹாட்ஸ் ஆப் டு விமென்...!

asiya omar said...

படங்கள் அழகு.தொடர்ந்து எழுதுங்கள்..

ஸாதிகா said...

வெகு சுவாரஸ்யமாக படித்தேன்.

கோவை2தில்லி said...

புகைப்படங்களும் பகிர்வும் அருமை. மலரும் நினைவுகள் தொடரட்டும்.

raji said...

திருமணமாகி புகுந்த வீடு செல்லும் ஒவ்வொரு புது மணப்பெண்ணுக்கும்
ஒவ்வொரு வகையில் சங்கடங்கள் இருக்கவே செய்கிறது.அந்த
வகையில் ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்

வெங்கட் நாகராஜ் said...

:) பாய்லரில் தண்ணீர் விடும் விஷயம் நகைச்சுவையாக இருந்தது. தெரியாத இடம், புதிய மனிதர்கள் என்று வாழ்க்கையே திசை மாறிப் போனது போல இருந்திருக்கும் உங்களுக்கு! தொடருங்கள் உங்கள் மலரும் நினைவுகளை!!

அஹமது இர்ஷாத் said...

உங்க‌ள‌து ம‌ல‌ரும் நினைவுக‌ள் அருமைங்க‌..ப‌கிர்வு குட்..‌

ஹேமா said...

லக்‌ஷி அம்மா மூச்சு விடாம நினைவலைகள் தொடரை வாசிச்சேன்.எப்பிடித்தான் சமாளிச்சீங்களோன்னு நினைக்கவே மனசு சலசலன்னு...
இருக்கு.வாழ்க்கைன்னா
அதுவும் ஒரு பொண்ணுன்னா விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையை விரும்பிக்கொள்ளவேண்டியிருக்கிறது.ஆனாலும் இன்று நினைச்சுப் பார்க்கிறப்போ பெரிய சாதனை செய்து முடித்த திருப்தி நிச்சயமாய் உங்கள் மனதில் பெருமிதமாய் இருக்கும் என்றே நினைக்கிறேன் !

சிவகுமாரன் said...

அந்தக் காலத்தில் தான் எவ்வளவு துன்பங்கள் பெண்களுக்கு. இப்போது எவ்வளவோ மாறிவிட்டது.
படிக்க சுவையாய் இருக்கிறது உங்கள் எழுத்து

டக்கால்டி said...

அன்பு நண்பர்களே...
எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
டக்கால்டி.

DrPKandaswamyPhD said...

பதிவு நல்லா இருக்கு. சரியாக பாரா பிரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

டக்கால்டி said...

நண்பர்களே,
பழைய தளம் கிடைத்து விட்டது...சிரமத்துக்கு மன்னிக்கவும். யார் அழிக்க முயன்றார் என்ற விவரத்தை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். இதைப் பற்றி விளக்கமாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.

நன்றி,
டக்கால்டி

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

வேடந்தாங்கல் கருன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

டாக்டர் பி.கெ. கந்தஸ்வாமி பி ஹெச் டி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

சதீஷ், நாங்க கூட ப்ரெட் சாப்பிடரவங்களை ஜுரக்காராளாதான் பாப்போம். இப்ப வேடிக்கை என்னன்னா
எல்லார்வீட்டிலும் ப்ரேக் ஃபாஸ்டே ப்ரெட்டாதான் இருக்கு.

Lakshmi said...

ஆஸியா ஓமர், வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

ஸாதிகா, நன்றிம்மா.

Lakshmi said...

கோவை2 தில்லி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ராஜி, வருகைக்கு நன்றி. பெண்களுக்கு ஒருவித அவஸ்தை என்றால் ஆண்களுக்கு வேறுவித அவஸ்தையும் உண்டு. பொண்டாட்டி பக்கம் பேசரதா, அம்மா பக்கம் பேசரதான்னு தெரியாம முழிப்பாங்க.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

அஹமது இர்ஷாத் வருகைக்கு நன்றிங்க.

Lakshmi said...

ஹேமா நீ சொல்வது உண்மைதான். ஆனா எதோ சாதிச்சதாக எல்லாம் இல்லை.

Lakshmi said...

சிவகுமாரன், வருகைக்கு நன்றிங்க.

Lakshmi said...

டக்கால்டி, வருகைக்கு நன்றிங்க.

Lakshmi said...

டாக்டர் கந்தஸ்வாமி எப்படி பாரா பிரிக்கணும் சொல்லித்தரீங்களா.

நேசமுடன் ஹாசிம் said...

நலம்பெற பிரார்த்தனைகள்
தொடருங்கள் நினைவுகளை


சீனாஅவர்களின் கேள்வி பதில் பார்த்த நேரம் உங்க பக்கத்திற்கு வந்து செல்ல நாடினேன்
நன்றி

Lakshmi said...

நேசமுடன் ஹாசிம் வருகைக்கு நன்றிங்க,

Nagasubramanian said...

oh ! facebook ல வேற இருக்கீங்களா?! உங்க profile name என்னங்க? என்னோடது Nagasubramanian Ramamoorthy . request அ தட்டி விடுங்க.

Lakshmi said...

நாகசுப்ரமனியன், ஃபேஸ்புக், ஆர்குட்
எதையும் விட்டு வைக்கலை. எல்லாத்லயும் மூகை நுழைச்சிருக்கேன். echumi இதுதான் ப்ரொபைல் நேம்.

Anonymous said...

ஆகா...பிரமாதம்.உங்கள் குணம் போலவே ' போட்டோ' க்களும்

அரசன் said...

நினைவுகளை எங்களோடு

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க அம்மா

Lakshmi said...

நையாண்டி மேளம், முதல் வருகையா?
அடிக்கடி வாங்க.

Lakshmi said...

அரசன் வருகைக்கு நன்றி.

Ramani said...

உண்ணுதலை விட அசைபோடுவதில் சுகம் அதிகம்
கொஞ்சம் தற்போதைய நிலைகளுடன் ஒப்பீடு செய்து பார்த்தால்
அதிக சுவரஸ்யங்கள் இருக்கும்
எங்களையும் அந்த நினைவுகளில் மூழ்கச் செய்கிறது
உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள்

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கு நன்றி.
உங்க கருத்துக்களை மிக அழகா சொல்லி இருக்கீங்க.

அமைதிச்சாரல் said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்..

http://amaithicchaaral.blogspot.com/2011/03/blog-post_22.html

அமைதிச்சாரல் said...

எல்லா நினைவுகளையும் படிச்சிட்டேன்ம்மா.. ஆரம்பகால அவஸ்தைகளையும் நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க :-))

Lakshmi said...

அமைதிச்சாரல், வருகைக்கு நன்றி,
தொடர் பதிவெல்லாம் எழுதும் அளவுக்கு எனக்கு என்ன தெரியுங்க?
ஆனாலும் கூப்பிட்டீங்களே எழுத முயற்சி செய்யரேன்.

பலே பிரபு said...

அப்போதே இந்தியாவில் ஃபேன் இருந்ததா அம்மா? ஆச்சர்யம்.

Lakshmi said...

பிரபு, யாரு வீட்லயுமே ஃபேன் இல்லைனுதானே சொல்லி இருக்கேன்.

HVL said...

எல்லாவற்றையும் நேரே நின்று பார்த்த உணர்வு ஏற்பட்டது. நல்லா சொல்லியிருக்கீங்க!

Lakshmi said...

HVL வருகைக்கு நன்றிங்க. அடிக்கடி வாங்க.

Lakshmi said...

HVL வருகைக்கு நன்றிங்க. அடிக்கடி வாங்க.

மாதேவி said...

நன்றாகச் சொல்கிறீர்கள். தொடர்கிறேன்.

Lakshmi said...

மாதேவி வாங்க.

கீதா சாம்பசிவம் said...

நல்லவேளையா பாய்லரை எல்லாம் பார்த்துட்டேன், இதுக்குக் காரணம் எல்லா உறவினர் வீடுகளிலேயும் போய் இருந்ததுதான். லீவுக்குனு மட்டுமில்லாமல் உதவிக்குனும் போய் இருந்திருக்கேன். அதனால் பல அனுபவங்கள்; பல மனிதர்கள்; பல உறவுகள்; புரிதல்கள்.

ரொம்ப அழகாய் இருக்கீங்க. இப்போவும் அந்த கம்பீரம் நிறையவே இருக்கு. சும்மா வெறும் பேச்சுக்கு உங்களை ராஜகுமாரினு உங்க வீட்டிலே சொல்லலை.

Lakshmi said...

கீதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .