Google+ Followers

Pages

Thursday, April 21, 2011

மலரும் நினைவுகள்.(10)

புது வேலையில் சேர ஒருமாதம் அவகாசம் இருந்தது. ஏற்கனவே
 பார்த்துவந்தவேலையும் செண்ட்ரல் கவர்மெண்ட் வேலைதான்.
 இன்னிக்கு சொல்லி நாளை வேலையை விட முடியாது. சில பார்
 மாலிட்டிஸ் எல்லாம் உண்டு. ஒருமாத நோட்டீஸ்கொடுக்கணும்.
 அந்த ஒருமாதமும் வேலைக்குப்போகணும்.எல்லாம் முறைப்படி
 செய்தார். அப்படி ஒரு நாள் காலை வேலைக்கு கிளம்பி போனதும்
 வீட்லேந்து 5, கிலோமீட்டர் உள்ள டெக்கன் ஜிம்கானா என்னுமிடத்தில்
 சைக்கிள் செயின் கட் ஆச்சு. சைக்கிளை அங்கு ஸ்டேண்டிலேயே
 வச்சுட்டு பஸ் பிடித்து கடக்வாசலா ஆபீஸ்போனார்.  கடக்வாசலாவில் பெரிய டேம் கட்டி தண்ணீர் தேக்கி வைச்சி பூனா
 முழுக்க அங்கேந்துதான் தண்ணீர் சளை பண்ணினார்கள். காலை 10-
 மணிக்கு அந்தடேம் பெரும் சப்த்ததுடன் உடைந்து போய் தேக்கி வைத்
திருந்த தண்ணீர் எல்லாம் ஊரை நோக்கி முழு வேகத்தில் ஓடிவர ஆரம்
பித்தது. ஏற்கனவே டேம் சுவற்றில் சின்ன விரிசல் விழுந்திருக்கு அது
 யாரும் கவனிக்காம இருந்திருக்கா. ஆக்ரோஷமாக தண்ணீர் முழுவேகத்தில்
 ஓடி பூனா நகர் முழுவதையும் சுற்றி வளைத்துக்கொண்டு ஓடியது.
 யாருமே இதுபோல ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கமுடியாது.
 யாருக்கும் என்ன செய்வதுன்னு புரியவே இல்லை. மனிதர்கள் பிராணிகள்
 பறவைகள் கட்டிடங்கள் எல்லாம் வெள்ளத்தால் அடித்துவரப்பாட்டது.


ஊர்பூராவும் அழுகை கூச்சல் குழப்பம். நாங்க இருந்தது ராஸ்தாபேட் எனும் பகுதி. கிழமைகளின் பெயரிலேயே எல்லா பேட்டைகளும் இருந்தது. ராஸ்தா
பேட் பூராவும் தமிழர்கள்தான் நிறையா இருந்தார்கள். பக்கத்திலேயே சின்னதாக ஒரு பிள்ளையார்கோவிலும் இருந்தது. மிகவும் சக்தி வாய்ந்த
 பிள்ளையார் என்பார்கள். எங்கள் பகுதியும் தாழ்வான பகுதியில் தான் இருந்தது. எங்க பகுதியை சுற்றிக்கொண்டு ஓடிய வெள்ளம் எங்க பகுதியில்
உள்ளேயே வராமல் ஒரு தீவுமாதிரி இருந்தது.  ரோடுகளில் ஜனங்கள் கதறி
ஓடுவது, யாரு வீட்டில் யாரு கானாம போனாங்கன்னு தேடல் என்று ஊரே
பெரிய பரபரப்பா ஆனது

 நிறைய, நிறைய உயிர் சேதம், பொருள் சேதம் செய்தபடி வெள்ளம் ஆக்ரோஷமாக ஓடீக்கொண்டிருந்தது. பூனாவில் கடல் கிடையாது.
 ஓடும் தண்ணீரின்வேகம் எங்கு போய் அடங்குமோன்னு ஒவ்வொருவரும்
திகைத்துப்போனார்கள்.பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் பொம்மை கட்டிடங்கள் போல தண்ணீரில் மிதந்தது. வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட உசிரில்லாத மனிதர்களும் விலங்குகளும் காணசகிக்காத காட்சிகள்.
ஆளாளுக்குஒன்னொன்னாகதைகட்டிபீதியைமேலும்கிளப்பிக்கொண்டிருந்தார்கள். உண்மையான நிலவரம் என்னன்னு யாருக்கும் சரியா தெரிந்திருக்கவில்லை. வீட்டுக்காரர் கடக்வாசலாவில் எப்படி இருக்காரோன்னு மனசு பூரா கவலை அப்பிக்கொண்டது. நான் அழுதா குழந்தைகளும் அழுவார்களே என்று அடக்கிக்கொள்ளவேண்டி இருந்தது.

மாமியார் ஒரு புறம் லஷ்மி சீனு வந்தானாடின்னு கேட்டுகிட்டே இருந்தாங்க.
 நாங்க கவலைப்பட்டது போல கடக் வாசலாவில் அவருக்கும் இருப்பே
 கொள்ளலை. உரைச்சுற்றி வெள்ளம் ஓடுதே, வீட்ல அவங்களுக்கெல்லாம் என்ன ஆச்சோன்னு தவிச்சு போயிருக்கார். ஊர்பூர தண்ணீர்வந்துட்டதால
 கரெண்ட் கட் ஆச்சு எலக்ட்ரிக்சிட்டியே ஸ்தம்பித்துபோச்சு. எல்லா மே
 தண்ணீல அடிச்சுண்டு போச்சு. எப்படி எப்போ கரெண்ட் வரும்னே சொல்ல
முடியாது, தேக்கி வைத்த தண்ணிர்பூராவும் வெள்ளமா வடிஞ்சுட்டதால
 ஒருவீட்டிலும் குடிதண்ணிவரவே இல்லை ஊர்பூரா தண்ணீல முதக்குது. குடிக்க ஒருவாய்த்தண்ணிக்கு ஆலாபறக்க வேண்டிய நிலை. இப்ப எழ்தும்
போதுக்கூட அந்த நினைவுகளில் உடம்ப்பே நடுங்குது குட்டி, குட்டியா 5
 குழந்தைகளையும் மாமியாரையும் வச்சுண்டு நான் தவித்ததவிப்பு சொல்ல
முடியாது. அப்பா.

ரெண்டு நாளி கழிச்சு வெள்ளம் வடிந்தது. அந்த ரெண்டு நாளும் நரக வேதனை
 அனுபவிச்சுட்டோம்.ஒருவேலையும் செய்யவாமனசுவல்லை இவர் என்ன ஆனாரோன்னு தெரியலை. யாருகிட்ட கேக்கமுடியும் அப்படியும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து லஷ்மி சீனுவுக்கு எதுவும் ஆகி இருக்காது பத்தி
ரமா வந்துடுவன் என்று ஆறுதல் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். லஷ்மி
 நம்மபகுதில சேதம் கம்மி,சோம்வார்பேட்,மங்கல்வார்பேட், புத்வார்பேட் குரு
வார்பேட் ஷ்க்ரவார் பேட் சனிவார்பேட் ரவி வார்பேட்லாம் ரொம்ப சேதம்.
 வீடு பாத்திர பண்டங்கள்சாமான் செட்டுக்களை இழந்து பரிதாபமா எவ்வளவு
 பேரு ரோட்ல அழுதுகிட்டே இருக்காங்க தெரியுமா?

அவங்ககதில்லாம்என்னாகும்மகாபாவம்என்றுதான்பேசிக்கொண்டிருந்தார்கள். ரெண்டாம் நாள் இரவு இவர் அலுத்து சலித்து பேண்ட் ஷர்ட்டெல்லாம்
கிழிஞ்சு தலைமுடில்லாம்கலைஞ்சு பரிதாபகோலத்தில் வந்தார். எங்களை
 நல்லபடியா பார்த்ததும் வாய்விட்டு ஓன்னு ஒருஅழுகை. அவரை சமாதானப்
படுத்தவேமுடியலை. கடக் வாசலாவில் இருந்து பார்க்கும்போது ராஸ்தாபேட்
 பூரா வெள்ளக்காடா தெரிஞ்சுது , நம்ம பகுதியோ தாழ்வான பகுதில இருக்கு.
 உங்களுக்கெல்லா என்னொம்மோ ஆச்சுன்னு கவலையா ஆச்சு தெரியுமா?
உங்களை யெல்லாம் முழுசாபாத்ததும்தான் எனக்கூசிரே வந்ததுன்னு ஒவ்வொருவரையும் கட்டிப்பிடிச்சுண்டு ஒரே அழுகை. கொஞ்சம் சாந்தமான
பிறகு அவரைப்பற்றி சொன்னார்.கடக்வாசலாவிலிருந்து நடந்தேவந்தேன்.
 ரோடு பூராமண்ணும் சகதியுமா இருக்கு பஸ் ஆட்டோ எதுவுமே ஓடலை.
வேரவழி 10 கிலோமீட்டரையும் நடந்தே வந்தேன் ,ரெண்டு நாளா சாப்பிடலை
என்றார். பாவம் அதுகூட கேட்டுக்கலையேன்னு அவசரமா உப்மா பண்ணி
 கொடுத்தேன் உப்மாவே பிடிக்காது அவருக்கு. பசில எதுவுமே சொல்லாம
கடகடன்னு சாப்பிட்டார்.குழந்தைகளும் அப்பாவை பார்த்த சந்தோஷத்தில்
 விளையாடப்போயிட்டார்கள். மாமியாரும் நிம்மதியா ஆனாங்க.

அப்பரமும் ஒருமாசம் வீட்ல் தண்ணி, கரெண்ட் ரெண்டுமே கிடையாது.
 4,5 கிலோ மீட்டர்தள்ளி ஆலந்தின்னு ஒரு நதி ஓடிண்டு இருந்தது அங்கு
போய் எல்லார்துணிகளை யும் துவத்து ரெண்டுமூனு வாளிகளை சைக்கி
ளில் கட்டிண்டு தண்ணீர் எடுத்து வருவார், பழைய சைக்கிள் வெள்ளத்தோடு போச்சு புதுசைக்கிள் வாங்க வேண்டி வந்தது.

47 comments:

பாட்டு ரசிகன் said...

தங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி..

பாட்டு ரசிகன் said...

கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

asiya omar said...

வெள்ளத்தையும் சேதத்தையும் நேரில் பார்த்த மாதிரி இருக்கு,நல்ல படியாக சமாளித்து இருக்கீங்க,மிக சிரமும் கூட லஷ்மிமா..

Madhavan Srinivasagopalan said...

படிக்கவே கஷ்டமா இருக்கு..
எப்படித்தான் அதையெல்லாம் கடந்து வந்தீங்களோ ?
உங்கள் பொறுமை, எண்ணம், செயல்.. இவையனைத்தும் நல்லதாகே இருந்தது(இருக்கிறது) போலும் --- அதான் உங்களனைவருக்கும் தீது நேராது இருந்ததாக நான் நினைக்கிறேன்..

இராஜராஜேஸ்வரி said...

அந்த ரெண்டு நாளும் நரக வேதனை
அனுபவிச்சுட்டோம்.//
இறையருளால் மீண்டு வந்திருக்கிறார்..

gayathri said...

என்றார். பாவம் அதுகூட கேட்டுக்கலையேன்னு அவசரமா உப்மா பண்ணி
கொடுத்தேன் உப்மாவே பிடிக்காது அவருக்கு. பசில எதுவுமே சொல்லாம
கடகடன்னு சாப்பிட்டார்.குழந்தைகளும் அப்பாவை பார்த்த சந்தோஷத்தில்
விளையாடப்போயிட்டார்கள். மாமியாரும் நிம்மதியா ஆனாங்க.

athira said...

ஒவ்வொரு தொடரையும் மிக அருமையாகத் தொடர்றீங்க, படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கு.

Sathish Kumar said...

படிக்கும் போதே ரொம்ப பயமா இருக்கே, எப்படி சமாளிச்சீங்களோ...! அவருடைய கண்ணீர், பசி...ம்ம்ம்ம்...ரொம்ப நெகிழ்வா இருக்குதுங்க...!

எல் கே said...

அப்பா என்ன கஷ்டம். அனுபவிச்சாதான் அந்த கஷ்டம் புரியும்

மாதேவி said...

படிக்கும்போதே வெள்ளம் எம்மையும் அள்ளிக்கொண்டுபோய்விடுமோ என நடுக்கமாக இருந்தது.

இரண்டுநாட்களும் பிள்ளைகளைத் தனியே வைத்துக்கொண்டு உயிர்ப் பயத்துடன் வாழ்வது என்பது இலகுவானதா...

ரொம்ப சிரமங்களை எல்லாம் அனுபவித்திருக்கிறீர்கள்.

Mahi said...

கடுமையான வெள்ளமா இருந்திருக்கு.நினைக்கவே பயமா இருக்கு.

ஒவ்வொரு நிகழ்வையும் நினைவுவைத்து அழகா சொல்லறீங்க.

ஸாதிகா said...

திகில் கதைபடித்தைப்போலுள்ளது லக்‌ஷ்மிம்மா.

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா உங்களுக்கு அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுங்கல்

Jaleela Kamal said...

பதிவு பாதி தான் படிச்சேன் மீதிய பிறகு வந்து படிக்கிறென்

Lakshmi said...

பாட்டு ரசிகன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ஆஸியா ஓமர், இவ்வளவு வருஷம் ஆகியும் கூட இப்பவும் நீங்கல்லாம் உணரும்படி எழுதவருதே?

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்றி.கருத்துக்கும்.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி, இறையருள் இல்லாம எதுவுமே இல்லைதான்.

Lakshmi said...

காயத்ரி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

அதிரா மிகவும் நன்றி.

Lakshmi said...

சதீஷ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

கார்த்தி, அனுபவிச்சவங்களுக்குத்தான்
அந்தக்கஷ்டங்கள் புரியும் உண்மைதான்.

Lakshmi said...

மாதேவி, உண்மையிலேயே ரொம்பவே க்‌ஷ்டமான நாட்கள் அதெல்லாம்.

Lakshmi said...

மஹி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

ஸாதிகா, நன்றிம்மா.

Lakshmi said...

ஜலீலா வருககைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ஜலீலா எனக்கெல்லாம் எதுக்கும்மா
அவார்டெல்லாம்? ரொம்ப நன்றி.

யாதவன் said...

அருமையான நினைவுகள்

Lakshmi said...

நன்றி யாதவன்.

யாழ். நிதர்சனன் said...

அருமையாக இருக்குமா.வாழ்த்துக்கள் !

யாழ். நிதர்சனன் said...

வேம்பின் மருத்துவக் குணங்கள்
http://tamilaaran.blogspot.com/2011/04/blog-post_9648.html

Lakshmi said...

யாழ் நிதர்சன் வருகைக்கு நன்றிங்க.

கோவை2தில்லி said...

நினைத்தாலே கஷ்டமாக இருக்குமா.

Lakshmi said...

கோவை2 தில்லி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

சிலவருஷங்களுக்கு முன்பான மும்பை வெள்ளத்தை நினைவுபடுத்திடுச்சு இந்த இடுகை. அப்பவும், பத்லாப்பூர் அணை உடையப்போவுதுன்னு ஒரு வதந்தி கிளம்பி, ரெண்டு நாளா ஒரே மனக்கஷ்டம்..

Lakshmi said...

அமைதிச்சாரல் அப்பவும் நான் அம்பர்னாட்லதான் இருந்தேன். ரெண்டு நாளா?? ஒரு வாரம் குடிக்கத்தண்ணி கிடையாது வீட்டை விட்டு கீழ இறங்கவே முடியாம திண்டாடி இருக்கேன்.

சிவகுமாரன் said...

நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அவர் அழ, நீங்கள் சமாதானப்படுத்த , தங்கள் மன உறுதி பிரமிக்க வைக்கிறது

Lakshmi said...

சிவகுமாரன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வெள்ள அனுபவம் கிட்டியதில்லை. ஆனால் இப்பொழுது உணர முடிகிறது. நல்ல பதிவு.

ஹேமா said...

எத்தனை போராட்டம்.நினைக்கவே நடுக்கமாயிருக்கம்மா !

riviya said...

உங்க கூடவே நின்னு பார்த்த மாதிரி இருக்கு.

Lakshmi said...

dr,முருகானந்தன் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ஹேமா, வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

ரிவியா, வருகைக்கு நன்றிம்மா.

Nagasubramanian said...

தகவல் தொலைத்தொடர்பு குறைந்த அந்த நாட்களில் நீங்கள் சந்தித்த பிரச்சனையின் தகவல் முக்கியமான பதிவே!

Lakshmi said...

நாக சுப்ர மனியன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

61-ஆம் வருஷமா? அப்போ என் கணவர் புனாவுக்கு வரலை. நினைச்சுப் பார்க்கவே கஷ்டமா இருக்கு. எப்படியான சோதனைகளை எல்லாம் தாண்டி வந்திருக்கீங்க? பாண்டிய நாட்டு மக்களுக்கே குறிப்பாய்ப் பெண்களுக்கு மனோ தைரியம் ஜாஸ்தினு சொல்வாங்க. அது சரியாத் தான் இருக்கு. நல்ல மனோதிடம் தான். கடவுள் காத்துக்கொண்டு வருகிறார். எல்லாக் கஷ்டங்களில் இருந்தும் அவர் துணை இல்லாமல் கடப்பது ஏது?

என்னை ஆதரிப்பவர்கள் . .