Google+ Followers

Pages

Thursday, April 14, 2011

மலரும் நினைவுகள்.(9)எப்படியோ முட்டி, முட்டி ஒன்னொன்னா கத்துகிட்டேன். ஒன்னுமேதெரியாம
 வந்த நான் ஓரளவுக்கு எல்லா வீட்டு வேலைகளும் தெரிந்து கொண்டேன்.
 அடுத்தவருஷம் மாமனாருக்கு ஹெல்த் ப்ராப்ளம் ஆகி ஆஸ்பிடலில் அட்மிட்
 செய்யும்படி ஆச்சு. ஒருவாரமா யூரின்போகாம வயறு வீங்கி ரொம்பவே கஷ்ட்டப்பட்டார். ஆஸ்பிடலில் ஆபரேஷனும் ச்ய்து பார்த்தார்கள். எதுவும்
 சரி ஆகலை. ஆஸ்பிடலிலேயே போயிட்டார். அவரின் கடைசி காரியங்கள்
 எல்லாம் முறைப்படி செய்தோம். மாமனார் சிறுக, சிற்க சேர்த்துவைத்த பணம் எல்லாமே அவரின் ஆஸ்பிடல் செலவுகளுக்கும் அவரின் கடைசி காரியங்களுக்குமே சரியாப்போச்சு. இப்ப கையில் சேவிங்க்ஸ் என்று எதுவுமே
 இல்லை.
மாமனாரின் கடைசி காரியங்களுக்கு என் வீட்டிலிருந்தும் சொந்தக்காரங்க
 வந்தாங்க. மாப்பிளைக்கு மோதிரம் போடனும், பொண்ணுமாப்பிளைக்கு கோடி எடுக்கணூம் ஊருக்குப்போட பத்துபட்சணம் எல்லாம் செய்யணும்
என்று அவர்களுக்கும் ஏக ச்செலவு. தாத்தா எல்லா செலவையும் முறையாக பண்ணினார். தாத்தாவுக்கும் பாட்டிக்கும் நான் இப்படி கஷ்ட்டப்பட்டு வீட்டு
வேலைகள் செய்வதைப்பார்த்து தாங்கவே இல்லை. நீ இப்படி கஷ்டப்படரியேன்னு சொல்லிச்சொல்லி ரொம்ப வேதனைப்பட்டார்கள்.
 தாத்தாதான்(இங்க உள்ளவர்) அவர்களை சமாதானப்படுத்தினார். பெண்குழந்தைன்னா கல்யாண்மாகி வேறுவீடு போயி பொறுப்புகளை சுமந்து
 தானே ஆகணும்.
உங்க பேத்தி ரொம்ப புத்திசாலி, அவளைப்பற்றி கவலையே படாதேங்கோனு
சமாதானம் சொல்லி அனுப்பினார். எல்லா கரியங்களும் முடிந்து வீடு சகஜ
 நிலைக்கு வரவே 2 மாசம் ஆனது.இதுவரையிலும் வீட்டு வரவு செலவு
சாமான்கள் காய்கறி பால் எல்லாம் மாமனார் பொறுப்பில் இருந்தது. இவர்
சம்பளம் வாங்கினதும் அப்பாவிடம் கொடுத்துடுவர். மாசத்துக்கு பாக்கெட் மனியாக 5 ரூபா அவ அப்பா கொடுப்பார். அதுதவிர என்ன வரவு, என்ன செலவு
 என்கிற விவரம் எல்லாம் இவருக்குத்தெரிந்திருக்கவைல்லை.பொறுப்பு தெரியாமலே வளர்ந்திருந்தார். தாத்தாவும் பொண்ணுவீட்ல வந்து ஒண்டிட்டு இருக்கோமென்கிர தாழ்வு மனப்பான்மையில் பண விவகாரங்களில்தலை
இடுவதே இல்லை.
இவருக்கு என்ன சாமான் என்ன விலைன்னுகூட தெரிஞ்சிருக்கலை. தவிர
அந்தகால கட்டத்தில்தான்ரூபா, அணா, பைசா எல்லாம் மாறி, நயா பைசா
 பழக்கத்தில் வந்திருந்தது. எனக்கோ ரூபாயும் தெரியாது நயா பைசாவும்
தெரியாது. மாமியாரோ பரப்ரம்மமா இருப்பா. இந்த நிலமையில் இவர் கயில்
குடும்ப பொறுப்பு வந்தது.சேவிங்க்ஸ் என்று எதுவும்கிடையாது. இவருக்கோ
100 ரூபாதான் சம்பளம். இதில் அடுத்த வருஷமே ஒரு பெண்குழந்தை வேறு
 பிறந்தது. யாருக்காக எந்தக்காரியம் நிக்கும். அதுபாட்டுக்கு நடந்துண்டே தான்
இருந்தது.செலவுகளை சமாளிக்கவே ரொம்ப திணறிப்போனார். அதுக்கு
அடுத்தவருஷம் தாத்தாவும் போயிட்டார். அதுக்கும் ஏகச்செலவு. வைதீக
 காரியங்கள் முறைப்படி செய்துதான் ஆக்ணும் அவருக்கோ வேறு குழந்தைகள் கிடையாது நாங்க தான் எல்லா காரியமும் பண்ணனும்.
சாவு காரியங்கள் மட்டும் எல்லாம் ஒழுங்காகபண்ணித்தான் ஆகணும். இல்லைனா பிதுர்சாபம் வரும்னு சொல்லியே எல்லா காரியங்களும் வாத்யாரைக்கூப்பிட்டு முறையாக பண்ணினோம். செலவுக்கு பணம் ஏதுன்னு
 இவர்கிட்ட கேக்க பயம். எப்படி சமா ளிச்சாரோன்னு மனசு பூரா தவிப்பு.
தாத்தாமூலமாக ஓரளவு விஷயங்கள் தெரிந்து கொண்டது ரொம்ப உபயோ
கமா இருந்தது. இவரிடம் ரொம்ப கெஞ்சி கேட்டி ஒரு கெரசின் ஸ்டவ் வாங்கி தரச்சொன்னேன். கரி அடுப்பில் பாடு பட முடியவே இல்லை. இவரும் என்
கஷ்டம் புரிந்து ஒரு பம்ப் ஸ்டவ் பித்தளையிலும் ஒரு திரிஸ்டவ்(உம்ராவ்)
வாங்கி தந்தார். முதல்ல கரிமூட்டைகள் கரி அடுப்புகள் எல்லாம் தூக்கி பரண்
மேல போட்டேன். ரெண்டு ரூமையும் ஒயிட் வாஷ் பண்ணி ஓரளவு சுத்தம்
பண்ணினேன்.இந்த பாய்லர், பித்தளை டப்பாக்கள் எல்லாம் வந்தவிலைக்கு
போட்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டப்பாக்கல் வாங்கி கிச்சனில் அடுக்கிவைத்தேன்.
கிச்சன் பாக்கவே பள பளன்னு ஆச்சு. அப்பாடா தினமும் அடுப்பு சாம்பல்
 துடைத்து க்ளீன்பண்ற வேலை இனிமே இல்லைப்பான்னு நிம்மதியா இருந்தது.அடுத்தடுத்து பிள்ளையும் பெண்ணுமாக 5 குழந்தைகள் வரவு
12 வயசுல கல்யாணம் ஆகி 20 வயசுல 5 குழந்தைகலும் ஆச்சு. குடும்பம் பெருகப்பெருக செலவு சமாளிக்க முடியலை. வேறு வேலைக்கு முயற்சி
செய்தார். 5 கிலோ மீட்டர் தூரத்தில் கர்க்கின்னு ஒரு இடத்தில் ஆர்டினன்ஸ்
 பேக்டரியில்(வெடிமருந்து தொழிற்சாலை) ஆள் எடுப்பதாக கேள்வி பட்டு
 அப்ளை பண்ணினார். இண்டெர் வ்யூ எல்லாம் பாசாகி அப்பாயின்மெண்ட்
ஆர்டரும் வந்தது. அப்பாடா இனிமேல 10+10 --20 கிலோ மீட்டர் சைக்கிள்
மிதிக்கவேண்டாம்னு சொன்னார். ஐயோபாவம்.44 comments:

அமுதா கிருஷ்ணா said...

20 கி.மீ தினமும் சைக்கிளா? புது கிச்சன் நேர்ல பார்க்கிற மாதிரி இருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

அப்போதெல்லாம் 20 கிமீ சைக்கிள் பயணம் இப்போதோ தினமும் பல மைல் தூரம் அலுவலகத்திற்காய் கார் பயணம். இயற்கையை மாசுபடுத்திக்கொண்டு இருக்கிறோம். உங்கள் நினைவுகளிலிருந்து எங்களுக்கெல்லாம் நல்ல பல விஷயங்கள் தருவதற்கு மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அப்போதெல்லாம் 20 கிமீ சைக்கிள் பயணம் இப்போதோ தினமும் பல மைல் தூரம் அலுவலகத்திற்காய் கார் பயணம். இயற்கையை மாசுபடுத்திக்கொண்டு இருக்கிறோம். உங்கள் நினைவுகளிலிருந்து எங்களுக்கெல்லாம் நல்ல பல விஷயங்கள் தருவதற்கு மிக்க நன்றி.

கே. பி. ஜனா... said...

அந்தக் காலம் கண் முன் விரிகிறது... ஆம், கெரசின் ஸ்டவ் வாங்கியதே பெரிய விஷயமாக இருந்தது எங்களுக்கும் அப்போது...

raji said...

ரொம்ப கஷ்டங்கள் அனுபவிச்சிருக்கீங்க பாவம்

பலே பிரபு said...

கடைசியில் ட்விஸ்ட்?????
அடுத்ததுக்கு காத்திருக்கிறோம்........

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள்..

யாழ். நிதர்சனன் said...

தமிழாரனின் புதுவருட வாழ்த்துக்கள்

HVL said...

அப்புறம்? இப்படி பாதியில நிறுத்திட்டீங்களே!

எல் கே said...

//2 வயசுல கல்யாணம் ஆகி 20 வயசுல 5 குழந்தைகலும் ஆச்சு.//

அப்பாடி .. பெரிய விஷயம்தான்

மாதேவி said...

இன்பம் துன்பம் கலந்து ஓடிட்டே இருந்திருக்கிறது.

சித்திரை புதுவருட வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

சுமைகள் சுமந்த நினைவுகள்,...

Anonymous said...

பக்கத்தில இருந்து நீங்க பேசறது போல இருக்கு பாட்டிம்மா

Lakshmi said...

அமுதா வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

கே.பி. ஜனா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ராஜி வருகைக்கு நன்றி

Lakshmi said...

பலேபிரபு, வருகைக்கு நன்றி.

Lakshmi said...

கருன் நன்றி.

Lakshmi said...

யாழ். நிதர்சனன், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

H.V .L. வருகைக்கு நன்றி.

Lakshmi said...

கர்த்தி, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

அனாமிகா வருகைக்கு நன்றிம்மா.

thirumathi bs sridhar said...

நீங்க ரொம்ப கிரேட்டும்மா..

Lakshmi said...

திருமதிஸ்ரீதர், வருகைக்கு நன்றிம்மா. ஒரு க்ரேட்டுமில்லை. எல்லாரையும்போல சாதா மனுஷிதான்,

அந்நியன் 2 said...

மலரும் நினைகள் என்று சொல்வதா அல்லது மறைந்த சுமைகள் என்று சொல்வதானு புரியவில்லைமா.

வாழ்க்கை என்பது இன்பமே என்று, எண்னி இருக்கும் பெண் சமுதாயம் உங்கள் வாழ்க்கையின் சுவரஷ்யத்தை படிக்கும் போது நமது வாழ்க்கை பரவா இல்லைனுதான் சொல்லுவார்கள்.

இல்லை..இல்லை சொல்லனும்.

ஹேமா said...

20 வயசில 5 குழந்தைகளா....
அப்பாடி நினைச்சாலே பயமா
மயக்கமா வருதும்மா.எப்பிடித்தான் சமாளிச்சீங்களோ !

Lakshmi said...

அந்நியன் 2 வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

ஹேமா இப்ப எனக்கு நினைச்சுப்பாக்கும்போது மூச்சு முட்டுது.

ஸாதிகா said...

அந்தகாலத்திற்கே அப்படியே அழைத்து சென்றுவிட்டீர்கள் லக்‌ஷ்மியம்மா.

Lakshmi said...

ஸாதிகா, வருகைக்கு நன்றிம்மா.

சிவகுமாரன் said...

அனுபவ பாடங்கள்.
இப்போதுள்ள பெண்களுக்கு இவ்வளவு பொறுமை இருப்பதில்லை.

Lakshmi said...

sivakumaran, thanks

கோவை2தில்லி said...

பாட்டியிடம் அந்த காலத்து கதைகளை கேட்பது போல் உள்ளது.
ஒரு வழியா கிச்சன் பளிச்னு ஆச்சா! தொடருங்கம்மா….

Lakshmi said...

kovai2thilli varukaikku nanringa

Sathish Kumar said...

//அப்பாடா இனிமேல 10+10 --20 கிலோ மீட்டர் சைக்கிள்
மிதிக்கவேண்டாம்னு சொன்னார். ஐயோபாவம்.//

நூறு ரூபா சம்பளம். தினசரி இருபது கிமி சைக்கிள் பயணம்...! உங்க வார்த்தை மிகச் சரி...! ஐயோபாவம்....!

Lakshmi said...

sathish kumar varukaikku nanRI

Jaleela Kamal said...

என் பாட்டி மாமியாருக்கு எல்லாம் அபப்டி தான் 20 வயதில் 9 குழ்ந்தைகள், 8 குழந்தைகள்..
அவர்ஙக் ஓர்படிக்கு 11 இது எல்லாம் இப்ப்டி தான்..

Lakshmi said...

ஆமாங்க ஜலீலா, அந்தக்காலத்ல அப்படித்தான்.

asiya omar said...

இந்த முக்கியமான இடுகையை இப்ப தான் வாசிக்கிறேன்,இன்பமும் துன்பமும் தான் வாழக்கை,லஷ்மிமா அருமையாக எழுதிருக்கீங்க...

asiya omar said...

இந்த முக்கியமான இடுகையை இப்ப தான் வாசிக்கிறேன்,இன்பமும் துன்பமும் தான் வாழக்கை,லஷ்மிமா அருமையாக எழுதிருக்கீங்க...

Lakshmi said...

ஆஸியா வருகைக்கு நன்றிம்மா.

என்னை ஆதரிப்பவர்கள் . .