Google+ Followers

Pages

Sunday, April 3, 2011

மலரும் நினைவுகள்(7)குடிக்க வென்னீரும் ஒரு பித்தளை தவலயில்தான்.அதையும் வச்சுட்டு டிகாஷன்
பால் எப்படி கலக்கனும்னு தாத்தாவிடம் கேட்டு முதல்முறையா காபி கலக்க
தெரிஞ்சுண்டேன். அளவாக ஜீனி போட்டு எல்லாருக்கும் காபி கொடுத்தேன்.
அதற்குள் மாமனார்,மாமியாரும் எழுந்து பல்தேய்த்துவிட்டு வந்தார்கள்.இவர்
காபி நல்லா இருக்கு லஷ்மின்னார். எனக்கு குஷி தாங்கலை. மாமனார் பேசி
பாத்ததே இல்லை, எல்லாத்துக்கும் ஒரு தலை ஆட்டலில்தான் பதில் வரும்.
மாமியாரும் எதுவும் சொல்லலை.முதலில் இவர் மோரியில் குளியல் அப்பரம்
மாமனார் குளியல் ஆகி இருவரும் ஸ்லோகம்லாம் சொல்லி காயத்ரி ஜபித்துகரக்டாக 6.30. க்கு சாப்பிட உட்கார்ந்தார்கள்.

மாமனார்பெரிய பித்தளை தாம்பாளம்,பித்தளை பாத்திரம் என்றாலும் உள்புறம்
நல்லா ஈயம் பூசி இருந்தது.இவர் வெள்ளி தட்டு(கல்யாண சீரில் 7 கிலோவெள்ளி
பாத்திரம் கொடுத்தாங்க, சின்ன சின்ன ஸ்பூன் தொடங்கி எல்லாம் நிறைய வெள்ளியில்.) சூடு, சூடா சாதம்போட்டு தாத்தா என்னிடம் ம்ம்ம் என்ன பாத்துண்டு நிக்கராய், விசிரி எடுத்து வீசு. என்றார்.முதலில் சாம்பார் சாதம்
பொரியல்,கூட்டு, எல்லாம் முடிந்து ரசம் சாதம்,அப்பளாம், பிறகு தயிர் சாதம்
ஊறுகாய். அப்படியா விஸ்தாரமா ரசிச்சு சாப்பிட்டு எழுந்து உடனே ட்ரெஸ்
மாத்திண்டு ரெடி ஆனார்கள். இவர் பூனாவிலேந்து10கிலோமீட்டர்தள்ளீஇருக்கும் கடக்வாசலாஎன்னும்இடத்தில்நேஷனல்டிஃப்ன்ஸ்அகாடமியிலவேலை.
மாமனார் 30 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் டெகு ரோட் என்னுமிடத்தில்
ஆர்டினன்ஸ் டிப்போவில் வேலை. மாமனார் ட்ரெயினில்போவார். காலை7மணி
போனா, இரவு 7மணி திரும்பவருவார். அதனால கையில் ஏதானும் டிபனும்
கொடுக்கணும். இவர்சைக்கிளில் போவர். சாயங்காலம் 5 மணிக்கு வருவர்.
காபி, டிபன் வீட்லவந்துதான். அவர்கள் இருவரும் கிளம்பி போனதும் உள்ள
போனோம். மாமியார் உடம்பு முடியாதவங்க ஆதலால் அவங்களால அவங்க
வேலையே செய்துக்கமுடியாது.குளிப்பாட்டி விடுவதுகூட நாந்தான் செய்யனும்.
இவ்வளவு நாள் மாமனார்குளிப்பாட்டினாராம்.இப்ப என் வேலையா ஆச்சு.
தாத்தா சொன்னாங்க முதல்ல சமையல் ரூமை க்ளீன் செய்துட்டு பாத்திரம்
எல்லாம் தேய்ச்சுட்டு உன்மாமியாரைக்குளிப்பாட்டிவிடு என்றார்.
சமையல் ரூம் யுத்தபூமி போல களேபரமா இருந்தது.தாத்தா உள்ளே வந்து முதல்ல அவங்க சாப்பிட்ட இடத்தை எச்சில்துடை, சாணிபோட்டு என்றார்.
என்னடா இது எல்லாத்துக்கும் இப்படி சாணியை எடுக்கசொல்ராரேஎன்று
தோனித்து.சாணிபோட்டு மெழுகினாத்தான் சுத்தமாம்.இதெல்லாம் யாரு
சொல்லிவச்சாங்கன்னு கோவமா வந்தது. சொன்னதைச்செய்யமட்டுமே தெரியும். வேர எதுவுமே தெரியாதே.அடுப்பு வீசி, வீசி ரூம்பூராவும் சாம்பல்
படிந்து இருந்தது.இதை எப்படி க்ளீன் செய்யரதுன்னே புரியலை.சமையல்
செய்தபாத்திரங்கள் வேறு மோரி ஃபுல்லா இருந்தது. பாத்திரம் தேய்க்க விம்,
ப்ரில் இதெல்லாம் அப்போ கிடையாது. அடுப்பு சாம்பலும், ச்சீக்காபொடியும்தான்.
பாத்திரம்தேய்த்து, முடிந்த அள்வுக்கு கிச்சனை க்ளீன் பண்ணி மாமியாரை
குளிப்பாட்டி,அவங்களுக்கு 9-கஜம் மடிசார்புடவைகட்டி(திண்டாடிட்டேன்)
என்று 11 மணிவரை இடுப்பை ஒடிக்கும்படி வேலைகள். எப்படியோ பண்ணிட்
டேன். பிறகு அந்ததொட்டி முத்ததிலேயே எல்லார் துணிகளையும் துவைக்கனும்.ஸர்ஃப், ஏரியல் எல்லாம் தெரியாத காலம், சன்லைட் பார் சோப்
தான். ஒவ்வொருதுணீக்கா சோப் போட்டு அலசி துவைத்துகிச்சனில் மடிதுணி
உலர்த்தி, வாசலில் பாக்கி துணி உலர்த்தி என்று வெலைபெண்டு நிமித்திடுத்து.
அதுவும் இந்தமாதிரி வேலைலாம் செய்து பழக்கமே இல்லியா கையெல்லாம்
காய்ச்சுப்போயி எரிச்சல் எடுத்தது.
12 மணிக்கு தாத்தா மாமியார் சாப்பிட உக்காந்தாங்க.அவங்களுக்கு பரிமாறினேன்.மருமகள் கடைசிலதான் சாப்பிடனுமாம்.அவங்களுக்கு சமமா
உக்காரக்கூடாதாம். மாமியார் சாப்பிடும்போது தாத்தாவிடம் யாரு லஷ்மி
சமையல் மாதிரி இல்லியே அவ சமைக்கலியா என்று ஆரம்பித்தா. தாத்தா
சீதே உன்னாலயோ ஒன்னும் முடியாது, பாவம் அந்தப்பொண்ணு நேத்துதான்
வந்திருக்கா, நம்ம பழக்கங்கள்லாம் தெரிஞ்சுக்க கொஞ்சமாவது டைம் எடுக்காதா? உங்கவீட்ல வந்ததிலேந்தே நான் தானே சமையல் பண்ரேன்
லஷ்மி கத்துக்கரவரை நானே பண்ணிடரேன். நீபேசாம சாப்பிடுன்னு சொன்னார்.
ஏன் அவளுக்கு சமைக்கவே தெரியாதானு திரும்பவும் ஆரம்பிச்சா. தாத்தா
கொஞ்சம் கோபமாகவேஎல்லாம் தெரியும் இப்ப நீ சாப்பிட்டுட்டுபோன்னார்.
அவா இருவரும் சாப்பிட்டு போனதும் திரும்பவும் சாணி போட்டு எச்சில்
பிறட்டிட்டு நான் சாப்பிடௌக்காந்தேன். அப்பாடானு உடம்பு கெஞ்ச்து. சாப்பிட
முடியலை கையெல்லாம் சாணி நாத்தம் அடிப்பதுபோலவே தோனித்து.
நல்ல மடி, நல்ல ஆசாரம்.

40 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நினைவுகள் எப்படியிருந்தாலும் சுகமே..
பகிர்வுக்கு நன்றி..

Anonymous said...

//முடியலை கையெல்லாம் சாணி நாத்தம் அடிப்பதுபோலவே தோனித்து.
நல்ல மடி, நல்ல ஆசாரம்.//

=((

Anonymous said...

உங்கள் ஆதங்கம்+கோவம் புரிகிறது.

asiya omar said...

அந்தக்காலம் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கீங்க, என்றாலும் அவ்வளவு வேலை செய்தவங்க இப்ப சும்மாவே இருக்க முடியாதே,தாத்தா guidance super.மடி,ஆச்சாரம் பற்றி நானும் தெரிந்து கொள்ள முடிந்தது.தொடர்ந்து எழுதுங்க..

இராஜராஜேஸ்வரி said...

படிக்கவே பரிதாபமாக இருக்க்றது அம்மா. சமாளித்து வந்திருப்பது சிரமம் தான்.

thirumathi bs sridhar said...

கண்ண கட்டுது,ரொம்ப கஷ்டங்க

thirumathi bs sridhar said...

2 தமிழ்மணம் தெரிகிறது

GEETHA ACHAL said...

நல்லா இருக்கு...

இன்னமும் இதே மாதிரி எல்லாம் சில இடங்களில் நடக்குது...

என்னுடைய தோழி விட்டிற்கு சென்ற பொழுது சாப்பிட உட்கர்ந்து விட்டு ரொம்பவே நொந்துபோய்விட்டேன்...இதே மாதிரி தான்..ஆனால் நல்ல வேலை சாணி இல்லை...அதற்கு பதிலாக எதற்கு எடுத்தாலும் தண்ணீர்...

Lakshmi said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

அனாமிகா, இந்தப்பதிவு எழுதும்போதுக்கூட சாணி நாத்தமடிக்கராப்போலவே இருந்தது.

Lakshmi said...

ஆஸியா வருகைக்கும் கருத்தும் நன்றிங்க.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி, ஆமாமாம், ரொம்பவே.

Lakshmi said...

திருமதிஸ்ரீதர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

கீதா ஆச்சல் ஆமாங்க இதெல்லாம் அந்தக்காலத்தில் ரொம்பவே சகஜம்.

எல் கே said...

இப்பலாம் சாணி மொழுகல் எங்கும் பார்க்க முடிவது இல்லை :( .
அது கிருமி நாசினி , அதனால்தான் அதை உபயோகப் படுத்தி இருக்கின்றனர்.

கோவை2தில்லி said...

நீங்க ரொம்ப பாவம்மா. சின்னவயதிலேயே வேலையும் செய்து பழக்கமில்லாமல் இப்படி செய்வது ரொம்ப கஷ்டம் தான்.

Lakshmi said...

ஆமா கார்த்தி தாத்தாவும் அப்படித்தான் ச்ல்வாங்க.

Lakshmi said...

கோவை2தில்லி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தோழி பிரஷா said...

அனுபவங்களை அழகாக பகிர்ந்து வருகின்றீர்கள் அருமை.. தொடருங்கள் அம்மா..
எனது தளம் தொடர்ந்து வருகைதந்து கருத்துக்கூறிவரும் உங்களுக்கு எனது நன்றி அம்மா

Lakshmi said...

தோழிபிரஷா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Mahi said...

உஸ்...அப்பா!!! ---ன்னு இருக்கு,உங்க டெய்லி ஷெட்யூலைப்பார்த்து!

இப்ப நினைத்துப்பார்க்கிறோம்,அப்ப உங்க நிலைமை எப்படி இருந்திருக்கும்?ம்ம்..யூ ஆர் க்ரேட் லஷ்மிமா!

Lakshmi said...

மஹி, தேங்க்யூ

Nagasubramanian said...

ரொம்ப கஷ்டமுங்க .....
ஒரு நாள்னா பரவா இல்லை. இது தான் வாழ்க்கைனா???

Lakshmi said...

நாக சுப்ரமணியன் இப்பதான் வரீங்களா? பிசி ஆயிட்டீங்களா?

அன்னு said...

அப்பாடா...இப்பத்தான் அத்தனை பகுதியும் படிச்சு முடிச்சேன். படிக்கற எனக்கே கஷ்டமா இருக்கு, வாழ்ந்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். உண்மைலயே ராணி மாதிரி பிறந்த எடத்துல வாழ்ந்துட்டு, புகுந்த வீட்டுல சாணி தேய்க்கிறதுன்ன லேசுப்பட்ட காரியமா.. I SALUTE YOU LAKSHMIMMAA..!!

Lakshmi said...

அன்னு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா. நானும் உங்க எல்லாரையும் போல சாதாரணமான பொண்ணுதாம்மா.

Sathish Kumar said...

பெண்டு கழண்டுடுச்சு போலிருக்குதே...! ஹா...ஹா...! சுகமான தொந்தரவுகளாத்தான் இருந்திருக்கும் உங்களுக்கு...! ஆனா, பாருங்களேன், வாஷிங் மெஷின், குக்கர், வேக்கம் கிளீனர் எல்லாம் செய்யுற வேலைய ஒரேயொரு பெண் தலையில கட்டிட்டாங்க அந்த காலத்துல...!

Lakshmi said...

சதீஷ்குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஆமாங்க ஒருபெண் தசாவதாரம் எடுத்துத்தான் ஆகனும்.

நிரூபன் said...

12 மணிக்கு தாத்தா மாமியார் சாப்பிட உக்காந்தாங்க.அவங்களுக்கு பரிமாறினேன்.மருமகள் கடைசிலதான் சாப்பிடனுமாம்.அவங்களுக்கு சமமா
உக்காரக்கூடாதாம்.//

இது எம்மவர்கள் தமக்கென்று வகுத்த வரம்பு....
இன்றும் ஒரு சில இடங்களில் இதே கொள்கையினைப் பின்பற்றுகிறார்கள்.

நிரூபன் said...

இந்தப் பகுதியில் சுவாரசியத்திற்குப் பதிலாக சோகம் இழையோடுகிறது,
ஒரு பெண்ணின் கடந்த கால முட்களும், கற்களும் நிறைந்த வாழ்க்கையினை அழகாக உங்கள் அனுபவங்களினூடாகப் பதிவாக்கியிருக்கிறீர்கள்.

Lakshmi said...

நிரூபன், உங்க பின்னூட்டமே மிக சுவாரசியமா இருக்கு. நன்றி.

Lakshmi said...

வருகைக்கு நன்றி நிரூபன்.

அந்நியன் 2 said...

உங்கள் கடந்த கால அனுபவங்கள் இப்போ உள்ள பெண்களுக்கு நல்லொதொரு புத்தகமாக அமையும் என நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்.

ஆயிஷா அபுல். said...

அனுபவங்களை அருமையாக எழுதிஉள்ளீர்கள் அம்மா.


தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள்.

ஹேமா said...

இந்தக்காலத்தில இதெல்லம் சரிவராது.ஆனாலும் இதுவும் ஒரு சந்தோஷமான வாழ்க்கைதான்னு நினைக்க வைக்கிறீங்க அம்மா !

மாதேவி said...

படிக்கும்போதே அய்யோ பாவம் என்று இரங்கிவிட்டது.

இவற்றை எல்லாம் கடந்து வந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

Lakshmi said...

அந்நியன்2 வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிங்க.

Lakshmi said...

ஆயிஷா அபுல் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றிம்மா. தொடர்
பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி.
தெர்ந்ததை சொல்ல முயற்சிக்கிரேன்

Lakshmi said...

ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

மாதேவி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .