Google+ Followers

Pages

Sunday, April 10, 2011

பெண் எழுத்து

ஆயிஷாபவுல் அவர்கள் என்னையும் தொடர்பதிவுக்கு அழைத்திருக்காங்க.
 அவங்களுக்கு நன்றி. இதுபற்றி பலரும் பலவிதமா கருத்துசொல்லிஇருக்காங்க.கூடிய மானவரை எல்லார் பதிவும் படிச்சிருக்கேன். பொதுவா பதிவுலகத்தைப்பொருத்தவைரை பெரும்பாலானவர்கள்,உண்மையான பெயரோ, முகமோ காட்டாமல் தான் இருக்காங்க. ஒரு சிலரே, உண்மையான பெயரும் முகமும்
காட்டுராங்க. வெரும் பதிவுகளைப்பார்த்து இந்தப்பதிவு ஆண் எழுதியதா, பெண்
எழுதியதா என்றுஅனுமானிப்பதுகொஞ்சம்சிரமம்தான்.இப்பபெண்களும்எல்லா
 விஷயங்கள்பற்றியும்எழுதிட்டுவராங்க.தங்களுக்குகிடைக்கும்அனுபவத்தால்
 சிலர்தைரியமாகதங்ககருத்தைவெளிப்படுத்தராங்க.அந்தஎழுத்துக்குக்கிடைக்குகிடைக்கும் அங்கீகாரத்தால்(பின்னூட்டம் மூலமாக) இன்னும் இன்னும் சிறப்பாக தங்களை வெளிப்படுத்துகிறார்கள்.


 எனஅனுபவத்தைப்பொறுத்தமட்டில் அந்தக்காலத்தில் ஆணாதிக்கம் ஓங்கியஇருந்ததுதான்.பெண்களும்அதைப்பெரிதாகவேஎடுத்துக்கொள்ளவில்லை.
பெரும்பாலானவர்கள் வீடுகளிலும் நடை முறை அப்படியே இருந்ததால அதை
 ஆணாதிக்கம் என்று தெரிந்திருக்கக்கூட இல்லை. எதற்குமே சுதந்திரம் இல்லாமல்தான் பெண்கள் இருந்தார்கள். பிறந்தவீட்டில் அப்பா, தாத்தா,அம்மா
அவங்களுக்கு அடங்கியிருக்கணும், கல்யாணத்துக்குப்பின், கணவர், அவர் வீட்டவர்களுக்கு அடங்கி இருக்கணும், வயதானபிறகு மகனுக்கு அனுசரித்து இருக்கணும் என்று இருந்தது. சொல்லப்போனால் பெண்களே தங்களுக்கு விலங்குகளைப்பூட்டிக்கொண்டார்கள். அது விலங்கு என்று தெரியாமலே!!!!!!!!!!!என் 50 வயதுவரை நானும் அப்படியேதான் இருந்திருக்கேன்.அப்பல்லாம் பெண்களுக்கு படிப்பறிவு இருந்திருக்கவில்லை. (பெண்ணுக்கு எதுக்குபடிப்பு?)
என்றே வளர்ப்பு முறை. பெண் யாரையாவது சார்ந்திருக்கவேண்டிய கட்டாயம்.ஆனா அடுத்ததலைமுறையில் ஓரளவு விழிப்புனர்வு ஏற்பட்டு பெண்களும்ஆண்களுக்கு சமமாக படிப்பறிவை வளர்த்துக்கொண்டார்கள். பார்க்கப்போனால்ஆண்களை விட பெண்களுக்கு கூர்மையான அறிவுத்திறன் இயற்கையாகவஅமைந்திருந்தது.ஆண்களைவிட திறமையாகவே படிப்பறிவை செம்மைப்படுத்திக்கொண்டார்கள். நாளாக நாளாக ஆணென்ன உசத்தி, பெண்ணென்னதாழ்த்தி என்ற எண்ணம் பெரியவர்களிடையே உண்டானது.எல்லா துறைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தினார்கள்.ஆனாலும் பெண்களுக்கு போதிய சுதந்திரம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு
 விஷயத்திற்கும் போராடிப்பெறவேண்டி இருந்தது. எழுத்தைப்பொறுத்தவரை
 ஆணெழுத்து, பெண்ணெழுத்துஎன்று எந்த வித்யாசமும் பார்க்கவேண்டியதே
 இல்லை. அவரவர்களுக்கு தோன்றும் கற்பனையைப்பொறுத்து எழுத்துக்கள்
 சிறப்பாகவோ, அல்லாமலோ அமைகின்றன. இப்ப என்னையே எடுத்துண்டா
 நான் பதிவு எழுத ஆரம்பித்தே 6 மாசம்தான் ஆகிரது. என் எழுத்துக்களுக்கும்
 நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துக்கொண்டுதான் இருக்கு. அப்போ நாம இன்னமும்வேறு, வேறு விஷயங்கள்பற்றியும் சிறப்பாக எழ்தமு யற்சிக்கணும் என்றஆர்வமும் உந்துதலும் உண்டாகத்தான் செய்கிரது.

இதெல்லாம் பெண்ணெழுத்துக்கு கிடைத்தவெற்றிதானே?  நான் என் பெயரோ
 முகமோ மறைக்கலை. அதான் பெண்ணெழுதுக்கு வெற்றி என்ரேன்


 இந்த பதிவு ஆணாதிக்கம் பற்றியோ பெண்ணடிமைத்தனம்பற்றியோ இல்லை.
ஒருபக்கம் பெண்களுக்கு33% இடஒதுக்கீடு பற்றியும், இன்னொருபுறம் ஆணுக்கு பெண் அடிமை இல்லையென்றோகுரல்கள்ஒலித்துக்கொண்டெதான் இருக்கு. ஆனாலும் யதார்த்த்யம்னு பார்த்தால்
 திருமணத்திற்குப்பின் ஒரு  பெண் தான் ஆண் வீட்டிற்கு(புகுந்த) வாழப்போகிராள். எந்த ஆணும் பெண் வீட்டிற்கு வருவதில்லை. சில
விதிவிலக்குகளும் இருக்கு. வீட்டோட மாப்பிளை என்றபெயரில். அது
மிகவும் சொற்பமான அளவில்தான். பெரும்பாலான குடும்பங்களில் நடை
முறையில் எல்லா பிரிவிலும் பெண்தான் ஆண்வீட்டிற்குப்போகிரோம்.
 இதை எல்லாருமே யதார்த்தமகத்தானே  எடுத்துக்கொள்கிரோம்.


பதிவுலகையே எடுத்துக்கொண்டால் நாம எல்லாருமே எல்லார் வலைப்பூக்
களுக்கும் போய்ப் பதிவுகளைப்படிக்கிரோம். அங்கு பதிவில் எழுதி இருக்கும்
விஷயம் சுவாரசியமாக நம்மை கவரும் விதத்தில் இருந்தால் நம் கருத்துக்
களை பின்னூட்டம் மூலமாகத்தெரிவிக்கிரோம். அப்ப அங்க எழுத்தின் சாரத்தைத்தான் கவனிக்கரோமே தவிர  ஆண் எழுதியிருக்காங்களா? பெண்எழுதி இருக்காங்களன்னு ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை.
அப்படி இருக்கும்போது ஆணெழுத்து, பெண்ணெழுத்துன்னு நாம விவாதமோ
சர்ச்சைகளோ பண்ணுவது தேவை இல்லாத ஒரு விஷயமாகவே எனக்கு தோணுது.

50 comments:

Jaleela Kamal said...

மனசுல பட்டத பளிச்சின்னு சொல்லிட்டீங்க லஷ்மி அக்க்கா

Lakshmi said...

ஜ்லீலா மனசுல பட்டதைச்சொல்லிட்டேன் யாரெல்லாம்
எதிர்ப்பு கிளப்புவாங்களோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அப்ப அங்க எழுத்தின் சாரத்தைத்தான் கவனிக்கரோமே தவிர ஆண் எழுதியிருக்காங்களா? பெண்எழுதி இருக்காங்களன்னு ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை.
அப்படி இருக்கும்போது ஆணெழுத்து, பெண்ணெழுத்துன்னு நாம விவாதமோ
சர்ச்சைகளோ பண்ணுவது தேவை இல்லாத ஒரு விஷயமாகவே எனக்கு தோணுது.

i accept your points, madam!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சொல்லப்போனால் பெண்களே தங்களுக்கு விலங்குகளைப்பூட்டிக்கொண்டார்கள். அது விலங்கு என்று தெரியாமலே!!!!!!!!!!!

absolutely correct.

சாகம்பரி said...

அதைத்தான் நானும் நினைத்தேன். வெறும் பெண்மை உணர்வுகளை சொல்லுவதினால் அந்த எழுத்தருக்கு அங்கீகாரம் கிடைக்காது. பல்வேறு பட்ட பார்வைகள்தான் ஒரு எழுத்தாளரை அங்கீகரிக்கின்றன. நன்றி .

Lakshmi said...

மாத்தியோசி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் பதிவு போட்டதும் எதிர்ப்புகுரல்தான் வரும்னு நினைச்சேன். ஆனா சப்போர்ட்டாதான் சொல்லியிருக்கீங்க. நன்றி.

Lakshmi said...

மாத்தியோசி, நான் சொன்னது சரிதானே.

Lakshmi said...

சாகம்பரி வருகைக்கும்கருத்துக்கும் நன்றிம்மா.

kavithai said...

நீங்க சொன்னது அனைத்தும் உண்மை. நானும் இதை ஒத்துக் கொள்கிறேன். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

Lakshmi said...

வேதா.வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

thirumathi bs sridhar said...

@நானும் நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன்

அஸ்மா said...

//ஆணெழுத்து, பெண்ணெழுத்துன்னு நாம விவாதமோ
சர்ச்சைகளோ பண்ணுவது தேவை இல்லாத ஒரு விஷயமாகவே எனக்கு தோணுது//

அதனாலதான் லக்ஷ்மிமா யோசிச்சுட்டே இருக்கேன் நானும் :-) சரி, நம்ம மனதில் தோன்றுவதை எழுதி வைக்கலாமேன்னு இருக்கேன். இதில் உங்களுடய கருத்துக்கள் எதேர்ச்சையானதா இருக்கு. நேரில் பேட்டி கண்டது மாதிரி பட்டுன்னு சொல்லியிருக்கீங்க :)

asiya omar said...

இதை விட அருமையாக எப்படி சொல்ல முடியும்.சூப்பர்.

angelin said...

"பெண்களே தங்களுக்கு விலங்குகளைப்பூட்டிக்கொண்டார்கள். அது விலங்கு என்று தெரியாமலே!!!!!!!!!!!".
அருமையாக உங்கள் கருத்துக்களை சொல்லிருக்கீங்க .

சிவகுமாரன் said...

ஆண் எழுத்து பெண் எழுத்து என்றெல்லாம் இல்லை. எந்த மாதிரியான எழுத்து என்பது தான் முக்கியம். சிலர் பெண் பெயரை வைத்துக் கொண்டு கதை எழுதுகிறார்கள்

எல் கே said...

/ஆணெழுத்து, பெண்ணெழுத்துன்னு நாம விவாதமோ
சர்ச்சைகளோ பண்ணுவது தேவை இல்லாத ஒரு விஷயமாகவே எனக்கு தோணுது//

super

Lakshmi said...

திருமதி ஸ்ரீதர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

அஸ்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Madhavan Srinivasagopalan said...

//பதிவுலகையே எடுத்துக்கொண்டால் நாம எல்லாருமே எல்லார் வலைப்பூக்
களுக்கும் போய்ப் பதிவுகளைப்படிக்கிரோம். அங்கு பதிவில் எழுதி இருக்கும்
விஷயம் சுவாரசியமாக நம்மை கவரும் விதத்தில் இருந்தால் நம் கருத்துக்
களை பின்னூட்டம் மூலமாகத்தெரிவிக்கிரோம். அப்ப அங்க எழுத்தின் சாரத்தைத்தான் கவனிக்கரோமே தவிர ஆண் எழுதியிருக்காங்களா? பெண்எழுதி இருக்காங்களன்னு ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை. //

Great & appreciable point

Lakshmi said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி,

Lakshmi said...

ஏஞ்சலின், வருகைக்கும்கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

சிவகுமாரன், நன்றிங்க.

Lakshmi said...

கார்த்தி வருகைக்கு நன்றி.

Lakshmi said...

மாதவன், வருகைக்கு நன்றி. உங்க கருத்தை அருமையா சொல்லி இருக்கீங்க.

யாதவன் said...

உள்ளதை உள்ளபடி சொல்லும் பக்குவம் உணகளிடம் தான் உண்டு

Nagasubramanian said...

நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை

கோவை2தில்லி said...

சரியா சொல்லியிருக்கீங்கம்மா.

Lakshmi said...

யாதவன், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

நாகசுப்ரமனியன், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

கோவை2தில்லி, நன்றிம்மா.

ஹேமா said...

ம்..சுலபமா சொல்லி முடிச்சிட்டீங்க அம்மா.நானும் எழுதணும்ன்னு சொல்லியிருக்காங்க !

Lakshmi said...

ஹேமா வருகைக்கு நன்றி. உங்களுக்கு என்ன தோனுதோ நீங்களும் சொல்லுங்க.

கே. பி. ஜனா... said...

ரொம்ப நல்ல எழுதியிருக்கீங்க!

Lakshmi said...

கே.பி ஜனா வருகைக்கு நன்றி.

புதுகைத் தென்றல் said...

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.

Lakshmi said...

புதுகைதென்றல் வருகைக்கு நன்றி.

raji said...

அருமையான கருத்துக்கள்

Lakshmi said...

ராஜி, வருகைக்கு நன்றிம்மா.

அந்நியன் 2 said...

எனக்கு என்னமோ.. இந்த தலைப்பை தொடங்கி வைத்தவர் இந்தியா பாக்கிஸ்த்தானை பிரித்த மாதுரி... நண்பர்களாக இருக்கும் ஆண் பதிவர்களையும் பெண் பதிவர்களையும் பிரிக்க ஏற்படுத்திய சதி மாதுரியே தெரியுது.

ஆண் என்ற இரும்பு உலோகத்திர்க்கு பெண்ணானவள் மெருகூட்டும் வண்ணமாக இருக்கனுமே தவிர இரும்பை உருக்கி விடும் நெருப்பாக மாறிவிட முயற்சி பன்னக் கூடாது என்பது எனது கருத்தும்மா.

இந்த தலைப்பு தேவையா?

அப்பாவி தங்கமணி said...

இப்படி வெளிப்படையா எழுதினது தான் பெண் எழுத்தின் அழகோ... சூப்பர்...:)

Lakshmi said...

அந்நியன்2 வருகைக்கு நன்றி. நானும்
இது தேவை இல்லாத விஷயம்னுதானே சொல்லி இருக்கேன் அந்நியன்.

Lakshmi said...

அப்பாவி தங்கமணி, இப்பதான் முதல் முறையா என் பக்கம் வரீங்களா? அடிக்கடி வந்து கருத்துக்களை சொல்லுங்க.

ஆயிஷா அபுல். said...

உண்மையை தெளிவாக எழுதி இருக்கீங்க.நன்றிமா

Lakshmi said...

ஆயிஷா பவுல் உங்களைத்தான் கானோமேன்னு பாத்தேன்.

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

அருமையான ஆழமான கருத்துக்கள்.

...................................
ஆனாலும் பெண்களுக்கு போதிய சுதந்திரம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் போராடிப்பெறவேண்டி இருந்தது. எழுத்தைப் பொறுத்தவரை
ஆணெழுத்து, பெண்ணெழுத்துஎன்று எந்த வித்யாசமும் பார்க்கவேண்டியதே
இல்லை. அவரவர்களுக்கு தோன்றும் கற்பனையைப்பொறுத்து எழுத்துக்கள்
சிறப்பாகவோ, அல்லாமலோ அமைகின்றன..ஃஃஃஃ

உண்மை...

அமைதிச்சாரல் said...

தெளிவா அழகா சொல்லிட்டீங்க லஷ்மிம்மா..

Lakshmi said...

தோழி பிரஷா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

அமைதிச்சாரல் வருகைக்கு நன்றிங்க.

இராஜராஜேஸ்வரி said...

ஆண்களை விட பெண்களுக்கு கூர்மையான அறிவுத்திறன் இயற்கையாகவஅமைந்திருந்தது.ஆண்களைவிட திறமையாகவே படிப்பறிவை செம்மைப்படுத்திக்கொண்டார்கள்//
மறுக்க முடியாத ஆணித்தரமான கருத்து அம்மா. என் பதிவையும் படித்து தங்களின் கருத்தை எதிர்நோக்குகிறேன்.

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா. நானும் உனெழுத்தை படிச்சுப்பார்க்க வரேன்.

என்னை ஆதரிப்பவர்கள் . .