Pages

Saturday, May 28, 2011

அதிர்ஷ்ட்டம் என்பது.


போன வருஷம் ஒரு எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், பிரெஸ்டிஜ் ஸோடது  வாங்கினேன். எனக்கு வேண்டியபடி சின்னதாக அரை லிட்டர் குக்கர்
வாங்கினேன். எந்தப்பொருள் வாங்கினாலும் அடுத்த நாளே உபயோகப்
படுத்திப்பார்ப்பது என் வழக்கம். ஏதானும் ப்ராப்லம் இருந்தா உடனே போயி
சொல்லிடலாம் இல்லியா? அதுபோல அந்தக்குக்கரையும் மறு நாளே யூஸ்
 பண்ணினேன். சின்னதா, அடக்கமா நல்லா இருந்தது. டைம் அட்ஜெஸ் மெண்ட்
எல்லாமே ஆட்டோமேடிக்.அரை டம்ளர் அரிசி அலம்பி அதில் சொன்னபடி
 அரை மணி நேரம் ஊறவச்சு குக்கரில் போட்டு வேண்டியதண்ணீரையும்விட்டு
குக்கரை மூடி ஸ்விட்ஸ் ஆன் பண்ணினேன். அதுவே டைம் செட்பண்ணிக்கும்.
 நமக்கு ஒரு வேலையும் இல்லே. நாம வேர வேலையை பாக்கப்போயிடலாம்.



கிட்டத்தட்ட 30 நிமிடத்தில் சாதம் ரெடி ஆகி ஸ்விச் ஆஃப் ஆகி வார்மர் மோடில்
வந்தது. எப்ப சாப்பிடனும்னாலும் சூடாக இருக்கும். நானும் வழக்கம் போல
1-மணிக்கு சாப்பிட உக்காந்தேன். சாதம் சூடாக, பொல,பொலன்னு உதிரி,உதிரா
 நல்லா வந்திருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் மீதி உள்ள சாதததை வேறு பாத்தி
ரத்தில் மாத்திட்டு குக்கரை அலம்பி வச்சுடலாம்னு நினைச்சு வேர பாத்திரத்தில்மாத்தினேன். அடியில் ஒரு கை அளவுக்கு அடி பிடித்ததுபோல
சிவப்பாக இருந்தது. ஆனா சாததில் அடிப்பிடிச்ச ஸ்மெல் எதுவும் வல்லை.
இது நான்ஸ்டிக் பாத்திரமாச்சே எப்படி இப்படி அடிப்பிடிக்குதுன்னு யோசனை.
மறு நாளும் அதிலேயே சாதம் பண்ணினேன் . அன்றும் அப்படியே அடியில்
 ஒட்டியிருந்தது. மறு நாள் கடையில் போயி சொன்னேன்.

அவர்களோ நாங்க வெரும் டீலர் மட்டும்தான் கம்பெனி ஆட்கள் வந்து செக்
பண்ணி என்ன் ப்ராப்ளம்னு பாப்பாங்க. மெயின் ஆபீசு பெங்களூர்ல இருக்கு.
 நாங்க போன் பண்ணி விவ்ரம் சொல்ரோம்னாங்க.பத்து நாட்கள் கழிச்சு கம்பெனி ஆள் வந்தான். அவனுக்கு எதிராகவே சாதம் பண்ணி காட்டினேன்.
அந்தக்குக்கர் ஃபிக்ஸ்ட் மூடி கிடையாது. கஞ்சியும் மேலேந்து சொட்ட ஆரம்
பிச்சது. கம்பெனி ஆளும் ஸ்விட்ச் ஆன் பண்ணின்னிட்டு ஃபேனை ஆஃப்
பண்ணிடுங்க. ஸ்டீம் மேல வரமுடியாம ஃபேன் காத்து ஸ்டீமை கீழே தள்ளுது
அப்படின்னு என்னமோ கதை அடிச்சான் . அன்னிக்கும் சாதம் அடிப்பிடிச்சது.
 அவன் பாத்துட்டு ஆமா மேடம் நீங்க சொன்னது சரிதான். நான் இப்போ இதை
எடுத்துண்டுபோயி காயில் சரிபண்ணி போட்டுக்கொண்டு வரேன்னான்.
 நான் எனக்கு காயில்லாம் சரிபண்ணாதே, வாங்கி அடுத்த நாளே ரிப்பேர்
வேர குக்கர் மாத்தி கொடுங்கன்னேன்.

அது கம்பெனி முதலாளிங்க முடிவு செய்யவேனிய விஷ்யம். நான் போயி
அவங்க கிட்ட சொல்ரேன். அவங்க என்ன முடிவு பன்ராங்கன்னு தெரியும்.
நீங்க கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்கன்னு குக்கரை கையோட எடுத்துண்டு போனான்.ஒருமாசம் வரை எந்த பதிலும் இல்லே. நானும் கடைக்கு போன்
 பண்ணி கேட்டுண்டே இருந்தேன். அவர்களும் இன்னும் கம்பெனிலேந்து
 எந்தபதிலும் வல்லே. இதில் நாங்க ஒன்னும் பண்ண முடியாது என்றே சொல்லிவந்தார்கள்.அடுத்தமாசம் நான் கடைக்கே போயி என்ன் இது இப்படி
 பண்ரீங்கன்னு சத்தம் போட்டேன். சாரி மேடம், உங்களுக்கு கம்பெனிக்காரங்க
வேர குக்கர் அனுப்பிட்டாங்க. நேத்து தான் வந்தது. நாங்களே இன்று உங்களுக்
கு போன் பண்ண நினைச்சோம். நீங்களே வந்துட்டீங்கன்னு புது குக்கரைத்தந்தாங்க.

அதைப்பார்த்ததுமே எனக்குஆச்சரியமா ஆச்சு, நான் முதலில் வாங்கியதோ\
அரை லிட்டர் பிடிக்கும்படி சின்னகுக்கர். எனக்கு அதுதானே தேவை. இப்போ
 அவங்க கொடுத்திருக்கும் குக்கரோ 21/2 லிட்டர் பிடிக்கும் படி பெ.......ரி.........ய....
குக்கர். ஒரேசமயத்தில் 10- பேருக்கு சாதம் பண்ணலாம்.இவ்வளவு பெரிய குக்கரை வச்சுண்டு நான் என்ன பண்ண? எனக்கு அரை டம்ளர் அரிசி போட்டு
 சாதம் பண்ண இவ்வளவு பெரிய குக்கரான்னு நினைச்சேன்.கடைக்காரனே
 கம்பெனிக்காரனுக்கு போன் போட்டு தன்தான். நானும் அவர்களிடம் எனக்கு
 இவ்வளவு பெரிய குக்கர் வேணாம்.  சின்னதா அரை லிட்டர் பிடிக்கும்படி
போதும் என்ரேன். அவர்களோ மேடம் ப்ராப்ளம் எங்க ப்ரொடெக்ட்ல இருந்தது.
அதனால நாங்க உங்கலுக்கு பெரிய குக்கரே அனுப்பினோம். கம்பெனி பேரு கெட்டுட்டக்கூடாது இல்லியா. அதான். நீங்க இதை ஏத்துக்குங்கன்னு சொன்னாங்க.வேர வழி  அதைக்கொண்டு வந்து பீரோவில் வத்து பூஜைதான்.
அதான் சொன்னேன் அதிர்ஷ்ட்டம் என்பது தலையில் வழுக்கை விழுந்த
 பிறகு கயில் சீப்பு கிடைத்தமாதிரி என்று. தலைக்கும் பிரயோஜனமில்லே
சீப்புக்குக்ம் பிரயோசனமில்லே. அவங்க வேர பொருள் மாத்தி தந்தாலும்
எனக்கு அதனால எந்த பிரயோசனமும் இல்லே.

27 comments:

ப.கந்தசாமி said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Prabu Krishna said...

//அதிர்ஷ்ட்டம் என்பது தலையில் வழுக்கை விழுந்த
பிறகு கயில் சீப்பு கிடைத்தமாதிரி என்று. தலைக்கும் பிரயோஜனமில்லே
சீப்புக்குக்ம் பிரயோசனமில்லே.//

ஹா ஹா ஹா....

அருமை அம்மா. நல்ல அனுபவம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான அனுபவம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சில பொருட்கள் வாங்கும்போது இப்படித்தான் தேவையில்லாத பிரச்சனைகள் வந்துவிடுகிறது...

எப்படியோ மேடம் சின்னி மீனை போட்டு பெரிய மீன் பிடிச்சிட்டிங்க...

இராஜராஜேஸ்வரி said...

அதிர்ஷ்ட்டம் என்பது தலையில் வழுக்கை விழுந்த
பிறகு கயில் சீப்பு கிடைத்தமாதிரி என்று. தலைக்கும் பிரயோஜனமில்லே
சீப்புக்குக்ம் பிரயோசனமில்லே. //
useless rules.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அதிர்ஷ்ட்டம் என்பது தலையில் வழுக்கை விழுந்த பிறகு கையில் சீப்பு கிடைத்தமாதிரி என்று. தலைக்கும் பிரயோஜனமில்லே
சீப்புக்கும் பிரயோசனமில்லே. அவங்க வேற பொருள் மாத்தி தந்தாலும்
எனக்கு அதனால எந்த பிரயோசனமும் இல்லே.//

வெகு அழகான உதாரணம் சொல்லியிருக்கீங்க மேடம்.

பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்

ராஜகோபால் said...

//அதிர்ஷ்ட்டம் என்பது தலையில் வழுக்கை விழுந்த பிறகு கயில் சீப்பு கிடைத்தமாதிரி //

அருமை இந்த விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு :))

வெங்கட் நாகராஜ் said...

முடிவு படிக்க நகைச்சுவையாக இருந்தாலும், மனதில் ஒட்டவில்லை. இப்போதெல்லாம் எந்தப் பொருட்களையும் நம்பி வாங்கமுடியவில்லை.

குறையொன்றுமில்லை. said...

Dr.p.kanthaswamy.phD.thankyou.

குறையொன்றுமில்லை. said...

பிரபு வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

கவிதை வீதி சௌந்தர், நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜெஸ்வரி, வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ராஜகோபால் நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

லக்‌ஷ்மி அம்மா நீஙக அந்த cookerல அந்த காலத்து வாணாலி cooker மாதிரி அடியில் தண்ணிர் விட்டு சின்ன பாத்திரதில் சாதம் வைக்கலாம்.35 நிமிடஙளில் சாதம் ரெடி ஆகிவிடும். நான் சிரிதளவு சாதம் வைக்க அப்படிதான் சைவேன்.முயர்சி சைது பர்க்கவும்.

குறையொன்றுமில்லை. said...

ஓ, இந்த ஐடியா நல்லா இருக்கே.ட்ரை
பண்ணிப்பாக்கரென் ராம்

ம.தி.சுதா said...

////இவ்வளவு பெரிய குக்கரை வச்சுண்டு நான் என்ன பண்ண? ////

அட இது என்னம்மா இது தான பிரச்சனை நம்மகிட்ட நேர கேட்க கேட்க வேண்டியது தானே...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

குறையொன்றுமில்லை. said...

ம.தி. சுதா, வருகைக்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said...

ஒரு புதிய ஃபிரிஜ்ஜு வாங்குங்க.. (அதிர்ஷ்டம் இருந்தால் நல்லதா அமையும்).

இந்த குக்கருக்கு பூஜைலாம் போடவேண்டாம்..
பத்துபேருக்கு சாதம் வடிக்கலாமல்லவா..? அதனால் நீங்கள் இருவேளை உணவிற்கு, ஐந்துனாளுக்கொருமுறை குக்கர் வைத்தால் போதும்.. வடித்த சாதம் தீரும் வரை ஃபிரிஜ்ஜில் வைத்துவிடலாமே..

ஐடியா ஓக்கேவா..?

குறையொன்றுமில்லை. said...

மாதவன், பின்னூட்டத்லயும்காமெடி
பண்ரீங்களே

ஹேமா said...

சிரிப்புத்தான்...பாருங்க எவ்ளோ பெரிய அதிஷ்டம் !

குறையொன்றுமில்லை. said...

ஹேமா, உனக்கு சிரிப்பா வருதா?

மாதேவி said...

அழுவதா...சிரிப்பதா.. சிலநேரங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது.

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி.

ADHI VENKAT said...

சில நேரங்களில் இப்படித் தான் ஆகி விடுகிறது. :(

radhakrishnan said...

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுத்துவிட்டது போலும்.உள்ள கூரை போய்விட்டதே
பகிர்வுக்கு நன்றி அம்மா

என்னை ஆதரிப்பவர்கள் . .