Google+ Followers

Pages

Thursday, August 4, 2011

உன்னைச்சொல்லி குற்றமில்லை.

ஒருமாச லீவு முடிந்து திரும்ப உங்களை எல்லாம் சந்திக்க வந்துட்டேன்.
யாவரும் நலம் தானே? ரெண்டுபேரு தொடர்பதிவுக்கு அழைப்பு கொடுத்தி
ருக்காங்க.. முதலில் என்னை பாதித்த ஒரு சம்பவம் சொல்லிட்டு பிறகு
தொடர் பதிவுக்கு வருகிரேன்.திருப்பதி பாலாஜி தரிசனத்தில் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு அனுபவம் சொல்லி இருக்காங்க. இது என் அனுபவம். சென்னை
போய் இறங்கியதும் அடுத்த நாளே திருப்பதி போகலாம்னு வண்டில்லாம் புக்
பண்ணினோம். சென்னை தாம்பரத்தில் இருந்து, திருப்பதி போக வர ஒரு
ஆளுக்கு 2000- ரூபா.காலை ப்ரேக் ஃப்ஃஃஸ்ட், மதியம் லஞ்ச், தரிசன க்யூவில்
நிக்க 300 ரூபா எல்லாம் அவா செலவு என்றார்கள். மறு நா காலை 3 மணிக்கே
எழுந்து குளித்து 4 மணிக்கு ரெடி ஆகி வீட்டிலிருந்து 2- கிலோ மீட்டரில் இருந்த
பொது பஸ் ஸ்டாண்ட் போகவேண்டி இருந்தது. ரெண்டு ஆட்டோ காரர்களை 4 மணிக்கு
வரச்சொன்னோம். நாங்க பெண்கள் 3 பேர்,ஆண் ஒருவர் என்று 4 பேர் போனோம்


விடிகாலை வருவதால் ஆட்டோக்காரா கூடகொஞ்சம் பணம் கேட்டா. சரின்னு கொடுத்து
பஸ்ஸ்டாண்ட் 4.30-க்கு போய்ச்சேர்ந்தோம். புக் பண்ணின இன்னோவா வண்டி ரெடியாக
இருந்தது.கொஞ்சம் பெரிய வண்டிதான். பின்னாடி ரெண்டு பேரு, நடுவில் ரெண்டு பேரு
ட்ரைவர் சீட் பக்கமும் ஒருவர் உக்காரலாம்.காலை சரியாக டயத்திற்கு வண்டி கிளம்பியது.
அதிகாலைப்பயணம் எப்பவுமே ரசனைஇகுகந்ததாகவே இருக்கும். இருட்டு பிரியாத அதிகாலை
நேரம் மெல்லிசாக பூந்தூரலுடன் பயணம் இனிமையாக ஆரம்பமானது.பாட்டும் கேட்டுக்கொண்டே
சுகமான பயணம்.அரை மணி ஓடியதும் பரங்கி மலையில் வண்டி நின்னது, அங்கும் ஒருஆள்
ஏறிக்கொண்டார். தன்னை நகை வியாபாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். புது நகை
பண்ணும் போது வெங்கடாசலபதி கால்களில் வைத்து ஆச்சிர்வாதம் வாங்குவாராம். மாசம்
ஒருமுறை திருப்பதி சென்று வருவேன்னு சொன்னார்,

5.30 ஆனதும் இருட்டுப்பிரிந்து வெளிச்சம் சூழும் அழகான நீல ஆகாயம் கண்கொள்ளாக்காட்ச்சி
பறவைகளின் இனிய கானங்கள் என்று அற் புதமான காலைப்பயணம்.மிகவும் ரசித்துக்கொண்டு
கல கலப்பாக சந்தோஷமாகப்பேசிக்கொண்டுசென்றோம். 7.30- மணிக்கு ஆண்டாள் குப்பம்
என்னும் ஊர் வந்தது. அங்கு சரவண பவன் ரெச்டா ரெண்டில் ப்ரேக் ஃப்ஃஃஸ்ட் சாப்பிட்டோம்.
சின்ன ரெஸ்டாரெண்ட்தான். ஆனா சுத்தமாக வும் சுவையான சிற்றுண்டியுடனும் இருந்தது.
அங்கேந்து 8 மணி திரும்ப பயணம் தொடர்ந்தோம்.வழியில் குபேரகனபதி கோவில், முனீஸ்வரன் கோவில் தரிசனங்கள்.காலை வேளை இனிமையான பாடல்கள் கேட்டுக்கொண்டு பயணம் செய்து
கொண்டே இருக்கலாம் போலைருந்தது. எனக்கு எப்பவுமே ரோட் ஸைட் ட்ராவல்ஒத்துக்கொள்ளாது.
பஸ்ஸோ, ஏசி காரோ ஏதானாலும் வயத்தைக்குமட்டிண்டுவரும். பெட்ரோல் வாடை சகிச்சுக்கவே
முடியாது. கயில் எலுமிச்சம் பழம், இஞ்சி முறப்பா, ஆரஞ்ச் வில்லை என்று எல்லாம் ரெடியா
கொண்டு போனோம். 9.30-க்கு கீழ் திருப்பதி வந்தது.பிறகு மலை ஏற்றப்பாதை வளைந்து நெளிந்து
செல்லும்போது எனக்கு த்லை சுத்திண்டு வந்துடுத்து.கூடவே ப்ளாஷ் பேக் நினைவுகளும் கூடவே.

என் வீட்டுக்காரர் இருந்தப்போ 30- வருஷம் முன்பு திருப்பதி வருஷா வருஷம் போவோம். அதன்
பிறகு இவர்போன பிறகு இப்பதான்வரேன். நிறைய மாற்றங்கள். திரும்பின பக்கமெல்லாம்குடியிருப்பு
வசதிகள். ஹோட்டல்கள் சில பொழுதுபோக்கு இடங்கள்.என்று ஜொலிக்கரது.10.30 மேல போயிச்
சேர்ந்தோம். காரை ஒரு இடத்தில் நிப்பாட்டிட்டு கோவில் போக ஒரு பேட்டரி காரில் ஏறிக்கொண்டு
கோவில் வாசல் போனோம். வண்டி நிக்கும் இடத்திலிருந்து கோவில் கொஞ்சம் தள்ளியே இருந்த
தால பேட்டரி காரில் பயணிகளை கூட்டி ச்செல்கிரார்கள். வாசலிலிருந்தே அனுமார் வால் போல
நீண்ட க்யூ வரிசை. நாங்களும் அதி சேர்ந்து கொண்டோம். க்யூ நிக்குமிடம் ஒரே அடைசலா இருந்தது. பாதிபேரு அங்கே போட்டிருந்த சேரில் உக்காந்து இருந்தா. பாக்கி எல்லாரும் வரிசையில்
கால் கடுக்க நிக்கதான் வேண்டி இருந்தது.முதலில் 11 மணிக்கு உள்ள விடுவான்னு கும்பலில்
சிலபேரு பேசிண்டா. 11.30 வரையிலும் உள்ள விட ஆரம்பிக்கவே இல்லே. காலு சுகமா வலிக்க
ஆரம்பிச்சது.

சிறுவர், பெரியவர், வயதானவா என்று நிறைய பேரு நிக்கமுடியாம நெளிந்து கொண்டு இருந்தோம்
ஒரு வழியா 12.30க்கு டவாலி ஆட்கள் வந்து ஒவ்வொரு வரையா வரிசையாக செக் செய்து உள்ளே
அனுப்ப ஆரம்பித்தார்கள்.க்யூ மெதுவாக நகர்ந்தது. எங்க முறை வர அரை மணி நேரம் ஆச்சு.
நாங்க 4 பேருமே 60 வயதைக்கடந்தவர்கள். எங்க முறை வந்ததும் எனக்குமுன் போன சொந்தக்காரா
ஆண் 70 வயசுக்காரர். அவரை எதுவும் கேக்காம உள்ளே அனுப்பினா. அடுத்தெரெண்டு பெண்களில்
ஒருவர் பைபாஸ் ஆபரேஷன் பன்னிண்டு இருந்தவர். ஆட்களை செக் செய்பவர்கள் அவர்களிடம்
ஐ டி கார்ட் கேட்டார். அவா இருவரும் ஆபரேஷன் தழும்புகளைக்காட்டினதும் அவர்களை உள்ளே
அனுப்பிட்டா. என் முறை வந்ததும் ஐ டி கார்ட் கேட்டா. நான் எதுக்கு ஐட் கார்ட் கேக்கரீங்கன்னு
கேட்டேன். உண்மையில் நீங்க சீனியர் சிட்டிசன் தானான்னு தெரியனுனாங்க.ஏங்க எங்க நரைச்ச
தலைமுடியும் தள்ளாடும் நடையப்பாத்தாலே 60 வயசுக்கு மேல உள்ளவங்கன்னு தெரியுமே அதுக்கு
எதுக்கு ஐடி கார்டு கேக்குரீங்கன்னேன்.அதெல்லாம் கிடையாது எங்க ரூல் நாங்க ஃபாலோ பன்னனும்
என்று அசட்டுத்தனமா பிடிவாதம் பிடிச்சாங்க.

எனக்கும் கோவம் வந்தது. என்னங்க இது நீங்க சாமி பாக்க ஆட்களை உள்ள விடுரீங்களா இல்லே
இண்டெர்வ்யூ நடத்தி வேலைக்கு ஆள் எடுக்குரீங்களா சாமி தரிசனம் பண்ண் அஎங்கேந்தெல்லம்மொ
எவ்வளவோ கஷ்ட்டங்கள் பட்டு நாங்க வந்தா இது என்ன புதுசா ஐடி எல்லாம் கேக்குரீங்க என் பான்கார்ட் இருக்கு வண்டில மறந்துட்டேன் நானும் ஹார்ட் பேஷண்டுதான்னு எவ்வளவோசொல்லியும்
தயவு தாட்சனியமே இல்லாம அவுட் வெளிய போன்னுட்டாங்க.கூடவந்தவங்கல்லாம் இது எதுவும்
தெரியாம தரிசன க்யூவில் கல்ந்துட்டாங்க. எனக்கு உள்ளே போக அனுமதியே கிடைக்கலை
ஒருபுறம் அழுகை ஒரு புறம் அவமானம்னு மனசு ரொம்ப கஷ்ட்டமாச்சு.கார் ட்ரைவர் கோவில்
வாசலிலேயே நின்னுண்டு இருந்தான். நான் வெளியே வருவதைப்பாத்து என்னன்னு கேட்டான்
சொன்னேன்.சீனியர் சிட்டிசனுக்கு சவுரியம் பண்ராங்கம்மான்னு சொல்ரான் இதுக்குபேரு சவுரியமா
மாடி மாடி யா ஏறி வேர ஏதானும் க்யூ வில் என்னைச்சேர்த்து விடமுடியுமான்னு பார்த்தான்
300 கொடுக்கவேண்டிய தரிசன்க்க்யூவில் 1000- ரூபா கொடுத்தா உள்ளே விடரேன்னு பேரம் பேசு
ராங்க. எனக்கு இப்படி லஞ்சம் கொடுத்து சாமி பாக்க வேண்டிய அவசியம் இல்லேன்னுட்டேன்.

ஆகா மலை எற்றி கோவில் வாசலில் வந்தவளை கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளினது போல இருந்தது.மனசு எவ்வளவு வலித்திருக்கும். யாரைச்சொல்வது. அந்தசாமியையா, இல்லை இந்த ஆசாமி களையா? இந்த ஆசாமி களையும் ஆட்டி வைப்பதும் அந்தசாமி தானே. அதுதான் உன்னைச்சொல்லி குற்றமில்லை என்னைச்சொல்லி குற்றமில்லை.

53 comments:

பலே பிரபு said...

கடவுள் பக்தி உள்ளவர்களுக்கு இது ஒரு கவலைதான். இதில் சாமியின் தவறேதும் இல்லை. இந்த ஆசாமிகளின் வியாபாரம்....

உங்கள் அனுபவங்களுக்கு காத்திருக்கிறேன்....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாங்கம்மா .. ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிங்க,..
உங்க பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது..

புதுகைத் தென்றல் said...

ithukuthamma thirupathi poganumnale bayamma iruku. ayithan no solliduvar.

Bomb blast anathulernthu oru gedupidithan anga
:((

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிரபல கோயில்களுக்குச் சென்றாலே, கும்பல் தாங்க முடிவதில்லை. அங்குள்ள ஆசாமிகள் படுத்தும் பாடும் தாங்க முடியாது தான். எங்குமே ”காசே தான் கடவுளடா” தான். க்யூவில் நிற்க பொறுமையோ, காலில் தெம்போ இல்லாததால், இப்போதெல்லாம், கும்பலான இடங்களுக்கு, கோயிலாகவே இருந்தாலும் கூட, போவதை நிறுத்தி விட்டேன்.

செளகர்யமாக தமிழ்நாடு நெல்லை வரை நீண்ட பயணம் முடித்துக்கொண்டு, மீண்டும் பதிவிட வந்துள்ளது சந்தோஷமாக உள்ளது.

நான் தான் உங்களிடம் சொன்னபடி, உங்களை திருச்சி ஜங்ஷனில் நேரில் சந்திக்க பிராப்தம் இல்லாமல் போய் விட்டது.

Lakshmi said...

பிரபு, இப்படியெல்லாம் அனுபவம் கிடைத்தால் பக்தியாவது ஒன்னாவதுன்னு
எரிச்சல்தான் வரும்.

Lakshmi said...

கருன் பயணம் எல்லாமே நல்லா நடந்தது. வருகைக்கு நன்றீ

Lakshmi said...

புதுகைத்தென்றல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ஆமா, கோபால் சார் நீங்க சொல்வது சரிதான் எல்லார் வீட்டு பூஜை ரூமிலும் வெங்கடாசலபதி படம் இருக்கு. அதைக்கும்பிட்டு திருப்தி பட்டுக்க வேண்டியதுதான். உங்களால திருச்சி ஸ்டேஷன் வரமுடியாதுன்னு நினைச்சேன் சார். டயம் அன் டைம் உங்க உடல் நிலை இடம் கொடுக்காது. பரவால்லை. வேர சந்தர்ப்பம் வாய்க்காமலா போகும். அப்ப பாத்துக்கலாம் சார்

angelin said...

எல்லாம் இந்த ஆசாமிகளின் வேலைதானம்மா .அந்த கடவுளே இவங்ககிட்ட மாட்டிகிட்டு அவஸ்தை படறார் .நீங்க விடுமுறையில் இருந்து வந்திட்டீங்க நான் புறப்படுகிறேன் .ஒரு மாதம் கழித்து சந்திப்போம் .

மனோ சாமிநாதன் said...

Welcome Back lakshmi!

பயண அனுபவம் படித்து, உங்கள் மனது வேதனைப்பட்டதை நினைத்து மனம் கனமானது. காலையிலிருந்து எத்தனை கஷ்டப்பட்டு, எத்தனை தூரம் அசெளகரியங்களுடன் பிரயாணித்து, க‌டைசியில் அத்தனையும் இப்படி பலனில்லாமல் போய் விட்டது.....
எத்தனை வயதானாலும் அனுபவங்களுக்கு பஞ்சமில்லை.

அமைதிச்சாரல் said...

வாசல் வரைக்கும் போயிட்டு தரிசனம் செய்ய முடியாம திரும்பிவந்தது மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். பக்தியை பிஸினஸ் ஆக்கினவங்களை அவனே கேக்கட்டும்ன்னு விட்ருங்கோ..

தமிழ்வாசி - Prakash said...

amma welcome. anupavangal arumai.

DRபாலா said...

''கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா ....''

சாகம்பரி said...

இதே போல்தான் ஒருமுறை எனக்கும் திருப்பதி பாலாஜிக்கும் சண்டையாகிவிட்டது. ஒரே வருத்தத்தோடு தரிசனம் முடித்து சென்னை வந்தால் கருமாரி கோவிலில் பாலாஜி தரிசனம் அருமையாக கிட்டியது. அந்த வருடம் ஒரு வீடுகூட வாங்கினேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், வருத்தத்தை மகிழ்ச்சியாக பாலாஜி மாற்றித்தருவார். சென்னையில் ஆந்திரபிரதேசத்து சுற்றுலா துறையினர் பாலாஜி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். கிட்டத்தட்ட 1650/ ஒரு ஆளுக்கு. நாம் அதிதீகளாக செல்வதால் அருமையான தரிசனம் கிட்டுகிறது. அடுத்தமுறை இதுபோல் செய்து பாருங்கள் மேடம்.

Rathnavel said...

நல்ல பதிவு.
இப்படி சம்பவங்களால் கோவில் மீதே வெறுப்பு வந்து விடுகிறது.
நன்றி அம்மா.

கூழாங் கற்கள் said...

உங்கள் தளத்தை
தமிழ் வண்ணம் திரட்டியில் இணைத்தற்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

சீனியர் சிட்டிசன் ஹார்ட் பேஷ்ண்ட் ஐ.டி கார்ட் எடுத்து கோபுரவாசலில் அலுவலக்த்தில் சமர்பித்தால் அதற்கான நேரத்தில் சிரமமில்லாமல் தரிசித்திருக்கலாம்.

திருப்பதி தரிசனம் போகிறேன் என்று ஒரு பதிவிட்டிருந்தால் நிறைய பேர் யோசனை சொல்லியிருப்பார்கள்.
உங்களுக்கு உதவியிருக்கும்.

முன்னால் போகிறவன் தடுக்கி விழுந்தால் பின்னால் வருகிறவனுக்கு அது பாடமல்லவா.;

வெங்கட் நாகராஜ் said...

வாங்கம்மா. பயணம் எல்லாம் நல்லா இருந்ததா? திருப்பதியில் இப்படித்தான் எல்லாவற்றையும் வியாபாரமாக்கி விட்டனர். கோவில் வரை சென்று விட்டு கடவுளைக் காணமுடியாமல் திரும்பி வருவது என்பது கஷ்டம் தான்.

Lakshmi said...

ஏஞ்ச்லின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எந்த ஊருக்கு போரீங்க. எஞ்சாய்

Lakshmi said...

மனோ மெட்டம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இப்படிதான் எனக்கு அனுபவங்கள் வாய்க்கிரது. என்னசெய்ய அதைத்தான் உங்க எல்லார் கூடவும்
பகிர்ந்துகொள்ளவும் வேண்டி இருக்கு.

Lakshmi said...

அமைதிச்சாரல் நம்க்கோ நம்ம வேலை
முடியலே ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருக்கேன் வைஷ்னவி போனப்போவும் கோவில் வாசல் வரை போயி தரிசனம் கிடைக்காமல் திரும்பினேன். இது ரெண்டாவது தடவை. இனிமே ஆண்டவன் யாரைக்கேட்டா நமக்கு என்ன.

Lakshmi said...

என்ன பிரகாஷ் தரிசன் கிடைக்காதது அருமையா?

Lakshmi said...

DR பாலா உண்மைதான்.

Lakshmi said...

சாகம்பரி நீங்க சொன்ன அதே தேவஸ்தான ஆட்கள் ஏற்பாடு செய்து
தான் போனோம்மா. அதுவே இப்படி.

Lakshmi said...

ரத்னவேல் சார் ஆமாங்க என்ன செய்ய.

Lakshmi said...

கூழாங்கற்கள் நன்றி.

Lakshmi said...

ராஜராஜேஸ்வரி ஐடி கார்டெல்லாம் கொண்டுபோயிருந்தேன்மா. காரில் மறந்து வச்சுட்டேன் அதுதான் பிரச்சினையே.

Lakshmi said...

வஎங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

இதற்குத்தான் சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டார் என்று சொல்வார்களோ?

Lakshmi said...

ஆமா சாதிகா

அந்நியன் 2 said...

வாருங்கள் ! வாருங்கள் !

உங்கள் பயணங்களின் முடிவுகள் கண்டேன் அற்புதம் அதேவேலையில் சில சங்கடங்களையும் அனுபவத்து வந்துள்ளிர்கள் என்பதினை பதிவை படிக்கும் போதே தெரிகிறது.

மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பையும் கேள்விப்பட்டேன்.

வாழ்த்துக்கள்.

bandhu said...

ரொம்பவே கொடுமை. இது போன்ற ரூல்களை நடைமுறைபடுத்தும்போது அவர்கள் சொந்த மூளையையும் (இருந்தால்!) உபயோகித்தால் தப்பே இல்லை!

கோகுல் said...

இப்போது தான் முதல் முறையாக உங்கள் தளத்துக்கு வருகிறேன்.
உங்கள் வர்ணனை உங்கள் பயணத்தை உடனிருந்து அனுபவித்தது போல் உள்ளது.//

தரிசனம் கிடைக்காத வலியை நானும் உணர்கிறேன்.

HVL said...

பிரபல கோயில்கள் எல்லாவற்றிலும் இப்படி தான் - சாமியின் வரம் கிடைத்தாலும் பூசாரியின் வரம் கிடைக்க மாட்டேன் எங்கிறது!

Ramani said...

தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை
எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
தங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க
வாழ்த்துகிறேன்

ஸ்ரீராம். said...

தமிழ் நாடு டூரிசம் ஏற்பாடு செய்யும் பஸ்ஸில் சென்றால் அவர்களே தரிசனம் வரை பொறுப்பெடுத்துக் கொண்டு செய்து விடுகிறார்கள். தலைக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய் என்று நினைவு.

இவ்வளவு தூரம் பயணம்-அதுவும் நிறைய அலெர்ஜிகளுக்கு நடுவில்- செய்து ஆனால் கோவில் உள்ளே நுழைய முடியாமல் போவது என்பது மிக வெறுப்படைய வைக்கும் நிகழ்வு. அப்புறம் தரிசனம் செய்தீர்களா இல்லையா? பாதுகாப்பு ஏற்பாடுகள்தான் என்றாலும் சில சமயம் ரூல்ஸ் என்பதை குருட்டுத் தனமாகக் கடைப் பிடிப்பவர்களை என்ன சொல்ல? உடன் வந்தவர்களாவது பார்த்து அழைத்துச் சென்றிக்கலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

பிளாக்கின் டைட்டில், போஸ்ட்களீன் டைட்டில் எல்லாமே பாடல் வரிகளாகவே போட்டு அசத்தறீங்களேம்மா?

Lakshmi said...

அ ந் நியன்2 வாங்க ரொம்ப நாள் கழிச்சு நம்மபக்கம் வந்திருக்கிங்க. அடிக்கடி வாங்க நன்றி.

Lakshmi said...

பந்து, கருத்துக்கு நன்றி, அவங்களுக்கு
சொந்தமூளை இருந்தா இப்படில்லாம் நடந்துப்பாங்களா

Lakshmi said...

கோகுல் முதல் வருகையா இனி அடிக்கடி வாங்க. நன்றி

Lakshmi said...

ஆமா H.V.L. நம்மால என்ன செய்யமுடியும். எல்லாரோடயும் நம்ம ஆதங்கத்தைப்பகிர்ந்துகொள்வதைத்தவிர?

Lakshmi said...

ரமணி சார் வலைச்சர அறி முகத்துக்கும் வருகைக்கும் நன்ரி.

Lakshmi said...

ஸ்ரீ ராம் ஆனது ஆச்சு இனி அதைப்பத்திபேசி என்ன இருக்கு விட்டுட
வேண்டியதுதான்.

Lakshmi said...

சி.பி, செந்தில் குமார் எனக்கு பாட்டுன்னா அவ்வளவுஇ இஷ்ட்டம்
அதான்.

Nagasubramanian said...

இதன் காரணமாகவே சில ஆண்டுகளாக நான் கோவில்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தேன். பிறகு ஆள் அரவம் அற்ற கோவில்களை நாடிச் சென்றேன். அதன் தனிமையும் இனிமையும் அலாதியானது.
இருந்தாலும் நீங்கள் செய்தது நியாயம் தான்.

Lakshmi said...

நாக சுப்ரமணியம், எங்க ஊரு கோவிலும் ஆளரவமற்ற ஆடம்பரமில்லாதகோவில்தான் அங்கு கிடைத்த மன நிம்மதிகூட பெரியகோவில்களில் கேள்விக்குரியாக்கிவிடுகிரார்களே/

Amutha Krishna said...

ஆஹா தாம்பரத்தில் தான் நான் இருக்கிறேன். தெரிந்து இருந்தால் சந்தித்து இருக்கலாம் அம்மா. 300 ரூபாய் டிக்கெட் வார நாட்களில் எடுத்தால் 3 மணிநேரத்தில் தரிசனம் கிடைக்குமே.

Amutha Krishna said...

2000 ரூபாய் புக் செய்து போனீர்களே அதில் இந்த 300 ரூபாயும் தானே அடக்கம்.அப்படி தான் பேசி அழைத்து செல்வார்கள்.அந்த ட்ரைவர் 300 ரூபாய் மிச்சம் செய்ய உங்களை இந்த பாதையில் செல்லும் படி சொல்லி இருக்கிறார்.இல்லாட்டி முதலிலேயே சொல்லி இருந்தால் நீங்கள் ஐ.டி கொண்டு சென்று இருக்கலாம். அந்த ட்ரைவர் மேல் தான் முழு குற்றமும்.அவருக்கு முழு விபரமும் தெரியும்.

Lakshmi said...

அமுதா எல்லாம் இப்பசொல்லி என்ன ஆகப்போகுது.

RAMVI said...

இதை படித்தவுடன் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா.
ஐ. டி கார்ட் எல்லா இடத்திலேயும் முக்கியமா வைத்துக்கொள்ள வேண்டும் போல இருக்கு.

Lakshmi said...

ரமா நான் எப்பவும் செல்போன், ஐடி
கார்ட் கொஞ்சம் பணம் எல்லாம் தனியே ஒரு சின்ன பர்சில் எடுதுண்டுதான் போவேன். யாருகூட போனாலும்கூட. அன்னிக்கு என்கையைக்கட்டிப்போட்டது எந்தசக்தின்னு புரியல்லே.

செங்குட்டுவன் said...

அம்மா நமது மக்கள் ஏறி விழுந்துகொண்டு திருப்பதிக்கு செல்வதனாலே தான்
இந்த ஆசாமிகள் சாமிக்கும் நமக்கும் இடையே தரகு வேலை பார்க்கிறார்கள்...
வள்ளல் பெருமானார் சொன்னதுபோல நமது உடலே கோவில் நமது உள்ளமே தெய்வம் என்று இருந்தால்
இந்த ஆசாமிகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்...

Geetha Sambasivam said...

இவ்வளவு தூரம் போயிட்டு உள்ளே போய் சாமியைப் பார்க்கலைங்கறது வருத்தமாத் தான் இருக்கு. :(( உள்ளே போனாலும் ஐந்து நொடி கூடப் பார்க்க விட மாட்டாங்க. ஒரே தள்ளுதான். நான்கைந்து வருஷம் முன்னாடி அவங்க தள்ளினதிலே நான் கீழே விழுந்தப்புறமா திருப்பதி போறதுங்கறதே யோசனையா இருக்கு. சாமி இவங்களை இப்படி எல்லாம் செய்யச் சொல்லவில்லை. இவங்க அவங்களோட அதிகாரத்தைக் காட்டிக்கறாங்க. :((((( வேறென்ன சொல்ல!

என்னை ஆதரிப்பவர்கள் . .