Google+ Followers

Pages

Wednesday, September 7, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (7)

திரு நெல் வேலி ஸ்டேஷன் அப்பல்லாம் ரொம்ப சாதாரணமா ஐயோ பாவமா
 இருக்கும். இப்ப  நல்லா பள, பளப்பா இருக்கு. டைல்ஸ்பதித்ததரை, எல்லா இடத்துலயும் மின்விளக்குகள். என்று அமர்க்களமா இருந்தது.எனக்கு திருன
வேலி டு கல்லிடை, பாசஞ்சர் வண்டியில் போகனும்போல இருந்தது.(ஹி,ஹி)
அப்போல்லாம் செங்கோட்டை பாசஞ்சர்னு ஒரு பாசஞ்சர் கல்லிடை வழியா
தான் போகும். அதில் பயணம் செய்வது தனி சுகம். அதில் கரி எஞ்சின்தான்
 இருக்கும். சீட் எல்லாம் மர பெஞ்ச்தான் ஜன்னலில் குறுக்கு கம்பிகளே இருக்
காது. தலையை முழுசா வெளில நீட்டி வேடிக்கை பார்க்கமுடியும். அப்போ இஞ்சின்லேந்து வர கரிப்புகை தலைபூராவும் அப்பிக்கொள்ளும் அதுமட்டுமில்லே, வேடிக்கை பார்க்கும் எல்லார்கண்களிலும் கரிப்பொடி
 விழுந்து எல்லார் கல்களுமே மிளகாய்ப்பழ சிவப்பாக இருக்கும். ஆனாலும்
 கண்ணை கசக்கிண்டே வேடிக்கை பார்ப்போம்.வெளில வேடிக்கைபார்க்கவென்றே அற்புதமான இயற்கை காட்சிகள்கொட்டிக்
 கிடக்கும். ஜங்க்‌ஷன், டவுன், பேட்டை, மேலக்கல்லூர், சேர்மாதேவி, வீரவ நல்லூர் என்று ஸ்டேஷன்களைத்தாண்டும்போது  நம்ம ஊர்வர இன்னும் 4 ச்டேஷந்தான் இருக்கு, இன்னும் 3, 2 ,1, ஸ்டேஷந்தான் இருக்குன்னு மனசு
 குதி ஆட்டம் போடும். வண்டியும் மாட்டுவண்டி வேகத்தில் தான் போகும்.
 பச்சைபசேல் வயல் வெளிகள், நடு, நடுவில் ஓடும் ஆறுகள், அதில் நீந்தி
 விளையாடும் குழந்தைகள் என்று காணக், காண அலுக்காதகாட்சிகள்.
 ச்டேஷன்மாஸ்ட்டரிடம்போயி பாசஞ்சர் வண்டி எவ்வளவு மணிக்கு இருக்குன்னோம். அவரோ இப்போ மீட்டர் கேஜ் எல்லாம் ப்ராட் கேஜ் ஆயிண்டு
இருக்கு. அதனால ரிப்பேர் வேலைகள் நடக்குது. பாசஞ்சர் வண்டில்லாம்
 கேன்சல் அப்படின்னுட்டார். எனக்கு பொசுக்குனு ஆச்சு.மனசுக்குள் சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை, வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான் என்று பாடல் வரிகள் எல்லாம் நினைவில் வந்தது.

சரி வேர வழி. கால்டாக்சி பிடிச்சு, நான் வழக்கம் போல முன்சீடில்உக்காந்தேன்
     சும்ம சொல்லக்கூடாது ,ரோட்சைட் ட்ராவலும் சூப்பராஇருந்தது.ஸ்மூத்தான
சாலைகள், ரெண்டுபுரமும் பச்சைபசேல் மரங்கள். நம்மை தலைஆட்டி வர
வேற்பதுபோல இருந்தது. விடிந்தும் விடியாதகாலைப்பொழுதாவேர இருந்துதா, ஆகாயம் கருப்பு நிறத்லேந்து வெளிச்சத்துக்கு மாறும் அழகு கண்
 கொள்ளா காட்சி, பறவைகள் கீச்ச், கீச் என்று ஒலி எழுப்பிக்கொண்டே
சுறு சுறுப்பாக பறந்து பொகும் காட்சிகள்.எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
 இறைவான்னுதான் பாடத்தோனிச்சு, அவ்வளவு ஆனந்தமான பயணம்.

 30.- நிமிடங்களில் கல்லிடை வந்து விட்டது. பிறந்தமண்ண்ணில் வெகுகாலம்
 கழித்து கால் பதிக்கிரேன். உடம்பெல்லாம் ஒரே சிலிர்ப்பு.வண்டி எங்க தெருவழியாகத்தான் போச்சு. எங்க வீடும் அங்கதான் இருந்தது. வீட்டை பூட்டி
 வச்சா வீணாகிடுமேன்னு வாடகைக்கு விட்டிருந்தோம். அதனால வாசலில் இருந்தே வீட்டைப்பார்த்துக்கொண்டே போனோம். வேரு ஒரு தூரத்து சொந்தக்
காரா வீட்லபோயி தங்கினோம்.ஊர்பூராவுமெ நெருங்கிய சொந்தம் தூரத்து
 சொந்தம் என்று நிரயாபேரு இப்பவும் இருக்கா.அந்த சொந்தக்காரா சிரித்தமுகமாக வரவேற்பு கூறினார்கள். வீடு நல்லா பெரிசா இருந்தது.முதலில் சின்ன ரூம் அதைதாண்டி உள்ள போனா பெ..ரி,,,ய்,,,,,,,,, ஹால் அதன் நடுவில் ..........................

51 comments:

M.R said...

அதன் நடுவில்.... என்று சஸ்பென்ஸ் வச்சிட்டீங்களே அம்மா நாளைக்கு வந்து பார்க்கிறேன்

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் அம்மா.

• » мσнαη « • said...

////பச்சைபசேல் வயல் வெளிகள், நடு, நடுவில் ஓடும் ஆறுகள், அதில் நீந்தி
விளையாடும் குழந்தைகள் என்று காணக், காண அலுக்காதகாட்சிகள்////

ஆஹா புகை படிந்த பெரு நகரத்து மக்களுக்கு காண கிடைக்காத காட்சிகள்...ரியல் எஸ்டேட் மாடுகளின் கண்களில் பட்டதால் இன்று பல கிராமங்களில் கூட இத்தகைய காட்சிகள் காணாமல் போய் விட்டது

• » мσнαη « • said...

குதூகூலமான குழந்தையின் மனநிலையில் உங்களது பயணத்தை விவரிக்கிறிர்கள் ...அருமை....சிறுவயதில் நான் பார்த்த எனது கிராமத்திற்கு சென்று வந்தது போல் உள்ளது உங்கள் பதிவு .

கோவை2தில்லி said...

காலை நேரத்தில் பயணிப்பது ஒரு சுகானுபவம் தான்.

கல்லிடைக்குறிச்சி அனுபவங்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம்.

RAMVI said...

முதலில் நீங்க குரிப்பிட்டுள்ள அந்த நாளைய ரெயில் பயணம் அருமை.அந்த நாளும் வந்திடாதன்னு இருக்கு!
இப்படி ஹால் நடுவில் அப்படீன்னு சஸ்பன்ஸில் முடிச்சுட்டீங்களே?அங்கு என்னாச்சு?

வை.கோபாலகிருஷ்ணன் said...

// பிறந்தமண்ண்ணில் வெகுகாலம்
கழித்து கால் பதிக்கிரேன். உடம்பெல்லாம் ஒரே சிலிர்ப்பு.வண்டி எங்க தெருவழியாகத்தான் போச்சு. எங்க வீடும் அங்கதான் இருந்தது.//

படிக்கும் எனக்கே பரவசம் ஏற்படுகிறது என்றால் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

அருமையாகத் தொடர்கிறது உங்கள் பயணக்கட்டுரை. நன்றி.

ஆமினா said...

அதெல்லாம் ஊரா?

ஹி...ஹி...ஹி...
சொர்க்கம் னு சொல்ல வந்தேன்

மினரல் வாட்டரே தேவையில்ல......அவ்வளவு டேஸ்ட் அந்த ஊர் தண்ணி.. குடுத்து வச்சவங்க நீங்க :-)

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா
எங்களையும் அப்படியே தொடர்வண்டிப் பயணத்திற்கு
விரலைப் பிடித்து கூட்டிசென்றது போல ஒரு உணர்வு.
ஊர்ந்து செல்லும் தொடர்வண்டியிளிருந்து சாளரம் வழியாக
வேடிக்கை பார்ப்பது ஒரு தனி சுகம் அம்மா...

இன்றும் துபாயிலிருந்து விடுமுறையில் ஊருக்கு செல்கையில்
ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு ஊர் வருகையில்
இதோ இன்னும் பத்து ஊர் தான் இருக்கு
அப்படின்னு மனசு எண்ணிக்கொண்டே வருவதை..
பிரதிபலித்து விட்டீர்கள்.
பதிவில் லயித்தேன் அம்மா....
நன்றி.

மாய உலகம் said...

பெரி ய் ய ... திரில்லிங்க் ஸ்டோரிக்கு இருப்பது போ சஸ்பென்ஸ் வசிட்டீங்களேம்மா....

மாய உலகம் said...

கல்லிடை சென்றடைந்ததும் சிலிர்ப்பு ஏற்பட்டதாக சொன்னீர்கள்...பிறந்த ஊருக்கு என்றுமே ஓர் உயிர் இருக்கும்... உண்மைதாம்மா... சொர்க்கமே என்றாலும் பிறந்த ஊர் போல் வருமா..

Jaleela Kamal said...

சொந்த ஊரில் கால் வைத்ததும் ஒரு சிலிர்பு,
இருக்காத பின்ன

தொட்ருங்க
என்ன சஸ்பன்ஸ் எலி போல வேறு எதுவுமா ?
சும்ம தமாசுகு தான் கேட்டேன்

ரிஷபன் said...

சாலைகள், ரெண்டுபுரமும் பச்சைபசேல் மரங்கள். நம்மை தலைஆட்டி வர
வேற்பதுபோல இருந்தது.

முன் சீட்டில் அமர்ந்து சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டே போவது ஒரு தனி சுகம். காலுக்கடியில் சாலை நழுவிப் போவது போல.. இருபுறமும் மரங்கள் கவிழ்ந்து குடை பிடிப்பது போல.. ஒரு முறை பெரிய நாகப்பாம்பு இந்தப் பக்கமிருந்து அந்தப்பக்கம் கிராஸ் செய்தது த்ரில்லிங் அனுபவம்.

பயண அனுபவம் படிக்க ஆர்வமாய்.

ஸ்ரீராம். said...

பழங்கால ரெயில் அனுபவங்கள் சொன்னது ரசிப்பாய் இருந்தது. கம்பியில்லாத ஜன்னல் இப்போது நினைத்துக் கூட பார்க்க முடியாது. நீண்ட நாள் கழித்து சொந்த ஊருக்குள் நுழையும் அனுபவம் சுகமானது. சின்ன சஸ்பென்சுடன, ரொம்பச் சுருக்கமாக இந்த பதிவு முடிந்து விட்டதோ...

Anonymous said...

த்ரில்லிங் அனுபவம்.... கல்லிடைக்குறிச்சி அனுபவங்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம்....

அமைதிச்சாரல் said...

எத்தனை வருஷங்கள் கழிஞ்சாலும், சொந்த ஊருக்குப் போற அனுபவம் சுகமானதுதான்.

அந்நியன் 2 said...

இது என்ன பயண பகிர்வா அல்லது திகில் தொடரா?

பிரமிக்க வைக்கின்றது ஒவ்வொரு வரிகளும்.

வாழ்த்துக்கள் அன்ட் தமிழ் மணமும்.

Anonymous said...

Comment Continues...

சஸ்பென்ஸ் பயணம் தொடரட்டும்...
ரெவெரி

ஜெய்லானி said...

எனக்கு வெளி நாட்டு வாழ்கையா போனதால திரும்ப வரும் போது ஃபிளைட் ஜன்னல் வழியே சென்னை ஏர்போர்ட் பலகையை பார்க்கும் போதே இதே உணர்வுதான் வருகிறது

அழகா சொலிகிட்டு வரும் போதே டக்கென்று நிறுத்திட்டீங்களே :-)

Lakshmi said...

M.R. வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ரத்னவேல் ஐயா நன்றிங்க.

Lakshmi said...

மோஹன் வருகைக்கு நன்றி. நீன் க்க ப்ளாக் எதுவும் எழுதரது இல்லியா?ஃபாலோ ப்ளாக் தான் வருது.

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஆமி சரியா சொன்னீங்க. ஆனா நாங்க அங்க இருக்கமுடியாமத்தானே இங்க வந்து குப்பை கொட்டரோம்.

Lakshmi said...

மகேந்திரன் நான் ரசித்தவிஷயங்களை படிப்பவர்களும் உணர்ந்து ரசிக்கனும்னுதான் இவ்வளவு விஸ்தாரமா எழுதரேன்.

Lakshmi said...

மாய உலகம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஜலீலா இங்க எலில்லாம் இல்லே. இது வேர.

Lakshmi said...

ரிஷபன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரெவரி வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ஆமா அமைதிச்சாரல் பிறந்த ஊருன்னா எல்லாருக்குமே தனி பிரியம்தானே.

Lakshmi said...

அந்நியன்2, வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றிங்க.

Lakshmi said...

ரெவரி நன்றி.

Lakshmi said...

ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

புலவர் சா இராமாநுசம் said...

எந்த ஊர் போனாலும்
சொந்த ஊர் என்றாலே
அது தனி சுகம்தான் அதில் ஐய
மில்லை
நல்ல பதிவு!

புலவர் சாஇராமாநுசம்

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் மேடம்!

ரொம்ப அருமையா இருந்திச்சு, நாங்களும் உங்ககூட சேர்ந்து ட்ராவல் பண்ணின மாதிரி இருந்திச்சு!

அப்புறம் கடைசியில அது என்ன ஒரு சஸ்பென்ஸ்!

Lakshmi said...

புலவர் சா. ராமானுசம் ஐயா வருகைக்கு கருத்துக்கும் நன்றிங்க

Lakshmi said...

ஐடியா மணி நீங்கதான் என் பக்கம் வரவே இல்லியேன்னு நினைச்சேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.

ஸாதிகா said...

மெட்றாஸில் இருந்து தின்ன வேலி போயச்சா?உங்கள் பயண அனுபவம் சுவாரஸ்யமாக உள்ளது.தொடருங்கள்1

Ramani said...

திண்ணைக்கும் ஹாலுக்கும் இடையில் இருக்கும்
நடை குறித்து அடுத்த பதிவு என நினைக்கிறேன்
சுவாரஸ்யமாகப் போகிறது பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 4

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆமா, ரமணி சார் நடை, ரேழி, பாவுள் அடுக்களை, தாவாரம், பட்டாசாலை
கொல்லைப்புறம் என்றுதான் கிராமத்து வீட்டு அமைப்புகள் இருக்கு.

அம்பாளடியாள் said...

சொந்த ஊருக்கு நிகரா எந்த ஊரும் வராது .அழகான ஆக்கம் .நன்றி அம்மா பகிர்வுக்கு ....

Lakshmi said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றி

தக்குடு said...

கல்லிடையின் புகழ் பரவட்டும் எட்டு திக்கும்!! நம்ப ஊர்ல செங்கோட்டை பாசஞ்சர் மாதிரி ஆடிஅசைஞ்சு வராதேடீ!!னு ஒரு வசனமே உண்டு!! கருடசேவை பாக்கர்துக்கு வெயிட்டிங்கு!!! :))

nellai ram said...

சஸ்பென்ஸ் பயணம் தொடரட்டும்.

Lakshmi said...

தக்குடு நீ சம்த்து. கூப்டோடன வந்துட்டியே.

Lakshmi said...

நெல்லை ராம், வருகைக்கு நன்றி

மாதேவி said...

உங்கள் அழகிய ஊரைக் கண்டுகொண்டோம்.

என்னை ஆதரிப்பவர்கள் . .