Google+ Followers

Pages

Friday, September 2, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (6)

காத்து இப்படி அடிச்சா தூக்கமா வருதேன்னு ஜன்னல் கண்ணாடியை
போட்டேன்.வண்டிக்குள்ள ஒரே அமைதி. ரொம்ப நேரமா காதுல ஹெட்
 போன் போட்டுண்டு பாட்டுக்கேட்டா காது வலிக்கும். அதனால அதையும்
 எடுத்துட்டேன். ஜன்னலை சாத்தினா இறுக்கமா புழுக்கமா இருந்தது. அது
 சரிப்படலே. திரும்ப ஜன்னலை திறந்து வச்சேன். பாத் ரூம் போயி குளிர்ந்த தண்ணி ஊத்திண்டு முகத்தை நல்லா அலம்பிண்டு வந்து உக்காந்தேன்.
 அப்போ கொஞ்சம் தூக்கத்தை தடுக்க முடிந்தது. சின்ன டார்ச் கையில்
 வச்சிருந்தேன். அதை வச்சுண்டு புக் படிச்சுண்டு கொஞ்ச நேரம் ஓட்டினென்.
 அந்தகம்மி லைட்டுல சரியா படிக்க முடியல்லே கண்ணெல்லாம் வலிச்சது
 தான் மிச்சம். அரை மணி நேரம்தான் படிக்க முடிஞ்சது. இப்ப பாத்து டைம்
 ரொம்ப மெதுவா போரதுபோலவே இருந்தது.திரும்பவும் போயி முகத்துல
 தண்ணி ஊத்திகிட்டு வந்தேன். வெளில பூரா ஒரே இருட்டு.என்ன பண்ணலாம்னு ஒரே யோசனை.  மதுரை வரும்போது தூங்கிட்டா கஷ்ட்டம்
ஆச்சேன்னு முழிச்சுகிட்டு இருக்க ரொம்பவே முயற்சி செய்ய வேண்டி
 இருந்தது . தூங்கிட்டேன்னா மிடில்ல எழுந்துக்கவே மாட்டேன் டீப் ஸ்லீப்தான்
 மொபைலி அலாரம் வச்சுக்கலாம்னு நினைச்சேன். அது அடிக்கிர சத்ததில்
 என்னைத்தவிர மத்தவங்கல்லாம் தான் எழ்ந்துப்பாங்க.   நான் இல்லே. ஹா  ஹா. நம்ம எல்லா பதிவர்களின் பெரு மதிப்புக்குறிய வலைச்சர்ம் ஆசிரியர் சீனா
ஐய்யா அவர்களும், தமிழ் வாசி பிரகாஷும்தான் மதுரை ஸ்டேஷனுக்கு
 வரேன்னு சொல்லி இருந்தாங்க. நான்கூட பிர்காஷிடம் ஐயாவை ஏன்
 டிஸ்டர்ப் பன்ரேன்னேன். இல்லே ரொம்ப தூரத்லேந்து வராங்க நாம போயி
 பாத்துட்டு வரலாம்னு ஐயாதான் சொன்னாங்கன்னு பிரகாஷ் சொன்னான்
எனக்கு, ரொம்ப பெருமையாவும் இருந்தது, சந்தோஷமாகவும் இருந்தது
 இப்படி இரவு 3 மணிக்கு  வந்து சந்திக்கும் அளவுக்கு நல்ல நண்பரகளை
  பெற்றிருக்கிரோமேன்னு. இரவு 2.30-க்கு பிரகாஷ் போன்பண்ணி வண்டி
 எங்க நிக்குதுன்னு கேட்டான், சரியான டயத்லதான் வருது அவுட்டர்ல
 நிக்குதுன்னு சொன்னேன். கரெக்டா2.45- ஸ்டேஷனக்குள்ள வண்டி நுழைன்
ஜ்சது. அவங்களைப்பாத்ததும் அதைப்பெசனும், இதைப்பேசனும்னுல்லாம்
 நினைச்சிருந்தேன்.

 அவங்க போட்டோ நெல்லை பதிவர் சந்திப்பு பற்றிய பதிவில் பார்த்திருந்தேன்.
 நானும் என் ப்ரொபைலில் என்போட்டோ போட்டிருப்பதால ஈசியா அடையா
ளம் கண்டுகிட்டோம். நான் ஏற்கனவே பிரகாஷிடம் கோச் நம்பர், வண்டி விவரம் எல்லாம் சொல்லி இருந்தேன். மதுரை வரும் வரை தூக்கத்தையும்
 கஷ்ட்டப்பட்டு விராட்டி அடிச்சேன். ப்ளாட் பார்மில் அவங்களைப்பார்த்ததுமே’
 தெரிந்துவிட்டது. நானும் வண்டிக்குள்ளேந்து கை ஆட்டினேன். அவங்களப்
பாத்ததுமே ரொம்ப சந்தோஷமா இருந்தது. மூவர்முகங்களிலும் சிரிப்பு
 தன்னால வந்து ஒட்டிகிச்சு. நலம் விசாரிப்புகள்.அவா நிறைய பிஸ்கெட்ஸ்
 வாங்கி வந்திருந்தா. நானும் மும்பைலேந்தே ஒரு நினைவு பரிசு வாங்கி
போயிருந்தேன். எங்க சந்திப்புக்கு அடையாளமா.. என் அத்தையும் அவங்ககூட
 கொஞ்சம் பேசினா. நான் என்னன்ன பேசனும்னு நினைச்சிருந்தேனோ
 அதில ஒன்னுகூட பேசலை. அந்த நேரம் எதுமே நினைவுக்கு வல்லே,
 ஒரே சிரிப்பு, நலம் விசாரிப்புன்னே டயம்போச்சு.

10- நிமிஷத்ல வண்டி கிளம்பிடுத்து. நிஜம்மா அவங்களைப்பாத்தொம்மா இல்லே சொப்பனம் ஏதும் கண்டோமான்னே தோனிச்சு. ஏற்கனவே பிரகாஷ்
 இந்த சந்திப்பு பற்றி அவனோட ப்ளாக்ல பதிவு போட்டிருக்கான். அவா ஸ்டேஷனில் எப்படி டைம்பாஸ் பண்ணினான்னு சொல்லி இருந்தான் நான் வண்டில பத்தி சொன்னேன்.3.30க்கு சீட்லபோயி படுக்கப்போனேன். அவா
கூட போட்டோ எடுத்துக்கனும்னு கேமரால்லாம் சீட்மேல ரெடியா வச்சி
ருந்தேன். கீழயே நின்னு பேசிட்டு இருந்ததுல போட்டோ எடுக்கவே மறந்தேன்
  ஐயோ, நல்ல சான்ஸ் மிஸ்பன்னிடோமேன்னு இருந்தது. போட்டோல்லாம்
 எப்பவுமே நல்ல மெமொரிக்குத்தானே . கொஞ்ச நேரம் தூக்கம் வல்லே.
 ஒருவருஷம் முன்னே சும்மா விளையாட்டுத்தனமா ப்ளாக் எழுத ஆரம்பிச்
சேன். இப்போ எவ்வளவு நண்பர்கள்கிடச்சிருக்காங்கன்னு நினைக்க மனசே
 நிறைஞ்சு இருக்கு,வயசு வித்யாசம் இல்லாம, எல்லா வயதிலும் நண்பர்கள்
 கம்ப்யூட்டரில் ஏதானும் சந்தேகம்னு சொன்னா உடனேயே வந்து உதவி
 செய்யும் நல்ல நண்பர்கள், அம்மா, அம்மான்னு அத்தனை பிரியமாகப்பழகும்
 நல்ல நண்பர்கள் எல்லாம்கிடைச்சிருக்காங்க.

இதெல்லாமே ப்ளாக் எழுதுவதால் எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய
 ப்ளஸ் போயிண்ட்ஸ், அன்பு நண்பர்கள் எல்லாருக்கும் என் நன்றிகளைத்
 தெரிவிச்சுக்கரேன்.இப்படி என்னன்னமோ யோசித்து, யோசித்து 4-மணீக்கு
 தான் தூங்க முடிந்தது. தூங்கின கொஞ்ச நேரத்துலயே எச்சிமி, எழுந்திருன்னு
 உலுக்கி எழுப்ப ஆரம்பிச்சுட்டா அத்தை.. எதுக்கு இப்படி பாதி ராத்ரில எழ்ப்பி
தொந்திரவு பன்ரேன்னு கேட்டேன். நன்னா சொன்னே போ பாதி ராத்திரியா
 விடிகாலை 5-மணி ஆச்சு கொஞ்ச நேரத்ல திருன வேலி வந்துடும். எழ்ந்துக்
க்கோ போயி பல்லுதேய்ச்சு முகம் அலம்பிண்டு தலைவாரிக்கோன்னு
 விரட்டரா. ஒருமணி நேரம்தான் தூங்க முடிஞ்சதுன்னு கோவமா வரது
 தூக்கத்ததை கொட்டாவியில் அடக்கியவாரே ரெடி ஆனோம். 5.30. கரெக்டா
திரு நெல் வேலி ஸ்டேஷனுக்குள் வண்டி நுழைந்தது. ரொம்ப, ரொம்ப,(30)
 வருடங்களுக்குப்பின் திரு நெல் வேலி மண்ணை மிதிக்கிரேன்.

70 comments:

RAMVI said...

//அவங்களப்
பாத்ததுமே ரொம்ப சந்தோஷமா இருந்தது. மூவர்முகங்களிலும் சிரிப்பு
தன்னால வந்து ஒட்டிகிச்சு.//

அருமையா எழுதியிருக்கீங்க அம்மா. இது கட்டாயம் மறக்க முடியாத ஒன்றுதான்..

கோகுல் said...

நண்பர்களை சந்திப்பது எப்போதும் சந்தொசமிக்க தருணம் தான்.அதுவும் முகமறியா நண்பர்களை நேரில் காணும் போது உள்ள அனுபவமே அலாதி!
நல்ல பகிர்வு!நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

இந்த வலைப்பூவினால் கிடைக்கும் நட்பு வட்டம் பற்றி நிறைய எழுதலாம் அம்மா... இரவு வெகுநேரம் விழித்திருந்து சீனா ஐயா அவர்களைப் பார்த்தது நிச்சயம் உங்களுக்கு சந்தோஷம் அளித்திருக்கும்...

நல்ல பகிர்வுக்கு நன்றிம்மா...

விக்கியுலகம் said...

பகிர்வுக்கு நன்றி அம்மா!

மாய உலகம் said...

ஒருவருஷம் முன்னே சும்மா விளையாட்டுத்தனமா ப்ளாக் எழுத ஆரம்பிச்
சேன். இப்போ எவ்வளவு நண்பர்கள்கிடச்சிருக்காங்கன்னு நினைக்க மனசே
நிறைஞ்சு இருக்கு,வயசு வித்யாசம் இல்லாம, எல்லா வயதிலும் நண்பர்கள்
கம்ப்யூட்டரில் ஏதானும் சந்தேகம்னு சொன்னா உடனேயே வந்து உதவி
செய்யும் நல்ல நண்பர்கள், அம்மா, அம்மான்னு அத்தனை பிரியமாகப்பழகும்
நல்ல நண்பர்கள் எல்லாம்கிடைச்சிருக்காங்க.

இதெல்லாமே ப்ளாக் எழுதுவதால் எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய
ப்ளஸ் போயிண்ட்ஸ்,//

உண்மை தாம்மா...எனக்கு கூட இந்த பிளாக்கில் மூழ்கும்போது தான் வேதனையெல்லாம் காத்தா பறந்து போகுது.... நல் உள்ளங்கள் நண்பர்களாக கிடைக்கும்போது கவலைகள் நமக்கெதுக்கு....சந்திப்புகளைப் கலை நயத்துடன் அழகான நடையில் சொல்லியமைக்கு நன்றியுடன் வாழ்த்துக்களம்மா....

மாய உலகம் said...

தமிழ் மணம்

மாய உலகம் said...

வொட்டுகளை இணைத்துவிட்டேன்...

மகேந்திரன் said...

தமிழ் மணம் 4முகம்தெரியா நண்பர்களை திடீர்னு சந்திக்கையில்
மனம் நிறைய சந்தோசம் நிறையும்.


அருமையா எழுதியிருக்கீங்க அம்மா

ஸ்ரீராம். said...

எழுத்துகளில் மட்டுமே பழக்கமான நண்பகளைப் பார்க்கும் உற்சாகமும் சஸ்பென்சும் தனிதான். சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.

துளசி கோபால் said...

நினைச்சுப் பார்த்தால் இந்த வலை உலக நட்பு வியப்புதான். சிலசமயம் சொந்தங்களைவிட உசத்தியாத் தோணறது!

எல்லாம் இணையமும் தமிழும் தந்த கொடை!

இன்னிக்கு உங்க மெட்ராஸ் பயனம் முழுசும் சேர்த்துவச்சு வாசிச்சேன்.

நல்ல இயல்பான நடை! இனிய பாராட்டுகள்.

கவி அழகன் said...

நட்பின் சந்திப்பு நலம் தரும்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பகிர்வு .வாழ்த்துக்கள் .

Madhavan Srinivasagopalan said...

// ரொம்ப, ரொம்ப,(30)
வருடங்களுக்குப்பின் திரு நெல் வேலி மண்ணை மிதிக்கிரேன். //

டிவிஸ்ட இங்குனதான் வெக்கப் போறீங்களா.. வெயிட்டிங்.. வெயிட்டிங்..

அந்நியன் 2 said...

பாராட்டுக்கள்.

உங்களின் பயண வாழ்க்கை தொடர் ஒரு திரைப் படத்திற்கு தேவையான அம்சத்தைப் பெற்றுள்ளது வாழ்த்துக்களும் தமிழ் மண ஓட்டுக்களும்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

கார்த்தி கேயனி said...

நல்ல பகிர்வு உங்களுக்கு நன்றி

M.R said...

பதிவுலக நட்பை பற்றி சொல்லியுள்ளீர்கள் ,எனக்கும் அது போல தானம்மா மனதுக்கு சந்தோசம் நிறைய நட்புகள் கிடைத்திருப்பது சந்தோசம்.

பகிர்வுக்கு நன்றி

angelin said...

அருமையான பயண அனுபவம் அம்மா .நான் கொஞ்ச நாட்களே சென்னையில் இருந்ததால் ஒருவரையும் சந்திக்க கிடைக்கவில்லை .அடுத்த முறை கண்டிப்பா பார்க்கணும் .

வை.கோபாலகிருஷ்ணன் said...

//முகமறியா நண்பர்களை நேரில் காணும் போது உள்ள அனுபவமே அலாதி!//

நல்ல அழகிய அனுபவப் பதிவு.
பாராட்டுக்கள். vgk

சி.பி.செந்தில்குமார் said...

aahaa.. ஆஹா அருமை

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு வந்தால் அவசியம் எங்கள் வீட்டுக்கும் வரனும்

அம்பலத்தார் said...

நட்புகள்பற்றிய சுவாரசியமான பதிவு. அசத்திட்டிங்க

Appaji said...

லக்ஷ்மி அம்மா, வணக்கம்..தங்களது பதிவை பார்த்தேன்...
மிக மகிழ்ச்சி....வயதான காலத்தில்....ஆனால்..
பதிவில் இளமை உள்ளது...வாழ்த்துக்கள்..

Anonymous said...

அருமையா எழுதியிருக்கீங்க... பயணம் தொடரட்டும்...

சி.பி.செந்தில்குமார் said...

ok madam.. நான் இப்போ அவரை மீட் பண்ரேன் , திங்கள் ல

Lakshmi said...

ரமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

கோகுல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

வெங்கட் உண்மைதான் ரொம்பவெ சந்தோஷமாதான் இருந்தது.

Lakshmi said...

விக்கி உலகம் நன்றிங்க.

Lakshmi said...

மாய உலகம் விரிவான அழகான பின்னூட்டத்துக்கு நன்றி.

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ஸ்ரீராம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

துள்சி கோபால் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

கவி அழகன் நன்றி

Lakshmi said...

நண்டு@ நொரண்டு நன்றிங்க.

Lakshmi said...

மாதவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

அந்நியன்2, வருகைக்கும் கருத்துக்கும்
ஓட்டுக்கும் நன்றிங்க.

Lakshmi said...

கர்த்திகேயனி நன்றி

Lakshmi said...

எம். ஆர். நன்றிங்க.

Lakshmi said...

ஏஞ்சலின் கண்டிப்பா அடுத்தமுறை சந்திக்கரோம் ஓக்கேவா?

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

செந்தில் அன்பான அழைப்புக்கு நன்றி.
கட்டாயமா வரேன் கூடிய சீக்கிரமே.

Lakshmi said...

அம்பலத்தார் வருகைக்கு நன்றிங்க.

Lakshmi said...

அப்பாஜி வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ரெவரி நன்றி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வணக்கம்..

ஆமினா said...

மாமி

வழக்கம் போல் இந்த பகுதியும் சூப்பர் அன்ட் கலக்கல்!!!!

Lakshmi said...

கருன் நன்றி

Lakshmi said...

ஆமி நன்றி.

ஜெய்லானி said...

//முகம்தெரியா நண்பர்களை திடீர்னு சந்திக்கையில் மனம் நிறைய சந்தோசம் நிறையும்.//


உண்மைதான்.எனக்கும் அந்த அனுபவம் கிடைத்திருக்கு :-) தொடருங்கள்

Lakshmi said...

ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி

Mano Saminathan said...

வலைச்சரத்தில் ‘ அனுபவ முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

வல்லிசிம்ஹன் said...

வெகு இனிமையான நடையில் நீங்கள் எழுதி இருக்கும் அத்தனை
பதிவுகளையும் படித்தேன் லக்ஷ்மி. இவ்வளவு
நினைவுத் திறன் உங்களுக்கு!
மறதி அதிகம் உள்ள எனக்கு உங்கள் எழுத்து அதிசயமாகத் தெரிகிறது.
உங்கள் அத்தையையும் விசாரித்தாகச் சொல்லுங்கள்.

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்களம்மா

Lakshmi said...

வல்லி சிம்ஹன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

மனோ மேடம் வலைச்சர அறிமுகத்துக்கு நன்றி

Lakshmi said...

மாய உலகம் ராஜேஷ நன்றி

asiya omar said...

மெட்ராஸ் அனுபவம் நீங்க சொல்ல கேட்க நல்லாயிருக்கு.தொடருங்க.

athira said...

மட்றாஸ் தொடர் சூப்பராகப் போகுது... தொடருங்கோ லக்ஸ்மி அக்கா.

Lakshmi said...

ஆசியா ஓமர் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அதிரா நன்றி

இராஜராஜேஸ்வரி said...

இனிய பாராட்டுகள்.

Lakshmi said...

இராஜராஜேச்வரி நன்றி

புலவர் சா இராமாநுசம் said...

அன்பின் இனிய சகோதரி!

நான் பெற்ற இன்பம் பெறுக
இவ் வையகம் என்பதாக அமைந்துள்ளது தங்கள் பயணப்
பதிவு நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Lakshmi said...

புலவர் சா. இராமானுசம்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

கோவை2தில்லி said...

ரொம்ப சந்தோஷமான தருணங்கள்ல நாம என்ன பேசறதுன்னே மறந்துருவோம்.

நல்ல சந்திப்பு. நாங்களும் உங்க கூடவே திருநெல்வேலிக்கு வருகிறோம்.

Thanai thalaivi said...

பதிவர்கள் சந்திப்பு நன்றாக இருந்தது. இருவரின் பார்வையிலும் ஒரே விஷயத்தை பற்றி படித்தது வித்தியாசமான அனுபவம்.

சி.பி.செந்தில்குமார் said...

புது போஸ்ட் போடவில்லையா?

Lakshmi said...

இதோ போட்டாச்சே. பேங்க் போனீங்களா?

தமிழ்வாசி - Prakash said...

இப்போ தான் பதிவு பார்த்தேன்... சூப்பரா தொகுத்திரிகிங்க...

Lakshmi said...

பிரகாஷ் உன்னத்தான் கானொமேன்னு பாத்தேன் எங்க போயிட்டே?

என்னை ஆதரிப்பவர்கள் . .