Google+ Followers

Pages

Friday, September 16, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்(10)

 மறு நாள் ஆடி மாசப்பிறப்பு.எங்க ஊரிலிருந்து சுமார் 10-கிலோ மீட்டர்தூரத்தில் பாவனாசம் என்னும் புண்ணிய ஷேத்திரம் இருந்தது, அங்குபோய் குளித்து ஸ்வாமிதரிசனம் செய்தால் நாம் பண்ணிய பாவங்கள் எல்லாம் விலகி விடும்னு ஒரு நம்பிக்கை எல்லாருக்கும் உண்டு.காலை 6-மணிக்கு கால் டாக்சி கூப்பிட்டு நாங்க 4-பேரும் பாவனாசம் கிளம்பினோம். வழக்கம்போல சுகமான காலைப்பயணம். 15- நிமிஷத்தில் பாவனாசம் போய்ச்சேர்ந்தோம். அன்று ஆடி மாசப்பிறப்பென்று கொஞ்சம் நிரைய கூட்டம் இருந்தது. 30, 40 படிகள் கீழே இறங்கி ஆத்தங்கரை போக வேண்டி இருந்தது. ஆனா இங்கே படிகள் சரியான வரிசையில் இருந்ததால் ஈசியா இறங்கினோம். ஆறு நிற்ம்பி தண்ணீர் நிறைய சல சலன்னு ஓடிக்கொண்டிருந்தது. சுகமா சாரலும் கூட இருந்தது. தண்ணீரைப்பார்த்ததுமே நீச்சல் அடிக்கதான் தோனிச்சு. தண்ணீரில் காலைவைத்தது, ஐஸ்போல ஜில்லுனு இருந்தது. அதுக்கும் மேல கருப்பு கருப்பா பெரிசு பெரிசா மீன்களின்கூட்டம் இருந்தது,  அந்த பெரிய மீன்களைப்பார்த்ததும் தண்ணீரில் இறங்க வே பயம்மா இருந்தது. அத்தை மேலே போயி ஒருகடையில் இருந்து ரெண்டு பாக்கெட்பொரிகடலைவாங்கி வந்து ஆற்றின் நடுப்பகுதிதண்ணிரில்வீசிப்போட்டா.எல்லாமீனும் அந்த்ப்பக்கம் ஓடிப்போச்சு.அப்புரமா நாங்க் தண்ணீரில் இறங்கிஆசை தீர நீச்சல் அடித்து நிறையமுங்கி நன்றாககுளித்தோம். கரை ஏறவேமனசில்லாம ஏறிப்போயி ட்ரெஸ் மாத்திண்டு கோவில் போனோம். பாவனாசர்சாமி. பட்டரிடம் இந்தசாமி சிவந்தானேன்னு கேட்டோம்.இது கைலாச லிங்கம்,கல்யாண லிங்க்ம்,பரஞ்ஞோதி லிங்கம் மூனும் சேர்ந்து இங்க பாவனாசலிங்கமா தரிசனம் தரார்னு சொன்னார் உலகம்மன் சன்னிதிபாலசுப்ரமன்யர் சன்னதி வினாயகர்சன்ந்தி எல்லாம் போய் கண்குளிர தரிசன்ம் செய்தோம். இந்தக்கோவிலும் நல்ல பெரிசா இருக்கு. நல்லபராம்ரிக்கராங்க. சுத்தமாகவும் இருக்கு. அங்கேந்து கிள்ம்பி 10 நிமிடத்தில் கல்லிடை. அங்கும் தெருவுக்கு தெரு ஒரு கோவில் கட்டி வச்சிருக்கா. வீரப்புர, சாய்பாப, பிள்ளயார்கோவில்,ராமசந்திரபுரம் ராமர்சீதா, சங்க்ரமடம் தொந்திவிளாகம் தெரு பிள்ளையார் என்று எல்லா சாமிகளின் தரிசனம் முடிந்து வீடுபோனோம். முன்னேல்லாம் மொத்தமா 18 தெருதான் இருந்தது.  இப்ப நிரைய குட்டி குட்டி தெருக்கள் எல்லாம் வந்திருக்கு. போக்குவரத்துக்கு ரெட்டை காளைமாட்டு வண்டி ஒத்தைக்காளைமாட்டுவண்டி மட்டும்தான் உண்டு.அதில் சக்கரத்தில் இரும்பு பூண் போட்டிருப்பா அது சரல் நிறம்பிய கப்பி ரோட்டில் ஓடும்போது கர கரன்னுசத்தம்போட்டு நம்ம பல்லும் கடிக்கரமாதிரியே ஆகும். மாட்டு கழுத்தில் கட்டியிருக்கும் மணிகள்குலுங்க கேட்கும் சப்தம் சங்கீதமாக ஒலிக்கும்.கூண்ட்வண்டி மேடு பள்ளம் வரும்போது தலையை முட்டீப்போம். அதெல்லாம் இப்போ பாக்கவே கிடைக்கலை.திரும்பின பக்கமெல்லாம் ஆட்டோவும் கால் டாக்சியுமாதான் இருக்கு.

 காலத்துக்கு ஏற்ப எல்லாமே மாறித்தானே ஆகனும். எனக்கு எங்க ஊரில் கிடைக்கும் கெட்டி வாழைக்கா பழம் ரொம்ப பிடிக்கும் அது திங்கவே டைம் கிடைக்கலே. வீட்டில் சூடாக ப்ரேக்ஃபாஸ்ட் இட்லிசட்னி சாம்பார் நான் பொடி எண்ணை. அதுமுடிந்து அன்று சிவன்கோவிலில் மண்டல அபிஷேகம் ஆராதனைக்கு ஏற்பாடுகள் செய்திருந்தோம். 50- வருடங்கள் முன்பு என் (அப்பாவின் அப்பா) தாத்தாதான் சிவன் கோவில் டிரஸ்டியா இருந்தார் அவர் பெயரை அங்கு கோவிலின் முகப்பில் கல்வெல்ட்டில் செதுக்கி வச்சிருந்தா. பாக்கவே மனசெல்லாம் பூரிப்பு. இப்போ அந்தக்கோவிலில் கும்பாபிஷேகம் பண்ணி இருந்தா. அங்கபோயி பூஜைகள் அபிஷேகம் எல்லாம் கலந்துண்டோம். எல்லாம் சிறப்பாக நடந்தது. வீட்டுக்கு வரும்போது 12 மணி ஆச்சு லஞ்ச் சாப்பிட வாங்கோனு கூப்பிட்டா.அதுக்குள்ளவான்னு தோனித்து. டைனிங்க் ருமில் கீழெ 10 இலை போட்டு வடை பாயசம்  பச்சடி பொரியல் அவியல்னு விருந்து சாப்பாடு பரி மாறி இருந்தார்கள்.மத்தவா எல்லாருமே கீழே ஜம்முனு சப்பளாம் மூட்டிண்டு சாப்பிட உக்காந்தா. நான்மட்டும் அவர்களை ஏக்கமாக பாத்துண்டே டைனிங்க்டேபிள்ள இலைபோட்டு சாப்பிட்டேன்.எனக்கும் அவாளை மாதிரி கீழ உக்காரமுடியாம இருக்கேன்னு கோவமா வந்தது. முட்டி மடக்கவே முடியாது. கஷ்ட்டம் இல்லியா?

 ஒவ்வுரு காய்களிலும் கிராம்த்து இயற்கையான ருசி தெரிந்தது நல்ல.சாப்பாடு நான் எப்பவுமே ரசம் சாதத்தில் போட்டு சாப்பிட மாட்டேன் கப்பில் வாங்கி குடிக்கத்தான் பிடிக்கும். நல்ல டேஸ்ட்டா இருந்தது எல்லா ஐட்டமுமே. நாலுபேருடன் சேர்ந்து சாப்பிடும்போது ஒரு கைப்பிடி சாதம் கூடவே சாப்பிடமுடியுது. வருந்தி வருந்தி உபசாரமும் பண்ணராளா தட்டவேமுடியமாட்டரது. ஓவர் ஈட்டிங்க் ஆகுது.  வாழை இலையில் சாப்பிடவும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.  எங்க நெருங்கிய சொந்தக்கார ஒருவர் அங்கு ஒரு ஆசிரமம் நடத்தி வரார். அங்க கூப்பிட்டார். போனோம் அந்த ஆசிரமம் ரயில்வேஸ்டேஷன் தாண்டி இருந்தது.

59 comments:

மகேந்திரன் said...

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சு அம்மா.

வாழை இலையில் சாப்பிடுவதே ஒரு தனி சுவைதான்...
நல்லா இருக்குது
தொடருங்கள் அம்மா....

தமிழ்வாசி - Prakash said...

பகிர்வுக்கு நன்றி

DrPKandaswamyPhD said...

நல்ல சுகம். பாப விநாசம். புண்ணிய பிராப்தம். கொடுத்து வச்சவங்க நீங்க.

ஸாதிகா said...

கல்லிடையை கூடவே சென்று அழைத்து காட்டிய திருப்தி உங்கள் பதிவை படிக்கையில்.

svr sakthi said...

அம்மா தொடந்து எழுதுங்கள்
இன்ட்லியில் ஓட்டும் போட்டாச்சு
அன்புடன்
சக்தி

ஸ்ரீராம். said...

உங்கள் பயண அனுபவங்களும் வாழை இலைச் சாப்பாடு போல சுவையாகவே இருக்கின்றன.தொடருங்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ... வாழ்த்துக்கள் .

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

வணக்கம் மேடம்!

வித்தியாசமான, அழகிய அனுபவம்!

அந்நியன் 2 said...

சிலர் படித்து விட்டு கருத்து சொல்லுகிறார்கள்.

பலர் படிக்காமலியே கருத்து சொல்லி விடுவார்கள்.

இன்னும் சிலர் கருத்து சொன்னவர்களை பார்த்து கருத்து சொல்லுவார்கள்.

இப்படித்தான் பதிவுலகம் போயிகொண்டு இருக்கின்றது அம்மா.

என்ன செய்ய எல்லோருக்கும் அவுங்க அவுங்க வீட்டிற்குத்தான் விருந்தாளிகள் வரனும்னு நினைப்பார்கள் உண்மையான வீட்டிற்கு இல்லை வலை பூ வீட்டிற்கு.

உண்மையான வீட்டிற்கு விருந்தாளிகள் வருவாரேயானால் வாசலில் வேப்ப இலையோ அல்லது யானைக்கு பூட்டுகிற பூட்டோ தொங்கும்.

தொடருங்குள் தொடர்கிறோம்.

வாழ்த்தும் ஓட்டும்.

RAMVI said...

ஆசை தீர ஆற்றில் குளித்து அருமையான தெய்வ தரிசனைதை முடித்து,வாழை இல்லையில் விருந்து சாப்பிட்டு முடிச்சாச்சு.அருமையான் அனுபவங்கள். தொடர்ந்து உங்களுடனே வருகிறோம் அம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு அனுபவ விருந்து, வாழையிலை சாப்பாடு போல நல்ல ருசியுடன்.

Madhavan Srinivasagopalan said...

ரொம்ப ரொம்ப இயற்கையா இருக்கு உங்கள் எழுத்துக்கள்..
தொடர்ந்து எழுதவும்..

கோவை2தில்லி said...

வாழை இலையில் சாப்பிடுவது எனக்கும் பிடிக்கும்.

நல்ல பயணம். நாங்களும் தொடர்ந்து வருகிறோம் அம்மா.

சி.பி.செந்தில்குமார் said...

தலை வாழை இலை போட்டூ>>>>>>>>>>

சென்னை பித்தன் said...

நுனி இலை போட்டுச் சாப்பிட்டது போன்ற திருப்தி உங்கள் பதிவைப் படித்ததும்.

துஷ்யந்தன் said...

அழகான பயண அனுபவம்
பயண அனுபவங்கள் எப்போதுமே மறக்க முடியாது.என்னை பொறுத்தவரை பயணங்கள் தான் நம்மை எப்போதும் புதுப்பித்துக்கொண்டு
இருக்கின்றது.

Anonymous said...

வாழை இலையில் சாப்பிட நாங்கள் ஆறு மணிநேரம் பயணிக்க வேண்டும் அம்மா...இருந்தாலும் நாங்கள் பயணிக்கும் அத்தனை மணித்துளிகளும் அதில் வெறும் சோறு தின்றாலும் அமிர்தம் உண்ட பலன்...கொடுத்த வைத்தவர் நீங்கள்...தாய்மண்ணில் தினம் தடம் பதிக்க எல்லாருக்கும் கொடுப்பினை இல்லையே...பயணம் தொடரட்டும்..ஆசிரமத்திலிருந்து...

அமைதிச்சாரல் said...

லஷ்மிம்மா, இப்போ நமக்கும் நவராத்ரி முடியற வரைக்கும் வாழையிலை கிடைக்குமே.. வாங்கி வாழையிலைச் சாப்பாட்டை எஞ்சாய் பண்ணுங்க :-))

காட்டான் said...

நன்றியம்மா குறைவாய் அதை நிறைவாய் எழுது இருக்கீங்க..

தொடர்ந்து வருவேன் என...

காட்டான் குழ போட்டான்..

Rathnavel said...

அருமையான பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள் அம்மா.

அஹமது இர்ஷாத் said...

:))

ஆயிஷா said...

அம்மா.நலமா?
பகிர்வுக்கு நன்றி.
நேரம் கிடைக்கும் போது மெட்ராஸ் நலல மெட்ராஸ் 1-யில் இருந்து படிக்கிறேன்.தொடருங்கள்...
நீங்களும் நம்ம பிளாக் வாருங்கள்.

ஆயிஷா said...

3 ஓட்டும் போட்டு விட்டேன்.

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கும் தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டதுக்கு நன்றி.

Lakshmi said...

பிரகாஷ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

2.ற் . kanthasaami pht வருகைக்கு நன்றி

Lakshmi said...

சக்தி வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

நண்டு நொரண்டு நன்றி

Lakshmi said...

ஐடியா மணீ வருகைக்கு நன்றி

Lakshmi said...

அந்நியன்2 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஓட்டுக்கும்.

Lakshmi said...

ரமா நன்றி

Lakshmi said...

கோபால் சார் நன்றி

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

செந்தில் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சென்னை பித்தன் நன்றி

Lakshmi said...

துஷ்யந்தன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரெவரி வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

காட்டான் வந்து குழ போட்டதுக்கு நன்றி

Lakshmi said...

ரத்னவேல் ஐயா நன்றிங்க.

Lakshmi said...

அஹமது இர்ஷாத் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆயிஷா வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாய உலகம் வருகைக்கும் வலைச்சர அறிமுகத்துக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Ramani said...

அங்கு போனால் பாபம் நாசமாகிப் போகும் என்பதால்தான்
பாப நாசம் எனப் பெயரிட்டிருக்கிறார்களோ?
நீங்கள் சொல்லி செல்லும் விதம் நேரடியாக நாங்கள்
அங்கேயே இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 12

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி

மாதேவி said...

பாவனாசம் தர்சனம் கிடைக்கப் பெற்றோம்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

கே. பி. ஜனா... said...

//50- வருடங்கள் முன்பு என் (அப்பாவின் அப்பா) தாத்தாதான் சிவன் கோவில் டிரஸ்டியா இருந்தார் அவர் பெயரை அங்கு கோவிலின் முகப்பில் கல்வெல்ட்டில் செதுக்கி வச்சிருந்தா. பாக்கவே மனசெல்லாம் பூரிப்பு.// உங்கள் உவகையை உணர முடிகிறது!

மனோ சாமிநாதன் said...

அனுபவங்கள் அழகு என்றால், நீங்கள் அதை எழுதிய விதம் இன்னும் அழகு!

மீன்களை விர‌ட்ட பொரி போடுவது நல்ல ஐடியாதான்!‌

அம்பாளடியாள் said...

.உங்கள் தொடர் பதிவைப் பார்க்கப் பார்க்க நீங்கள் சென்ற இடங்களுக்கு ஒருமுறையேனும் சென்று இப்படி மகிழ்வாய் இருந்தால் எப்படி இருக்கும் என்று மனம் சொல்கின்றது .வாழ்த்துக்கள் அம்மா ஆயுசு பூராவும்
உங்கள் சந்தோசம் இப்படியே தொடரவேண்டும் .எல்லாருக்கும்
இந்தக் கொடுப்பனை கிடையாது .கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்.மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள் என் தளத்திற்கும் .

Lakshmi said...

மனோ மேடம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஆமா ஜனா உண்மையில் மனசெல்லாம் பூரிப்பாதான் ஆச்சு.

Lakshmi said...

அம்பாளடியாள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி

வல்லிசிம்ஹன் said...

மனசுகு நிறைவா இந்த மாதிரி எழுத்து இருக்கு.
லக்ஷ்மி நீங்க எப்பவும் இதே சந்தோஷத்தோடு நன்றாக இருக்கணும்.

என்னை ஆதரிப்பவர்கள் . .