Google+ Followers

Pages

Friday, September 30, 2011

டீச்சர்

அன்று மரகதம் வீட்டில் மீட்டிங்க். 10- லேடீஸ் மாதம் ஒரு சிறு தொகையை சிட்பண்டுபோல போட்டு வருகிறார்கள். குலுக்கல் முறையில் ஆட்களைத்தேர்ந்தெடுத்து அவர்களுக்கு  சீட்டுத்தொகை வழங்கி வருவார்கள். அந்தமாதம்யாருக்கு சீட்டு விழுகிரதோ அவர்கள் வீட்டில் மற்ற மெம்பர்களும் ஒன்றுகூடி ஸ்வீட் காரம் காபி+ அரட்டையுடன் கலைந்து போவார்கள். ஏதானும் ஒரு விஷயத்தை எடுத்து கார சாரமாக விவாதமும் பண்ணூவார்கள். அன்று மரகதத்திறுகு சீட்டு விழுந்திருந்தது. எல்லாரும் அவர்கள் வீட்டில் கூடி ஸ்னாக்ஸ் சாப்பிட்டுவிவாதம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அன்று அவர்கள் பேச்சில் மாட்டிக்கொண்டவர்கள் பள்ளிகளில் வேலை செய்யும் டீச்சர்கள். என்னதான் டீச்சரோஒன்னாம் க்ளாஸ்படிக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு ஹோம் ஒர்க்கா கொடுப்பா.?குருவி தலேல பனங்காய் மாதிரி. வர, வர கேள்வி கேப்பாரே இல்லாம ப்போச்சு.குழந்தைகளுக்கு கவனிச்சு பாடம் சொல்லிக்கொடுப்பதோ வீட்டில் அம்மாக்கள்தான்.. என்று ஒருத்தி திரியைக்கொளுத்திப்போடவும் அடுத்தவளும் அதன் தொடர்ச்சியாக  ஆமாமம் டீச்சர்களுக்கு கொடுக்கர சம்பளமே வேஸ்ட்.ஒரு வேளைதான் ஸ்கூல் சுளையா சம்பளம் வேர, பசங்கள பொறுப்பாகவனிச்சு பாடம் சொல்லிக்கொடுத்தா என்னவாம்? டிப் டாப்பா வருவா போர்ட்ல என்னத்தையோ எழுதிப்போட்டுபசங்களை அதைப்பார்த்து காப்பி ப்பண்ணுங்கோன்னு சொல்லிட்டு கதை புக்கோ கைவேலையோ பண்ண ஆரம்பிச்சுடுவா. யாரு என்ன எழுதரான்னு கூட செக் பண்ணமாட்டா.இதுல சம்பளத்தோட லீவுவேர.

  வீட்ல சொல்லிக்கொடுத்தா பசங்க எங்க படிக்கராங்க? ஸ்கூல் போனாலாவது நல்லா பாட்ம் சொல்லி கொடுப்பா, நாலு பசங்ககூட சேந்து நல்லாபடிக்கும்னுதானே ஸ்கூலுக்கே அனுப்பரோம்.அதுக்கும்மேல டியூஷன்வேறு வைக்க வேண்டி இருக்கு. அந்த டொனேஷன் இந்த டொனேஷன்னுவேர தண்டம் அழனும். ஏந்தான் பள்ளிக்கூடம் அனுப்பரொம்மான்னு அலுத்துத்தான் போகுது.  நாமளும் சின்ன வயசுல பள்ளிக்கூடம் போயிருக்கோம். இப்ப மாதிரியா?டீச்சர்னா பசங்களுக்கு ஒரு பயம் மறியாதை எல்லாமே இருந்தது.அவங்களும் தங்களால முடிஞ்சவரை நல்லாவே பாடம் நடத்தினாங்க. டியூஷன்லாம் போனதே இல்லே.இப்படி ஆளாளுக்கு டீச்சர்களை தங்களுக்கு தோன்றிய விதத்தில் குறை கூறிக்கொனிட்ருந்தார்கள் இதில் மரகதம் தான் ரொம்ப காட்டமாக ப்பேசினாள். அன்றைய மீட்டிங்க் முடிந்து அனைவரும் கிளம்பிச்சென்றனர்.

 அடுத்தமாதம் ருக்மணி மாமி க்கு சீட்டு விழுந்தது. எல்லாரும் அங்கே கூடினார்கள்.வழக்கமான ஸ்னாக்சுடன் காரசார விவாதமும் தொடர்ந்தது. போன மீட்டிங்கிந்தொடர்ச்சியாக இன்றும் இவர்களிடம் டீச்சர்களே மாட்டிக்கொண்டார்கள்.  இப்பவர டீச்சர்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்புணர்ச்சியே இல்லைன்னு ஒருத்தி ஆரம்பிக்க மரகதம் மாமி,என்ன நீங்கல்லாம் ஒரே அடியா டீச்சர்ஸை மட்டம் தட்டியே எப்பவும் பேசிண்டு இருக்கேள்?  அவாளும் மனுஷி தானே.ஒரு செக்‌ஷனில் புளிமூட்டை மாதிரி 40, 50 குழந்தைகளை அடைச்சு வச்சா, அவாளால எப்படி ஒவ்வொருவரையும் கவனித்து பாடம் நடத்தமுடியும்.? அன்னனிக்கு  என்னபாடம் நடத்தினான்னு விவரமா எழுதி ஹெட்மாஸ்ட்டரிடம் காட்டனும். ஏதானும் ஃபங்க்‌ஷன்னா காலேலேந்து மாலைவரை ஸ்கூலே கதின்னு கிடக்கனும். சென்ஸஸ் எடுக்கக்கூட டீச்சரைத்தான் கஷ்ட்டப்படுத்தராங்க.

 இப்ப உள்ள பசங்களோ மஹா வாலுகள் ஒன்னாவது டீச்சர் பேச்சை கேக்குமா எதுத்து, எதுத்து பேசரது. டீச்சர் கோச்சுண்டா வீட்லபோயி டீச்சர் என்னை அடிச்சுட்டான்னு புகார்பணரதுன்னு ஏக அமர்க்கள்ம் பண்ரது.  நம்ம வீட்ல ஒரு பிள்ளை ரெண்டு பிளையே சமாலிக்க எவ்வளவு கஷ்ட்டப்படரோம் இவா இத்தனை குழந்தைகளை எப்படி கட்டி மேய்ப்பா? அவாளும் பாவம் இல்லியான்னு டீச்சர்களுக்கு ஒரே சப்போர்ட்பண்ணீயே பேசினா.பரீட்சை சமயம் அவாபடற கஷ்ட்டம் சொல்லி முடியாது அவாளை வாய்க்கு வந்தபடில்லாம் பேசாதேங்கோன்னு கோவமா எழுந்து போனா. மற்றவர்களுக்கு மரகத்தின் இந்தப்போக்கு புரியாத புதிராகவே இருந்தது. என்னது இது போனமாசம் வரை டீச்சரைத்திட்டி பேசினவ இன்னிக்கு இப்படி பேசராளேன்னு ஆளாளுக்கு ஆச்சரியம். அந்த நேரம் மரகதத்தின் பெரிய பெண் உஷா அந்தவீட்டுக்குள் வந்தாள் பெரிய சாக்லெட் டப்பாகொண்டுவந்து எல்லாரிடமும் கொடுத்துமாமி எனக்கு நம்ம ஊர் ப்ரைமரி ஸ்கூலில் வேலை கிடைச்சிருக்குன்னு குஷியாகச்சொன்னாள். மற்றவர்களுக்கு அப்போதுதான் விஷயமே புரிந்தது. ஓ இதுதான் விஷயமா? தன் பெண்ணுக்கு டீச்ச்ர உத்யோகம் கிடைச்சதும் எல்லா டீச்சரும் நல்லவாஆயிட்டாளோன்னுதனக்குள் பேசியவாரே கலைந்து சென்றனர்.

42 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு அருமையான சிறுகதை..

இராஜராஜேஸ்வரி said...

தன் பெண்ணுக்கு டீச்ச்ர உத்யோகம் கிடைச்சதும் எல்லா டீச்சரும் நல்லவாஆயிட்டாளோன்னுதனக்குள் பேசியவாரே கலைந்து சென்றனர்

nice..

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கதை. அவாவாளுக்குன்னு வந்தால் தான் அதன் கஷ்டம் தெரியும். அதுவரை இதுபோலத்தான் ஏதேதோ பேசுவார்கள்.

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தமிழ் உதயம் said...

டீச்சர் புராணம் நல்லா இருக்கு.

Powder Star - Dr. ஐடியாமணி said...

இப்ப உள்ள பசங்களோ மஹா வாலுகள் ஒன்னாவது டீச்சர் பேச்சை கேக்குமா எதுத்து, எதுத்து பேசரது. டீச்சர் கோச்சுண்டா வீட்லபோயி டீச்சர் என்னை அடிச்சுட்டான்னு புகார்பணரதுன்னு ஏக அமர்க்கள்ம் பண்ரது. நம்ம வீட்ல ஒரு பிள்ளை ரெண்டு பிளையே சமாலிக்க எவ்வளவு கஷ்ட்டப்படரோம் இவா இத்தனை குழந்தைகளை எப்படி கட்டி மேய்ப்பா? ////////

அருமையான கேள்வி மேடம்! எல்லா ஆசியரியர்களும் இதைப் படிச்சா மகிழ்ழியடைவாங்க!

துஷ்யந்தன் said...

ரசனை மிக்க பதிவு..... அழகா நிறைவா இருக்கு... :)

மஞ்சுபாஷிணி said...

டீச்சர் உத்யோகமும் நர்ஸ் டாக்டர் உத்யோகமும் என்னை பொறுத்தவரை டிவைன் ப்ரொஃபஷன்னு சொல்வேன்...

உண்மையே டீச்சரா இருக்கக்கூடியவங்க ஒரே கிளாசில் பல குணங்களையுடைய பிள்ளைகளை வருடத்துக்கொருமுறை சந்திக்கும் வாய்ப்பும் அந்த பிள்ளைக்கு தன்னாலான சேவையால் அருமையான எதிர்காலம் பிள்ளைகளுக்கு உண்டாக பாடுபடுகிறார்கள்....

ஹானஸ்டா மனசாத்மார்த்தமா வேலை செய்யும் டீச்சர்கள் கண்டிப்பா நான் எதுவும் சொல்லவே மாட்டேன். ஏன்னா என் தாத்தா பாட்டில தொடங்கி பெரியம்மா சித்தி பெரியப்பா அத்தை அப்படி குடும்பமே என் அம்மா அப்பாவை தவிர டீச்சர் உத்யோகம் தான்.....

ஆசிரியப்பணி என்றால் அவரிடம் படிக்கும் பிள்ளைகள் தான் வளர்ந்து நல்லநிலைக்கு வந்தப்பின்னும் நன்றியுடன் நினைத்து வணங்கும்படி இருக்கவேண்டும் அவர்களின் சேவை....

ஒரு சில ஆசிரியர்கள் அப்படி இருப்பதில்லை... எல்லா இடத்திலும் நல்லவை நல்லவை அல்லாதவை இரண்டுமே கலந்து தான் இருப்பது.. நாம் நல்லவையே எடுத்துப்போமே....

அருமையான கதைக்கரு லட்சுமி அம்மா.... தனக்கென்று வரும்போது தனக்கு சாதகமாக பேசுவதும் எதிராளிக்கு எனும்போது பாதகமா பேசுவதும் நாலு பேர் ஒன்று சேர்ந்தால் மற்ற தலைகளை உருட்டுவதும் புரளி பேசுவதும் கிசுகிசு பரப்புவதும் இயல்பான ஒன்று...

அதை சரியான விகிதத்தில் பயன்படுத்தி அழகிய கதையும் இறுதி வரியில் கதைக்கான ஒரு நல்ல மெசெஜும் கொடுத்திருக்கீங்க லக்‌ஷ்மி அம்மா.. ரசித்தேன்...

ஆசிரியரை எல்லோரும் போட்டு உருட்டு புரட்டி எடுக்க அடுத்த மாசமே மரகதம் டீச்சரின் மகளுக்கே ஆசிரியர் பணி கிடைத்ததுமே அப்படியே அந்தர் பல்டி அடித்தது தான் இந்த கதைக்கே மெசெஜ்....

அருமையான கதை பகிர்வுக்கு அன்பு நன்றிகள் எச்சுமி அம்மா....

Anonymous said...

Good Morning டீச்சர்...
பிடித்திருந்தது...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிறுகதைம்மா... மீள்பதிவோ?

ஸாதிகா said...

நல்ல கருத்தினை அனுபவ பதிவில் விவரித்து இருப்பது அருமை.

கோகுல் said...

இப்ப உள்ள பசங்களோ மஹா வாலுகள் ஒன்னாவது டீச்சர் பேச்சை கேக்குமா எதுத்து, எதுத்து பேசரது. டீச்சர் கோச்சுண்டா வீட்லபோயி டீச்சர் என்னை அடிச்சுட்டான்னு புகார்பணரதுன்னு ஏக அமர்க்கள்ம் பண்ரது. நம்ம வீட்ல ஒரு பிள்ளை ரெண்டு பிளையே சமாலிக்க எவ்வளவு கஷ்ட்டப்படரோம் இவா இத்தனை குழந்தைகளை எப்படி கட்டி மேய்ப்பா?///

பாவம் ஆசிரியர் பணியிலிருப்போர்.
ஆனால் அவங்களுக்கு இதுவும் ஒரு சுகம் தான்!

raji said...

இது சூப்பர் :-))

மாய உலகம் said...

தன் பிள்ளைக்கு டீச்சர் வேலை கிடைச்சதும் பேச்சு மாறியிருக்கு.. உண்மை தான் அம்மா... எல்லாரும் அவரவர் சாதகத்துக்கு ஏத்தமாதிரி தான் பேசுறாங்க... பகிர்வுக்கு நன்றி நண்பா

Avargal Unmaigal said...

மனிதர்களின் நிறத்தை வெட்டவெளிச்சமாக்கிய கதை. நன்றாக உள்ளது

Thanai thalaivi said...

சூப்பர் கதை அம்மா, ரொம்ப நன்னா இருக்கு. எதாவது பத்திரிகைகளுக்கும் எழுதுங்கோளேன்.

Lakshmi said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

தமிழ் உதயம் நன்றி

Lakshmi said...

மணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

துஷ்யந்தன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஞ்சு வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் நன்றி

Lakshmi said...

ரெவரி, வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி. இது மீள்பதிவு இல்லே. புது பதிவுதான்.

Lakshmi said...

சாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோகுல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ராஜீ நன்றி

Lakshmi said...

மாய உலகம் ராஜேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

தானைத்தலைவி வருகைக்கு நன்றி. முதல்லலாம் பத்திரிகைகளுக்குத்தான் எழுதிண்டு இருந்தேன். ப்ளாக் எழுதஆரம்பித்தபிறகு எல்லாம் இங்கதான் எழுதரேன்.

M.R said...

நல்ல ரசனையுள்ள பதிவு ,பகிர்வுக்கு நன்றி அம்மா .

Lakshmi said...

M.R. நன்றி

Ramani said...

நல்ல பதிவு
நான் கூட பீக் கவரில் கூட்ட நெரிசலில்
அவதிப்படும்போது யாராவது லேடீஸுக்கு வழி விடுங்கள்
என்று சொன்னால் நிச்சயம் அவர்கள் வீட்டு பெண்கள்
வந்திருப்பார்கள்.இல்லையேல் அவர்களே இந்த லேடீஸ்க்கு வேற
வேலை இல்லை அரைமணி நேரம் கழித்துக் கிளம்பக் கூடாதா
என்பார்கள்.மனிதர்களின் இயல்பான குணத்தை
மிக அழகன படைப்பாக்கியிருக்கிறீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

த.ம 6

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி

Madhavan Srinivasagopalan said...

சிறப்பான சிறுகதை..
'மனமாற்றம்' -- இது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் வரும்.. வரக்கூடும்.. இயற்கையின் நியதி..

அமைதிச்சாரல் said...

கதை ரொம்ப நல்லாருக்கு லஷ்மிம்மா.

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி நன்றிம்மா.

புலவர் சா இராமாநுசம் said...

சகோதரி!
நல்ல படைப்பு!
இது கதையுமல்ல கற்பனையும்
அல்ல! உண்மை!இன்றைய மனநிலையை படம் பிடித்துக் காட்டுவது
நானும் ஆசிரியராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றவன்தான்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Lakshmi said...

புலவர் சா. ராமானுசம் ஐயா வருகைக்கு நன்றி

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

வாழ்த்துக்கள்

என்னை ஆதரிப்பவர்கள் . .