Pages

Wednesday, December 14, 2011

காவலன் 2

காலை 8- மணிக்கு எழுந்த ரகு பின்புறம்போய் பல்தேய்த்துவிட்டு நேரே கிச்சன் போய் அம்மாவுக்கு குட்மார்னிங்க் சொன்னான். அம்மா சூடு சூடாக காபி கொடுத்தாள். குடித்துவிட்டு அம்மா நான் குளிச்சுட்டு வந்துடரேன்னு சொல்லி சோப்பு டப்பா, டவல் எடுத்துண்டு வெளியே போகும் போது அப்பா குளித்து சாமி ரூமில் பூஜையில் இருந்தார். ஆத்தங்கரை நோக்கி நடந்த ரகு தெருக்களைக்கடந்து வாய்க்கால் தாண்டி ஒத்தையடிப்பாதை வழியே ஆத்தங்கரை நோக்கி நடந்தான். முன்பெல்லாம் இருபுறமும் பச்சை பசேல்னு வயல்வெளிகள் கண்ணுக்கும் மனதுக்கும் பசுமையாக இருக்கும். இப்போது இருபுறமும் வயல் வெளியே கண்களில் தென்படாமல் எல்லா நிலங்களையும் ப்ளாட் போட்டு விற்று கட்டிடங்களாக எழும்பிக்கொண்டிருந்தன. வழிபூராவும்
 ஒரு ஈ காக்கை கூட இல்லாமல் வெ றிச்சோடி இருந்தது.

ஆற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் துணி துவைத்துக்கொண்டுஇருந்தார்கள்.முன்னேல்லாம் ஆறு எத்தனைகலகலன்னு கூட்டம் நிறம்பி வழியும். இப்ப ஏன் இப்படி காலியா இருக்குன்னு நினைத்தவாரே நீச்சல் அடித்து ஆசை தீர முங்கிகுளித்து  வீடு நோக்கி நடந்தான். அப்பா பூஜையெல்லாம் முடிந்து வாசல் திண்ணையில்  பேப்பர்படித்துக்கொண்டிருந்தார்.இவனைக்கண்டதும் வாடா ராஜா நேத்து நைட்டே வந்தேன்னு அம்மா சொன்னா. ட்ரெஸ்மாத்திண்டு வா டிபன் சாப்பிடலாம் என்று உள்ளே போனார். இருவருக்கும் இலைபோட்டு சூடாக இட்லிபரிமாறினாள். அம்மா. மெத்துமெத்துனு இட்லி மிகவும் ருசியாக இருந்தது கூடவே சட்னியும். அம்மா நானும் எவ்வளவோ இடங்கள்ல இட்லி சாப்பிட்டு இருக்கேன் இதுபோல ருசியும் ஸாப்டாவும் இருந்ததே இல்லேம்மான்னு பாராட்டியவாரே திருப்தியாக சாப்பிட்டான். அவன் கை கழுவி வரும்போதே அவன் அப்பா சாப்பிட்டு முடித்து பெட் ரூம் போய் குறட்டைவிட்டு தூங்க ஆரம்பித்துவிடார்.சரி இரவு பூரா கண் முழிச்சிருக்காரே நன்னா தூங்கட்டும் என்று கிச்சனில் அம்மாவுடன் பேசப்போனான் அம்மா நீடிபன் சாப்பிட்டியான்னான். ஆச்சுடா ராஜா. என்று சமையலுக்கு காய் நறுக்க உக்காந்தாள். அம்மா என்ன சமையல் இன்னிக்கு என்றான். வாசல்ல கீரைக்காரி வந்தா, உனக்குதான் அரைக்கீரை மசியல்னா ரொம்ப ப்டிக்குமே அதுகூட வாழைக்காய் பொடிமாஸ், தக்காளி ரசம் சின்ன வெங்காயம் போட்டு சாம்பார் பண்ணப்போரேன். உனக்கு வேர என்ன வேணும்னு சொல்லு பண்ணிடரென்னா.ஐயோ அம்மா இதுவே அதிகம். நானும் உனக்கு ஹெல்ப் பன்ரேன்மாஎன்றான். எனக்கு என்னடா ஹெல்ப் அம்மா கஷ்ட்டப்படக்கூடாதுன்னு வீட்ல எல்லா சாமானும் வாங்கி தந்திருக்கியேதுளிகூட கரிபடியாம சமைக்க கேஸ் அடுப்பு அரைக்க கரைக்க மிக்சி க்ரைண்டர் ஃப்ரிட்ஜ், பொழுதுபோக டி.வி என்று பார்த்துபார்த்து வாங்கி தந்திருக்கே. வேலை, அதுவும் சமையல் வேலை என்ன கஷ்ட்டமா ராஜா நீ போய் ரெஸ்ட் எடுன்னா. இல்லேம்மா எனக்கு உன்கூடவே நாள்பூராவும் இருக்கனும்போல இருக்கு என்றான். அதுக்கென்ன இங்கியே ஒரு சேர்கொண்டுவந்து போட்டுண்டு உக்காண்டுக்கோ ஏதானும் பேசிண்டே இருக்கலாம். என்றாள் . நானும் தேங்கா துருவி தரேன்.வாழைக்காதுருவித்தரேன் வெங்காயம் உரிச்சுத்தரேன்மா என்று அவனும் அம்மாகூடவே சின்ன சின்ன வேலைகள் செய்தான்.அம்மாவுக்கு தன்
பிள்ளையை நினைத்து மனசுபூரா சந்தோஷம். இருவரும் பேசியவாரே சமையலை முடித்தார்கள்.ஒரு மணி ஆனதும் அப்பா எ ழுந்துவந்தார். அம்மா கூடத்தில் இரண்டு நுனி இலைகபோட்டு அப்பாவுக்கும் பிள்ளைக்கும் பரிமாறினாள். ரகு அம்மாவிடம், அம்மா நீயும் உக்காந்துக்கோ நாம மூனுபேருமே போட்டுண்டு சாப்பிடலாம் என்றான். இல்லெடா ராஜா நான் என்னிக்கு உன் அப்பாவுக்கு சமமா உக்காந்து சாப்பிட்டு இருக்கேன். அதுவும் வீட்டு புருஷாலுக்கு இடதுகையால் பரிமாறக்கூடாது. நீங்க முதல்ல சாப்பிடுங்கோ என்றாள். ஏம்மா இந்தபட்டிக்காடு பழக்கம்லாம் விடவே மாட்டியா என்று ரகு அலுத்துக்கொண்டான். அப்பாவும் மகனும் சாப்பிட்டு முடித்ததும் இலை எடுத்து அந்த இடம் சுத்தம் செய்தபின் அம்மா கிச்சனிலேயே இலை போட்டு தனக்கு பரிமாறிக்கொண்டாள். ரகுவும் கிச்சனுக்கு வந்து இன்னிக்கு உனக்கு நாந்தான் பரிமாறுவேன் என்று அடம் பிடித்து பரிமாறி அம்மாவை சாப்பிட வைத்தான். சாப்பாடு முடிந்து பாத்திரங்கள் ஒழித்து தொட்டி முற்றத்தில் கொண்டு போட்டு அடுப்பு சமையல் மேடை எல்லாம் அலம்பி துடைத்துவிட்டு மூவரும் முன் ஹாலில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள்.அப்பா இப்பதான் உங்க கூட பேசவே நேரம் கிடைச்சதுப்பா. என்றான். பேசுடா ராஜா வேலை எப்படி இருக்கு உடம்பு சவுரியமா இருக்கியா என்று அன்பும் பாசமுமாய் அவன் தலையைக்கோதியவாரே கேட்டார்.அப்பாவின் அன்பில் நெகிழ்ந்த ரகு நான் நன்னா இருக்கேன்பா. நீங்க ரெண்டு பேரும் எப்படிப்பா இருக்கேள்னு பாசம் பொங்க கேட்டான். எங்களுக்கென்ன குறைடா ராஜா . நீதான் கை நிறையா சம்பாத்தித்து எங்களுக்கு ராஜவாழ்க்கை கொடுத்திருக்கியே. நீ பக்கத்தில் இல்லையே என்பது தவிர வேறு குறை ஒன்னுமே இல்லை ராஜான்னார்.






















































































































































































































































































41 comments:

Yaathoramani.blogspot.com said...

கதை மிகச் சிறப்பாகத் தொடர்கிறது
(முடிவில் அதிக இடைவெளி இருப்பது
ஏதேனும் விடுதல் ஆகிவிட்டதோ என்கிற
குழப்பத்தை ஏற்படுத்திப் போகிறது )
அருமையான தொடர்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

செல்ல நாய்க்குட்டி மனசு said...

லக்ஷ்மி அம்மா நீங்க கதை எழுதுவீங்களா? உங்கள் பெயரில் உள்ள ஒரு எழுத்தாளருக்கு வாரிசாக வாங்க

RAMA RAVI (RAMVI) said...

கதை மிக அருமையாக இருக்கும்மா.
அடுத்தப்பகுதிக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

சிவகுமாரன் said...

எனக்கும் அதே சந்தேகம். ரமணி சார்

குடும்பத்தின் இனிய சூழலை , அழகாக சொல்லிப் போகிறது கதை.

மகேந்திரன் said...

கதை நல்லா இருக்குது அம்மா...

சக்தி கல்வி மையம் said...

அருமையான கதை..

வாழ்த்துகள்..

பால கணேஷ் said...

ஆமாங்க ரமணின்னா... நானும் குழம்பிட்டேதான் வந்தேன். கதை மிக இயல்பான நடையில் இனிமையாகப் போகிறது. அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்ம்மா...

radhakrishnan said...

இரவு சீட்டாட்டத்தைப் பற்றிஒன்றுமே
பேசவில்லையே கிராமத்து வழக்கம்
அதிகம் குறை கூற முடியாது
கதையில் இனிதான் திருப்பம் வரும்
போலிருக்கிறதே?கிராம வாழ்க்கைபற்றி
எழுத உங்களுக்கு கை வந்த கலையாயிற்றே1.நன்றி அம்மா

K.s.s.Rajh said...

கதை அருமையாக இருக்கு மேடம் வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

அருமையான தொடர்
தொடர வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

எளிய நடையில் அருமையா எழுதி இருக்கீங்க லக்‌ஷ்மிம்மா,

ADHI VENKAT said...

பதிவிடும் போது ஏதோ பிரச்சனை ஆகி விட்டதாம்மா? நீண்ட இடைவெளி...

கதையின் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ரிஷபன் said...

இல்லேம்மா எனக்கு உன்கூடவே நாள்பூராவும் இருக்கனும்போல இருக்கு என்றான். அதுக்கென்ன இங்கியே ஒரு சேர்கொண்டுவந்து போட்டுண்டு உக்காண்டுக்கோ ஏதானும் பேசிண்டே இருக்கலாம். என்றாள் . நானும் தேங்கா துருவி தரேன்.வாழைக்காதுருவித்தரேன் வெங்காயம் உரிச்சுத்தரேன்மா என்று அவனும் அம்மாகூடவே சின்ன சின்ன வேலைகள் செய்தான்.அம்மாவுக்கு தன்

பிள்ளையை நினைத்து மனசுபூரா சந்தோஷம்.

பாசத்தின் படப்பிடிப்பு ஜோர்.

ஸ்ரீராம். said...

பாச அத்தியாயம்....

Manakkal said...

அன்பான அம்மா; அருமையான கதை. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்.

Mahi said...

லஷ்மிம்மா,நல்லாருக்கு கதை. அந்த ப்ளாங்க் ஸ்பேஸை டெலிட் பண்ணீடுங்க..குழப்பமா இருக்கு! :)

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கு நன்றி, என் பக்கம் அப்படி அதிக இடை வெளி தெரியல்லியே தெரிஞ்சிருந்தா சரி பண்ணி இருப்பேனே. பின்னாடி சிலர் இதைப்பற்றி சுட்டிக்காட்டி இருக்கா எனக்கு சரியா புரிபடலே. என் பக்கம் பாராக்குமட்டுமெ சிறிய இடை வெளி வருது. மற்றபடி சரியாதானே வந்திருக்கு.

குறையொன்றுமில்லை. said...

ரூஃபினா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சிவகுமாரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கு நன்றி என்பக்கம் சரியா வருதே. என்னப்ராப்லம் தெரியல்லே.

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்றி நாளை முடிவு தெரிஞ்சுடும்.

குறையொன்றுமில்லை. said...

ராஜ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ் வரி வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2 தில்லி வருகைக்கு நன்றீ என்பக்கம் அப்படி அதிக இடை வெளி எதுமே தெரியல்லியே

குறையொன்றுமில்லை. said...

நண்டு நொரண்டு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரிஷபன் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீராம் வருகைக்கு நன்றி உங்களுக்கும் இந்தப்பதிவில் இடைவெளி அதிகமா தெரியுதா?

குறையொன்றுமில்லை. said...

மனக்கால் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி அதுபோல ப்ளாங்க் ஸ்பேஸ் என் பக்கத்ல தெரியல்லியேம்மா எப்படி டெலிட் பண்ண?

சாந்தி மாரியப்பன் said...

கதை ரொம்ப அழகா இயல்பா ஆரம்பிச்சுருக்குது..

குறையொன்றுமில்லை. said...

வாங்க சாந்தி ஏன் லேட்டு?

Advocate P.R.Jayarajan said...

சிறு கதை சுருக்கென இருக்கிறது..
வாழ்த்துகள்..

Advocate P.R.Jayarajan said...

jayarajanpr.blogspot.com

குறையொன்றுமில்லை. said...

ஜெய ராமன் வருகைக்கு நன்றி

ஹேமா said...

பாசப்பிணைப்போடு அழகான குடும்பம் ஒன்று கண்ணில் தெரிகிறதம்மா !

ராமலக்ஷ்மி said...

/இருபுறமும் பச்சை பசேல்னு வயல்வெளிகள் கண்ணுக்கும் மனதுக்கும் பசுமையாக இருக்கும். இப்போது இருபுறமும் வயல் வெளியே கண்களில் தென்படாமல் எல்லா நிலங்களையும் ப்ளாட் போட்டு விற்று கட்டிடங்களாக எழும்பிக்கொண்டிருந்தன. /

எல்லா ஊர்களிலும் மனதைக் கவ்வும் சோகமிது.

தொடருங்கள்.

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .