Pages

Monday, December 26, 2011

A ? 2

 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் முடிக்க வேண்டிய பார்மாலிட்டீசெல்லாம் முடித்து பாடியை ஆம்புலன்சில் ஏறி அனுப்பியதும் அனைவரும் அழுதவாறே கலைந்து சென்றனர். ஸ்டேஷன் சென்ற இன்ஸ்பெக்டர், அன்றைய வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பிபோனார். வீட்டிலும்   சாப்பிடும்போதும் படுத்தபின்னும் கூட பூஜா பொண்ணின் முகம்தான் அவர் நினைவில் வந்து கொண்டே இருந்தது. சே என்ன ஒரு முட்டாள் தனம் பண்ணிட்டேன் ஏதோ குழந்தைப்பேச்சுன்னு எண்ணிட்டேனே. நான் கொஞ்சம் சீக்கிரமே போயிருந்தா அந்தப்பொண்ணைக்காப்பாத்தி இருக்கலாமோன்னுல்லாம் நினைவுகள். மறு நாள் டூட்டிக்கு வந்ததுமே ஃபோரன்சிக்கு போன் பண்ணி என்ன சார் ரிப்போர்ட் ரெடிபண்ணிட்டீங்களா என்றார்.  ஆமா சார் அதான் கொண்டு வந்திட்டு இருக்கேன். என்று உள்ளே வந்தார். சார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது? என்ரார் பால்ராஜ். சார் முகத்தை ஒரு மெலிசு பொருளால்  அழுத்தினதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பாட்டிருக்கு. வேர எந்தஒரு நகக்கீரலோ மற்ற அடையாளங்களோ ஏதுமில்லே. கிட்டத்தட்ட 5- நிம்ஷம் போராடியிருக்குஅந்தக்குழந்தை. ஒருவேளை அது தலகானியாகவும் இருக்கலாம். வேர ஃபிங்கர் பிரிண்ட்ஸ் ஏதும்  கிடைக்கல்லே இந்தாங்க சார் ரிப்போர்ட் என்று பால் ராஜிடம் கொடுத்து விட்டு கிளம்பி வாசல் வரை போனவர் சார் இன்னொரு விஷயம் அந்தப்பொண்ணு இடது உள்ளங்கையில் சிகப்புகலர் ஸ்கெச் பென்னால்  A  என்ற எழுத்து இருந்தது. சரி அந்தப்பொண்ணுகாலில் கொலுசு ஏதாச்சும் இருந்ததா? என்று பால்ராஜ் கேட்டார். இல்லே சார் கான்வெண்ட்ல படிக்கர குழந்தை இல்லியா கொலுசோ கையில் வளையலோ ஏதுமே இல்லே. என்று அவர் கிளம்பி போனார்.

ஓ, அப்போ அந்தப்பொண்ணு ஒரு சின்ன  க்ளூ  கொடுத்திருக்கா. இப்ப  A- யில் ஆரம்பிக்கும் பேர் உள்ளவங்களை தரோவா விசாரிக்கணும். என்று 204- வண்டி எடுங்க என்றார். நேராக பூஜா வீடு. அந்த வீடே அமைதியாக இருந்தது. வாச்மேன் ஸ்டூலில் அமர்ந்து அன்றைய தினசரி படித்துக்கொண்டிருந்தார். தோட்டக்காரர் பெருக்கி குப்பை அள்ளிப்போட்டு மரம் செடிகளுக்கு பைப் மூலம் தண்ணீர்பாய்ச்சிக்கொண்டிருந்தார்.இன்ஸ்பெக்டர் உள்ளே போனதும் வீட்டின் பெரியம்மா ஹாலிலேயே உக்காந்திருந்தார்கள் வாங்க இன்ஸ்பெக்டர். என்ன விஷயம்.அம்மா. இங்க யாரெல்லாம் இருக்காங்க எனக்கு ஒவ்வொருவரையா விசாரிக்கணும் என்றார். இப்போ நான் இருக்கேன். இவ்வள்ளவு நாள் என் செல்லம் இருந்தா என்று சொல்லும்போதே அந்தம்மாவின் கண்களில் கண்ணீர், அப்புர,ம் வாச்மேன், தோட்டக்காரன், ட்ரைவர், வேலைக்காரி, சமையல் காரின்னு என்று 5- பேரும் பின்னால சர்வெண்ட் குவார்ட்டரில் தங்கி இருக்காங்க. என்றாள் பெரியம்மா. சரி முதல்ல வாச்மேனைக்கூப்பிடுங்க் அம்மா என்றார். ஆண்டனி இங்க வாப்பா ஐயா உங்க கிட்டல்லாம் எதோ விசாரணை செய்யணுமாம் என்றாள். பவ்யமாக வந்து நின்றார் வாச்மேன். கிட்டத்தட்ட 40- வயசு இருக்கலாம் போன்ற தோற்றம். சரி உங்க பேர் என்னங்க என்றார் பால் ராஜ். ஆண்டனிங்க என்றார். ஓ இவர்பேரு A- ல தான் ஆரம்பிக்குது . நீங்க எவ்வளவு வருஷமா இங்க வேலை செய்யுரீங்க? என்றார்.பால்ராஜ். ஐயா கடந்த 5- வருஷமா இங்கதாங்க வேலை செய்யுரேன். நல்ல சம்ப்ளம் மூனூவேளை சாப்பாடு துணிமணி எல்லாமே இங்கியே தந்துடுவாங்க இருக்க இடமும் பின்னாடியே கட்டி தந்திருக்காங்க. ரொம்ப சந்தோஷமா தான் இங்க வேலை பாக்குரேன் ஐயா பூஜா பொண்ணு எங்க கூடல்லாம் ரொம்ப அன்பாபேசிப்பழகுவாங்க ஐயா எந்தப்பாவிக்கு அவங்களை இப்படி இறக்கமில்லாம கொல்ல மனசு வந்ததோன்னு கண்ணீர் விட்டார். இவன் பேச்சில் தெரிந்த உண்மையால் மேற்கொண்டு அவரை விசாரிக்காமல், சரி தோட்டக்காரரைக்கூப்பிடுங்க என்றார். 50- வயசுக்கும் மேல் இருக்கும் தோட்டக்காரர் உள்ளே வந்தார். ஐயா கும்புடரேங்க.

 உங்க பேரு என்னங்க என்றார் பால்ராஜ் அண்ணாமலைங்க என்றார் தோட்டக்காரர். அடடா இவர்பேரும்  A-லயே ஆரம்பிக்குதே. என்று எண்ணி அவரையும் வாச்மேனிடம் கேட்ட கேள்வியைக்கேட்டார். அவரும் ஆண்டனி சொன்னதுபோல சொன்னார். சரி நீங்க போங்க என்று சொல்லிவிட்டு ட்ரைவரைக்கூப்பிட்டார். உங்க பேரு என்னங்க?ஆனந்த் ஐயா என்றார் ட்ரைவர் ஐயோ தலைய சுத்துதே. எல்லார் பேருமே A -  லெட்டரில் ஆரம்பிக்குதே. என்று நினைத்தவர் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த சமையல்காரம்மா, வேலைக்காரி எல்லாரையும் விசாரித்தார்.அவர்கள் பெயர்களும் ஆண்டாளம்மாள், அஞ்சலை என்றே இருந்ததில் பால் ராஜுக்கு ஏக குழப்பம். சரி பெரியம்மா உங்க பேரு என்னங்க என்றார் அம்புஜம் சார் என்றாள்  பால்ராஜ் தலையை உலுப்பியபடி நான் மறுபடி நாளைக்கு வரேன்னு கிளம்பினார். ஸ்டேஷன் போனதுமே கான்ஸ்டபிள்,  சார் ஏதானும் க்ளூ கிடைச்சுதா என்றார் எங்க?, குழப்பம்தான் நிறைய ஆச்சு அங்க இருக்கரவங்க எல்லார் பேருமே  A-  லதான் ஆரம்பிக்குது. எனக்கு ஒன்னுமே புரியல்லே. திரும்பவும் முதல்லேந்தே தொடங்கணும் என்று அலுப்புடன் சொன்னார். சார் உங்க மிஸஸ் ரெண்டு மூணுவாட்டி போன் பண்ணிட்டாங்க நீங்க வீட்டுக்கு கிள்ம்புங்க. நாங்க பாத்துக்கரோம் என்று கான்ஸ்டபிள் சொல்லவும் பால்ராஜுக்கும் வீட்டுக்குப்போய் கொஞ்சம் ஓய்வு எடுத்தால் தேவலாம் போலத்தான் இருந்தது. உடனே கிளம்பி வீடு போனார்.

 ஹை அப்பா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டாங்கன்னு அவர் 5- வயது மகன் நவீன் வந்து காலைக்கட்டிக்கொண்டான். அவரும் ஆசையுடன் குழந்தையை த்தூக்கி செல்லம் கொஞ்சி விட்டு யூனிஃபார்ம் மாற்றி லுங்கியில் பெட் ரூம் நோக்கி போனார். அவர் மனைவி கிச்சனில் இரவு சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்தாள். அப்பா எனக்கு ஹோம் ஒர்க் சொல்லிக்கொடுக்கரீங்களா என்று நவீன் அவர் கால்களை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினான். நவீன் அப்பா ரொம்ப டயர்டா இருக்கேன்பா. அம்மாவிடமே கேட்டுக்கோயேன் என்றார்.உள்ளேயிருந்து வந்த அவர்மனைவி ஏங்க நவீன் தூங்கிட்டு இருக்கும் போதே ஆபீஸ்போயிடரீங்க இரவு அவன் தூங்கின பிறகு வீடு வரீங்க இன்னிக்குதான் அதிசயமா சீக்கிரமே வந்திருக்கீங்க போலீஸ்காரன்னா வீடு குடும்பம் குழந்தை குட்டியை கவனிக்க கூட நேரமே கிடையாதா. எனக்கும் தெரியும் உங்க வேலை ரொம்ப டென்ஷன் நிறைந்தது  நேரம் காலம் பார்க்காம உழைக்கணும் எல்லாமே எனக்கும் தெரியுங்க ஆனா சின்னப்பையன் அப்பாவின் நெருக்கம் கிடைக்காம எப்படி ஏங்கிப்போரான் தெரியுமா. இப்பவும் நீங்க இப்படி விலகிப்போனா குழந்தை ரொம்ப ஏங்கி போவாங்க. ஒன்னம் வகுப்பு படிக்கு குழந்தையின் ஹோம் ஒர்க் ஒன்னும் கஷ்ட்டமா இருக்காது. நீங்க அவன்கூட சிரிச்சு பேசி ஹோம் ஒர்க் சொல்லிக்கொடுங்க. அவனுக்கும் சந்தோஷமா இருக்கும் உங்களுக்கும் ரிலாக்சா இருக்கும் என்றாள் ஆமா நீ சொல்வதும் சரிதான்மா. நானே சொல்லிக்கொடுக்கரேன் என்று  நவீன் வாப்பா. என்ன ஹோம் ஒர்க் இருக்கு எடுத்துட்டுவா அப்பா சொல்லித்தரேன் என்றார். குஷியாக உள்ளே சென்ற நவீன் ஸ்கூல் பேக்கை எடுத்துவந்து அப்பாவின் முபு அமர்ந்தான்.

அப்பா, நாம வீட்ல தமிழ்லதான் பெச்ணும்னு நீங்க சொல்வீங்க இல்லியா. ஆனா என்னை கான்வெண்டில் சேர்த்துபடிக்க வைக்கரீங்க. காம்பவுண்டுக்குள்ள நுழைஞ்சதுமே இங்க எல்லாரும் இங்கிலீஷ்தான் பேசனும்னு சொல்ராங்க. அப்பா அம்மான்னு சொல்வதற்குபதில் மம்மி டாடின்னு சொல்ல சொல்ராங்க. அதுபோல சித்தப்பா, மாமா, அத்திம்பேர் இவங்களுக்கெல்லாம் இங்கிலீஷ்ல என்ன சொல்லனும்பா? என்றான் நவீன். சிரித்தவாரே  இவங்களையெல்லாம் மொத்தமா அங்கிள்னு சொன்னாலே போறும்பா. என்றார் பால்ராஜ். ஓக்கே. அப்போ சித்தி அத்தை மாமிக்கு? அதுக்கு ஆண்டின்னு சொல்லணும்பா. என்றார். ஏ அப்பா ஒரே வார்த்தைல எல்லார்பேரும் அடங்கிடுமாப்பா/ என்று ஆச்சர்யமாக கேட்ட மகனிடம் ஆமாண்டா செல்லம் அதான் இங்கிலீஷ் ஷார்ட்& ஸ்வீட். .  இரவு சாப்பாடு முடிந்து படுத்த பால்ராஜின் மூளையில் ஒருமின்னல் ஓ அப்படியும் இருக்குமோ. இப்படி ஒரு கோணத்தில் யோசிக்கவே இல்லியே? என்று அமைதி இல்லாமலே தூங்கினார்.

32 comments:

Mahi said...

A for Aunty?

Nice suspense story-ma! :)

radhakrishnan said...

கதையில் ஒரு முடிச்சைப போட்டு
யோசிக்க வைத்துவிட்டீரகளே.
சுவரஸ்யமாகப் போகிறது. நனறி அம்மா

வெங்கட் நாகராஜ் said...

இரண்டாம் பகுதியும் சஸ்பென்ஸாகவே... நல்லா இருக்கும்மா... தொடர்கிறேன்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

நல்ல சுவாரஸ்யமா போகுது இந்த கதை..

பால கணேஷ் said...

அடடெ... இப்பதான் கவனிச்சேன். முதல் அத்தியாயத்தையும், இதையும் படிச்சேன். க்ரைம் கதைலகூட கலக்கறீங்கம்மா... சூப்பர். தொடரும் பகுதிக்கு ஆவலோட காத்திருக்கேன்...

K.s.s.Rajh said...

சுவாரஸ்யமாக செல்கின்றது அருமை

ரசிகன் said...

நானும் ரெண்டு அத்தியாயத்தையும் இப்போ தான் படிச்சேன். க்ரைம் கதைலயும் கலக்கறீங்க. சுவாரசியமா இருக்கு. கலக்குங்க.

மகேந்திரன் said...

கதை ஒரு நீரோட்டம் போல அழகா போகுது அம்மா..
எதிர்பார்க்க வைக்கும் தொடர்ச்சி.

sundar said...

அட ! நல்ல ட்விஸ்ட்.

தொடருங்கள் :))

Madhavan Srinivasagopalan said...

Wow.. super..

Rathnavel Natarajan said...

அருமையான கதை.
தொடருங்கள்.

குறையொன்றுமில்லை. said...

mahi very smart. வருகைக்கு நன்றி கரெக்டாதான் யூகம் பண்ணி இருக்கீங்க.

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

நண்டு நொரண்டு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரசிகன் வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சுந்தர் வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

மாதவன் வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

ரத்னவேல் ஐயா வருகைக்கு நன்றீ

ஸ்ரீராம். said...

நல்லபடி குழப்புகிறீர்கள்! :)) அடுத்த அத்தியாயத்துக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழி?!!

மாதேவி said...

உங்களை துப்பறிய அனுப்பலாம் போல இருக்கே. :))

மாதேவி said...

உங்களை துப்பறிய அனுப்பலாம் போல இருக்கே. :))

மாதேவி said...

உங்களை துப்பறிய அனுப்பலாம் போல இருக்கே. :))

குறையொன்றுமில்லை. said...

மாதேவி ஹா ஹா ஜோக்கா?

Angel said...

உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

நல்ல சஸ்பென்ஸோடுதொடருது கதை
தொடர வாழ்த்துக்கள்
இனிய் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .