Pages

Friday, December 23, 2011

A?

இன்ஸ்பெக்டர் பால் ராஜ் ஒரு கைதியின் கேஸ் கட்டை மும்முரமாக படித்துக்கொண்டிருந்தார்.ஸ்டேஷனில்  இன்ஸ்பெக்டரும் கூட 4 கான்ஸ்டபிள்களும் இருந்தார்கள். அப்போது டேபிளில் இருந்த போன் அடிக்கவும் இன்ஸ்பெக்டர் பால் ராஜ் எஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஹியர் என்றார். மறுபுற்மிருந்து  சார் இது பி,2 போலீஸ் ஸ்டேஷந்தானே என்று கேட்டது ஆமா, நீங்க யாரு உங்களுக்கு என்ன வேனும்? சார் நான் பூஜா மௌண்ட் கார்மலில் 5-வது படிக்கரேன். எனக்கு இன்ஸ்பெக்டரிடம் பேசணும் என்றது. நான் இன்ஸ்பெக்டர் பால் ராஜ்தான் பேசுரேன் சொல்லுங்க என்றார். சார் என்னை யாரோ கொலை பண்ணிடுவாங்களோன்னு பயம்மா இருக்கு. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும் என்றதுபோன் குரல். பாப்பா 5-வது படிக்கரேன்னு சொல்ரே அப்போ உனக்கு 10- வயதுக்குள்ளதான் இருக்கணும் நீ டி.வி. சீரியல் நிறையா பாக்குரியா? வேண்டாததெல்லாம் கற்பனை பண்ணிகிட்டு இருக்கியா? ஐயோ அப்படில்லாம் இல்லே  சார் நான் உண்மைதான் சொல்ரேன். அப்படி அந்தப்பெண் பேசிக்கொண்டிருக்கும் போதே மெல்லிசாக சலுங்க், சலுங்க் என்று ஒரு சலங்கை சப்தம் போனில் கேட்டது பின்னணியில். அந்த பாப்பா காலில் கொலுசு போட்டிருக்கோ என்னமோ காலை ஆட்டிகிட்டே பேசுதோ என்னமோ அதான் இப்படி சலங்கை சத்தம் கேக்குதோன்னு பால்ராஜ் நினைத்துக்கொண்டார்.பிறகு எந்தவித சப்தமும் வராமல் போன் அமைதியாகி விட்டது.  பால்ராஜுக்கு ஒரே குழப்பம் என்னடா இது அந்தப்பொண்ணு எங்கேந்து பேசுரேன்னுகூட ஏதும் சொல்லலே. என்ன பிரச்சனைன்னும் சொல்லலே. இப்போ நாம என்ன பண்ணனு யோசித்து கான்டபிள் 204- இங்க வாங்க. இப்ப எனக்கு ஒரு போன்கால் வந்தது எக்சேஞ்சுக்கு கேட்டு இந்த அட்ரெஸ் கேட்டுவாங்க என்றார்.



கான்ஸ்டபிள் கொடுத்த அட்ரஸ் போய்த்தான் பாக்கலாமேன்னு தோன்றவே கான்ஸ்டபிள் வண்டியை எடுங்க என்றார். என்ன சார் புது கம்ப்ளைண்டா என்றார் கான்ஸ்டபிள். இல்லேப்பா ஒரு சின்னப்பொண்ணு என்னை யாரோ கொலை பண்ணப்போராங்கன்னு போன்பண்ணுது அப்புறம் போன் அமைதியா ஆயிடுத்து என்னாச்சுன்னு தெரியல்லே அதான் போயி பார்த்துடலாம்னு சொன்னேன். சார் யாரும் எதுவும் கம்ப்ளைண்டுன்னு எதுவும் கொடுக்கலே. நாமாகப்போயி மாட்டிக்கனுமா. ஏற்கனவே ரெண்டுகேஸ் தலைவலி கொடுத்துகிட்டு இருக்கு. புதுசா இதுவேர தேவையா சார் என்று கான்ஸ்டபிள் கேட்கவும் நான் சொல்றதைச்செய்தா போறும். மேலும், மேலும் கேள்வி கேக்காதீங்க வண்டி எடுங்க. என்று அந்த அட்ரெஸ் தேடி கிள்ம்பினார்கள் அது ஒரு ஒதுக்குபுறமான ஏரியாவில் அமைந்திருந்த தனி பங்களா. நல்ல பணச்செழிப்பு முதல் பார்வைக்கே தெரிந்தது. வண்டியை வெளியே நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள். உள்ளேயிருந்து ஒரே அழுகைச்சத்தம் வாசல்வரை கேட்டது. ஏதோ விபரீதம் நடந்துட்டுது போல இருக்கேன்னு பால்ராஜ் வேகமாக உள்ளே போனார். அங்கு அழுது கொண்டிருந்தவர்கள் இன்ஸ்பெக்டரைப்பார்த்ததும் திகைத்துப்போய் அழுகையை ஒரு நிமிஷம் நிறுத்தி  இன்ஸ்பெக்டர் சார் வாங்க அதுக்குள்ள உங்களுக்கு யாரு தகவல் சொன்னாங்க எப்படி நீங்க வந்தீங்கன்னு வீட்டில் இருந்த 50- வயதான பெண்மணி கேட்டாங்க. யாரும் தகவல் சொல்லலே. நானேதான் வந்தேன் . என்னாச்சு என்றார். ஐயோ அதையேன் கேக்குரீங்க்? எங்கவீட்டு ஏஞ்சல் பூஜா குட்டி திடீர்னு செத்துபோச்சு. எங்க யாராலையுமே நம்பமுடியல்லே. என்னாச்சுன்னே புரியல்லே சோபாவில் சாய்ந்தவாரே இறந்திருக்கா அவதூங்கறான்னுதான் எங்களால நினைக்க முடியுது. என்னகொடுமை பாருங்க இன்ஸ்பெக்டர். என்று அந்தப்பெரியம்மா மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே போனாள்அந்தப்பெரியம்மா காதிலும் கழுத்திலும் வைரமும் தங்கமும் ஜொலிக்க  அந்தவீட்டு எஜமானி அம்மா போல இருந்தாங்க.. சே அந்தக்குழந்தை போன் பண்ணினதை நாம விளையாட்டா நினைச்சுட்டோமே கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா அந்தக்குழந்தையை காப்பாத்தி இருக்கலாமோன்னெல்லாம் பால்ராஜ் நினைத்தார். சோபா செட்டில் தூங்குவதுபோல அந்தக்குழந்தை படுத்துக்கிடந்தது.

சரி ஆனது ஆச்சு போஸ்ட்மார்ட்டதுக்கு பாடியை அனுப்பணும் கான்ஸ்டபிள் பாரன்சிக் ஆட்களுக்கு போன்போட்டு சொல்லுங்க. ஆம்புலன்சுக்கும் சொல்லிடுங்க என்றார் பால்ராஜ். ஐயோ போஸ்ட் மார்ட்டமா என் குழந்தையை வெட்டி கூறு போட்டுவாங்களே அந்த அனியாயம்லாம் பண்ண வேண்டாம் சார். அவளை அமைதியா அடக்கம் செய்துடலாம். ப்ளீஸ் இன்ஸ்பெக்டர் என்று பெரியம்மா உருக்கமாகச்சொன்னார்கள். இல்லேம்மா இது இயற்கையான மரணம் போல தெரியல்லே. அதனால போஸ்ட் மார்ட்டம் செய்து யாரு இந்தக்குழந்தையை கொலை செய்தார்கள் என்று கண்டு பிடிக்கனும்.. அதஎல்லாம் சரி இன்ச்பெக்டர் நாங்க யாரும் உங்களுக்கு போனோ கம்ப்ளைண்டோ பண்ணல்லே, நீங்களாகவே வந்தீங்க இப்ப போச்ட்மார்ட்டம் பண்ணனும்னெல்லாம் சொல்ரீங்க. ஆளைக்கண்டுபிடிச்சுட்டா மட்டும் என் செல்லம் திரும்பி வந்துடுவாளா? அமைதியா அவ ஈமச்சடங்குகளைச்செய்ய விடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும் என்று எவ்வளவோ அந்தப்பெரியம்மா சொல்லியும் இன்ஸ்பெக்டர் காதிலேயே வாங்கல்லே. அதெல்லாம் முடியாதும்மா. நீங்க யாரும் கம்ப்ளைண்ட் பண்ணலைனாகூட அந்தப்பொண்ணே கொஞ்ச நேரம் முன்ன எனக்கு போன் பண்ணினா யாரோ அவளைக்கொலை செய்துடுவாங்கன்னு பயம்மா இருக்குன்னு சொன்னா அதான் நாங்களே வந்தோம். தயவு செய்து எங்க டூட்டியைச்செய்யவிடுங்கம்மா. அன்றார்.

                                                                                                        தொடரும்

31 comments:

இராஜராஜேஸ்வரி said...

சிறுகதையா அம்மா!

நாவலாக தொடரும்
விதை கொண்ட கதை!

radhakrishnan said...

என்னம்மா,க்ரைம் த்ரில்லர் கதைக்குப் போய்விட்டீர்களே ?இதிலும் ஏதேனும்
அறிவுரைகள் உண்டா?
பகிர்வுக்கு நன்றி அம்மா

Manakkal said...

அந்த நாள் சங்கர்லால் கதைகள் போல ஆரம்பமே திகிலுடன்; அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. த்ரில்லிங்கா தொடங்கியிருக்கீங்க.

ஸ்ரீராம். said...

அடப் பாவமே....தொடருங்கள். காத்திருக்கிறோம்.

சக்தி கல்வி மையம் said...

சிருகதாவ்ப்போல இல்லை., சுவாரசியமா இருக்கு.,. தொடருங்கள்..

RAMA RAVI (RAMVI) said...

ஆஹா..அம்மா மறுபடியும் ஒரு துப்பரியும் கதையா? சிறப்பாக இருக்கு ஆரம்பமே.தொடருங்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! தொடருங்கள்! நன்றி அம்மா!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Advocate P.R.Jayarajan said...

இதற்கு பெயர் கடமை அல்லது பதற்றம் ... நன்றாக உள்ளது..

http://jayarajanpr.blogspot.com/2011/12/32.html

Advocate P.R.Jayarajan said...

த.ம. 3 .. உடான்ஸ் 3
தொடருங்கள்..

வெங்கட் நாகராஜ் said...

ஆரம்பமே த்ரில்லிங்-ஆ இருக்கு! ... தொடருங்கள் அம்மா....

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மனக்கால் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் நான் திரில்லர் கதை எழுதக்கூடாதா?

குறையொன்றுமில்லை. said...

வேடந்தாங்கல் கருன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அட்வகேட் ஜெயராஜன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பராக இருக்கு லக்ஸ்மி அக்கா.

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஆரம்பம் நிமிர்ந்து உட்காரவைத்துவிட்டது
வித்தியாசமான ஆரம்பம்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
த.ம 5

ADHI VENKAT said...

த்ரில்லிங்கான கதையாக இருக்கும் போல இருக்கே.....

தொடருங்க அம்மா.

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கும் தமிழ்மண ஓட்டுக்கும் நன்றீ

குறையொன்றுமில்லை. said...

கோவை2 தில்லி ஆமாங்க முதல் முறையா முயற்சி செய்திருக்கேன்

ஸ்ரீராம். said...

Lakshmi said...
ஸ்ரீராம் நான் திரில்லர் கதை எழுதக்கூடாதா?//

ஏன்மா எழுதக் கூடாது? நான் பாவமே சொன்னது அந்த கேரக்டருக்காக...!
:))

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் ஒரு வார்த்தை உங்களைத்திரும்ப வரவச்சுது பாருங்க. ஹா ஹா

அம்பாளடியாள் said...

சிறப்பான ஆக்கம் தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

குறையொன்றுமில்லை. said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றீ

என்னை ஆதரிப்பவர்கள் . .