Google+ Followers

Pages

Friday, February 3, 2012

கிலிபி 9(ஆப்ரிக்கா)

மறு நாள் இன்னொரு பீச் போனோம். கிலிபி பீச் பேரு வீட்லேந்து சுமாரா  கொஞ்ச தூரம் இருந்தது. போகும் வழி பூராவும் ரெண்டு புறமும் தென்னை,மாமரம், ஃபேஷன் ஃப்ரூட் மரம் என்று செழுமையாக இருந்தது. ரெண்டு புறமும் மரங்கள்தான் நடுவில் கப்பி ரோடு. கடைகளோ வேறு ஏதுமோ இல்லே. நான் வழக்கம்போல முன் சீட்ல உக்காந்து வெளில வேடிக்கை
                         
 பாத்துண்டே போனேன். அங்கே நடமாடும் ஜனங்க்களைப்பார்க்கும் போது தான் ஆப்ரிக்காவுல இருக்கோம்னே நினைவுக்கு வருது சின்ன சின்ன ஊர்கள் வந்து போகுது. வட்டாமு ந்னு ஒரு இடம் மாப்பிள்ளை கூட்டிப்போனார். அங்க என்ன இருக்குன்னு கேட்டேன்.முதலைப்பண்ணை, பாம்பு பண்ணை இருக்கு சுத்தி பாத்துட்டு வரலாம் அப்புரமா பீச் போலாம்னு சொன்னார். என் பெண்ணுக்கு இதுபோல பாம்பு முதலைலாம் பாக்க அருவெருப்பா இருக்கும் ஆனா மாப்பிள்ளை அந்த இடங்களை மிகவும் ரசித்துப்பார்ப்பார். அதைஅப்புரமா பாத்துக்கலாம்னு நேரா  பீச் போனோம்.இது கொஞ்சம் பெரிய பீச் நிறைய பீச் ரிசார்ஸ்ட். அதில் ஃபாரினர்ஸ் கூட்டம். . ரிசார்ட்குள்ளயே பலவித விளையாட்டுக்களுக்கு இடம் ஒதுக்கி இருந்தார்கள். பேட் மிண்டன், டேபில் டென்னிஸ் என்று நிறய பேரு விளையாடிண்டு இருந்தா. நாங்க ரிசார்ட் தாண்டி கடற்கரை பக்கம் போனோம். அங்கேயும் மூங்கில் கூரைபோட்டு உள்புறம் வைக்கோலினால் உள் அலங்காரம் லாம் பண்ணி இயற்கையான் சூழல் பண்ணி யிருந்தா. இங்க கடல் நல்ல பெரிய பரப்பளவில் அலையடித்துக்கொண்டிருந்தது. கடல்,மழை, யானை இதெல்லாம் எப்ப பாத்தாலும் எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காத விஷயங்கள் இல்லியா.


                              


                       


                              
 சார்ட்டர்ட் ஃப்ளைட், ப்ரைவேட் ஃபளைட்ட்டில் நேராக பீச்சிலேயே வந்து இறங்குகிரார்கள்.பாரினர்ஸ். இயற்கையான சூழலில் இருந்து தங்களை ஃப்ரெஷ் பண்ணிண்டு திரும்ப போயிடறா. வருஷம் பூராவும் ஃபாரினர்ஸ் வருகை இருந்துண்டே இருக்குமாம். நல்ல வரும்படிதான்.பீச்பக்கமாக ஒரு குட்டி ஏர்போர்டே இருக்கு அங்குவந்து இறங்குகிரார்கள்.கடல் கரையிலும் ரிலாக்சா உக்கார மூங்கில் சேர் கட்டில் எல்லாமே இருக்கு. நல்ல பெரிய அலைகளும் வெள்ளை வெளேர் மண்ணலும் இருக்கு.கால் நனைக்க போயி ஒருமணி நேரம் அலையில் நின்னாலும் திரும்ப வரவே மனசு வல்லே.அங்கே ஃப்ரெஷா  ஃபேஷன் ஃப்ரூட் ஜூஸ் கொடுக்கறா.இந்த ஃப்ரூட் இங்க மட்டும்தான் கிடைக்கும்னு சொல்ரா. மேல் தோடு அக்ரோட்போல இருக்கு.உள்ளே தக்காளி விதைபோல  கொழ, கொழன்னு இருந்தது. பேரே

                             

                                                               

                            
  புதுசா இருந்தது.பச்சைக்கலரில் இருந்தது.எப்படித்தான் இருக்குன்னு டேஸ்ட் பண்ணிப்பாரு நன்னா இருக்கும்னு பொண்ணு சொன்னா. ஓரளவு நல்லா இருந்தது. 8- மணி  நல்லாவே இருட்டாயிடுத்து. வீடு கிளம்பினோம். இரவு  50- வருடம் முன்பு வந்த சம்பூர்ண ராமாயணம் பார்த்தோம். சி. டி தான்.பழைய படம்னா பொண்ணு வர மாட்டா. நாங்க இருவரும் பாத்தோம்.

என்னை தினசரி வெளியில் சுத்திப்பாக்க்க கூட்டிண்டு போகணும்னு அசைப்படரார் மாப்பிள்ளை. ஆனா ஆபீசுக்கு லீவு போட முடியாதே. லீவு நாட்களில் ஒவ்வொரு நாள் ஒரு இடம் போலாம்னு சொல்லி இருக்கார். என்னை ஒரு வேலையும் செய்ய விட மாட்டரா பொண்ணு. வேளா  வேளைக்கு ருசி ருசியா சமைச்சுப்போட்டுடரா. நான் நாள் பூரா என்னதான் செய்ய. கொண்டு போன தமிழ் புக் சீக்கிரம் தீர்ந்து போயிடக்கூடாதேன்னு டெய்லி 20- பக்கம்தான் படிப்பே. புக்படிக்கவும் ரேஷன். காலை 11- மணிக்கு ஒரு சூப், இல்லைனா ரசம் ,இல்லைனா இளனீர் தருவா. வீட்டைச்சுத்தி 25- தென்னைமரம் இருக்கே. தினசரியுமே இளனீர் குடிக்கலாம்னு வாச்மேனிடம் கோகனட் பறிச்சு தரச்சொன்னா.10- இளனீர் பறிச்சான். நாங்க உறிக்க கஷ்ட்டப்படுவோமேன்னு உறிச்சு உடைத்து இளனீர்பூராவும் கீழே கொட்டிட்டு வெரும் தேங்காமட்டும் கொண்டு தந்தான். அவனுக்குத்தெரியல்லே இளனீர்  நாங்ககுடிக்ககேட்டோம்னு. எனக்கும் என் பெண்ணுக்கும் ஒரே சிரிப்பு நல்ல
சமத்ததான் போ . இள நீர் எல்லாம் இப்படி குப்பைல கொட்டிட்டானே. நாமதான் அவனுக்கு சொல்லி இருக்கனும். என்று நினைச்சோம். வேலைக்காரி வரும்போது கொஞ்சம் காய் வாங்கி வரச்சொல்லி இருந்தா பொண்ணு. 30- வெண்டைக்காய் பிஞ்சு, பிஞ்சா நல்லா இருந்தது.30- ரூபா நம்ம இண்டியன் ரூபா அளவுக்கு. ஆச்சுன்னா. அங்கே ஷில்லிங்க்னு சொல்ரா.அப்பாடா 30- வெண்டைக்கா 30- ரூபாயா உடம்புக்காகுமான்னு நினைச்சேன். எல்லாமே விலை அதிகமா இருக்கு. நம்ம அரிசி பருப்பு புளி தேங்கா எண்ணை நல்லெண்ணை ஹார்லிக்ஸ் இதுபோல எதுவுமே கிலிபில கிடைக்காது.  கிலிபி ரொம்பவே சின்ன ஊருதான், பேக்டரி, அதில் வேலை பார்ப்பவர்களுக்கு 12, குடியிருப்பு வீடுகள்.அவ்வளவுதான் எது சாமான் வாங்கணும்னாலும் மும்பாசா போகனும்

 மும்பாசா கிலிபிலேந்து 50, இல்லைனா 60- கிலோ மீட்டரில் இருக்கு காரில் போக 2-மணி நேரம் ஆகும் மாசம் ஒருமுறை அங்கபோயிதான் ப்ரொவிஷன் காய்கள் பழங்கல் எல்லாம் வாங்கி வரா. நினைச்சோடனே நினைச்ச சாமான் கிடைக்காது. ப்ரிட்ஜ் ல வாங்கி எல்லாம் ஸ்டோர்பண்ணி வச்சுக்கரா.மும்பாசா ஓரளவு பெரிய சிட்டி. சௌத் இண்டியன் ஸ்பைசஸ்னு ஒருகடை இருக்கு 3மாசம் ஒருமுறை இண்டியாலேந்து நம்ம சாமான்கள் அங்க வரும் போன் பண்ணி கேட்டுட்டு போகனும்.இங்க இந்த சண்டேபோலாம்னு ப்ளான் பண்ணி இருந்தா.காலை எலினா வந்து வேலை முடிச்சு போன பிறகு சாப்பிட்டு கிளம்பினோம். வண்டிலயும் தமிழ் பாட்டு சி.டி வச்சிருதா. அதுல பாட்டு கேட்டுண்டே லாங்க் ட்ரைவ்.இருபுறமும் முந்திரி மா,தென்னை தோப்புகள் அது தவிர சைசல்னுஒருமரம் மூங்கில்போல இருக்கு .வழில நிறைய குட்டி குட்டி ஊர்கள் வந்து போயிண்டு இருக்கு..

( நன்றி-கூகுல் இமேஜ்)                                                                     (தொடரும்)

34 comments:

Lakshmi said...

தமிழ் மணம் இணைக்கமுடியல்லியே?

அமைதிச்சாரல் said...

கடல் அலைகள்ல எவ்ளோ நேரம் கால் நனைச்சுட்டிருந்தாலும் அலுக்கவே அலுக்காது. படங்களெல்லாம் ஜில்லுன்னு இருக்கு. நேர்ல ரொம்பவே அழகா இருந்திருக்கும் இல்லியா !!

கூகிளார் செஞ்ச மாற்றத்தால் தமிழ்மணத்துல இணைக்கிறது தடுமாற்றமா இருக்குது. விரைவில் சரியாகும்ன்னு நம்புவோம்.

ஸாதிகா said...

ரொம்பவுமே இண்ட்ரஸ்டிங்கா இருக்கு.தொடருங்கள்?

Mahi said...

Y this kola veri-ma? Padam kaatti bayamuthareenga? avvvvv.....

Waiting to explore the African Indian stores..;)

RAMVI said...

ஆப்ரிக்காவை அழகாக ரசித்தி எங்களையும் ரசிக்க வைச்சுட்டீங்க.

//கடல்,மழை, யானை இதெல்லாம் எப்ப பாத்தாலும் எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காத விஷயங்கள் இல்லியா.//

ஆமாம் அம்மா,இந்த லிஸ்டில நான் டிரெயினயும்(train) சேர்த்துப்பேன்.

athira said...

ஆ.... கில்பி 9 இல பாம்பு பூந்திட்டுதூஊஊஊஊஊஉ..:)) லக்ஸ்மி அக்கா.. படிக்க இப்போ நேரம் போதாது... வருகிறேன் விரைவில்...

K.s.s.Rajh said...

ரொம்ம சுவாரஸ்யமாக இருக்கு
தொடருங்கள் மேடம்

கோவை2தில்லி said...

படங்கள் அழகா இருக்கும்மா..... கடற்கரையை நாங்களும் உங்க கூடவே இருந்து பார்த்த மாதிரி இருந்தது....

வெங்கட் நாகராஜ் said...

சுகமான பயணத் தொடர்... படிக்கும் எங்களுக்கும் நல்லதோர் பயணம் செய்த உணர்வு....

சுவையான செய்திகளுடன் சுவைபடச் செல்கிறது தொடர்.... தொடருங்கள்... நானும் தொடர்ந்து வருவேன்....

ராமலக்ஷ்மி said...

படங்களும் தகவல்களும் அருமை. சென்னை மகாபலிபுரம் அருகே இருக்கும் முதலைப் பண்ணை சென்ற நினைவு வருகிறது. நூறு முதலைகள் போல் தூங்கியபடி இருந்தன:)!

இராஜராஜேஸ்வரி said...

நாங்க உறிக்க கஷ்ட்டப்படுவோமேன்னு உறிச்சு உடைத்து இளனீர்பூராவும் கீழே கொட்டிட்டு வெரும் தேங்காமட்டும் கொண்டு தந்தான். அவனுக்குத்தெரியல்லே இளனீர் நாங்ககுடிக்ககேட்டோம்னு. எனக்கும் என் பெண்ணுக்கும் ஒரே சிரிப்பு

அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

கணேஷ் said...

ஹய்யா... நீ்ங்களும் என்னைப் போலத்தானா? கடல், மழை, யானை மூன்றுமே எனக்கும் மிகமிகமிகப் பிடித்த விஷயங்கள். ரொம்ப சந்தோஷம்! தென்றல் வீசின மாதிரி சரளமா போயிட்டிருந்த தொடர்ல பா... பா... பாம்பு படம்லாம் போட்டு பயமுறுத்துவீங்கன்னு நெனச்சே பாக்கலை... மீ எஸ்கேப்! அடுத்த பகுதிக்கு வர்றேன்!

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி என்னம்மா பயந்துட்டியா. வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி. எனக்கும் ரயில் பயணம் பிடித்தவிஷயம்தான்.

Lakshmi said...

அதிராவுக்குகூட பயமா? மெதுவாபடிங்க. நன்றி

Lakshmi said...

ராஜ் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி கூடவே வாங்க.

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி. முதலைகள் ஏப்பவும் தூங்கிண்டே தான் இருக்கும்போல.

Lakshmi said...

ராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி. ஆமா அவங்க இப்படித்தான் கட்டிட்டுவான்னா வெட்டிட்டு வரவங்களா இருக்காங்க.

Lakshmi said...

கணேஷ் வருகைக்கு நன்றி நம்மில் நிறையா பேருக்கு பிடித்தவிஷயங்கள் இதுபோல நிறையவே இருக்கு ஷேர்பண்ணிக்கும்போது தானே தெரியவருது இல்லியா?

கோமதி அரசு said...

இளனீர் குடிக்கலாம்னு வாச்மேனிடம் கோகனட் பறிச்சு தரச்சொன்னா.10- இளனீர் பறிச்சான். நாங்க உறிக்க கஷ்ட்டப்படுவோமேன்னு உறிச்சு உடைத்து இளனீர்பூராவும் கீழே கொட்டிட்டு வெரும் தேங்காமட்டும் கொண்டு தந்தான். அவனுக்குத்தெரியல்லே இளனீர் நாங்ககுடிக்ககேட்டோம்னு. எனக்கும் என் பெண்ணுக்கும் ஒரே சிரிப்பு //


நல்ல நகைச்சுவை.

படங்களும் நீங்கள் சொல்லும் முறையும் அருமை.

ரசிகன் said...

இளநீரை கொட்டியது நல்ல நகைச்சுவை. இதே போல ஒரு சம்பவம் என் உறவினர் ஒருவருக்கு நடந்தது. வங்கியில் வேலை செய்யும் அவர் தண்ணீர் பாட்டில் விற்க ஆரம்பித்த நாட்களில் தன் அலுவலக உதவியாளரை அனுப்பி தண்ணீர் வாங்கி வர சொல்ல, வாங்கி வந்த அவர் "எத்தன நாள் தண்ணியோ?" என அதை கீழே ஊற்றி விட்டு குழாயில் தண்ணீர் பிடித்து கொடுத்தாராம். அதை போல இருக்கிறது நீங்கள் சொன்னது. நல்ல நகைச்சுவை.

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி.

Lakshmi said...

ரசிகன் வருகைக்கு நன்றி. இதுபோல அதி புத்திசாலிகள் நிறையாபேரு இருக்காங்க போல இருக்கே?

Asiya Omar said...

கிலிபியை நாங்களும் சுற்றி பார்த்த திருப்தி.தொடர்ந்து எழுதுங்கள்.

Lakshmi said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

athira said...

விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..

http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html

Lakshmi said...

அதிரா வருகைக்கு நன்றிம்மா.

கீதா சாம்பசிவம் said...

விமானத்திலேயே கடற்கரைக்கு வந்து இறங்குவாங்கங்கறது புது விஷயம். ஓரளவுக்கு நம்ம சாமான்களும் கிடைப்பதும் அதிசயம் தான். ஆனால் யு.எஸ்ஸில் அந்தப் பிரச்னையே இல்லை. வீட்டுக்குள்ளே இருந்தால் இந்தியா போல் தான். இந்தியச் சமையல், இந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள்.னு எதுவும் மாறலை. வீட்டுக்கு வெளியே சென்றாலோ, நீண்ட பயணத்தின்போதோ தான் தெரியும். அந்த அளவுக்கு இந்தியர்களும், இந்தியப் பொருட்களும் கிடைக்கின்றன.

Lakshmi said...

கீதா உங்களத்தான் காணோமேன்னு பாத்தேன் விருதெல்லாம் கொடுத்து அமர்க்களம் பண்ணிட்டீங்க. நன்றி

மாதேவி said...

பயணத்தில் தொடர்கின்றேன்....

என்னை ஆதரிப்பவர்கள் . .