வந்து கிட்டத்தட்ட, 3, 4 மாசம் ஆயிடுச்சு. நாளை கிளம்பனும். பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் என்னை திரும்ப அனுப்பமனமே இல்லே. ஆசை ஆசையா எல்லா இடங்களும் சுற்றிக்காட்டினார்கள். மறு நாள் காலை 10 மணிக்கு மும்பாசாவில் இருந்து நைரோபிக்கு ஃப்ளைட், நைரோபிலேந்து மும்பைக்கு மாலை 7 மணிக்கு ஃப்ளைட் இருந்தது. இரவு அக்கம்பக்கம் உள்ளவங்க வழி அனுப்பவந்தாங்க வேலைக்காரி தோட்டக்காரன் வாச்மேன் எல்லாருமே ஏன் மேம் இப்பவே இண்டியா திரும்ப போரீங்க இன்னும் கொஞ்ச நாள் இருங்கன்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. மறு நா காலை 4- மணிக்கே எழுந்து நானும் மாப்பிளையும் காபி குடிச்சு 5 மணிக்கு காரில் கிளம்பினோம். ஆப்ரிக்க ட்ரைவர் கூடவந்தான். மொம்பாசா போகவே 2 மணி நேரம் ஆகுமே. விடிந்தும் விடியாத காலைப்பொழுது, குளுமை யான காற்று வீச, சில்வண்டுகளின் ரீங்காரமும், பறவைகளின் இன்னிசைக்கச்சேரியும் கூடவர கார் பயணம் சுகம்.
பாதி வழி போகும்போதே டயர் பஞ்சர் ஆச்சு. அது சரிபண்ணிட்டு கிளம்பி மொம்பாசா போய்ச்சேரும்போது 8.30- ஆச்சு. 9 மணிக்கு ஏர்போர்ட் போய்ச்சேர்ந்தோம். வழக்கமான பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்து உள்ளேபோய் உக்காந்தோம். கரக்டாக 10 -மணிக்கு ஃப்ளைட் கிளம்பி 11- மணி நைரோபி போய்ச்சேர்ந்தோம்.
மாலை 7- மணிக்குதான் நைரோபி டு முமபை ஃப்ளைட் இருந்தது. அதுவரை என்ன பண்ண/ மாப்பிள்ளையின் ஒரு ஃப்ரெண்ட் வீட்டுக்குபோனோம் பஞ்சாபிக்காரா. டீ, பிஸ்கெட் எல்லாம் தந்து உபசாரம் பண்ணினா. என்னை அவங்க வீட்டில் விட்டுட்டு மாப்பிள்ளையும் அவ ஃப்ரெண்டும் ஆபீசுக்கு போனா. ஆப்ரிக்காவில் ஒரு வீட்டில் கூட சீலிங்க் ஃபேனே இல்லே பெடஸ்டல்ஃபேந்தான். இவங்க வீட்ல அதுகூட இல்லே. வீடு பூராவுமே ஏ. சி பண்ணியிருந்தாங்க. வீடுபூராவுமே குளூகுளுன்னு இருந்தது. அந்தவீட்டு பெண் என்னிடம் ஆண்டி லஞ்சுக்கு என்னபண்ணனும் சப்பாத்தியா ரைசான்னு கேட்டா. எதுவானாலும் ஓக்கேம்மா.வா நானும் உனக்கு ஹெல்ப் பன்ரேன்னு நானும் அவகூட கிச்சனில் போனேன். நோ, நோ ஆண்டி இரவு 8-மணி நேரம் ஃப்ளைட் ட்ராவல்பணனும் இல்லியா இப்போ நல்லா ரெஸ்ட் எடுங்க கொஞ்ச நேரம் டி,வி, பாருங்க, நியூஸ்பேப்பர் பாருங்க படுத்து இருங்க நானே எல்லாம் பண்ணிடுரேன்னு சொல்லிட்டா. சமையலுக்கு ஆள் இருந்தா. அதனால நான் ஹாலில் வந்து உக்காந்து டி வி ஆன் பண்ணினேன். இவங்க பணம் கட்டி 2, 3, ஹிந்தி சேனல் வச்சிருந்தா. அதுபாத்துட்டு பேப்பரில் எல்லாமே ஆப்ரிக்க நியூஸ்தானே ஹெட்லைன்ஸ் மட்டும் படிச்சுண்டு டைம் பாஸ் பண்ணினேன்
மாப்பிள்ளையும் அவ ஃப்ரெண்டும் 2 மணிக்கு வந்தா. எல்லாரும் சேர்ந்து உக்காந்து லஞ்ச் சாப்பிட்டோம் பஞ்சாபிக்காரா கைகளுக்கே இந்த சப்பாத்திஇவ்வளவு மிருதுவா வரது. நல்லா டேஸ்டா எல்லாம் பண்ணி இருந்தா. நம்ம சௌத் இண்டியன்ஸ் தவிர வேர எந்தபாஷைக் காராளுமே தயிர் சாதம் சாப்பிடரதேஇல்லே. எனக்கு கடைசில ஒருவாய் தயிர் சாதம் சாப்பிட்டாதான் சாப்பிட்ட திருப்தி இருக்கும். கேக்கவும் எப்படியோ இருந்தது. சாப்பிட்டு முடியும் போது ஒரு பெரியக்ளாஸ் நிறையா நுரை ததும்ப தயிர் தந்தா. அப்பாடா தயிர் இருக்கேன்னு சந்தோஷமா இருந்தது. புளிப்பா இருக்கான்னு பாக்கலாம்னு ஒருவாய் குடிச்சு பார்த்தேன். ஒரேஸ்வீட்டா இருந்தது. பஞ்சாபிக்காரா நிறையா லஸ்ஸி குடிப்பாங்க ப்ளைன் தயிர் குடிக்கமாட்டாங்க. நல்லவேளை நான் அந்த தயிரை சாதத்தில் போட்டு கலந்துக்கலே. ஜீனித்தயிர் போட்டு எப்படி சாப்பிட? லஸ்ஸி குடிச்சு எழுந்தோம். ஒரு 10- நிமிஷம் கழித்து பெரிய கப் நிறைய ஐஸ்க்ரீம் கொண்டுதந்தா. ஐயோ வயிறு ஃபுல் ஒன்னுமே வேனாம்னு சொல்லியும் கேக்கலே. கொஞ்சமாவது டேஸ்ட் பண்ணுங்கன்னு கம்பெல் பண்ணி சாப்பிட வச்சுட்டாங்க. நல்ல அன்பான மனிதர்கள் நல்ல உபசரிப்பு மனசுக்கே சந்தோஷமா இருந்தது.
4 மணிக்கு சாயும் போட்டு தந்துட்டா. எந்தவயித்துக்கு? வேண்டாம்னா விடவும் மாட்ரா. 4.30-க்கு ஏர்போர்ட் கிளம்பினோம். அவங்க வீட்லேந்து ஏர் போர்ட் ரொம்ப பக்கம் தான். 5-மணிக்குள்ள ஏர்போர்ட் வந்துட்டோம். மாப்பிள்ளை வாச்ல்லேந்தே பை பை சொன்னார், அவருக்கு மும்பாசா திரும்பிபோக ஃப்ளைட்டும் 7 மணிக்குத்தான் இருந்தது. அதைபிடிச்சாதான் இரவு 11 மணிக்காவது வீடுபோய்ச்சேரமுடியும் பெண் வேர தனியா இருக்காளே. நான் ஏர்போர்ட் உள்ளே போயி செக் இன் பொர்டிங்க்பாஸ் எல்லாம் வாங்கிண்டு செக்யூரிட்டி செக்கின்னும் பண்ணிட்டு உள்ளே போனேன். ஒருமணி நேரம் என்னபண்ண/ ஏர்போர்ர்ட்டை சுத்தி பாக்கலாம்னு எழுந்து நடந்து ஒவ்வரு இடமாக பார்த்துண்டே வந்தேன் டியூட்டி ஃப்ரீ ஷப்ஸ் நிறையா இருந்தது ஆப்ரிக்ககைவேலபாடுகளுடன்கூடைய கலைப்பொருட்கள் , ட்ரெஸ்கள் சாக்லெட்ஸ் ஹாட் ட்ரிங்க்ஸ் ரெஸ்டாரெண்ட் என்று 45- நிமிஷங்கள்
நிதானமாக சுத்திப்பார்த்தேன். எனக்கு அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி குடிக்கும் பழக்கம் உண்டு, ஏர்போர்ட் பூராவும் சுத்தி சுத்தி வந்தும் கூட ஒரு இடத்திலுமே குழாயோ, குடிதண்ணீரோ கண்ணிலேயே படல்லே. கடைக்காரனிடம் போயிக்கேட்டேன். பிஸ்லேரி வாங்கிகோங்கன்னு சொல்ரான் சரி வேர வழி. ஒரு பாட்டில் தண்ணீர்வாங்கிண்டு 100 -ரூவாகொடுத்தேன். நோ, நோ மேட,ம் நோ இண்டியன் கரன்சி, ஒன்லி யுஎஸ் டாலர் என்கிரான் கைல் வச்சிருந்தேன். 5-டாலர் கொடுத்தேன் 3 டாலர் திர்ப்பி தந்தான். ஒருபாட்டில் தண்ணி 2 டாலர் இந்திய ரூவா கணக்குக்கு, அப்போ ஒரு டாலருக்கு 47 ரூவாயா இருந்தது.
தண்ணிபாட்டில் விலை 94 ஆகுது மனசே வரல்லே. கொஞ்சம் குடிச்சுட்டு ஹேண்ட் பேக்கில் வச்சுட்டேன் கரெக்டா 7 மணிக்கு ஃப்ளைட் வந்தது

Tweet | |||||
32 comments:
அருமையான பயணம் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
aaaaaaaaaaaaaaaaa
நா தான் இண்டைக்கு ப்ர்ஸ்தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
சுப்பரா எழுதி இருக்கீங்க ...நாங்களும் அந்த இடத்துல இருக்குற பீல் இருந்தது ..
Supper
பயணங்கள் மனதை விசாலப் படுத்தும்.அனுபவங்கள் நிறைய கற்பிக்கும். இருந்தாலும் பயணத்தில் இருக்கும்போது எப்போதான் வீட்டுக்குப் போவோம் என்று இருக்கும். வீடு வந்தபிறகு, இன்னும் சில காலம் பயணத்திலேயே இருந்திருக்கலாமோ என்றிருக்கும். பிறகென்ன நினைவுகளில் அடிக்கடி பயணிக்கலாம்.வாழ்த்துக்கள்.
பயண அனுபவம் அருமையாக உள்ளது. நேரில் நடப்பது போல தோன்றுகிறது.
அன்பான மனிதர்கள், அன்பான உபசரிப்பு, அருமையான அனுபவம், இதெல்லாம் இருந்து விட்டால் அந்த பயண நாட்கள் மறக்க இயலாததொன்றாய் அமைந்து விடும். அப்படித்தான் உங்களுக்கு அமைந்திருக்கிறது!
உங்களின் பயண அனுபவங்கள் எங்களுக்கும் இனிமையான அனுபவமாக அமைந்திருந்தது!!
ஆப்பிரிக்கப் பயணம் பிரமாதமாவே இருந்தது. தண்ணீருக்கு அவ்வளவு விலையா......
என்னது தண்ணீர் பாட்டில் 94 ரூபாயா? அம்மாடி!
நம்மூர்ல எங்கயாவது வெளில போனா நான் எப்பவும் கையில எடுத்துண்டு போயிடுவேன்.அப்படி ஒரு வேளை காசு கொடுத்து பாட்டில்ல வாங்கறாப்ல இருந்தா பதினஞ்சு ரூபாயை நினைச்சு கொஞ்சம் கொஞ்சமாதான் குடிப்பேன்.அதுவே பரவாயில்ல போலருக்கே!
ஆப்ரிக்கா பயணம் முடிந்து விமானப்பயண அனுபவம் சுவாரஸ்யம்.
நல்ல அனுபவங்கள்.... பகிர்வுக்கு நன்றிம்மா..
நல்ல பதிவு, ரசித்தேன்.
Nice experience Lakshmi-ma! So, now it's time for the return trip? Happy to be with you through out the African journey! :)
இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி
கலை வாங்க வாங்க பின்னூட்டம்லாம் தாராளமா தரீங்க நன்றி
யதன்ராஜ் வருகைக்கு நன்றி
ஜி. எம். பாலசுப்ரமனியம் சார் வருகைக்கு நன்றி
பாசித் வருகைக்கு நன்றி
மனோ மேடம் வருகைக்கு நன்றி
கோவை2தில்லி வருகைக்கு நன்றி
வெங்கட் வருகைக்கு நன்றி
பழனி கந்தசாமி வருகைக்கு நன்றி
ஆமா மஹி திரும்பிவந்தச்சூ
ராஜி நானும் எப்பவும் பாட்டிலில் குடிக்க தண்ணி கொண்டுபோயிடுவேன். ஆனா இந்த ஏர்போர்ட்லதான் நாம வெளிலேந்து குடிதண்ணி கொண்டு போகக்கூட அலவ் பண்ணமாட்டேங்கராளே?
நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு.அதுக்காக பிரத்தியேகப் பாராட்டு லஷ்மிம்மா.உங்களோடு பயணித்த ஒரு சந்தோஷம் !
ஹேமா வருகைக்கு நன்றி
நல்ல பயண அனுபவம். நல்ல பதிவு
பகிர்வுக்கு நன்றி அம்மா
ராதா கிருஷ்னன் ரொம்ப நாட்களுக்குப்பிறகு வந்திருக்கீங்க.
கிலிபி 18க்கு அப்புறம் படிக்காம மிஸ் பண்ணிட்டேன். இப்ப சேத்துப் படிச்சுட்டேம்மா. காரைக்குடி ஹோட்டல்ல ஒரு தரம் சாப்பிடறச்சே... தயிர்ன்னு நினைச்சு கப்ல இருந்ததை ஊத்திப் பிசைஞ்சு சாப்பிட்டா ஒரே இனிப்பு. அது ஜவ்வரிசிப் பாயசமாம். அப்புறம்தான் சொல்றான் படுபாவி சப்ளையர். ‘ஙே’ன்னு நான் விழிச்சதை இப்ப நெனச்சாலும் சிரிப்புதான். நல்லவேளை நீங்க தப்பிச்சீங்க..!
பயணம் அதுக்குள்ள முடியப் போகுதான்ற ஃபீலிங்தான் வருது. அது உங்கள் எழுத்தின் வெற்றி!
கணேஷ் எல்லா பகுதியும் படிச்சதுக்கு நன்றி நம்ம எல்லாரிடமும் நிறையா அனுபவங்கள் கொட்டி கிடக்குது நாம மத்தவங்க கூட ஷேர்பண்ணிக்கும் போதுதானே தெரிய வருது. உங்க ஜவ்வரிசி பாயசம் அனுபவம் படிச்சதுமே சிரிப்பு வந்திச்சு
Post a Comment