Pages

Monday, April 2, 2012

கிலிபி 22 ஆப்ரிக்கா (எண்ட்)

       
                                        


இரவு 7-மணிக்கு எல்லா பார்மாலிடிகளும் முடிந்து ஃப்லைட்டுக்குள்ள போய் உக்காந்தேன். ஆப்ரிக்கா வரும்போது எதிர்பாராமல் சுகமாக எக்சிக்யூட்டிவ் க்ளாசில் பயணம் செய்ய முடிந்தது,இப்ப எகானமிக்ஸ் தான். நெருக்கடியான சீட்கள் காலை ஐயப்பா போல பாதி மடக்கிதான் உக்கார வேண்டி இருந்தது.வழக்கம்போல விண்டோ சீட் கேட்டு வாங்கினேன். ரன்வேயில் ஓடி வேகம் எடுத்து டேக் ஆஃப் ஆனதை ரசித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மினியேச்சர் சைசில் தெரிய ஆரம்பித்தது, சீக்கிரமே இருட்டானது. கீழே பார்த்தகாட்சி கண்களை விட்டு அகலவே இல்லே. கருப்புவெல்வெட்டில் தங்கமும் வைரமும் வைடூரியமும் வாரி இறைத்ததுபோல கீழே எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சங்கள் மனதை கொள்ளை கொண்டது. மேலே ஆகாசத்தில் ஃபுல் மூனும் சுத்திவர நட்சத்திரங்களும் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. எல்லாமே கொஞ்ச நேரம்தான். விமானம் மேலே போகப்போக வெரும் இருட்டுமட்டுமே, அதில் என்ன பாக்கரது. காதில் இயர்போன் மாட்டிண்டு பழைய ஹிந்தி பாட்டுக்கள் கொஞ்ச நேரம் 9.30-க்கு டின்னர் கொடுத்தா.

 நான் வீட்டிலிருந்து ஒரு சிரிய டப்பாவில் கொஞ்சம் தயிர் சாதம் கொண்டுவந்தேன். செக்யூரிட்டி செக்கின்போது அதை குப்பயில் போட்டுட்டா. வெளிலேந்து ஒன்னும் கொண்டுவர அனுமதி இல்லியாம் என்ன ரூல்சோ?இரவு அவாதந்த டின்னர் சாப்பிடவே பிடிக்கலே.எதுவுமே சாப்பிடலே. வெளி நாடு போகும்போது இந்த சாப்பாட்டு பிரச்சனை படுத்தி எடுக்குது, 8 மணி நேரம் ரொம்ப பொறுமையா உக்காந்துருக்க வேண்டி வந்தது.எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் உள்ளே லைட்டெல்லாமும் அணைச்சுட்டா. தலைக்குமேலே இருந்த குட்டி லைட்டை போட்டுண்டு கொஞ்ச நேரம் புக் படிச்சுண்டு இருந்தேன் . அந்தகம்மி வெளிச்சத்தில் படிக்கமுடியல்லே கண்ணெல்லாம் வலிஎடுக்குது. டி.வி. லகொஞ்ச நேரம் என்னமோ பாத்தேன் ட்ராவலில் எனக்கு தூக்கமே வராது. ஒரு வழியா இரவு 3 மணிக்கு மும்பை ஏர்போர்ட் வந்தது. இண்டியா டயப்படி காலை 5.30 மணி. இந்த டைம் சேஞ்ச் கொஞ்சம் குழப்பமாகுது.
  லேண்ட் ஆகும்போது சரியா லேண்ட்பண்ணாம வேகமா லேண்ட்பண்ணி எல்லரும் சீட்லேந்து எதிர்சீட்ல முட்டிகிட்டோம் காலடியி வச்சிருந்த லக்கேஜ் எல்லாம் உருண்டுஎங்கெங்கோ ப்போச்சு. நின்னபிறகு பைலட் வெளிலவந்து எல்லாரிடமும் சாரி சொன்னா. அது பெண்பைலட். முதல் முறையா வெளி நாட்டுசவாரி பொறுப்பேத்துண்டாளாம்  வேரு ஏதும் பிர்ச்சினை இல்லாம இறங்கினோம். ஏர்க்ராப்ட்லயே  நேர உள்ள போயிட்டோம் அங்கியே ஒருஆபிசர் கையில் ஒரு நேம் போர்ட் வச்சுண்டு யாருக்காகவோ காத்துண்டு நின்னார். பொதுவா இதுபோல போர்ட்வச்சுண்டு வெளிலதான் நிறையா பேரு காத்துண்டு இருப்பா. இவர் எப்படி உள்ளயே இப்படி நிக்கராருன்னு நினைச்சுகிட்டே நான் முன்னாடிபோனேன்.  கொஞ்சமுன்னாடிபோனதும் அந்த ஆபீசர் என்பின்னாடியே வந்து மேடம் மேடம்னு கூப்பிட்டார்.  என்னயா கூப்பிடுரீங்கன்னேன். ஆமா மேடம் உங்க பேருதானே போர்ட்ல இருக்கு பாத்துட்டு நீங்க பாக்காத மாதிரி போரீங்க்ன்னார். அதில் லஷ்மி கிருஷ்னசாமின்னு பேரு இருந்தது. என்பேரு லஷ்மி ஸ்ரீனிவாசன். எனக்கு குழப்பமாச்சு. அவர் உங்க பாச்போர்ட் காட்டுங்க என்றார். அதில் லஷ்மிகிருஷ்னசாமி என்று என்பெயர் பதிவாகி இருப்பது அப்போதுதான் என் நினைவுக்கே வந்தது.(இங்க ஒரு சின்ன ப்லாஷ்பேக்)

 பத்து வருஷம் முன்னே பாஸ்போர்ர்ட்டுக்கு அப்ளை பண்ணும்போது எனக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் வயது சான்றிதழுக்கு என்னிடம் எந்தவிதப்ரூப்பும் இல்லே படிக்கபள்ளிபோகாததால அந்த சர்டிபிகேட்டுன்னும் ஏதுமில்லே கல்யாண சர்டிபிகேட் ரிஜிச்ட்ர்சர்டிபிகேட்டுன்னு அவங்க கேட்டிருந்த எந்த சர்டிபிகேட்டுமே என்னால கொடுக்கமுடியல்லே.ஏர் இண்டியாவில் வேலை பார்த்த சின்னபொண்ணிடம் சொன்னேன். அவயாரையெல்லாமோ பிடிச்சு என்னமோபண்ணி அப்ளை பண்ணிட்டா.2 மாசம் கழித்து போலீஸ்வெரிபிகேஷனுக்கு போலீஸ் ஸ்டேஷனில்வரச்சொல்லி கார்டு வந்தது. போனேன். அவாபடுத்தியபாடு ரொம்ப அதிகம் .அதை இங்கே சொல்ல வேனாம்னு நினைக்கிரேன். அதெல்லாம் முடிந்துஒருமாசம் கழித்துபாஸ்போர்ட் கையில் கிடைத்தது. பேரைப்பார்த்தால் என் பேருடன் என் மாமனார் பேர் இருந்தது வீட்டுக்காரர்பேருடன் அவ அப்பாபேரும் கொடுப்பா இல்லியா? அதில் என் பெயருடன் வீட்டுக்காரர் பெயரைச்சேர்க்காமல் மாமனார் பெயரை என்பேருடன் போட்டிருந்தார்கள். பொண்ணுக்கு போன் பண்ணி சொன்னேன். எப்படியோ பாஸ்போர்ட்டுன்னு ஒன்னுகையில் கிடைச்சாச்சு இல்லியா உடனே பெயர் மாற்றுவது கொஞ்ச்ம் கஷ்ட்டம் அப்புரமா பாத்துக்கலாம்னு சொல்லிட்டா/ அந்தபெயருடந்தான் வெளி நாடெல்லாம் சுத்தினேன்.அதனால தான் பாஸ்போர்ட்டில் இருக்குபெயர் நினைவிலேயே இருப்பதில்லை.(ப்லாஷ்பேக் ஓவர்)

இங்கயும் அதேதான் ஆச்சு பாவம் அந்த ஆபீசர் மேடம் நீங்க இந்த ப்ளைட்டில் வரீங்க உங்களை எல்லா செக்கிங்கும் முடிந்து பத்திரமாக வெளியே கொண்டு விடனும்னு எனக்கு போன் வதது அதான் நான் காத்துட்டு இருக்கேன்னார் அப்புரம் இமிக்ரேஷ்ன் கிளியரன்ஸ், கஸ்டம்ஸ் கிலியரன்ஸ் எல்லாத்துக்கும் கூடவே வந்து ஹெல்ப்ப்பா இருந்தார். வெளில வரும்போது நம்ம லக்கேஜை ஸ்கேன் பண்ணி செக் பன்ரா. அவர் என்னிடம் மேடம் ஆப்ரிக்காலேந்து வரீங்க வைரம் தங்கம் ஏதானும் கொண்டுவந்தீங்க்ன்னா இப்பவே என்கிட்ட சொல்லிடுங்க.இல்லேன்னா கஸ்டம்சில் ப்ராப்லம் ஆயிடும் என்றார். ஐயோ அப்படில்லாம் ஏது கொந்து வரல்லே. என் துணிமணி மட்டும்தான் இருக்குனு சொன்னேன். அதுக்கில்லே மேடம் ஆப்ரிக்க போய்வரவங்க காலி கையுடன் வரவேமாட்டாங்க அதான் கேட்டேன்னார்.எல்லாக்ளியரன்ஸும் முடிந்து வெளில வரும்வரை அந்த ஆபீசர் கூடவே வந்தார். வெளியே என் மகனும் பேரனும் வந்து காத்துண்டு இருந்தா. அந்தஅபீசருக்கு நன்றி சொல்லிட்டு ஒருமணி நேரம் கார்பயணம் செய்து வீடுவந்தோம். நேராபாத் ரூம்போய் ஒரு குளியல் போட்டு கபி குடிச்சு படுத்தேன். யாரிடமும் ஒருவார்த்தைகூட பேச முடியல்லே. பெட் ரூம்போய் படுத்துட்டேன். குழந்தைகளுக்கும் தெரியும் ஜெட்லாக் இருக்கும்னு. கண்முழிக்கும்போது மதியம் 3-மணி. குழந்தைகள் எல்லாரும் அம்மா ஒக்கேதானேன்னு கேட்டுண்டே இருந்தா. சாப்பிட்டு அவங்ககூட ஆப்ரிக்க ட்ரிப் பற்றி சுருக்கமா பேசினேன். மாப்பிள்ளை முந்திரி பேக்டரியில் வேலை பார்ப்பதால் சொந்தக்காரா எல்லாருக்கும் ஒருகிலோ பாக்கெட்களில் முந்திரி பருப்புமட்டும் கொண்டுவந்தேன்.

மறு நாள் முதல் ஒவ்வொரு சொந்தக்காராளாவந்து என்னை பார்த்து ட்ரிப் எப்படி இருந்ததுன்னு விசாரிக்கவந்தா. எல்லாருக்கும் ஒருகிலோ முந்திரி பருப்பை பார்த்ததும் வாயெல்லாம்பல் அவ்வளவு சந்தோஷம் 100-க்ராம் முந்திரிபருப்பு வாங்கவே 100 தரம் யோசிப்போமில்லியா? அதான் ஒருகிலோபார்த்ததும் அவங்கலுக்கு நம்பமுடியல்லே. நான் தங்கமோ வைரமோ வாங்கி வந்திருந்தாகூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டாங்க போல இருக்கு. ஹா ஹா.எல்லாரிடமும் ஆப்ரிக்க ட்ரிப் பற்றி மேலோட்டமாகத்தான் சொன்னேன். ஆனா உங்க எல்லாரிடமுதான் அதுவும் 5, 6. வருடங்களுக்குப்பிறகு முழுமையா பகிர்ந்துகொண்டிருக்கேன் எழுதும்போதே நான் மறுபடியும் ஆப்ரிக்கா போய்வந்துட்டேன். இவ்வளவு  நாளும் என்கூடவே வந்து பயனத்தில் கலந்துண்டு என்னை உற்சாகப்படுத்தும் விதத்தில் பின்னூட்டங்களும் கொடுத்த எல்லாருக்கும் அன்பு நன்றிகள்

28 comments:

இராஜராஜேஸ்வரி said...

முழுமையா பகிர்ந்துகொண்டிருக்கேன் எழுதும்போதே நான் மறுபடியும் ஆப்ரிக்கா போய்வந்துட்டேன்.

நாங்களும்.....

ADHI VENKAT said...

நிஜமா நாங்களும் உங்க கூடவே வந்தது போல தான் இருந்தது.
எங்களிடம் 5,6 வருடங்களுக்குப் பிறகும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்னு சொல்றதே எங்களுக்கு சந்தோஷம்.

சிறப்பான பகிர்வும்மா. நன்றி.

மனோ சாமிநாதன் said...

ராஜராஜேஸ்வ‌ரி சொன்ன மாதிரி எனக்கும் உங்களுடன் ஆப்பிரிக்கா போய் வந்த மாதிரி தான் இருந்தது!

பயணம் முழுவதும் உங்களின் யதார்த்த நடை மிக அருமை!!

மனோ சாமிநாதன் said...

ராஜராஜேஸ்வ‌ரி சொன்ன மாதிரி எனக்கும் உங்களுடன் ஆப்பிரிக்கா போய் வந்த மாதிரி தான் இருந்தது!

பயணம் முழுவதும் உங்களின் யதார்த்த நடை மிக அருமை!!

வெங்கட் நாகராஜ் said...

உங்களுடனே நாங்களும் பயணித்த உணர்வு.... சீக்கிரம் முடிந்துவிட்டதோ என நினைக்க வைத்தது.....

நல்ல பயணப் பகிர்வுக்கு மிக்க நன்றிம்மா...

Mahi said...

Nice trip Lakshmi-na! Thanks for sharing with us in an eloberate way!

பால கணேஷ் said...

இவ்வளவு செலவு பண்ணி நீங்க பார்த்த தென் ஆப்ரிக்க கிலிபியை எந்த செலவும் பண்ணாம உங்க கூடவே வந்து பாக்க வெச்சுட்டிங்க... ஒரு கிலோ முந்திரிப் பருப்பா...? என் ஃபேவரைட் ஆச்சே அது? அட்ரஸ் சொல்லுங்கம்மா.. உடனே கிளம்பி வரேன்!

குறையொன்றுமில்லை. said...

2 இராஜ ராஜேஸ்வரி முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2 தில்லி வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹி நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வா வா உன்னக்காகவும் ஒருகிலோ முந்திரிபருப்பு காத்துகிட்டு இருக்கு.

ராஜி said...

ஆப்பிரிக்கா போறாவங்களுக்கு யூஸ் ஆகும். பகிர்வுக்கு நன்றி அம்மா

Asiya Omar said...

கிலிபி பற்றிய பயணக் கட்டுரை சூப்பர்.புத்தகமாக போடலாம் லஷ்மீமா.அடுத்தது என்ன சுவாரசியமான தொடர்? மிக்க ஆவல்.

குறையொன்றுமில்லை. said...

ராஜி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

ஸாதிகா said...

ஆப்ரிக்க பயண அனுபவத்தை சுவாரஸ்யம் பட எழுதி எங்கள் மனதினை கொள்ளை கொண்டு விட்டீர்கள் லக்‌ஷ்மிம்மா.வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

Sathika thank you very much

சாந்தி மாரியப்பன் said...

எனக்கு முந்திரிப்பருப்பு மாதிரி காஸ்ட்லி அயிட்டமெல்லாம் வேணாம். ஏதோ, கொஞ்சூண்டு,.. ஒரு கால் கிலோ வைரம் வாங்கிட்டு வந்தாலே போறும். அடுத்த தடவை போகறச்சே மறக்காம வாங்கிட்டு வாங்க லஷ்மிம்மா :-)

குறையொன்றுமில்லை. said...

சாந்தி கேக்குரதோ கேக்குரே கஞ்சத்தனமா ஏன் கால் கிலோ கேக்குரே ஒரு கிலோவா கேக்கவேண்டியதுதானே.

சாந்தி மாரியப்பன் said...

//ஏன் கால் கிலோ கேக்குரே ஒரு கிலோவா கேக்கவேண்டியதுதானே//

ஆஹா!!.. இதான் அம்மா மனசு. சரி, உங்க ஆசையைக் கெடுப்பானேன். ஒரு அஞ்சு கிலோவாவே வாங்கிட்டு வாங்க ;-)

குறையொன்றுமில்லை. said...

சாந்தி இதென்ன இடத்த கொடுத்தா மடத்தபிடுக்கர கதையா இருக்கே. ஓக்கே. 5 கிலோ தானே நோ ப்ராப்லம் பட் ஒன் திங்க். கஸ்டம்சில் பிடிச்சா நீ தான் வந்து டூட்டி கட்டி எடுக்கணும் ஓக்கேவா

மாதேவி said...

இனிய உங்கள் பயணத்தில் நாங்களும் கலந்துகொண்டோம்.

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி எங்க போனீங்க ரொம்ப நாளா காணோம்

சாந்தி மாரியப்பன் said...

//கஸ்டம்சில் பிடிச்சா நீ தான் வந்து டூட்டி கட்டி எடுக்கணும் ஓக்கேவா//

டபுள் ஓகே..

ஹா..ஹா..ஹா.

குறையொன்றுமில்லை. said...

அப்ப்டின்னா எனக்கும் ஓகே தான் ஹா ஹா

Vetirmagal said...

அருமையா எழுதரீங்க !

படிக்க படிக்க, எல்லா பழைய பதிவுகளையும் ரசிக்க தீண்டுகிறது.
நன்றி !
http://vetrimagal.blogspot.in/2012/05/blog-post.html

என்னை ஆதரிப்பவர்கள் . .