Google+ Followers

Pages

Tuesday, June 19, 2012

நாந்தி

 பூணூல் கல்யாணத்துக்கு முதல் நாள் நாந்தி என்று ஒரு விசேஷம் பண்ணுவோம். அதாவது குடும்பதில் வாழ்ந்திருந்த முன்னோர்களின் நினைவாக செய்யும் சடங்கு.  முதலில் பிதுர்களின் ஆசிகள் வாங்கிய பிறகுதான் மற்ற விசேஷங்கள் நடத்தணும் என்பது சம்பிரதாயம். 4- வேதங்கள் உண்டு இல்லியா ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்று. ஒவ்வொருவர் ஒவ்வொரு பிரிவைச்சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எந்தப்பிரிவை சேரிந்திருக்கோமோ அந்த வழி முறை களை பின்பற்றி முறையாக செய்யனும்.

                                               
    பண்டிதர்கள் ஜபித்து வைத்திருக்கும் மந்திர தண்ணீரால் பூணூல் குழந்தைக்கு அபிஷேகம் செய்யணும்.தலை துவட்டி புது ஆடை உடுத்தி உள்ளே கூட்டிப்போய்  அம்மா கையால் ஒரு டம்ளர் பசும்பால் கொடுக்கணும்.                       
                                                
பூணூல் குழந்தை அப்பா, அம்மாவுடன் சபை நடுவில் அமர்ந்து வாத்யார்கள் சொல்லும் மந்திரங்களை கவனமாகக் கேட்டு திரும்ப சொல்லணும்.குழந்தையின் அப்பா வாத்யார் சொல்லும் மந்திரங்களை உள் வாங்கி தெளிவாக உச்சரிக்கணும்.

 மந்திர அட்சதை பெரியவர்கள் தூவிஆசிர்வதிப்பார்கள் குழந்தை , அவனின் பெற்றோர் அனைத்து பெரியவர்களுக்கும் நமஸ்கரித்து ஆசிர்வாதங்கள் வாங்கணும்                                                 

 10 வாத்யார் களுக்கு புது கோடி வேஷ்டி துண்டு, பஞ்ச பாத்திரம், பாய், விசிரி, குடை கம்பு இதுபோன்ற பொருட்களைத்தானம் செய்து அவர்களை திருப்தி படுத்தனும்.                                                

                                                       
மறு படியும் பெரியவர்களை நமஸ்கரித்து ஆசிகள் வாங்கனும்.
  
                                    
 வாத்யார் எல்லாருக்கும் கால் அலம்பி, அதாவது பாதபூஜைகள் செய்யணும். மதிய உணவும் வடை பாயசம் 4 வித பொரியல் கூட்டு வகைகளுடன் விருந்து உபசாரம் செய்யனும். அவர்கள் நன்கு திருப்தி அடைந்து குழந்தைகளை ஆசிர்வதிப்பார்கள். பிறகு தட்சிணை தாம்பூலம் கொடுத்து மறியாதை செய்யணும். அவர்கள் கிளம்பி போன பிறகு வீட்டில் உள்ளவர்கள் மதிய விருந்து சாப்பிடணு.ம் எல்லாம் முடியவே மதியம் 3 மணி ஆனது. நாங்க யஜுர் வேதம் பிரிவைச்சேர்ந்தவர்கள் எங்க பிரிவினருக்கு மந்திரங்கள் கொஞ்சம் அதிகமாக வே இருக்கும். அன்று எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது.                                      

37 comments:

Mahi said...

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்! :) போட்டோஸ் நல்லா இருக்கு லஷ்மிம்மா!

அமுதா கிருஷ்ணா said...

kutty super ah irrukanma..suthi podunga..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. நேரில் மும்பைக்கே வந்து தங்கள் பேரனின் ப்ரம்மோபதேச முஹூர்த்தத்தில் கலந்துகொண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.

வடுவுக்கு என் அன்பான ஆசிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பூணூல் அணிவித்ததும் தங்கள் பேரன் முகத்தில் தனியாக ப்ரும்மதேஜஸ் ஏற்பட்டுள்ளது!

சிரித்த முகத்துடன் ஜாலியாக இருக்கிறான், பாருங்கள்.

முறுக்கு + லாடு பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன். ;)))))

ஸாதிகா said...

புகைப்படங்களுடன் பகிர்வும் நன்று.எங்கே பாட்டியம்மாவை படங்களில் காணும்?

புதுகைத் தென்றல் said...

புகைப்படங்கள் அருமை.

K.s.s.Rajh said...

வணக்கம் மேடம் எப்படி சுகம்?
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளத்திற்கு வருகின்றேன்

உங்கள் இந்த பதிவின் மூலம் புதிதாக பல தகவல்களை அறிந்து கொண்டேன்

அமைதிச்சாரல் said...

நல்லா ஆரம்பிச்சுருக்கீங்க லக்ஷ்மிம்மா.. அடுத்தது என்ன?. காத்திருக்கோம்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா நாந்தி முடிஞ்சாச்சா? அடுத்து பூணல் கல்யாணம் தான்... வந்துடறேன்....

கே. பி. ஜனா... said...

நல்ல படங்கள், தகவல்கள்... அருமை.

Madhavan Srinivasagopalan said...

வடுவிற்கு ஆசீர்வாதங்கள்..

எனது அண்ணனின் மகனிற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் ப்ரம்ஹோபதேசம் செய்விக்கப் பட்டது..

எல் கே said...

நாந்தி எல்லா விசேஷத்துக்கும் முன்பும் பண்றதுதானே.. உங்கள் பேரனுக்கு வாழ்த்துகள்

Lakshmi said...

மஹி முதல் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அமுதா வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடுத்தபதிவில் தானே பூணூல் பொட்ட்டுக்கபோரான்.

Lakshmi said...

ஸாதிகா அடுத்தபதிவில் பாட்டிம்மா வந்துடுவா.

Lakshmi said...

புதுகைத்தென்ரல் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராஜ் ரொம்ப நால் கழிச்சு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி அடிக்கடி வாங்க. நன்றி

Lakshmi said...

சாந்தி வருகைக்கு இங்கயும் (அங்கயும்)
நன்றி!!!!!!!!!!

Lakshmi said...

ஆமா வெங்கட் பூணூல் கல்யானத்துக்கும் வந்துடுங்க.

Lakshmi said...

கெ. பி. ஜனா வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாதவன் நீங்களும் அதை பதிவாகபோட்டிருக்கலாமே?

Lakshmi said...

எல் கே ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, எங்கள்ள்ல பூணூல்கல்யானத்துக்கு முந்தினம் மட்டுமே நாந்தி பண்ணுவாங்க.

Ramani said...

அருமையான புகைப்படங்கள் விளக்கங்கள்
அடுத்த நாள் நிகழ்வுகளையும் பார்க்க ஆவலாக உள்ளோம்
மன்ம் கொள்ளை கொண்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 2

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி

athira said...

லக்ஸ்மி அக்கா நான் தான் தாமதமாக லாண்ட் பண்ணியிருக்கிறேன்ன்ன் என நினைக்கிறேன். ரொம்ப அருமையாக நடந்திருக்கு... பேரனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுது... உங்களைக் காணவில்லையே...

Lakshmi said...

அதிரா லேட்டா வந்தாலும் மறக்காம வந்தியே அதுவே சந்தோஷம்தான். அடுத்தபதிவில் நான் வரேன்

அப்பாதுரை said...

வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க.

எல் கே said...

ஓஹோ ஓகே ஓகே. எங்களுக்கு நாந்தி பழக்கம் இல்லை..

Lakshmi said...

அப்பாதுரை உங்க வாழ்த்துகளைச்சொல்லிட்டேன் நன்றி

Lakshmi said...

ஆமா கார்த்தி ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு பழக்கங்கள் இல்லியா? அதான் சொன்னேன்.

Geetha Sambasivam said...

எங்கள்ள்ல பூணூல்கல்யானத்துக்கு முந்தினம் மட்டுமே நாந்தி பண்ணுவாங்க.//

ஆமாம், திருநெல்வேலிக்காரங்க கல்யாணத்திலே நாந்தி பண்ண மாட்டாங்க. எங்களுக்கு எல்லாத்துக்கும் நாந்தி உண்டு. அப்பா, அம்மா மதுரைப்பக்கம், மாமியார், மாமனார் கும்பகோணம். ஆனால் இரண்டு வீடுகளிலேயும் பூணூல் கல்யாணம், கல்யாணம், சீமந்தம்னு எல்லாத்துக்கும் நாந்தி கட்டாயம். நாந்தி இல்லாமல் எதுவும் செய்ய மாட்டோம். அன்னிக்குச் சாப்பாடும் தாயாதிக்காரங்க மட்டும் நாந்திச் சமையல் சாப்பாடு சாப்பிடுவோம். மத்தவங்க சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்குத் தனிச் சமையல் தான்.

Geetha Sambasivam said...

நேத்திக்குக் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்ததில் கொடுத்த லட்டு சாப்பிட்டுக்கொண்டே பதிவைப் படித்துக் கமென்டுகிறேன். உங்க பேரன் உபநயன லட்டுவும் சாப்பிட்டாப்போல ஆயிடுச்சு. :))))))

radhakrishnan said...

பதிவும் படங்களும் அருமை.வைதீக
காரியங்களுக்குவிளக்கங்கள் கொடுத்திருப்பது நன்றாக இருந்த்து.
மின்வெட்டாலும் பிற வேலைகளாலும்
பதிவுகளுக்கு அதிகம் வர முடியவில்லை.இனி வர முயற்சி
செய்கிறேன்

மாதேவி said...

நேரில் கலந்து கொண்டது போல இருந்தது.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .