Google+ Followers

Pages

Friday, June 29, 2012

பூஜா கல்யாணம்

  நாசிக் கிருஹப்பிரவேசம் முடிந்து ஒரு கல்யாணத்தில் கலந்துகொள்ளவேண்டி இருந்தது. இந்தமாசம் முழுவதும் ஒரே சுற்றல்தன். என் அத்தை அமெரிக்காவிலேந்து என் பேரன் பூணூல் கல்யாணத்தில் கலந்துகொள்ள பறந்துவந்தா. நான் அம்பர் நாத்திலிருந்து அத்தையின் பேத்திகல்யாணத்தில் கலந்துகொண்டேன். ஹா ஹா.              

           அத்தை அவ பெண் பிள்ளை பேரன் பேத்திகள் எல்லாருமே அமெரிக்கா வாசிகள் அதுவும் க்ரீன் கார்ட் ஹோல்டர்ஸ். அத்தைக்கு பேத்தியின் கல்யாணம் இண்டியாவில்தான் நடத்தனும்னு ஆசை. எல்லா சொந்தக்காரங்களும் இண்டியாவில் தானே இருக்காங்க. எல்லாராலயும் அமெரிக்கா போகமுடியுமா. ஸோ அவங்க ஒரு 20- பேர் இண்டியாவந்து கல்யாணத்தை க்ராண்டாக செய்தார்கள்.                                        
                          
 இவங்கதான் பெண்ணின் அம்மா அப்பா, பெண்ணும் மாப்பிள்ளையும் கூட அமெரிக்காவில் வேலை பாக்குராங்க.
                             
 இந்தக்கால வழக்கப்படி முதல் நாள் ரிசப்ஷன் வச்சிருந்தாங்க. மறு நா தான் கல்யாணம் நடந்தது. இண்டியாவில் மும்பையிலேயும் நிறையா சொந்தக்காரங்க இருந்தோம். எல்லாரும் போய் கலந்து கொண்டோம். தமிழ் நாட்டிலிருந்தும் சொந்தக்காரங்க நிறையா பேரு வந்து கலந்து கொண்டார்கள். தோஹா, சிங்க்ப்பூரிலிருந்தும் சொந்தக்காரங்க வந்து கலந்து கொண்டார்கள்.எல்லா சொந்தக்கரர்களுமே ரொம்ப வருடங்களுக்குப்பிறகு சந்திப்பதால் எல்லார் முகங்களிலும் சந்தோஷம் மகிழ்ச்சி.
 எங்கபோனாலும் நானும் அத்தையும் சேர்ந்தே தான் இருப்போம். சின்ன வயதில் எங்க இருவரையும் பஞ்சபாத்திர உத்தரணின்னுதான் சொல்லுவாங்க.இப்பவும் அதேதான்.                              
         
                     
 அக்கா உங்கள ரொம்ப நாள் கழிச்சு பாக்குரோம் எங்க கூட ஒரு போட்டோ ப்ளீஸ் என்று ஆளாளுக்கு போட்டோ எடுத்துக்கொள்வதில் ஏக உற்சாகம் காட்டினார்கள்.
                                 
      எங்கள் குடும்பம் பெரி.............................சு.

                                                
 கல்யாணம் மும்பையில் செம்பூரில் ஒரு கல்யாண மண்டபத்தில் வைத்து நடந்தது.ஹால் பூராவும் ஏ. சி செய்திருந்தார்கள். தாராள இடவசதியும் இருந்தது.

                   என் கூட பிறந்தவர்கள் என்னையும் சேர்த்து 7 பேர்கள்(7-ஒண்டர்ஸ்)  நாங்க எல்லாரும் ஒன்றாக சேர்ந்து இருக்க வாய்ப்பே கிடைத்ததில்லே.  ஒவ்வொருவர் ஒவ்வொரு இடத்தில் இருப்பதால். இந்தக்கல்யானத்தில் நாங்க 7 பேரும் கலந்து கொண்டோம் விடுவோமா உடனே க்ளிக் பண்ணிகிட்டோம். நாந்தான் முதல் பொண்ணு எங்க வீட்ல. தங்கை தம்பிகளுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். இதுபோல உற்வு ஜனங்களை சந்திக்கத்தான் விசேஷங்களை ஊர் அழைத்து பண்ணுகிரோம் போல இருக்கு இல்லேன்னா யார் வீட்டுக்கு யாரு போயிகிட்டு இருக்கோம் இல்லியா?.              

                             
 வாசல் அலங்காரங்களும் அமர்க்களமாக செய்திருந்தார்கள் எல்லாமே மனசுக்கு சந்தோஷமாக வும் நிறைவாகவும் இருந்தது. ஜூன் 1-ம் தேதி வீட்டை விட்டு கிளம்பிட்டு ஜூன் 22 தேதிக்குத்தான் வீடு வந்தேன். வரிசையாக விசேஷங்களி கலந்து கொள்ளவேண்டி இருந்தது. வந்ததுமே ஒன்னொன்னா உங்க எல்லாருடனும் பகிர்ந்து கொண்டேன். கலந்துகொண்டதையும் விட பகிர்ந்து கொள்வதில் அதிக சந்தோஷமா இருக்கு.                            
                                         
சாப்பாட்டு பந்தியில் ஒரு பொண்ணு ( வயசு25) தமிழ் கொஞ்சமாதான் வரும். ஏன் ஆண்டி  சாப்பாடு பரிமாறும்போது ரொம்ப கொஞ்சமா போடுங்கன்னு ஏன் சொல்ராங்க? ரொம்பன்னாலே அதிகம்னுதானே அர்த்தம் அதென்ன ”ரொம்ப கொஞ்சம்” என்று சந்தேகம் கேக்கரா. இந்தக்கால குழந்தைகளுக்கு எப்படில்லாம் சந்தேகம் வருது?

                           

27 comments:

Ramani said...

படங்களும் பதிவும் அருமை
உற்றார் உறவினர்கள் வெகு நாட்கள் கழித்து சந்தித்த சந்தோஷம்
அனைவர் முகங்களிலும் அழகாய்த் தெரிகிறது
எங்களுக்குள்ளும் சந்தோஷம் பற்றிக் கொண்டது
மணமக்கள் பல்லாண்டு சீரும் சிறப்போடும் வாழ
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மனம் கவர்ந்த அருமையான பதிவு
வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 1

Mahi said...

உங்க சந்தோஷமான தருணங்களை எங்களுடனும் பகிர்ந்துகொள்வதுக்கு நன்றிம்மா! :) படங்கள் நல்லா இருக்கிறது.

பா.கணேஷ் said...

பஞ்ச பாத்திரம், உத்தரணி போல சேர்ந்து இருப்பீங்களா... நல்ல உதாரணம். உறவுகளை நீங்க சந்திச்சு மகிழ்ந்த கல்யாண நிகழ்வுகள் எனக்குள்ளயும் மகிழ்ச்சியைக் கடத்திட்டுது. புகைப் படங்களும் அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எங்கபோனாலும் நானும் அத்தையும் சேர்ந்தே தான் இருப்போம்.

சின்ன வயதில் எங்க இருவரையும் பஞ்சபாத்திர உத்தரணின்னுதான் சொல்லுவாங்க.

இப்பவும் அதேதான். //

வெகு அழகான உதாரண வார்த்தைகள்.

மிகச்சிறப்பான படங்களுடன் கூடிய பகிர்வு.

பாராட்டுக்கள். கலக்குங்க !

Madhavan Srinivasagopalan said...

//”ரொம்ப கொஞ்சம்” //

= 10 or 20 % of கொஞ்சம் !!

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப நாள் ஆயிருச்சி... உங்க பக்கம் வந்து ... எப்படியோ கல்யாணத்திற்கு வந்துட்டேன்.. மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ! (TM 4)

சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.karpom.com/2012/06/feedburner.html) சென்று பார்க்கவும். நன்றி அம்மா !

அமுதா கிருஷ்ணா said...

பதிவு ரொம்ப நல்லாயிருந்தது.

வெங்கட் நாகராஜ் said...

மனதுக்கு மகிழ்ச்சியா இருக்கும்மா....

வீட்டில் இது போன்ற விழாக்கள் என்றாலே கொண்டாட்டம் தான்... பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும்....

Lakshmi said...

ரமணி சார் முதல் வருகைக்கும் அழகான கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கணேஷ் ரொம்ப நா கழிச்சு வந்திருக்கீங்க பிசியா? கருத்துக்கு நன்றி

Lakshmi said...

கோபால்சார் உற்சாகம்தரும் உங்க கருத்துக்கு நன்றி

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நனறி ரொம்ப கொஞ்சம்

Lakshmi said...

திடுக்கல் தனபாலன் நானும் உங்களை தேடிண்டுதான் இருந்தேன் வருகைக்கு நன்றி நீங்க சொல்லி இரிக்கும் அந்த விட்ஜெட் எப்படி வைக்கனும் விவரமா சொல்ரீங்களா?

Lakshmi said...

அமுதா வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அமைதிச்சாரல் said...

பஞ்சபாத்திரமும் உத்தரணியும் சேர்ந்து எடுத்துக்கிட்ட படம் ரொம்ப அழகாருக்கு லக்ஷ்மிம்மா :-)

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

athira said...

படங்கள் எல்லாமே அழகூஊஊஊஊஊ.. என்ன சொல்வதெனத் தெரியவில்லை..

லக்ஸ்மி அக்கா கலக்கிட்டேள் போங்கோஓஓஓஓஓஒ.... இந்த சாறி உடுப்பில் நீங்க கொஞ்சம் குண்டாகத் தெரிவதுபோல ஒரு பீலிங்ஸ்ஸூஊஊஊ..

அழகாக உடுத்திருக்கிறீங்க, மேக்கப் லேடியைக் கொண்டு உடுத்தீங்களோ?

Lakshmi said...

அதிரா வருகைக்கு நன்றி. மேக்கப் லேடிதான் சாரி கட்டி விட்டாங்க. நானே குண்டுதான் இந்த சாரியில் இன்னும் குண்டா தெரியுரேன்.

♔ம.தி.சுதா♔ said...

////இந்தக்கால வழக்கப்படி முதல் நாள் ரிசப்ஷன் வச்சிருந்தாங்க. மறு நா தான் கல்யாணம் நடந்தது. /////

அம்மா அனுபவம் சார்ந்ததானாலும் அங்காங்கே... காலமாற்ற விடயங்களையும் தெளிவாகத் தந்திருக்கிறீர்கள்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

Lakshmi said...

ம. தி. சுதா வருகைக்கு நன்றி

radhakrishnan said...

தொடர்ந்து சுபநிகழ்ச்சிகளுக்கான அற்புதமான பதிவுகள் அருமையான படங்களுடன் கிடைக்கின்றன, தொடர வாழ்த்துக்கள். இந்தியாவந்து திருமணம்
நிகழ்த்தியிருப்பதும்பெரிதும் பாராட்டிற்குறியது.உங்கள் உடன் பிறப்புகள் , அத்தை ஆகியோரைப் பார்த்த்தில் பெருமகிழ்ச்சி.நீங்கள் ஒரு
உதாரணப் பெண்மணி அம்மா. தொடரட்டும் உங்கள் பதிவுப் பயணம்
நன்றி அம்மா

Geetha Sambasivam said...

அழகா இருந்தது, பந்தல் அலங்காரம், உங்க அலங்காரம் எல்லாமே. அத்தையும் நீங்களும் ஒரே மாதிரியா இருக்கிறாப்போல் தெரியுது. இத்தனை வருஷம் ஆகியும் உறவை விட்டுப் போகாமல் பாதுகாத்துவருவதே பெரிய விஷயம். சொந்த மனிதர்கள் இருப்பது பெரிய பலம் கூட. நல்ல பதிவு.

Lakshmi said...

கீதா வருகைக்கு நன்றி.ரசனைக்கும்.

Lakshmi said...

ராதா கிருஷ்னன் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .