Google+ Followers

Pages

Friday, June 22, 2012

பூணூல்

          ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்ப கோத்திரம் என்று ஒன்று உண்டு. கோத்திரம் என்பது இவர்கள் எந்த முனிவருடைய வழியில் வந்தவர்கள் என்பதைக்குறிக்கும். இந்துக்கள் எல்லோருமெ ரிஷி பரம்பரையினர் என்று கூறப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோத்திரம் உண்டு தினசரி காலை பூஜையின் போது தங்கள் கோத்திர முனிவருடைய வணக்கத்தையும் செய்வது நல்லது. இதனால் கோத்திரம் தொடர்பு விட்டுப்போகாமல் இருக்கும்..                                 
 முதல் நாள் இரவு தாம்பூல பையில் முறுக்கு, லட்டு தேங்காய், வெற்றிலை பாக்கு பழம் மஞ்சள் குங்குமம் எல்லாம் போட்டு ரெடிபண்ணவே இரவு 12 மணி ஆனது. ரொம்ப நாட்கள் கழித்து ரொம்ப நாட்கள் கழித்து குழந்தைகள் எல்லோரும் சந்திப்பதால் பேசி பேசி தூங்கவே இல்லே. காலை 3- மணிக்கே எழுந்து ஒவ்வொருவராக குளித்து ரெடி ஆகி ஹால் போகும்போது 5- மணி ஆச்சு. நாங்க போய்ச்சேரும் முன்பே வாத்யார்கள் வந்து பூஜைக்கு தேவையான வற்றை ரெடி செய்து வைத்திருந்தார்கள். 7.30- க்கு முஹூர்த்த நேரம் அனதால் அதற்கு மு7ன்பு செய்ய வேண்டிய சில அனுஷ்டானங்கள் செய்தார்கள்.
முன்னெல்லாம் குடுமி வைப்பது வழக்கமாக இருந்தது. இப்ப கால்த்துக்கு தகுந்தாப்போல முன் உச்சியில் லேசாக முடி வெட்டினார்கள்.ஒவ்வொரு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் காரணம் எல்லாம் இருக்குதான் சொல்லவும் கேக்கவும்தான் யாருக்கும் பொறுமை இருக்கறதில்லே.வைதீக சம்பிரதாயங்கள் எதிலும் குறையிருக்க கூடாதுன்னு எல்லாம் முறைப்படி பண்ணினோம்.குழந்தைகளை பால பருவத்துலேந்து பிரம்மச்சாரி பருவத்துக்கு மாற்றுவதுதான் இந்த பூணூல் சடங்கின் முக்கியத்துவம்.

 வாத்யார் ஒன்னொன்னா சொல்லிக்கொடுக்க குழந்தையும் பொறுமையாக எல்லாம் செய்துவந்தான்.சின்ன வயசுதானே பாக்கவே நல்லா இருந்தது.

 காலை 6 மணிக்கே இன்னொரு பிரும்மச்சாரி பையனுடன் பூணூல் குழந்தைக்கும் குமார போஜனம் என்று விருந்து வைப்பார்கள். அவ்வளவு அதிகாலையில் சாப்பிட்டு பழக்கமில்லாததால ரொம்ப திணறி போயிட்டான் குழந்தை.வாழை இலை முழுக்க சாப்பாடு பார்த்ததுமே அவனுக்கு வயிறு ஃபுல் ஆயிடுத்து என்கிரான். ஹா ஹா.

 அதன் பிறகு முறையாக மந்திர உபதேசங்கள் சொல்லி பூணூல் போட்டார்கள்.

குழந்தையின் தாய் மாமா தோள்தூக்கிண்டு வரணுமாம். பட்டு வேஷ்ட்டி வழுக்கி விழவெக்கத்துடன் தோளில் சவாரி செய்து  மண்டபத்துக்கு  கூட்டி வந்தார்கள்.


பிறகு பிரும்மோபதேசம் நடந்தது. காயத்ரி மந்திரம் சொல்லிக்கொடுக்கப்பட்டது.

 பிரும்மச்சாரி குழந்தைகளுக்கு தினசரி கடைப்பிடிக்கவேண்டிய பழக்கவழக்கங்கள் சொல்லப்பட்டது. மூன்று வேளையும் காயத்ரி மந்திரம் ஜபிக்கவும், மூன்று வேளை உணவு உண்ணும் முன்பு, சந்தியாவந்தனம், மாத்யானியம் என்று எப்படி செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டது.
அதுபோல தினசரி உணவு பிட்ஷை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக பவதி பிக்‌ஷாந்தேஹி என்று சொல்லி எல்லாரிடமும் பிட்க்‌ஷரிசி தானம் வாங்கி அவர்களை நமஸ்கரித்து ஆசி வாங்க வேண்டும்.

 எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது. காலை பிரேக் ஃபாஸ்ட், மதிய விருந்து எல்லாருக்கும் அளித்து தாபூல பையும் கொடுத்து மறியாதை செய்தோம். நிகழ்ச்சி நிறைவாக நடந்தேறியது. நம் பதி உலக சினேகிதிகள் அமைதிச்சாரலும், ஜெயஸ்ரீ அவர்களும் வந்திருந்தார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

38 comments:

Akila said...

Nice to hear about everything went smoothly

Mahi said...

விழாவை உங்களுடன் இருந்து பார்த்தமாதிரி இருந்தது! ரொம்ப சந்தோஷம் + நன்றி! :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகழகான படங்களுடன் அற்புதமான சந்தோஷப் பகிர்வு.

நேரில் கலந்து கொண்டது போலத் திருப்தி அளித்தது.

சந்தோஷப் பகிர்வுக்கு நன்றிகள்.

அமைதிச்சாரல் said...

விட்டுப்போன நிகழ்ச்சிகளை இங்கே பார்த்துக்கிட்டேன். அன்னிக்கு ஜெயஸ்ரீயையும் உங்களையும், குடும்பத்தினரையும் முக்கியமா உங்க 'அத்தையை' சந்திச்சதில் ரொம்ப மகிழ்ச்சி..

அன்னிக்கு விருந்து ஜூப்பரும்மா :-))

ராமலக்ஷ்மி said...

பேரனுக்கு என் நல்வாழ்த்துகள்:)!

Geetha Sambasivam said...

நம் பதி உலக சினேகிதிகள் அமைதிச்சாரலும், ஜெயஸ்ரீ அவர்களும் வந்திருந்தார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.//

அட?? அப்படியா?ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஜெயஶ்ரீ னா எந்த ஜெயஶ்ரீ? சமையல் பத்தி எழுதுவாங்களே? அவங்களா?

Geetha Sambasivam said...

உபநயனம் நன்கு நடந்தது குறித்து ரொம்ப சந்தோஷம். குழந்தைக்கு எங்கள் ஆசிகளும், அன்பும்.

Madhavan Srinivasagopalan said...

வடுவிற்கு அநேக ஆசீர்வாதங்கள்..
மூணு வேளையும் சந்தி பண்ணச் சொல்லுங்கம்மா..
'காயத்ரி மந்த்ரம்' பையன நன்னா இருக்கச் செய்யும்..

அஸ்மா said...

லஷ்மிம்மா! இப்போதான் இந்த சடங்கு பற்றியெல்லாம் தெரிந்துக் கொள்ள முடிந்தது.

//குழந்தைகளை பால பருவத்துலேந்து பிரம்மச்சாரி பருவத்துக்கு மாற்றுவதுதான் இந்த பூணூல் சடங்கின் முக்கியத்துவம்.//

அப்படீன்னா.. அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு கல்யாணமெல்லாம் பண்ணிக்க மாட்டாரா லஷ்மிம்மா?!!

radhakrishnan said...

பேரனுக்கு சரியான, விவரங்களை அறியும் வயது என்று நினைக்கிறேன். 9
இருக்குமா?
பார்பர் கிடைக்கவில்லையா?நம் கையே
நமக்கு உதவி.
பதிவும் படங்களும் அருமை, ஒரே
மகிழ்ச்சிப்ரவாகம்தான்.
தற்சமயம் அனேகம்பேர், திருமணத்திற்கு
முதல்நாள் உபநயனம் செய்தால் போதாதா என்க் கேட்கிறார்கள். அவர்கள் இந்தப் பதிவைப் பார்க்க வேண்டும்.
மிக்க நன்றி அம்மா

Ramani said...

படங்களுடன் விளக்கிச் சென்ற விதம் அருமை
நேரடியாகப் பார்ப்பதைப் போன்று மிக அருமையான
படங்களுடன் சுப நிகழ்வை பதிவாக்கித் தந்தமைக்கு
மன்மார்ந்த நன்றி

Ramani said...

Tha.ma 1

எல் கே said...

குறைந்த பட்சம் ஒரு வேலை சந்தியாவது பண்ண சொல்லுங்க. முடிந்தால் தினமும் நூற்றியெட்டு காயத்ரி சொல்ல சொல்லுங்க

இராஜராஜேஸ்வரி said...

ஒவ்வொரு சம்பிரதாயத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் காரணம் எல்லாம் இருக்குதான் சொல்லவும் கேக்கவும்தான் யாருக்கும் பொறுமை இருக்கறதில்லே.

அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்..

கடம்பவன குயில் said...

படங்களுடன் உபநயன வைபவம் நேரில் கலந்துகொண்ட நிறைவை தந்தது. நைஸ்.

மனோ சாமிநாதன் said...

தெரியாத சில விஷயங்களை உங்களின் அருமையான பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். படங்கள் அத்தனையும் நன்றாக இருந்தது.

கே. பி. ஜனா... said...

நல்வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

வெண்பட்டுடுத்தி பாட்டிமா வந்தாச்சா?படங்களும் பகிர்வும் அருமை.குழந்தைக்கு வாழ்த்துகக்ள்.

வெங்கட் நாகராஜ் said...

"வடு”விற்கு எங்களது ஆசீர்வாதங்கள்....

நாங்களும் கலந்து கொண்டதாய் உணர்ந்தோம்.....

Lakshmi said...

அகிலா வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி ரசித்ததற்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராமலஷ்மி வாழ்த்துகளை பேரனிடம் சொல்லிட்டேன் நன்றி

Lakshmi said...

கீதா வருகைக்கு நன்றி, சமையல், நாராயணீயம் எல்லாம் எழுதுராங்களே அவங்கதான்.

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்ரி தினசரி காயத்ரி மந்திரம் சந்தியாவந்தனம் எல்லாம் செய்யுரான் நான் கூடவே உக்காந்து பாக்கனும்னு சொல்லுவன்

Lakshmi said...

அஸ்மா உங்க கருத்து படிச்சதும் சிரிப்புவந்துடுத்து. பாலபருவம் பிரம்மச்சாரி பருவம் அடுத்து கிருஹஸ்தாஸ்ரமபருவம் அப்போ கல்யாணம் பண்ணி வச்சுடுவோம்.

Lakshmi said...

ராதா கிருஷ்னன் சார் ரொம்ப நாள் கழிச்சு வரீங்க. பார்பர் முடி வெட்டும் முன்பு அப்பா கையால் முடி வெட்டுவது சம்பிரதாயம். 9 வயதுதான் ஆகிரது. சந்தியாவந்தனம் காயத்ரி மந்திரம் எல்லாம் ஒழுங்கா செய்யுரான்.

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கு ரசனைக்கு ஓட்டுக்கு நன்றி

Lakshmi said...

கார்த்தி ஒரு வேளை இ8ல்லே இரண்டு வேளையும் சந்தி பண்ரான் மாத்யான்யம் பண்ண முடியல்லே ஸ்கூல் டைம் அப்படி இருக்கு. காலை 108-காயத்ரி, மதியம் 32 -காயத்ரி, சாயங்காலம் 64-காயத்ரி பன்ரான் ஏற்கனவே சபரிமலைக்கு 4 தரம் போய்வந்திருக்கான் ஆன்மீக விஷயங்களில் ரொம்ப விருப்பமுள்ளவனாக இருக்கான் நாம சொல்லவேண்டிய அவசியமே இல்லாம அவனேஎல்லாம் எடுத்துவச்சுண்டு பன்ரான் என்னஒன்னுன்னா வேஷ்டி கட்டிக்க சரியாவரலே நான் கட்டுவது அவனுக்கு வெக்கமா இருக்காம்.எப்படியோ சுத்திண்டு உக்காந்து எல்லாம் நல்லாவே பன்ரான்.பாக்கவே திருப்தியா இருக்கு.

Lakshmi said...

ராஜேச்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கடம்பவனக்குயில் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கே.பி. ஜனா வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாதிகா பாட்டிம்மாவ பாத்திங்களா.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

மாதேவி said...

ஆசீர்வாதங்கள்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .