Google+ Followers

Pages

Monday, June 25, 2012

கிருஹ பிரவேசம்


பூணூல் கல்யாணம் முடிந்ததும் சின்னபெண் வீட்டு கிருஹப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.மும்பையில் இருந்து 180- கிலோ மீட்டரில் நாசிக் என்னும் ஊர் இருக்கு.  ( அதாங்க நம்ம கரன்சி அச்சடிக்கும் இடம் இருக்கே அந்தஊருதான்). மும்பையிலிருந்து ரோட் ஸைட் 4மணி நேரம் ஆகுது. முதல் நாள் இரவே நாங்க கிளம்பிபோனோம்.

 புது இடம் வாத்யார் எல்லாம் தேடிகண்டு பிடிக்கமுடியாதுன்னு மும்பையிலேந்தே ரெண்டு வாத்யார்களையும் கூடவே அழைச்சுண்டு போனோம். இரவு வீட்டை அலம்பி சுத்தம் செய்து( வீடுன்னு சொல்லமுடியாது தனி பங்களாதான்.மூனுமாடியுடன் அம்சமா இருக்கு. இப்பதான் டெவலப் ஆகிவரும் புது ஏரியா. அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் 10 -வீடுகள்தான் இருந்தன.இவர்கள் பாலக்காட்டுகாரா. வீட்டின் வாசல்கதவு கேரளாவில் ஆர்டர் கொடுத்து கோவில் கதவு போல டிசைன் செய்து வரவழைத்திருந்தர்கள். மணி, கடவுள் உருவங்கள் எல்லாம் கையால் செதுக்கி செதுக்கி வெகு அழகாக இருந்தது.


 நம்பூதிரி பிராம்மணர்கள் பூஜைக்குதேவையானவற்றை சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள். காலை கணபதி ஹோமம் தொடங்கி, நவக்கிருஹ ஹோமம், சுதர்சனஹோமம், வாஸ்து ஹோமம் என்று மதியம் மூணுமணிவரை ஹோமங்கள் சிறப்பாக செய்தார்கள். காலை டிபன் மதிய, இரவு உணவுக்கு வெளியில் ஆர்டர் செய்திருந்தோம். கரெக்டான டயத்துக்கு எல்லாம் கொண்டு தந்தார்கள். அக்கம்பக்கம் உள்ளவர்களை பூஜைக்கு அழைத்திருந்தோம். சந்தோஷமாக வந்து கலந்து கொண்டார்கள்.எல்லாருக்கும் மூணு வேளையும் உணவு உபசாரம் செய்தோம்.

 வாசலில் பளிங்கினால் சின்ன ஒரு துளசிமாடம் ரொம்ப க்யூட்டாக இருந்தது.சுற்றிவர பூசெடிகள்வைக்க நிறைய இடம் இருந்தது, வீட்டின் பின்புரமும் பழவகைமரங்கள் வைக்க நிறைய இடம் இருந்தது. மண்ணும்சத்துள்ளதாக இருக்கு. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்வீட்டில் பூக்களும் பழமரங்களும் பூத்து காய்த்து கண்களுக்கு விருந்தாக இருந்தது. நல்ல காற்று வெளிச்சமுடன் வீடு ரொம்ப நன்றாக இருக்கு.

சுவரில் ஆணி அடிக்கவேனாம் என்று ஒரே ஒரு சாமி படம் மட்டும் மாட்டினோம்.
 சாயங்காலமும் பகவதி சேவைன்னு ஒரு பூஜை செய்தார்கள். 6 டு 9 வரைஅந்த பூஜை நடந்தது. அதற்கு தேவையான நெய்ப்பாயசம் நம்பூதிரிகள்தான் செய்தார்கள். கரண்ட் லைட் எல்லாம் போடவேண்டாம்னு சொல்லிட்டா எண்ணை திரி போட்ட விளக்குகளின் வெளிச்சத்தில் பூஜைகள் பார்க்க கொள்ளை அழகு.

அதுமட்டுமில்லே கலர்பொடியில் கோலம் போடுவதும் நம்பூதிரிகள்தான் கோலம்போட்டு விளக்குகளை ஏற்றினதுமே அந்த இடத்துக்கு அப்படி ஒரு வைப்ரேஷன்கிடைக்குது.

பூக்களும் நிறையா மும்பையிலிருந்தே வாங்கிண்டு போயிருந்தோம்.னல்லபடியா கிருஹப்பிரவேச வைபவமும் நடந்தது.

                    
36 comments:

Asiya Omar said...

வாழ்த்துக்கள் லஷ்மீமா,வீட்டின் கதவு நல்ல வேலைப்பாடுடன் மிக அழகு.உங்கள் படப்பகிர்வு தான் ஹைலைட்.

Mahi said...

உங்கள் மகள் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் லஷ்மிம்மா! கதவு நல்ல அம்சமா இருக்கிறது. நம்பூதிரிகள் போட்டிருக்கும் கலர் கோலம், மற்ற மாக்கோலங்கள் எல்லாமே அழகு~

மகேந்திரன் said...

மனம் கனிந்த வாழ்த்துக்கள் அம்மா..

இராஜராஜேஸ்வரி said...

மண்ணும்சத்துள்ளதாக இருக்கு. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்வீட்டில் பூக்களும் பழமரங்களும் பூத்து காய்த்து கண்களுக்கு விருந்தாக இருந்தது. நல்ல காற்று வெளிச்சமுடன் வீடு ரொம்ப நன்றாக இருக்கு.

வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan said...

வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்.

புதிய வீட்டின் நிலைக்கதவுகள், கோலங்கள், பூஜைகள், விளக்குகள் என அனைத்தையும் காட்டி அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

[வீட்டைக்கட்டி கிரஹப்ரவேசம் செய்ய இப்போதெல்லாம் நிறையத்தான் பணம் செலவாகிறது.

ரூபாய் நோட்டு அடிக்கும் நாஸிக்கில் இருப்பதால் ஒருவேளை இவர்களுக்கு பணப்பிரச்சனை இல்லாமல் இருந்து இருக்குமோ? ;)))))]

ஸ்ரீராம். said...

எங்கள் வாழ்த்துகளும்!

அமைதிச்சாரல் said...

புது வீட்டுக்கு வாழ்த்துகளைச் சொல்லிருங்க லக்ஷ்மிம்மா..

கதவின் டிசைன் ஜூப்பரு.

vasan said...

'க‌ல்யாண‌ம் ப‌ண்ணிப்பார், வீட்டைக் க‌ட்டிப்பார்' என்ற‌ சொலவ‌டை போல‌
பூணுல் க‌ல்யாண‌ம் பார்த்துட்டு, க‌ட்டிய‌ வீட்டையும் பார்த்துட்டோம்.

வாழ்த்துக்க‌ள். க‌ட‌வுள் குழ‌ந்தையையும், புதும‌னையையும் ஆசிர்வ‌திக்க‌ட்டும்.

பாச மலர் / Paasa Malar said...

அழகான வீடு....விளக்குகள் பூ மிகவும் அழகு..வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்மா....

பழனி.கந்தசாமி said...

திருப்தியான குடும்ப வைபவம்.

Lakshmi said...

ஆஸியா ஓமர் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கும் ரசனைக்கும் நன்றீ

Lakshmi said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜராஜேச்வரி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Lakshmi said...

மாதவன் நன்றி

Lakshmi said...

ஹா ஹா கோபால் சார் ஜோக் அடிக்கிரீங்களே. வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

சாந்தி உன் வாழ்த்துக்கலையும் சொல்லிட்டேன் நன்றி

Lakshmi said...

வாசன் வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் நன்றி

Lakshmi said...

பசமலர் பாசமுடன் வந்து வாழ்த்தியதற்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

பழனி கந்தசாமி சார் வருகைக்கு நன்றி

radhakrishnan said...

என்னம்மா, தொடர்ந்து விழாக்களாக
பிஸியாக இருக்கிறீர்களே?பதிவும் படங்களும் அருமையாக உள்ளன.நாசிக்
பெரிய ஊராக இருக்கிறதே. லட்சுமி
கடாட்சத்துடன், அருகில் புராணத் தொடர்புள்ள இடங்களும் உள்ளன.உங்கள்
சிறிய பெண் மற்றும் மாப்பிள்ளைக்கு
எங்கள் வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி அம்மா

Lakshmi said...

ராதா கிருஷ்னன் நாசிக் பஞ்சவடின்னு தான் சொல்லுவா ராமயாணத்துடன் தொடர்புடைய ஊர்தான். வருகைக்கு நன்றி

மாதேவி said...

புதுமனை புகுவிழா சிறப்பாக இருக்கின்றது.
வாழ்த்துகள்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

athira said...

அழகான வீடு அழகான கோலங்கள்... லக்ஸ்மி அக்காவும் அழகாக செந்தழிப்பாக இருக்கிறீங்க...

எல்லோரும் வாழ்க வளமுடன்.

Lakshmi said...

அதிரா வாவா வருகைக்கு நன்றி

மனோ சாமிநாதன் said...

உங்கள் பெண்ணுக்கு என் இனிய வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் லக்ஷ்மிம்மா!
எல்லா புகைப்படங்களுமே அழகு தானென்றாலும் முகப்புக்கதவும் நீங்கள் அதனருகே நின்றிருக்கும் புகைப்படமும் மிக அழகு!

ஸாதிகா said...

அழகான கதவுக்கு முன்னால் அழகான லக்ஷ்மிம்மா.பகிர்வும் படங்களும் பேஷ்..

Lakshmi said...

மனோ மேடம் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Geetha Sambasivam said...

அருமையா இருக்கு. இந்த நெய்ப்பாயசம் அரவணைப் பாயசம் தானே. ஐயப்பன் பஜனைக்கு எங்க வீட்டிலே நான் செய்து பழக்கம். பல மாதங்கள் ஆனாலும் வீணாகாது.

Lakshmi said...

ஆமா அதே நெய்ப்பாயசம்தான் சூப்பரா இருந்தது. வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .