Google+ Followers

Pages

Friday, August 10, 2012

வள்ளியூர்வள்ளியூர்தான் என் அம்மா ஊரு. கல்லிடைக்குறிச்சி அப்பா ஊரு. நான் பிறந்ததுமட்டும் வள்ளியூர்.வளர்ந்ததுஎல்லாமகல்லிடையில்தான்.அம்மாவின் அப்பா,அவங்க அப்பா என்று தலை முறை தலை முறையாக வள்ளியூரில் கிராம முன்சீப்பாகவும், சிவன்கோவில் தர்மகர்த்தாவாகவுமிருந்து வந்தார்கள். ஒவ்வொரு வருடமும் ஆடி முதல்வெள்ளியன்றும்பெரிதாக கொடைவிழா எல்லாம் சிறப்பாக நடத்துவார்கள்.சிவன்கோவில்என்றால் சிவனை எல்லை சாமியாக ஸ்தாபிதம் பண்ணி பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க.
                 
அம்பாளுக்கு இசக்கி அம்மன் என்னும் பேரு, ஆண்டவருக்கு சுடலை ஆண்டவர்னு பேரு.வள்ளியூரில் அந்த சமயத்தில் அதாவது ஒரு 50, 55- வருடங்களுக்கு முன்னெல்லாம் கீழத்தெரு, மேலத்தெருன்னு ரெண்டே தெருக்கள்தான் இருந்தது. சின்ன ஊருதான். கன்யாகுமரி, நாகர்கோயில் பக்கம் இந்த ஊரு இருக்கு. அம்மகூட பிறந்தவங்க 12பொண்ணுஒரேஒரு பையன்.(அப்பாடா????????????). அம்மாவ்ழி குடும்பத்தினர் எல்லாரும் எந்த ஊர்களில்
 இருந்தாலும் இந்தக்கொடை விழாவில் வந்து கலந்துப்பாங்க. தாத்தாபாட்டி வீடு கீழத்தெரிவில்இருந்தது. பழயகால முறைப்படி, வாசல் திண்ணை, நடை ,ரேழி,கூடம் அடுக்களை, தாவாரம், பட்டாசாலை,கொல்லைப்புறம் என்று ரயில் கம்பார்ட்மெண்ட் போல நீளமாக இருக்கும். அம்மாவின் கூடப்பிறந்தவங்க எல்லாருமே பெணகள் அதிகமில்லியா அவங்க குழந்தைகளும் ஒவ்வொருவருக்கும்7, 8 க்கு குறையாம இருக்கும். என்கூட பிறந்தவங்களும் 7 பேரு. எல்லாரையும் அந்தவீடுதாங்காது. அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலும் பாதிபேரு தங்கிப்போம்.


அப்பல்லாம் அங்க யாரு வீட்டிலும் குளிக்க பாத்ரூமோ, டாய்லெட்டோ கிடையாது. கோவில்குளத்துலதான் எல்லாரும் குளிக்கபோகனும். வயல் வெளிகளில்தான் காலைக்கடன்கள் கழிக்கனும்
(இதுனாலயே எனக்கு அந்த ஊருக்கு போகப்பிடிக்காது.) வயக்காட்டுல பன்னிகள்வேறு கூட்டமாவந்து நம்மை ஓடஓட விரட்டிகிட்டே இருக்கும்.( ஹா ஹா).வீட்டில் ஒரேபொம்பிள்ளைகள் கூட்டமாஇருக்குமா சோப்பு வாசனை பவுடர் மணம் பூக்களின்மணம் என்று கலவையான மணங்கள் மூக்கில்
 வந்துவீசிக்கொண்டே இருக்கும். பூஜை ரூமிலிருந்து விளக்கு எரியும் நெய்யின் வாசனை ஊதுபத்திசாம்பிராணி, தசாங்கவாசனைகள் வீடுபூரா நிறம்பி இருக்கும் ஒரேபுகை மூட்டமா இருக்கும். பெரிய
வீடே தவிர எல்லாரூமும் இருட்டாகவே இருக்கும். லைட் எப்பவும் எரிந்துகொண்டே இருக்கனும்.அடுக்களையில் இருந்து இட்லி, சாம்பார் சட்னிமணம் சமையல் மணம் எல்லாம் கலந்துகட்டி வரும்.

ஒருகல்யாண வீடுபால கலகல்ப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும். எல்லாரு நலம் விசாரித்து சிரித்துபேசிஎன்று நல்லாவே ரிலாக்ஸ் ஆயிடும்.இதெல்லாம் நல்லாதான் இருக்கும்.. வெள்ளிக்கிழமை கொடைவிழா
என்றால் நாங்க எல்லாருமே அதாவது வெளி ஊரில் இருந்து வருபவர்கள் வியாழக்கிழமை காலை போயி சேருவோம் அதுக்கும் முன்பே கால் நாட்டு விழா எல்லாம் நடத்தி இருப்பாங்க. அதுக்கு பக்கத்துஊர்களில் இருப்பவங்க போயி கலந்துப்பாங்க. கொடைவிழா பத்திரிகை எல்லாம் ஒருமாசம் முன்பே
எல்லாருக்கும் அனுப்பி இருப்பார்கள்

கொடை அன்று காலைமுதலே களைகட்டும். கீழத்தெருவில் இருந்து குழந்தைகள் பால்குடம் எடுத்து ஆடிக்கொண்டே கோவில் வரைபோவார்கள். கூடவே நாதஸ்வரம் மேளம் பாட்டுக்கள். சாமிக்கு பூஜைகள் பெண்கள்
                   
மாவிளக்கு ஏற்றி வழிபட்டு, சாமிக்கு பாலபிஷேகம், சந்தன அபிஷேகம்
                                               
எல்லாம் சிறப்பாக நடத்துவார்கள்.என்   அம்மா குடும்பதில் அம்மா கூடப்பிறந்தவங்கள் எல்லாருக்கும் சாமி அருள் வரும். எல்லாரும் சாமி ஆடி பக்தர்களுக்கு அருள் வாக்கெல்லாம் சொல்வார்கள்.பெரியம்மா பெண் லண்டனில் இருந்து இந்த கொடைவிழாவில் கலந்துகொண்டு சாமி ஆடுவார்கள். பூரா நாளும் கொட்டும் மேளமும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
                                       
கோவில் வாசலில் தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம் என்று கிராமிய கலை விழாக்கள் அமர்க்கள்மாக இருக்கும்.

ஊரே திருவிழாகோலம் கொண்டு உற்சாகமாக இருக்கும்.இந்தக்கோவிலில் பிராமின்சும், நான் பிராமின்சும் கலந்துதான் இந்த கொடைவிழா தலை முறை தலைமுறையாக நடத்தி வருகிரார்கள். சாயந்தரம் வில்லுப்பாட்டில் சுடலை ஆண்டவர் கதை விஸ்தாரமாக சொல்லுவார்கள்.கூட்டம் நிறம்பி வழியும். இதெல்லாம் ஓக்கேதான். நானும் என் கூடப்பிறந்தவங்களும் பிறந்தவீட்டில் இருந்தவரையிலும் இந்த விழாவில் கலந்துகொண்டு பால்குடம்லாம் எடுத்திருக்கேன். கல்யாணமான பிறகு போக வாய்ப்பு கிடைக்காம போச்சு.ரொம்ப வருடங்களுக்குப்பிறகு என் வீட்டுக்காரருக்கு அந்தக்கொடைவிழாவில் கலந்துகொள்ள னும்னுதோனிச்சு. அப்புரம் வருடா வருடம் அவர்கூட போனேன். அவருக்கு அந்த சாமி மேல கண்மூடிதனமான நம்பிக்கை இருந்தது.

  நானும் வந்துதான் ஆகனும்னு சொல்லிடுவார்.எனக்கு அவ்வளவா விருப்பமில்லே. அங்க ஆடு கோழில்லாம் பலி கொடுப்பாங்க. அது எனக்கு பிடிப்பதில்லே. அந்த சாமியை கோவக்காரசாமியாக அதாவது  பார்வதியைப்பிரிந்து சுடலையில் கோவமாக ஆடும் சாமியாக பிரதிட்ட்டை பண்ணினதால அவரை சாந்தப்படுத்த இந்தபலில்லாம் கொடுத்துதான் ஆகனும்னு ஒரு நம்பிக்கை. அந்த ஜனங்களுக்கு.வழி வழியாக செய்து வந்தபழக்கத்தை ஒரு பெரியவர் சொன்னார் என்று ஒருமுறை பலி கொடுக்காமல் விழா பண்ணினார்கள். சொல்லி வைத்தமாதிரி தாத்தா, குடும்பம் அவங்க கூடப்பிறந்தவங்க குடும்பத்தில் சின்னவயசு குழந்தைகள் 21 பேர் இறந்துட்டாங்க. இது சாமி குத்தம்தான்  நாம வழக்கம்போல ஆடு கோழியே பலி கொடுத்துடலாம் என்று வருடாவருடம் அதையே செய்து வருகிரார்கள்.

பகல் நேரம் பூராவும் சாமிக்கு மாவிளக்கு, சக்கரைப்பொங்கல் எல்லாம்
                                                 
நைவேத்தியம் பண்ணுவார்கள். இரவு கரெக்டாக சாமி ஆடி ஆவேசம் வந்து சுடுகாட்டுக்குப்போயி அங்கு சாம்பலில் புரண்டு ஆடிட்டு பெரிய கிண்ணம் நிறையா சுடுகாட்டு சாம்பலை(எலுபுதுண்டுகளும் இருக்கும் அதில்)எடுத்து தெரு பூராவும் ஆவேசம் வந்து ஆடிட்டே வருவார். வழியில் பக்தர்கள் அவர் காலில் விழுந்து நமஸ்கரிப்பார்கள். அவர்களுக்கெல்லாம் விபூதி கொடுப்பார். அதில் கல்ந்திருக்கும் எலும்புதுண்டுகள் யாருக்கெல்லாம் கிடைக்கிரதோ அவங்கல்லாம் அதை பயபக்தியுடன் வீட்டில் ர்க்‌ஷைபோல வச்சுப்பாங்க.இரவு நான் பிராமின்ஸ் படப்புதீபாராதனை என்று ஆடுகோழியைவச்சுதான் சமைச்சு சாமிக்கு படையல் போடுவாங்க.அந்தப்பிரசாதம் வாங்க நிறைய நான் பிராமின்ஸ் கூட்டமாக தூக்கு வாளில்லாம் வச்சுண்டு வரிசையில் நின்னு வாங்கி போவாங்க.

கொடைவிழா நடக்கும் இந்த நேரங்களில்தான் அந்த சாமிக்கு பந்தல் அலங்காரம் பூஜை அபிஷேகம் எல்லாமிருக்கும். பாக்கி 11 மாசமும் வெயிலிலும் மழையிலும்தன்ன் நனஞ்சுட்டு இருப்பார். பலதடவை கூரை போட்டு பார்த்தாங்க அது எப்படியோ இடிஞ்சு விழுந்துகிட்டே இருந்தது. அப்புஅரம் அப்படியே விட்டுட்டாங்க.

இந்த விஷயத்தை அந்த ஜனங்களின் முறட்டு பக்தின்னு நினைக்கவா,மூட நம்பிக்கைன்னு நினைக்கரதா தெரியல்லே. ஆனாகூட அவங்கவங்க நம்பிக்கைகளை யாரும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது இல்லியா? நமக்கு விருப்பமில்லேனா ஒதுங்கி போயிடனும். என் வீட்டுக்காரர் இறந்து போயி 13 வருஷமா நான் அந்த ஊரு பக்கம் போரதே இல்லே.மத்த சொந்தக்காரங்கல்லாம் போயி கலந்துக்குராங்கதான்.

36 comments:

Madhavan Srinivasagopalan said...

எந்த உயிரிற்கும் தீங்கில்லா எந்தவொரு பிரார்த்தனையும், பக்தியும் உயர்ந்ததே

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு அம்மா !
படங்கள் சேர்த்தது சிறப்பு...
வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)

அமுதா கிருஷ்ணா said...

அடிக்கடி இந்த ஊரை க்ராஸ் செய்து இருக்கிறேன். கோயிலுக்கு போனதில்லை.

athira said...

அழகான கோயில், மாவிளக்கை நினைக்கவே வாய் ஊறுது.

நிரஞ்சனா said...

உங்களோட மலரும் நினைவுகள் அருமை. திருநெல்வேலி பக்கமா? நான் போனதில்லை. ஆனா நீங்க வர்ணிச்சிருக்கற விதத்துல காட்சிகள் கண் முன்னால விரியுது. சூப்பர்மா,

ராமலக்ஷ்மி said...

பகிர்வு அருமை.

மாதேவி said...

விழா பற்றிய தொகுப்பு அருமை. அந்தக்கால விழாக்களுக்கே இட்டுச் சென்றது.

உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் நலமுடன் வாழட்டும்.

Ramani said...

படங்களுடன்
விழா பற்றிய விளக்கங்களும் அருமை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 3

கவி அழகன் said...

Pathivu pakthimayan valthukkal

Lakshmi said...

மாதவன் நானும் அதேதான் சொல்ரேன்.

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

அமுதா கிருஷ்ணா, வருகைக்கு நன்றி

Lakshmi said...

அதிரா வருகைக்கு நன்றி

Lakshmi said...

நிரஞ்சனா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

கவி அழகன் வருகைக்கு நன்றி

கோமதி அரசு said...

கொடைவிழாவை நேரே கண்டு களித்த மாதிரி இருந்தது.

கொடைவிழாவைப் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் இவ்வளவு விவரமாய் தெரியாது.(எங்களுக்கு திருநெல்வேலிதான்)

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி திருன வேலில எங்க ?

radhakrishnan said...

அருமையான, விரிவான பதிவு. படங்களும் அருமை. நாம் சாப்பிடுவதை
கடவுளுக்குப் படைக்கவேண்டும். அதுவும்
ஃப்ரெஷ்ஷாக என்ற ஆர்வம் காரணமாக
பலிகொடுத்துப் படைக்கிறார்கள் போலும்.
பெரும்பாலோர் என்பதால் ஜனநாயக
முறைப்படி நாம் ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டியுள்ளது.ரிஷிகள், முனிவர்கள்
எல்லாம் முற்காலத்தில் அசைவம்
சாப்பிட்டிருக்கிறார்கள். ஏன், இப்போது
கூட பிரபல பதிவர் 'டோண்டு'தான்
அவ்வப்போது அசைவம் எடுத்துக் கொள்வது உண்டு என்று கூறுகிறார்.
எல்லாம் பழக்கம்தான் என்று தோன்றுகிறது.

Lakshmi said...

ராதா கிருஷ்ணன் சார் அடிக்கடி காணாமப்போயிடுரீங்க? ரொம்ப பிசியா.

கோமதி அரசு said...

பாளையங்கோட்டை. புதுப்பேட்டை தெரு. தாத்தா வீடு. அங்கு யாருக் இல்லை.
இப்போது பெருமாள்புரம், மகராஜபுரத்தில் உறவினர்கள் இருக்கிறார்கள்.

Lakshmi said...

ஓ கே. நீங்க எப்பவாவது அங்க போரதுண்டா?

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் வித்தியாசமான, சுவாரஸ்யமான தகவல்கள் லக்ஷ்மிம்மா!

Lakshmi said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

ஊரே திருவிழாகோலம் கொண்டு உற்சாகமாக இருக்கும் திருவிழாப்பகிர்வு பாராட்டுக்கள்..

நம்பள்கி said...

ரமணி என்பவர் tha.ma 3 என்று எழுதியிருக்கிறார். என்ன அர்த்தம்?

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

நம்பள்கி வருகைக்கு நன்றி. என் பதிவு பிடிச்சிருந்தா தமிழ் மணத்தில் ஓட்டு போடுவாங்க. அதான் த ம. 3. நீங்களும் போடுங்க.

Geetha Sambasivam said...

வள்ளியூரா உங்களுக்கு? என்னோட மாமிக்கும் கூட வள்ளியூர் தான். மணி ஐயர்னு அவங்க அப்பா பெயர். டிவிஎஸ் கிருஷ்ணா மனைவி அம்புஜம் அம்மாளோட வீடு மற்றும் எஸ்டேட்டிலே வேலை செய்தார். இப்போ அவர் இல்லை. மாமியோட அம்மா மட்டும் சமயநல்லூரில் இருக்காங்க. :)))))

subbiah sankaranarayanan said...

அம்மா, நல்ல பதிவு.உலகிலேயே பிராமணர் சமுதாயத்தை சார்ந்த ஒருவர் சாமியாடி சுடுகாட்டுக்கு செல்வது என்பது இந்த ஆலயத்தில் மட்டும் தான், அது போல அந்த சமுதாய பெண்மணிகள் அம்மனுக்கு சாமியாடுவதும் இங்கு மட்டும் தான்.ஒரு கிராமத்தின் கலெக்டர் என்று சொல்லத்தக்க வகையில் விளங்கிய கிராம முன்ஷிப் குடும்ப கோவில் விழா என்பதால் ஊரின் அனைவரின் பங்கேற்பும் உடையதாக விளங்கியது.அப்பகுதியின் தலைசிறந்த நாதஸ்வர குழுக்கள் பங்கேற்கின்ற கலை விழாவாகவும் இக்கொடைவிழா நடந்தது மேலும் அழகை கொடுத்தது. நன்றி அம்மா. நானும் அந்த ஊரை சார்ந்தவன்.தற்பொழுது வயிற்றுபாட்டிற்காக வெளியூரில் சிரமப்படுபவன்.

Geetha Sambasivam said...

சுடலை மாடன் வேறே, சுடலை ஆண்டவர் வேறேயா? ஏன்னா நீங்க சொல்றதைப் பார்த்தால் சுடலை மாடன் கொடை மாதிரித் தெரியுது. ஆனால் ஒண்ணு, ஊருக்குள்ளே அக்ரஹாரத்தில் பெருமாள் கோயிலும், ஊருக்கு வெளியே அக்ரஹாரத்துக்கு வெளியே தான் சிவன் கோயிலும் அந்தக் காலங்களில் இருந்து வந்திருக்கிறது.

Geetha Sambasivam said...

லக்ஷ்மி, எங்கே உங்களைக் காணவே காணோம்? உடம்பு நலம் தானே?

Murugesan Murugesan said...

Ungalukku Sami varuma

என்னை ஆதரிப்பவர்கள் . .