Pages

Friday, August 3, 2012

மும்பை லோக்கல்

ஒரு 15 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம். மும்பையில் மலாடில் இருக்கும் என் தங்கை வீட்டில் வரலக்‌ஷ்மி நோன்பு இருந்தது. அதுல கலந்துக்க நாங்க  அதாவது நான் மற்ற சொந்தக்காரங்க எல்லாரும் போயிருந்தோம். நோன்புக்கு அடுத்த நாள் என் சின்ன தங்கையின் பையனுக்கு முதல் ஆண்டு நிறைவு இருந்தது. நாங்க ஒரு 13- பேரு ஆண்களும் பெண்களுமாக கிளம்பினோம்.ஆண்கள் தனியா 6-பேருக்கு டிக்கட் எடுத்து ஒருவர் கையில் கொடுத்தாங்க. அதுபோல பெண்களிலும் மொத்தமாக டிக்கட் எடுத்து ஒருவர்கையில் வச்சு கிட்டாங்க. மும்பையின் வெஸ்டர்ன் ரயில்வேயில் இந்த இடங்கள் இருக்கு. அங்க எப்ப பார்த்தாலும் கூட்டம் நிறம்பி வழியும்.லோக்கலும் ஃபுல் கூட்டத்தோட வந்து நின்னது. இறங்கற கூட்டம் ஏற்ரவங்களை ஏற் விடாம தள்ளி அடிச்சுட்டு இறங்குது. எப்படி யோ அவங்கல்லாம் இறங்கின பிறகு ஏறுர கூட்டம் முண்டி அடிச்சு ஏறினாங்க. நான் முதல்ல நின்னிண்டு இருந்தேன். அதனால நான் முதல்ல வண்டில ஏறிட்டேன். பாம்பே லோக்கலில் ஏறி இறங்க ஒரு தனி சாமர்த்தியம் வேனும் அதெல்லாம் என்கிட்ட சுத்தமா கிடையாது. மத்தவங்க ஏறினாங்களா இல்லையான்னு திரும்பிகூட பாக்க முடியல்லே அவ்வளவு கூட்டம்.
                             


 மததவங்களால வண்டில ஏற்வே முடியல்லே நான் மட்டுமே ஏறி இருந்தேன்னு வண்டி கிளம்பின பிறகுதான் தெரிஞ்சது. என் பெரியபெண் அம்மா பாண்ட்ராவில் இறங்கிடுன்னு கீழேந்து கத்தினா. எனக்கு வெஸ்டர்ன் ரயில்வேல போயி பழக்கம் இல்லே பாண்ட்ரா எத்தனாவது ஸ்டேஷன்னும் தெரியல்லே. என்கையில் டிக்கட்டோ பணமோ கூட இல்லே இப்ப உள்ள செல்போன் வசதில்லாம் அப்போ வந்திருக்கலே யாரையும் காண்டாக்ட் பண்ணவும் முடியல்லே.. மனசு பூரா பக் பக்குனு இருந்துச்சு  மலாட் தாண்டினதுமே பக்கத்தில் உள்ளவங்களிடம் பாண்ட்ரா எப்ப வருனு கேட்டேன் அவங்க என்ன பாத்து கேலியா சிரிக்குராங்க. இப்பதான் மலாட் விட்டு கிளம்பி இருக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னாங்க உக்கார கூட இடம் கிடைக்கலே எண்ட்ரன்ஸ்கீட்டயே ஸ்டாண்டிங்க் தான். ஒவ்வொரு ஸ்டேஷனா பேரு பாத்துகிட்டே வந்தேன் ஏறுர கூட்டமும் இறங்குர கூட்டமும் என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க. ஒரு வழியா பாண்ட்ரா ஸ்டேஷன் வந்ததும் கூட்டத்தோட கூட்டமா நானும் இறங்கிட்டேன். சுத்தி பாத்தா எங்க சொந்தக்காரங்க யாருமே இல்லே. டி, டி பிடிச்சுட்டார்னா என்ன பண்ணனு ரொம்ப பயம்மா இருந்துச்சு.என் கையில டிக்கட் இல்லியே. அடுத்த வண்டியில் ஆண்கல் எல்லாரும் வந்துட்டாங்க, நான் தனியே நிற்பதைப்பார்த்து மத்தவங்கல்லாம் எங்கன்னு கேக்குராங்க. அவங்களிடம் சொன்னேன். சிரிக்குராங்க எனக்கு கோவமா வந்தது. அதுக்கும் அடுத்தவண்டில லேடீஸ் எல்லாரும் வந்துட்டாங்க. ஒவ்வொரு 2- நிமிஷத்துக்கும் வண்டி இருந்தது நல்லதாச்சு.

அம்மா பத்திரமா இறங்கினயா எதுவும் ப்ராப்லம் ஆகலியேன்னு கேக்குராங்க. அப்புரம் எல்லாரும் சேந்துபோயி பர்த் டே ஃபங்க்‌ஷ்ன்ல கலந்துகிட்டு மறுபடி மலாட் வந்தோம் பர்த் டே ஃபங்க்‌ஷன் மட்டுங்கா என்னும் இடத்தில் இருந்தது. இரவு பூராவும் இது பத்தியேதான் பேச்சு அப்பலேந்து நான் எங்க கிளம்பினாலும்  யாரு கூட கிளம்பினாலும்ஒரு 100- ரூபாயாவது கையில் தனியா எடுத்துண்டு போயிடுவேன் இதுவும் ஒரு பாடம்தான் இல்லியா

33 comments:

இராஜராஜேஸ்வரி said...

எங்க கிளம்பினாலும் யாரு கூட கிளம்பினாலும்ஒரு 100- ரூபாயாவது கையில் தனியா எடுத்துண்டு போயிடுவேன் இதுவும் ஒரு பாடம்தான் இல்லியா

சரியான பாடம்தான்..

எல்லா நேரமும் ஒன்றுபோல் இருப்பதில்லையே ...

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான் அம்மா....

இக்கட்டான சமயங்களில் உதவும்...

நன்றி…
(த.ம. 2)

ஸாதிகா said...

எங்க கிளம்பினாலும் யாரு கூட கிளம்பினாலும்ஒரு 100- ரூபாயாவது கையில் தனியா எடுத்துண்டு போயிடுவேன் இதுவும் ஒரு பாடம்தான் இல்லியா//கண்டிப்பா.

ரயில் அப்பி இருக்கும் கூட்டத்தைப்பார்த்தால் மயக்கமே வருகிறதே!

அமுதா கிருஷ்ணா said...

செல் போன் இல்லாத காலத்தில் இது மாதிரி மாட்டி கொண்டு நாம் முழித்தது ஏராளம்.

வரலாற்று சுவடுகள் said...

நிச்சயமா எப்போது யாருடன் கிளம்பினாலும் நம் கையிலும் சிறிது பணம் எடுத்து செல்ல வேண்டும்! அனுபவம் தானே எல்லாவற்றையும் நமக்கு கற்றுத்தருகிறது! உங்களது அனுபவங்களை எங்களுக்கு அறியத்தந்து எச்சரித்தமை நன்று!

கவி அழகன் said...

Iyo pavam

கே. பி. ஜனா... said...

உண்மையில் இது திகிலான அனுபவம்தான்! சமாளித்த உங்களைப் பாராட்டியே ஆகணும்.

வெங்கட் நாகராஜ் said...

//எங்க கிளம்பினாலும் யாரு கூட கிளம்பினாலும்ஒரு 100- ரூபாயாவது கையில் தனியா எடுத்துண்டு போயிடுவேன் இதுவும் ஒரு பாடம்தான் //

அதுதான் சரிம்மா.

இங்கே மெட்ரோவிலும் இப்படித்தான் தினம் தினம் நடக்கிறது... ஆனால் அலைபேசி இருப்பதால் ஓரளவு பிரச்சனை சமாளிக்க முடிகிறது.

அமைதிச்சாரல் said...

காசு வெச்சுக்கறது மட்டுமல்ல,.. பையரோ பொண்ணோ கூட வந்தா அவங்களுக்கான டிக்கெட்டையும் அவரவர் கையிலயே கொடுத்துருவேன். ஒரு வேளை ஒரே ட்ரெயின்ல எல்லோரும் ஏற முடியாமப் போயிட்டாலும் இறங்க வேண்டிய இடத்தில் முதலில் இறங்கறவங்க மத்தவங்களுக்காகக் காத்திருப்போம். இது எங்களுக்குள் ஒரு உடன்பாடு.

கோமதி அரசு said...

எங்க கிளம்பினாலும் யாரு கூட கிளம்பினாலும்ஒரு 100- ரூபாயாவது கையில் தனியா எடுத்துண்டு போயிடுவேன் இதுவும் ஒரு பாடம்தான் இல்லியா//

உண்மை தான்.
அனுப பாடம் மிக அருமை.
என் கணவர் என்னிடம் சொல்லும் அறிவுரை இது தான். நான் கூட வந்தாலும் உன் கையில் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும் என்பது.
நீங்கள் தனியாக மாட்டிக் கொண்டதை சமாளித்த விதத்தை பகிர்ந்து கொண்டது மற்றவர்களுக்கு பாடம்.
நன்றி.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி, வருகைக்கு நன்றி

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

ஸாதிகா பாக்கவெ உனக்கு அப்புது அதுலயே டெய்லி பயணம் செய்யுரவங்களுக்கு எப்படி இருக்கும் இல்லியா?

Lakshmi said...

அமுதா உங்களுக்கும் இந்த அனுபவம் லாம் உண்டா

Lakshmi said...

வரலாற்று சுவடுகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

கவி அழகன் ஆமாங்க ஐயோ பாவம்தான் ஹ ஹ ஹ

Lakshmi said...

கே.பி ஜனா இதுபோல நிறையா அனுபவங்கள் சமாளிச்சுருக்கேன்

Lakshmi said...

ஆமா வெங்கட் இப்பதானே அலை பேசி வசதில்லாம் வந்திருக்கு அப்போல்லாம் இல்லியே.

Lakshmi said...

ஆமா சாந்தி அவங்கவங்க டிக்கட்ட அவங்க கையில வச்சுக்கனும்னு யாருக்குமே அந்த சமயத்ல தோனலியே கும்பலா போகும்போது இப்படிதான் சில சமயம் ஆகுது

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

mm
கண்டிப்பாக எங்கு போவதாக இருந்தாலும் கையில் பணம் எடுத்து செல்லனும்.
அனுபவ பதிவு அருமை மற்றவர்களுக்கும் , ஒரு பாடம் இல்லையா??

மனோ சாமிநாதன் said...

எனக்கும் இப்படி அனுபவம் இருக்கிறது லக்ஷ்மிம்மா! அனுபவங்கள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் என்றைக்குமே மறக்க இயலாதபடி மனதில் பதிந்து போய் விடுகின்றன!

Lakshmi said...

ஜலீலா வருகைக்கு நன்றி

Lakshmi said...

மனோ மேடம் நமக்கெல்லாம் அனுபவங்களுக்கு பஞ்சமே இல்லே இல்லியா.

athira said...

நல்ல அனுபவம்தான் லக்ஸ்மி அக்கா!!!
ரெயின் படம் பார்க்கவே பயமாக இருக்கு. படங்களில் பார்த்திருக்கிறேன், நிஜத்திலும் அப்படியா!!!!!!

Lakshmi said...

ஆமா அதீஸ் படதில்பார்ப்பது கொஞ்சம் தான் இன்னமும் கூட்டம் நிறையவேதான் இருக்கும்

மாதேவி said...

இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கும் அந்த நேரம் பயந்துதான் போயிருப்பீர்கள்.

Lakshmi said...

ஆமா மாதேவி அப்போ ரொம்ப நெர்வசாதான் இருந்துச்சு

radhakrishnan said...

மும்பை மின்சார ரயில் பயணம் பற்றிக்
கேள்விப் பட்டிருக்கிறேன்.அதற்கென்று
தனிப் பயிற்சி வேண்டும் என்று கூறுவார்கள்.உங்கள் அநுபவம் போன்ற
த்ரில்லிங்கான அநுபவம்அனேகமாக
வாழ்வில் ஒருமுறையாவது பலருக்கும்
வாய்த்திருக்கும்.ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.நல்ல பகிர்வு. நன்றி அம்மா.

Lakshmi said...

ராதாகிருஷ்ணன் சார் வருகைக்கு நன்றி

கோவை மு சரளா said...

நல்ல பாடம்தான் ..............எல்லோரும் இப்படி ஏதாவது ஒரு சந்தர்பத்தில் தான் கற்றுகொல்கிரார்கள் ......
அழகிய வெளிபாடு தோழி

Bhuvaneshwar said...

வணக்கம்!
முதன் முறையாக உங்கள் வலைத்தளத்தினை கண்ணுறுகிறேன்.
எளிய நடையில் ஹாஸ்யமாக எழுதியது பிடித்துள்ளது.
தொடர்ந்து வருவேன். :)
வாழ்த்துக்கள்!
+++++
இவண்
புவனேஷ்வர்
www.bhuvaneshwar.com

Lakshmi said...

புவனேஷ்வர் வாங்க வாங்க இனிமெல அடிக்கடி வாங்க நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .