வாரக்கடைசியில் எல்லா காய்களும் கொஞ்சம் கொஞம் மீந்துவிடும். அம்மா வீட்ல அந்த சமயங்களில் அவியலோ, பொரிச்ச குழம்போ செய்வார்கள். நம்ம பசங்களுக்கு அதெல்லாம் பிடிக்காது. அதனால பொரியலாகத்தான் செய்யனும்.
தேவையான பொருட்கள்
கேரட்---------------- 4
உருளைக்கிழங்கு------- 2
பச்சை பட்டாணி-------- ஒரு கப்.
குடை மிளகாய்=--------- 2
மஞ்சப்பொடி------------- அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி----- ஒரு ஸ்பூன்
கரம் மசாலா பொடி---------ஒருஸ்பூன்
உப்பு---------- தேவையான அளவு
காரப்பொடி---------- ஒரு ஸ்பூன்
எண்ணை----------- 2ஸ்பூன்
செய் முறை
காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடிசாக அரிந்து கொள்ளவும்.
கடாயில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும்
காயகளைச்சேர்க்கவும். நன்கு வதக்கவும். மேலே ஒரு தட்டுபோட்டு மூடி அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வைக்கவும். இப்படி செய்வதால் காய்கள்
அடிப்பிடிக்காமல் கலர் மாறாமல் இருக்கும். பாதி வெந்ததும் மஞ்சபொடி ,காரப்பொடி கரம் மசால பொடி உப்பு எல்லாம் சேர்க்கவும்.கொஞ்ச
நேரத்திலேயே நன்கு வெந்து விடும். நான் ஸ்டிக் கடாயில்ச் செய்தால் எண்ணை குறைவாக சேர்த்தால் போதும்
தேவையான பொருட்கள்
கேரட்---------------- 4
உருளைக்கிழங்கு------- 2
பச்சை பட்டாணி-------- ஒரு கப்.
குடை மிளகாய்=--------- 2
மஞ்சப்பொடி------------- அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி----- ஒரு ஸ்பூன்
கரம் மசாலா பொடி---------ஒருஸ்பூன்
உப்பு---------- தேவையான அளவு
காரப்பொடி---------- ஒரு ஸ்பூன்
எண்ணை----------- 2ஸ்பூன்
செய் முறை
காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடிசாக அரிந்து கொள்ளவும்.
கடாயில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும்
காயகளைச்சேர்க்கவும். நன்கு வதக்கவும். மேலே ஒரு தட்டுபோட்டு மூடி அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வைக்கவும். இப்படி செய்வதால் காய்கள்
அடிப்பிடிக்காமல் கலர் மாறாமல் இருக்கும். பாதி வெந்ததும் மஞ்சபொடி ,காரப்பொடி கரம் மசால பொடி உப்பு எல்லாம் சேர்க்கவும்.கொஞ்ச
நேரத்திலேயே நன்கு வெந்து விடும். நான் ஸ்டிக் கடாயில்ச் செய்தால் எண்ணை குறைவாக சேர்த்தால் போதும்
Tweet | |||||
20 comments:
அருமையான பொரியல்.
அடிபிடிக்காமல் இருக்க நல்ல குறிப்பு.
நன்றி அக்கா.
நல்ல குறிப்பு.செய்து பார்க்கிறேன் சுலப தக்காளி சட்னி செய்தேன் நன்றாக இருந்தது நன்றி.
நல்ல குறிப்பு. எங்கள் வீட்டிலும் பொரியல்தான் பிடித்தமானது.
மிக்க நன்றி அம்மா...(TM 2)
இனிய இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!
பல வகைக்காய்களின் பொரியல் நல்லாவே இருக்கும். இதுக்காகவே நான் தினமும் காய் நறுக்கச்சே ஒரு கைப்பிடி தனியா எடுத்து வெச்சுருவேன். நாலஞ்சு வகை சேர்ந்ததும் பொரியல் ஆகிருமில்லையா :-)))
நீங்க்கள் குறிப்பிடுவது போல
எதற்கும் தனியாக லாயக்கில்லாமல் போனால்
எங்க்கள் வீட்டில் அவியல்தான்
தங்கள் பதிவைப் படித்ததும் தான்
இப்படி ஒரு வழி இருப்பது புரிகிறது
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
அருமையான மிக்சட் பொரியல்.பொரிச்ச குழம்பு ரெஸிப்பி அவசியம் போடுங்க லக்ஷ்மிம்மா.
எங்கள் வீட்டிலும் பொரியல் பிடிக்கும்.
இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.
கோமதி அரசு வருகைக்கு நன்றி
இந்திரா சந்தானம் வருகைக்கு நன்றி இதையும் செய்து பாருங்க.
ராமலஷ்மி வருகைக்கு நன்றி
திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி
சாந்தி நீ சொல்வதும் நல்ல ஐடியாதான்
ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி
ஸாதிகா பொரிச்ச குழம்பு ரெசிப்பியும் அவசியம் போடுரேன்மா
மாதேவி வருகைக்கு நன்றி
சுலப குறிப்புகள். எங்களுக்கு அவியல்தான் ரொம்பப் பிடிக்கும்.
(புளிப் பொங்கல் அடிக்கடி செய்கிறோம்...நேற்று கூட! சாப்பிடும்போது உங்கள் நினைவு வரும்)
வித விதமான சமையல் செய்முறைகளை மிக எழிதாக சொல்லியிருப்பதால் சமைக்க பழக இருக்கும் ஆண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
தொடரட்டும்....
அந்நியன்2 வாங்க வாங்க ரொம்ப நாள் கழிச்சு வரீங்க நன்றி.
Post a Comment