Pages

Monday, August 6, 2012

பீன்ஸ் பருப்பு உசிலி

தேவையான பொருட்கள்
 பீன்ஸ்----------------------  1/4 கிலோ
 துவரம் பருப்பு------------  150 கிராம்
 மிளகா பொடி------------- ஒரு ஸ்பூன்
 மஞ்ச பொடி-------------- அரை ஸ்பூன்
 பெருங்காய பொடி------- ஒரு ஸ்பூன்
 உப்பு-------------------------- தேவையான அளவு
 எண்ணை------------------ ஒரு பெரிய கரண்டி
 கடுகு------------------------ ஒரு ஸ்பூன்
 உளுத்தம் பருப்பு--------- ஒரு ஸ்பூன்
 கறி வேப்பிலை---------- ஒரு ஆர்க்
 செய் முறை
                                           
 பீன்ஸை பொடிதாக அரிந்து கொண்டு தனியாக மலர வேக வைத்து தனியாக வைக்கவும். பருப்பு, பொடி வகை கள் எல்லாம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்சியில் கெட்டியாக அரைக்கவும்.கடாயில் எண்ணை ஊற்றிகடுகு போட்டு பொரிந்ததும் உளுந்தம்பருப்பு போட்டு சிவந்ததும் அரைத்த பருப்பு
                                       
விழுதைப்போட்டு கைவிடாமல் கிளறவும். நன்கு உதிராக வந்ததும் வெந்த
                                     
பீன்ஸைப்போட்டு நன்கு கிளறவும். பருப்பு கலவையும் காயும் சேர்ந்து
  வெந்ததும் இறக்கவும். எண்ணை சேர்க்க பிரியப்படாதவர்கள் அரைத்த பருப்பு விழுதை இட்லி வேக வைப்பது போல ஸ்டீமில் வேக வைத்து உதிர்த்துக்கொண்டு காயைப்போட்டு வதக்கவும்.


23 comments:

ஆமினா said...

குறிச்சு வச்சுக்குறேன் மாமி...

சீக்கிரம் செய்து பாக்குறேன்

ஸாதிகா said...

பருப்பு உசிலி என்ராலெனக்கு ரொம்ப்ழ்வும் பிடிக்கும்.உங்கள் முறையில் ஒருநாள் செய்து பார்த்திட வேண்டும்.

கோமதி அரசு said...

பீன்ஸ் பருப்பு உசுலி மிகவும் நன்றாக இருக்கிறது.
படங்கள் அருமை.

Anonymous said...

பகிர்வு நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

பீன்ஸ் - இது போல் செய்ததில்லை...
படத்துடன் விளக்கமான பகிர்வுக்கு நன்றி அம்மா !

தொடர வாழ்த்துக்கள்...
(த.ம. 4)

என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

வெங்கட் நாகராஜ் said...

பீன்ஸ் பருப்பு உசிலி சூப்பர்....

சாந்தி மாரியப்பன் said...

குறிப்பு நல்லாருக்கு லக்ஷ்மிம்மா.. நானும் பருப்புக்கலவையை வேக வைத்து உதிர்த்துச் செய்வதுதான் வழக்கம்..

சக்தி கல்வி மையம் said...

நன்றி அம்மா..

Madhavan Srinivasagopalan said...

யப்பா எங்க ஊருல இப்போ
பீன்ஸ் கிலோ 70 ரூபா..
து. பரு 85/kg
உ பரு 80/kg
ந. எண்ணெய் 180 /litre
மிளகாய் 60 / kg

கொஞ்சம் சீப்பான ஐட்டத்த வெச்சி பண்ற சமையல் இருந்தா சொல்லுங்கம்மா.... உபயோகமாப் போகும்..

:-)

But, it is very tasty.. Thanks

MARI The Great said...

பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா!

Mahi said...

உசிலிக்கு துவரம்பருப்பு-மிளகாப் பொடி சேர்த்து செய்ததில்லைம்மா..உங்க முறைப்படி செய்து பார்க்கீறேன். நல்லா இருக்கு உசிலி.

குறையொன்றுமில்லை. said...

ஆமி நீதானா? எங்க போனே இவ்வளவு நாளா? எனக்கும் உன் பக்கம் ஒபன் ஆகவேமாட்டெங்குது.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா செய்து பாருங்க நல்லா இருக்கும்

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு, ஓட்டுக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி அப்படி செய்வதுதான் நல்லது இங்க இப்படித்தானே பிடிக்குது.

குறையொன்றுமில்லை. said...

வேடந்தாங்கல் கருன் ரொம்ப நால் கழிச்சு வந்திருக்கீங்க நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஹா ஹா மாதவன் இப்படி செலவு பத்திலாம் யோசிசீங்கன்னா நிம்மதியா சோறு உள்ளயே இறங்காது.

குறையொன்றுமில்லை. said...

மஹி இப்படி செய்து பாருங்க நல்லா இருக்கும்

மாதேவி said...

பீன்ஸ் உசிலி நன்றாக இருக்கின்றது.

நிரஞ்சனா said...

எங்கம்மமா கொத்தவரங்காயில பருப்பு உசிலி செஞ்சு தருவாங்க. நீங்க பீன்ஸ் வெச்சு செய்ய சொல்லியிருக்கீங்க. செஞ்சு பாத்திட வேண்டியது தான். நனறிம்மா.

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

நிரஞ்சனா பொதுவா இந்த உசிலி கொத்தவரங்காயிலதான் செய்வாங்க. எங்க வீட்ல கொத்தவரங்கா பிடிக்காது அதான் பீன்ஸ்ல ட்ரை பண்ணினேன்

என்னை ஆதரிப்பவர்கள் . .