நேற்றுதான் எங்கள் வீட்டு கண்பதிபப்பா விசர்ஜன் முடிந்தது. இவ்வளவு நாளாக கம்ப்யூட்டர் பக்கமே வர நேரமில்லாமல் ரொம்பவே பிசி.இடையில் வெளி ஊருபயணம் வேறு.இன்று வந்துவிட்டேன்.என் மகன் வீட்டில் 5
தினங்களுக்கு பிள்ளையார் வைத்து பூஜை செய்வார்கள். தினசரி 3 நேரம் பூஜா ஆரத்தி தனி தனி பிரசாதங்கள் நைவேத்யங்கள் எல்லாம் முறைப்படி செய்து வழிபடுவார்கள், சாய்ங்காலவேளைகளில்பஜனைகள் பாட்டுக்கள் அமர்க்களப்படும். சதுர்த்திக்கு 3 மாசம் முன்பெ பிள்ளையார் பொம்மைக்கு ஆர்டர் கொடுத்து விடுவார்கள். சதுர்த்திக்கு முதல் நாள் இரவு பிள்ளையார் பொம்மையை வீட்டுக்கு அழைத்துவருவோம் முறைப்படி ஆரத்தி கற்பூரம் காட்டி வீட்டினுள் அழைப்போம்சதுர்த்தி அன்று காலை 8மணிக்கு பூஜை
ஆரம்பிக்கனும் என்று காலை 4 மணிக்கே எழுந்து குளித்து மடியாக பிரசாதங்கள் தயார் செய்தோம். நாலுவித பூரண கொழுக்கட்டைகள் அதாவது தேங்காய், கடலைபருப்பு, எள் , உளுந்து என்று நாலுவிதம். வடை, அப்பம்
இட்லி பாயசம் சாதம் பருப்பு அவல் வெல்லம் பலவித பழங்கள் கரும்பு என்று ஒன்றுவிடாமல் வைத்து சிறப்பாக பூஜை நடந்தது. அன்று மாலை மகனின் ஆபீசிலிருந்து மராட்டி பஜன் மண்டலிக்காராவந்து இரண்டுமணி நேரம் நின்றுகொண்டே அபங்க் பாடல்கள் பஜனை ஆரத்திபாடல்களெல்லாம் பாடினார்கள் இரவு அனைவருக்கும் சாப்பாடு போட்டு தாம்பூல பிரசாதங்கள் கொடுத்து வழி அனுப்பி வைப்போம் அவர்கள் நம்மைப்போல சாம்பார் ரசம் பொரியுல் எல்லாம் சாப்பிட மாட்டாங்க பூரி பாஜி ஷீரா பண்ணிக்கொடுத்தோம்
இரவு இரைந்துகிடக்கும் பூக்கள் அட்சதைகள் எல்லாம் க்ளீன் பண்ணிவிட்டு நாங்க எல்லாரும் சாப்பிட்டு படுக்க 12 இல்லென 1 மணி ஆகும். மறுபடியும் மறு நா காலை பூஜைக்கான ஏர்பாடுகள். முதல் நாள் போட்டிருந்த பூமாலைகள் எல்லாம் கழட்டி புது மாலை கட்டி அலங்காரங்கள் செய்து ச்லோகங்கள் சொல்லி பிரசாதம் பண்ணி என்று வீடே திருவிழா கோலத்தில் இருக்கும். அடுத்த நாள் மாலை ஐயப்பா பஜன் மண்டலிக்காரா வந்து
ரெண்டுமணி நேரம் பஜனைப்பாடல்கள் பாடினார்கள் இரவு அனைவருக்கும் உணவு உபசாரம் செய்து தாம்பூல பிரசாதம் கொடுத்து வழி அனுப்பி வைத்தோம் இப்படியே 5 தினங்களுமேபிள்ளையாரை நன்றாக
கொண்டாடுவோம். வீடே ஊது பத்தி, சாம்பிரானி ,தசாங்கம், பலவிதபழங்கள் பலவித வாசனை மலர்களின் வாசனையால் கோவில் சன்னிதானதினுள் இருப்பது போல ஒரு வைப்ரேஷன் இருக்கும்.அதுவும் இந்தமுறை
பிள்ளையார் நேச்சுரலாக அரச மரத்தடியில் அமர்ந்திருப்பதுபோல டெக்கொரேஷன்ஸ் செய்திருந்தோம்.அதுவும் நன்ராக அமைந்து விட்டது.5-
வது நாள் இரவு பக்கத்தில் இருக்கும் ஒரு லேக்கில் கொண்டுபோய் விசர்ஜன்
செய்து விட்டு வந்தோம். பிள்ளையார் உக்காந்திருந்த இடமே காலியாக இருந்தது மனதுக்கு சங்கடமாக இருந்தது.

Tweet | |||||
34 comments:
எங்க குடியிருப்பிலும் கணபதிஹோமம் பூஜை, மதியம் மஹா பிரசாதம் எல்லாம் சிறப்பா நடந்தது.
உங்க கணபதி ரொம்ப அழகாருக்கார். அரசமரத்தடியில் இருக்கும் கோலம் ரொம்ப அழகு.
பிள்ளையார் நேச்சுரலாக அரச மரத்தடியில் அமர்ந்திருப்பதுபோல டெக்கொரேஷன்ஸ் செய்திருந்தோம்.//
அருமையான பிள்ளையார் சதுர்த்தி விழா உங்கள் மகன் வீட்டில்.
பிள்ளையார் எல்லா வளங்களும், நலங்களும் அருளி சென்று இருப்பார்.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.
திருமதி லட்சுமி அம்மாவுக்கு
நமஸ்காரம்.
தங்களை பதிவர் விழாவன்று சந்தித்தது நினைவு இருக்கலாம்.
வினாயகனை விஸர்ஜனம் செய்து விட்டு வந்தபிறகு அகத்துலே அந்த இடம்
காலியாக இருந்ததாலே ஒரு தினுசான மனசு கஷ்டம் எனச் சொல்லியிருக்கிறீர்கள்.
எங்கும் நிறைந்த அந்த முதல்வனை,
கணானாம் த்வா கணபதிகும் என்று சொல்லப்படும்
கணங்களில் மூத்தவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்.
ஒவ்வொரு தெரு மூலையிலும் உட்கார்ந்து கொண்டு
வழியே செல்லும் அனைவரின்
விக்னங்களையும் விலக்குபவன்.
அவன் இல்லாத இடம் இல்லை.
அவன் செல்லாத மனதுமில்லை.
அவனை நம் மனதிற்கேற்றவாறு
ஆஹ்வானம் செய்து உபசாரம் செய்து
ஆண்டவா, நீ போய் உன் யதாஸ்தானம் அமர்ந்துகொள் என்று
சொல்லாமல் சொல்லி விஸர்ஜனம் செய்கிறோம்.
களிமண்ணிலிருந்து வருகிறான்.
களிமண்ணாய் கடலில் கரைகிறான். கலக்கிறான்.
இது ஒரு சுழற்சி. cycle
கலங்குவதும் ஏனோ !!
சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
http://vazhvuneri.blogspot.com
உங்களோட சேர்ந்து நாங்களும் விநாயக சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட உணர்வு ஏற்பட்டுடுத்து.
//பிள்ளையார் உக்காந்திருந்த இடமே காலியாக இருந்தது மனதுக்கு சங்கடமாக இருந்தது //
என்ன செய்ய அடுத்த வருடத்திற்காகக் காத்திருப்போம்.
படங்கள் பார்க்கவே ஆசையாக இருக்கு. ரொம்ப நல்லா நடந்திருக்கு பூஜைகள்.
//பிள்ளையார் உக்காந்திருந்த இடமே காலியாக இருந்தது மனதுக்கு சங்கடமாக இருந்தது.//
இது உண்மையேதான், எங்களுக்கும்.. நவராத்திரி, கெளரி, கந்த சஷ்டி இப்படி விரதம் தொடர்ச்ச்சியாக வந்து பாறனை முடித்ததும், ஒருவித மகிழ்வாகவும் இருக்கும், அதே நேரம்.... ஏதோ வீட்டில் நடந்த திருவிழா முடிந்துவிட்டதுபோல கஸ்டமாகவும் இருக்கும்.
அழகான பிள்ளையார்...
இனிய விழாவை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அம்மா... நன்றி...
// பிள்ளையார் உக்காந்திருந்த இடமே காலியாக இருந்தது மனதுக்கு சங்கடமாக இருந்தது. //
Punch finish.
நேத்தைக்கு என்னோட மகள் கேட்ட கேள்வி....
"அப்பா பிள்ளையாரை ஏன் கடல்ல கரைக்கறாங்க.. அவர் மூழ்கிப் போய்ட மாட்டாரா.. அப்புறம் அவரு எங்க போவாரு" ?
One Requst.. உங்களுக்குத் தெரிந்தவரை.. . பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்டமும், பிறகு பிள்ளையார் விசர்ஜனம் பற்றியும் ஒரு பதிவு எழுதவும்... என்னைப் போன்றோர் பிள்ளைகளுக்கு பதில் சொல்ல முடியும்.
சூப்பரா இருக்கு.எல்லா வீடுகளிலும் இப்படி கொண்டாடுவார்களா??
வீட்டில் சிறப்பாக நடந்த விழாவை வெகு அழகாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளீர்கள்!
சாந்தி ஏன் வரலே சண்டே சாய்ங்காலம் வரை எதிர்பார்த்தேன் போனாவது பன்னி இருக்கலாமில்லே.
சூரிய சிவா சென்னையில் உங்களை சந்தித்தது நன்றாகவே நினைவில் இருக்கு சரியாக பேசத்தான் நெரம் அமையல்லே. பூஜை பற்றி நீங்க சொல்லி இருப்பதெல்லாம் சரிதான் ஆனா வீடு பூராவும் 5 நாட்களுக்கு கலகல்ப்பாக இருந்துட்டு சட்னுனு மாரும் போது ஒரு வெறுமை தோனுமில்லே நாம எல்லாம் ஆசா பாசங்களுடன் இருக்கும் சாதாரண மானிட ஜன்மங்கள் சுகம் துக்கம் எல்லாமே வருவது போவது சகஜம்தானே.அதனாலதான் பிள்ளையார் வீட்டை விட்டு போனதும் வெறுமையாக தோனுச்சு
ஜயந்தி ரமணி வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்ரி
அதிரா வருகைக்கும் கருத்துக்கும் நன்ரி நவராத்திரியில் கொலு எல்லாம் வைப்பீங்களா
திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்ரி
மாதவன் நீங்க கேட்டபடி அடுத்து பதிவாகப்போடுரேன் சில தகவல்கள் தேடிட்டு இருக்கேன்
அமுதா எல்லா வீடுகளிலும் இப்படி கொண்டாட மாட்டாங்கன்னுதான் நினக்கிரேன்
கே. பி. ஜனா வருகைக்கும் கருத்துக்கும் நன்ரீ
பிள்ளையார் பூஜையும் கொண்டாட்டங்களும் அருமை.
எங்கள் வீட்டிலும் பூஜை நன்றாக நடந்தது. கொள்ளிடத்தில் கொண்டு போய் விட்டு வந்தோம்.
லக்ஷ்மிம்மா,அப்படியே சதுர்த்திக்கு நீங்கள் செய்த பட்சணங்களை படம் எடுத்துப்போடக்கூடாதா?
கோவை2தில்லி வருகைக்கும்கருத்துக்கும் நன்றி
ஸாதிகா இப்படி சுருக்கமாக போட்டே பதிவு நீளம் அதிகமாச்சு பட்சணங்களும் போட்டா அனுமார் வால் போல ஆயிடுமேஅப்போது பண்ணின எல்லாஐட்டங்களும் போட்டோ எடுத்து வச்சிருக்கேன் ரெசிப்பியில் போட்டுடுவேனே ஹா ஹா
படங்களும், தகவல்களும் அருமை அம்மா! அப்படியே பக்தி மணம் கமழுது!!!
மணி ரொம்ப நாள் கழிச்சு நம்ம பக்கம் வந்திருகிங்க நன்றி
அன்பின் லக்ஷ்மிம்மா,
உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கம்மா..
மனதில், வாழ்க்கையில், உலகில், சுற்றும் புறமும் எத்தனையோ நடந்தாலும் எத்தனையோ சம்பவித்தாலும் மனம் நிறைந்து இவர் சொல்வது குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.... இப்படிச்சொல்லனும்னா எந்த அளவுக்கு மனசு பக்குவப்படனும்? இவர் கண்களை சிறிது நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தாலே இவர் மனதின் கருணை நம் மனதிலும் சட்டென்று ஒட்டிக்கொள்ளும். பார்வையே இத்தனை கருணை என்றால் அப்ப இவர் பதிவுகள்? அத்தனையும் மென்மையான மல்லிப்பூ தீண்டலாக மெல்லிய அன்பை பதிவுகளுடன் தொடர்வதாக அத்தனை அருமையாக இருக்கும். படிச்சு பார்த்து நீங்களே உணர்வீர்கள்... அம்மாவின் மென்மையான பதிவுகளில் சில உங்கள் பார்வைக்காக...
காவலன்
உன்னைச்சொல்லி குற்றமில்லை
சைக்கோ
அன்புடன்
மஞ்சுபாஷிணி
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_4.html) சென்று பார்க்கவும்...
நன்றி அம்மா..
திண்டுக்கல் தனபாலன் தகவலுக்கு நன்றி
திருமதி லட்சுமி அம்மாவுக்கு
நமஸ்காரம்.
அரசமரத்தடியில் இருக்கும் கோலம் ரொம்ப அழகு.
விஜி பார்த்திபன் வாங்க நன்றி
அருமையாக் கொண்டாடி இருக்கீங்க. பிள்ளையாருக்கும் கொண்டாட்டம் தான். அனைவருக்கும் நெருங்கிய நண்பராச்சே.
கீதா வருகைக்கு நன்றி
ரொம்பவு சிரத்தையுடன் கணபதியை வழிபட்டு இருக்கிறீர்கள்.
இயற்கை சூழலில் விநாயகரை அமர்த்தி இருந்த விதம் பார்க்கப் பரவசமாக இருந்தது.
விசர்ஜனம் செய்தவுடன் மனசுக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும்.
எங்கள் வீட்டில் கொலு வைத்த இடம் காலியாக இருப்பது ஒன்றிரண்டு நாட்கள் ஆயிற்று பழகுவதற்கு!
ரஞ்சனி வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ரஞ்சனி வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ரஞ்சனி வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment