முட்டைகோசில் பொரியல் கூட்டுவகைகள் தானே செய்வார்கள்.
நான் கொஞ்சம் வித்யாசமா சட்னி செய்தேன். நல்லா வந்தது.
தேவையான பொருட்கள்
கோஸ்--------- கால் கிலோ
சிவப்பு மிள்கா வத்தல்-------- 4
உளுத்தம்பருப்பு--------- 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்---------------- சிறிதளவு
உப்பு-------------- தேவையான அளவு
புளி---------- ஒரு கோலி குண்டு அளவு
எண்ணை------------ ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு----------- ஒரு ஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணை ஊற்றி உளுந்து மிள்காய் போட்டு சிவந்ததும் பொடியாக அரிந்து வைத்திருக்கும் கோசையும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். நன்கு ஆறியதும் உப்பு புளி சேர்த்து நைசாக அரைக்கவும் கடுகு பெருங்காயம் தாளிக்கவும். தோசை இட்லி சப்பாத்தி எல்லாவற்றுடனும் நன்றாக ஜோடி சேரும்.
நான் கொஞ்சம் வித்யாசமா சட்னி செய்தேன். நல்லா வந்தது.
தேவையான பொருட்கள்
கோஸ்--------- கால் கிலோ
சிவப்பு மிள்கா வத்தல்-------- 4
உளுத்தம்பருப்பு--------- 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்---------------- சிறிதளவு
உப்பு-------------- தேவையான அளவு
புளி---------- ஒரு கோலி குண்டு அளவு
எண்ணை------------ ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு----------- ஒரு ஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணை ஊற்றி உளுந்து மிள்காய் போட்டு சிவந்ததும் பொடியாக அரிந்து வைத்திருக்கும் கோசையும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். நன்கு ஆறியதும் உப்பு புளி சேர்த்து நைசாக அரைக்கவும் கடுகு பெருங்காயம் தாளிக்கவும். தோசை இட்லி சப்பாத்தி எல்லாவற்றுடனும் நன்றாக ஜோடி சேரும்.
Tweet | |||||
41 comments:
பலருக்கும் பயனாகக் கூடிய குறிப்பு. நான் அடிக்கடி செய்வதுண்டு.
புதிய குறிப்பு...
நன்றி அம்மா...
tm2
காலை எழுந்தவுடன் கோஸ்தான் கண்ணில் பட்டது.இந்த மாதிரி புது முயற்சிக்கெல்லாம் நாந்தான் கோதாவில் இறங்க வேண்டும்:)
பகிர்வுகு நன்றி.
எங்க வீட்டிலும் எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சது இது. பொண்ணோட காலேஜ் ஃப்ரெண்ட்ஸும் உரிமையா "உங்கம்மாட்ட சொல்லி இட்லியும் முட்டைகோஸ் சட்னியும் செஞ்சு கொண்டு வா"ன்னு கேட்டுச் சாப்பிடுவதுண்டு :-)
வித்யாசமா முயற்சி செய்திருக்கீங்க அம்மா. எங்களுக்கு ஒரு நல்ல செய்முறை கிடைத்தது.நன்றி.
கோஸ் சட்னி வித்தியானமான நல்லகுறிப்பு:)
இதற்கு தேங்காய்ப்பூ தேவையில்லையோ?
பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா!
வித்தியாசமா இருக்கேம்மா.. செஞ்சு பார்த்துடுவோம்!
ஆஹா செய்யத்தான் வேணும், புது முறை நல்ல கண்டுபிடிப்பு. என்னிடம் இன்னும் மீதம் இருக்குது கோஸ்:)).. செய்து முடிச்சிடுறேன் இந்த முறையில்.
சூப்பர் சட்னி!நானும் செய்திருக்கேன் லஷ்மிம்மா!
அப்புறம் "பல்லாங்குழி" பற்றிய உங்க பதிவைத் தேடிப்பார்த்தேன், கிடைக்கலை. லிங்க் தந்தீங்கன்னா படிச்சுப்பார்க்க உதவியா இருக்கும். நன்றி! :)
வித்தியாசமா இருக்கும்மா. செய்து பார்க்கிறேன்.
வித்தியாசமான சட்னி. அருமை.
தொக்கு செய்வதுண்டு.
திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி
ராபின்சன் வருகைக்கு நன்றி. தமிழன் திரட்டியில் என் பதிவை இணைக்க முடியலியே/
ராஜ நடராஜன் கோதாவில் இறங்கி விட்டீர்களா?
சாந்தி நீயும் செய்வியா குட்
ரமா வருகைக்கு நன்றி
இளமதி தேங்காய்ப்பூ சேர்க்கவேனாம்
வெங்கட் வருகைக்கு நன்றி
செய்து பார்த்துவிடவேண்டியதுதான்! நன்றி!
அதிரா நீதான் பெரிசா கோஸ் வச்சிருக்கியே செய்து பாரு.
மஹி பல்லங்குழி பற்றி டீடெயி சொல்லலே ஜஸ்ட் படம் பொட்டேன்.
http://gomathyamma.blogspot.in/2012/04/3.html இங்க இருக்கு
கோவை2தில்லி செய்து பாரும்மா.
மாதேவி வருகைக்கு நன்றி
நான் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு,இஞ்சி, மல்லி, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் வதக்கி புளியுடன் அரைத்து அடிக்கடி செய்வதுண்டு. இந்த கோஸ் சட்னி செய்முறையும் நன்றாயிருக்கிறது லக்ஷ்மிம்மா!
மனோ மேடம் வருகைக்கு நன்றி
செய்து பார்த்துடலாம். வாசனை ஒத்து வரணும் மற்றவர்களுக்கு! எனக்குப் பிடிக்கும். குறித்துக் கொண்டேன் அம்மா.
முதலில் என் வாழ்த்துக்கள் அம்மா .கைவிட்டுப் போனது திரும்பக்
கிடைத்ததை இட்டு .மிக்க நன்றி புதிய சமையல் குறிப்பிற்கு !!!!.......
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அம்மா .
இனிய தீபாவளி வாழ்த்துகள்.
செளசெள, பறங்கிக்காய்(இளசா இருந்தால் நல்லா இருக்கும்) போன்றவற்றிலும் செய்யலாம். செளசெள துவையலுக்கும் தேங்காய்த் துவையலுக்கும் வித்தியாசமே தெரியாது.
ஆயிஷா பரூக் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
அம்பாளடியாள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா
அவர்கள் உணமைகள் நன்றி
மாதேவி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
ஆமா கீதா நல்லா இருக்கும் அந்த காய்களிலும் பண்ணி இருக்கேன் நன்றி
வணக்கம்!
முட்டைக் கோசு சட்னியைச்செய்
முறையை மெல்ல நான்படித்தேன்!
அட்டை போன்ற நாக்கின்மேல்
ஆசை மேவி நீரூறும்!
கட்டைத் துறவி இவ்வலையைக்
கண்டால் உண்டு சுவைத்திடவே
பட்டை கொட்டை தாம்நீக்கிப்
படித்த வண்ணம் சமைத்திடுவான்!
கவிஞர் கி. பாரதி தாசன் வருகைக்கு நன்றி
ருசிகரமான ஆனால் கேட்டறியாத வித்யாசமான பகிர்வு. பாராட்டுக்கள்.
முட்டைகோஸ் முக்காலும் பிள்ளைகள் சாப்பிடுறதில்லை சட்னி செய்து ஏமாற்றி கொடுத்திடலாம்
கோபால் சார் ரொம்ப நாட்கள் கழிச்சு உங்களை இங்க பார்ப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி
rufina rajkumar வருகைக்கு நன்ரி
Post a Comment