Google+ Followers

Pages

Wednesday, December 5, 2012

சிங்கப்பூர் 5

என்னமோ சொல்லவந்துட்டு என்னலாமோ சொல்லிட்டே போரேன்.ஸாரி
பதிவர் ராஜலஷ்மிஅம்மா வீட்டுக்கு போரதைப்பத்தி சொல்லிண்டு இருந்தேன். அதுக்குள்ள ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் பத்தில்லாம் சொல்லிண்டே போயிட்டேன். நாங்க இருந்தது செங்காங்க். அவங்க இருந்தது ஃபெர்ரர்பார்க்.
   இங்கேந்து 8-வது ஸ்டேஷன் அரைமணி நேரத்துக்குள்ள ஃபெரர்பார்க் வந்தது. அவங்க வீடும் பக்கத்லதான் இருந்தது. நடந்தே போயிட்டோம் 11-மணி ஆச்சு.
லீவு நாள் ஆதலால் எல்லாருமே நல்லா தூங்கிட்டு இருந்தாங்க.ராஜலஷ்மி அம்மா குளிச்சுட்டு வந்தாங்க. அவங்க மகன் மருமகள் கார்த்திகை பொரில்லாம் வாங்க கடைக்கு போயிருந்தாங்க. அவங்களுக்கு பர்த்டே விஷ்
பண்ணிட்டு ஐஸ் க்ரீம் பேக் கொடுதோம். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.2-பேரப்பசங்களுமெழுந்து வந்தாங்க. எல்லாருடனும் கொஞ்ச நேரம் பேசிட்டு
போட்டோல்லாம் எடுதுட்டு எல்லாருடனும் அரட்டை அடிச்சுகிட்டே
                                     
     இருந்தோம்.மகனும் மருமகளும் வந்தாங்க அவங்க ளுடனும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்து காபி குடிச்சுட்டு கிளம்பிட்டோம்.அவங்க லன்ஞ்ச் சாப்பிட்டு தான் போகனும்னு சொன்னாங்க. இல்லே இன்னொரு நாள் வரோம்னு சொல்லிட்டு கிலம்பினோம். ஃபெரர் பார்க் ஸ்டேஷன் பக்கம் தான் முஸ்தபா மால் இருந்தது. அங்க போயி கொஞ்சம் சாமான்கள் வாங்கிட்டு போலாம்னு போனோம்
 சண்டே லீவு நாள் அங்க செம கூட்டம். நிறையா தமிழ் கார முகங்கள் பாக்க முடிஞ்சது.இன்னிக்கு அங்க போக வேணாம் நேரம் ஆயிடுச்சி.ஸோ எதானும் ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்டு வீட்டுக்கு போயிடலாம்னு ஹோட்டல் போனோம். திரும்பின பக்கமெல்லாம் ஹோட்டல்களா இருக்கு. சரவணபவன்,  ஆனந்தபவன்,  கோமளவிலாஸ்,கைலாஷ்பர்வத், ராஜ் ஹோட்டல்னு வரிசையா இருக்கு. ராஜ் ஹோட் டலில் போயி லஞ்ச்
சாப்பிட்டோம். அங்கயும் நிறையா தமிழ்காரங்க தான்.சாப்பாடும் ஓக்கே ரகம்.
பிறகு ஸ்டேஷன் வந்தோம். அன்னிக்கு நவம்பர் 25- தேதி. எல்லா ஸ்டேஷன்கள் மால்கள் ரோடுகளிலும் இப்பலேந்தே கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்க அமர்க்களமாக டெகோரேஷன் செய்ய
                                     
                                        
                                         
           ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் ஒருமாசம் இருக்கு.திரும்பின பக்கமெல்லாம் கிறிஸ்மஸ் ட்ரீ, அதில் பரிசுப்பொருட்கள், சாண்டாக்ளஸ் பொம்மைகள் அலங்கார வளைவுகள் என்று ஆர்ப்பாட்டமா ரெடி ஆகுராங்க. எல்லா பண்டிகைக்களுமே இப்படி ஆரவாரமா வரவேற்பு செய்வாங்களாம். அதெல்லாம் வேடிக்கை பாத்துண்டே வந்தோம்.

இவ்வளவு நேரம் காலி வயிரோட நடந்ததால ஈசியா நடக்க முடிந்தது. வயிறு
ஃபுல்லானது நடக்க கொஞ்சம் கஷ்டமா இருந்தது.டாக்சில வந்துட்டோம்.
டாக்சில மினிமம் சார்ஜே நம்ம கணக்குப்படி 100-ரூவா வருது.வெளிலன்னு வந்தாச்சுன்னா கணக்கே பக்கக்கூடாது போல இருக்கு நமக்கு கண்ணக்கட்டுதுப்பா.

35 comments:

இராஜராஜேஸ்வரி said...

கலகல்ப்பான சிங்கப்பூர் அனுபவப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

கோவை மு சரளா said...

உங்கள் பயணம் இன்னும் தொடரட்டும் படங்கள் அருமை தோழி

அமைதிச்சாரல் said...

ராஜலக்ஷ்மிம்மாவுக்கு எங்களது வாழ்த்துகளும்.

அப்ப இந்தத் தடவை புது வருஷ வாழ்த்துகளை சிங்கப்பூரிலிருந்து சொல்லப்போறீங்கன்னு சொல்லுங்க :-)

சிங்கப்பூர்லேந்து சிங்கத்தைப் பிடிச்சுட்டு வாங்க எங்களுக்காக. அது எங்கியோ ஏர்போர்ட் பக்கம்தான் சுத்திட்டு இருக்குதாம் :-)

Mahi said...

Nice post Lashmima!

புலவர் சா இராமாநுசம் said...


நான் கூட சமீபத்தில் சிங்கப்பூர் சென்று வந்தேன் அருமையான ஊர்!

semmalai akash said...

ராஜலட்சுமி அம்மா வீட்டில் சாப்பிடாமா , ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கிங்க, இப்ப உண்மை வெளிவந்துவிட்டது, இருங்க இருங்க அம்மாகிட்ட சொல்லிடறேன்.ஹா ஹா ஹா !

சும்மா சொன்னேன் சொல்லமாட்டேன் பயப்படவேண்டாம், அருமையான அனுபவப்பகிர்வு அம்மா.

Priya ram said...

முஸ்தபா மால் எனக்கு ரொம்ப புடிச்ச மால்.... அங்க போனால் டைம் போறதே தெரியாது... லிட்டில் இந்தியா பக்கம் போய்ட்டா தமிழ் ஆளுங்க நிறைய பேர் பார்க்கலாம்.... வார இறுதினா நாங்க அங்க போய்டுவோம்.... தொடருங்கள் லக்ஷ்மி அம்மா...

கவியாழி கண்ணதாசன் said...

மிக அருமையாய் உங்கள் பயணம் இன்னும் தொடரட்டும்

Asiya Omar said...

வழக்கம் போல் யதார்த்தமாக அருமையாக இருக்கு,பயணக் கட்டுரை.

வல்லிசிம்ஹன் said...

ராஜலக்ஷ்மி அம்மாவுக்கு என் வாழ்த்துகள். பேத்திகள் அழகா இருக்காங்க,. மால் எல்லாம் என்ன அழகா சுத்தம இருக்கு?
ஆமாம் அந்தப் பிறை சமாசாரம் சொல்லவே இல்லையே!!

துபாய் ராஜா said...

அழகான படங்கள். அருமையான பகிர்வு.வணக்கமும், வாழ்த்துக்களும் அம்மா.

மனோ சாமிநாதன் said...

தொடர் அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது லக்ஷ்மிம்மா! 2005ல் முஸ்தபா மாலில் வாங்கிய ' சவாலே சமாளி' படத்தை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை!

கோவை2தில்லி said...

ராஜலஷ்மி அம்மாவுக்கு எங்கள் வாழ்த்துகளும்.

சிங்கப்பூர்ன்னாலே சுத்தம் தானோ....

nagoreismail said...

சிங்கப்பூர் வருகை இனிதாக தொடர வாழ்த்துகள். நான் ஜுரோங் எனும் இடத்தில் வசிக்கிறேன்..
நன்றாக சுற்றிப் பாருங்கள், எழுத்துக்களால் அனைவருக்கும் சுற்றிக் காட்டுங்கள்.
எங்க வீட்டு பக்கம் சைனீஸ் கார்டன் ஜப்பனீஸ் கார்டன் சைன்ஸ் செண்டர் எல்லாம் இருக்கு. முடிந்தால் பார்க்கவும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படங்கள் மற்றும் தகவல்கள். தொடர்கிறேன்.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி முதல் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை மு. சரளா. வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

சாந்தி புதுவ்ருஷம் மும்பைலதான் கிரிஸ்மஸுக்கே கோவா போரேன்.அப்புரம் சிங்கத்தபிடிச்சுவந்தா கட்டிப்போட உன் வீட்ல இடம் பண்ணி தருவியா?:))))))))))))))

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றிம்மா

Lakshmi said...

புலவர் சா. ராமானுசம் ஐயா நீங்களும் இங்க வந்திருக்கீங்களா எங்கேயெல்லாம் சுத்தி பாத்தீங்க ஐயா.

Lakshmi said...

ஆகாஷ் ஜோக் அடிக்கிரயா நாங்களே அவங்க கிட்ட ஹோட்டல் போரதா சொல்லிட்டுதான்பா போனோம். ஹ ஹ ஹ

Lakshmi said...

ப்ரியா ராம் உன் பக்கம் வரவே முடியலியே மால்வேர் அட்டக்னு வருது இன்னொருபக்கமும் நோ போஸ்ட் வருதே. எப்படி உன் பக்கம் வரது?

Lakshmi said...

கவியாழி கண்ணதாசன் வாங்க முதல் வருகையா நன்றி

Lakshmi said...

ஆஸியா வாங்க வருகைக்கு நன்றி

Lakshmi said...

வல்லிம்மா பிறை பத்தி அடுத்தபதிவுல வந்துண்டே இருக்கு. அப்புரம் அவங்க எங்க பேத்தி இல்லேம்மா, ஒன்னு என் மாட்டுப்பெண் இன்னொன்னு ராஜலஷ்மி அம்மாவின் மாட்டுப்பொண்.

Lakshmi said...

ராஜா வா வா உங்க ஊரு பத்தி சரியா சொல்லிகிட்டு வரேனா?

Lakshmi said...

மனோ மேடம் ஏன் இன்னும் அந்தப்படம் பாக்காம இருக்கீங்க?

Lakshmi said...

கோவை2தில்லி ஆமாம்மா சிங்கப்பூர்னாலே சுத்தம்தான்.

Lakshmi said...

நாகூர் இஸ்மாயில் நீங்களும் இங்கதான் இருக்கீங்களா சந்தோஷம் உங்க வீட்டுப்பக்கம்லாம் வர ப்ளான் இருக்கு

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்ரி

ஸாதிகா said...

அனுபவங்களை சுடச்சுட பகிர்வது சுவாரஸ்யம்.

இளமதி said...

நல்ல அனுபவப் பகிர்வு. அழகாக இருக்கிறது படங்களும், உங்கள் அலாதியான எழுத்து நடையும்...:)

Lakshmi said...

இளமதி வருகைக்கு நன்றிம்மா

nagoreismail said...

வீட்டுக்கே வாங்களேன்... வரவேற்போம்...

Lakshmi said...

நாகூர் இஸ்மாயில் வந்துடுவேனாக்கும்

என்னை ஆதரிப்பவர்கள் . .